சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

What accounts for the electoral victories of France’s neo-fascist National Front?

பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணியின் தேர்தல் வெற்றிகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?

Alex Lantier
25 March 2014

Use this version to printSend feedback

பிரான்சின் நகரசபை தேர்தல்கள் (municipal elections) பிரான்சிலும், ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலும் நிலவும் அரசியல் நெருக்கடியை மற்றும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வருகின்ற அபாயங்களை அப்பட்டமாக காட்டியுள்ளன.

இழிபெயர் பெற்ற ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியால் (PS) பிரான்சில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முதலாளித்துவ "இடது" மதிப்பிழந்ததில் இருந்து, பிரான்சின் தேசிய முன்னணி (FN) போன்ற நவ-பாசிச கட்சிகள் தான் அரசியல் ஆதாயமடைந்துள்ளன.

முன்பில்லாத அளவிற்கு வாக்களிக்காதோர் விகிதம் 38.5 சதவீதம் என்பதற்கு இடையே, தேசிய முன்னணி அது வேட்பாளர்களை நிறுத்தி இருந்த 600இல் 229 நகரங்களில், அடுத்த ஞாயிறன்று நடைபெற உள்ள அடுத்தக்கட்ட தேர்தல்களுக்கு முன்னேறியுள்ளது. தேசிய முன்னணியின் Steeve Briois, முதல் சுற்றில், 1980களில் சோசலிஸ்ட் கட்சியின் சுரங்க மூடல்களால் பேரழிவுக்கு உள்ளான வடக்கு பிரான்சின் பழைய நிலக்கரி படுகையில் அமைந்துள்ள Hénin-Beaumont இல் பெரும்பான்மை வெற்றி பெற்றார்.

10,000த்திற்கு அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட 17 நகரங்களில் தேசிய முன்னணி முதலாவதாகவும் வந்துள்ளது. அவற்றில் Forbach இல் 36 சதவீத வாக்குகள், Fréjus (40 சதவீதம்), Béziers (45 சதவீதம்), Perpignan (34 சதவீதம்), மற்றும் Avignon (30 சதவீதம்) ஆகியவை உள்ளடங்கும்.

பிரான்சின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான Marseilleஇல், மக்கள் இயக்கத்திற்கான கோலிஸ்ட் யூனியன் (Gaullist Union for a Popular Movement) எனும் வலதுசாரி UMP இன் தற்போது பதவியிலிருக்கும் Jean-Claude Gaudin ஐ அடுத்து, FN இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. மோசமான வேலையிட நிலைமைகளுக்கு எதிராக போராடிய தற்காலிக தொழிலாளர்கள் சோசலிஸ்ட் கட்சி மேயர் வேட்பாளர் Anne Hidalgo வின் தலைமையகத்தை தாக்கிய, பாரீஸ் நகரில் தேசிய முன்னணியின் வாக்குகள் இரட்டிப்பானது.

நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும் ஒரு நகர்வாக, பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் தேசிய முன்னணியை உத்தியோகபூர்வ அரசியலுக்குள் முழுமையாக ஒருங்கிணைக்க அழுத்தம் அளிப்பதன் மூலமாக, சோசலிஸ்ட் கட்சிக்கான மக்கள் ஆதரவு பொறிந்தமைக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றன. சோசலிஸ்ட் கட்சி மற்றும் கோலிஸ்டுகளின் "இரண்டு கட்சி ஆட்சிமுறை முடிவுக்கு" வருவதாகவும், தேசிய முன்னணி வளர்வதாகவும் அதன் தலைவர் மரீன் லு பென் அவரது அனுமானத்தை வெளியிட்டார். வலதிற்கும் இடதிற்கும் இடையில் ஏதாவதொன்றை தவறாக தேர்ந்தெடுப்பதிலிருந்து பிரெஞ்சு மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்து கொண்டுள்ளனர், என அவர் கூறினார்.

சோசலிஸ்ட் கட்சி சார்பான Le Monde எழுதியது: மரீன் லு பென் கூறுவது சரியென்றால், அதுவொரு அரசியல் பூகம்பமாகும்: இரண்டு கட்சி ஆட்சிமுறை முடிந்து விட்டது, இங்கே இனி PS, UMP மற்றும் FN என மூன்று கட்சி ஆட்சிமுறை வருகிறது ... அவரது கண்ணோட்டத்தை ஆதரிக்க, தேசிய முன்னணியின் தலைவருக்கு எத்தனையோ வாதங்கள் உள்ளன, என்று எழுதியது.

பெருவணிகங்கள் சார்ந்த சோசலிஸ்ட் கட்சியும், மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது குழுக்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தினாலேயே தேசிய முன்னணியால் சமூக அதிருப்திக்கு முறையீடு செய்ய முடிந்துள்ளது, அவை தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்க வேலை செய்கின்றன. தேசிய முன்னணி பெருமளவிற்கு, குறிப்பாக 2012இல் ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரில் இருந்து, "வழக்கமான" ஒரு கட்சியாக பார்க்கப்படுகிறது, இது ஏனென்றால் PS மற்றும் NPA போன்ற கட்சிகளே வேகமாக தீவிர-வலது கொள்கைகளுக்குள் மாறி வருகின்றன.

சமூக வெட்டுக்கள் மற்றும் வணிகங்களுக்கான வரிச் சலுகைகளின் அலையை ஒன்று மாற்றி ஒன்று நடைமுறைப்படுத்தி, சோசலிஸ்ட் கட்சி பாசிச முறையீடுகளுக்கு திரும்பி உள்ளது. ஒரு விரைவான, வெற்றிகரமான யுத்தமானது ஹாலண்டை கருத்துக்கணிப்பு விகிதங்களில் உயர்த்தும் என்ற நம்பிக்கை கணக்கிடப்பட்டிருந்ததை PS நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். கடந்த ஆண்டு, மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் PS அரசாங்கம் இராணுவ தலையீடுகள் நடத்தியிருந்ததோடு, சிரியாவில் யுத்தத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்தது. இதற்கிடையில், உள்துறை மந்திரி மானுவேல் வால்ஸ், மிரட்டும் விதத்தில் ஒட்டுமொத்த ரோமா மக்களையும் பிரான்சிலிருந்து வெளியேற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

ஹாலண்ட் பிற்போக்குத்தனமான கொள்கைகளை பின்பற்றுவார் என்பதை 2012 தேர்தலின் போது ஒப்புக் கொண்ட அதேவேளையில், எரிச்சலூட்டும் விதமாக ஹாலண்டிற்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்த NPA, சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக எந்தவிதத்திலும் எதிர்ப்பை வளர்க்க முனையவில்லை. முதலாளித்துவ ஊடகங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் PS உடன் நெருக்கமாக உள்ள கல்வியாளர்களின் பிரிவுகளோடு ஆழமாக ஒருங்கிணைந்து, இந்த அமைப்பும் இதுபோன்ற ஏனைய போலி-இடது குழுக்களும், சோசலிசத்திற்கான போராட்டம் என்பது ஒருபுறம் இருக்க, அதிகாரத்திற்காக போராடுவதாகக் கூட தொழிலாளர்களால் பார்க்கப்படவில்லைஉண்மையில் அவை போராடவும் இல்லைமாறாக அவை ஒரு மதிப்பிழந்த அரசியல் ஸ்தாபகத்தின் உள்ளார்ந்த உட்கூறுகளாக உள்ளன.

இவையெதுவும், PS அல்லது FNக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒன்று திரட்ட முயன்று வரும் இடதுசாரி கட்சிகள் அல்ல. இவை ஹாலண்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து வேறுபடாத வலதுசாரி அமைப்புகளாகும். அவை சோசலிஸ்ட் கட்சிக்கு குழி பறிக்கும் வர்க்க போராட்டங்களின் எழுச்சியைத் தடுப்பதன் மூலமாக தங்களின் தனிச்சலுகைகளைக் காப்பாற்றி வைக்க முயலும் மத்திய தட்டு வர்க்கத்தின் செழிப்பான பிரிவுகளுக்காக பேசுகின்றன.

உக்ரேனில் FN இன் கூட்டாளியான நவ-பாசிச ஸ்வோபோடா கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட கடந்த மாத ஆட்சி கவிழ்ப்பை ஒரு ஜனநாயக புரட்சியாக NPA புகழ்ந்து வருகிறதென்ற உண்மையே, FN மீதான NPAஇன்பெரும் ஆக்ரோஷமானவிமர்சனங்களின் போலித்தனத்திற்கு ஒரு சான்றாகும்.

பிரான்சிலும், சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும், ஒன்று திரட்டுவதுமே பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உள்ள ஆழ்ந்த பிரச்சினையாகும். தொழிலாள வர்க்கத்திடையே பாசிசத்திற்கு ஆழ்ந்த விரோதம் உள்ள போதும், முற்போக்கு தொழிலாளர்கள் ஒரு சோசலிச முன்னோக்கில் ஆயுதபாணியாக்கப்பட்டால் மட்டுமே இந்த எதிர்ப்பை ஒன்று திரட்ட முடியும். இதற்கு ட்ரொட்ஸ்கிச அரசியல் மரபியத்தின் அடிப்படையில் சோசலிசத்திற்கான போராட்டத்தையும், போலி-இடதின் பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசியலையும் பிரித்திருக்கும் வர்க்க பிளவை அம்பலப்படுத்தும் ஒரு சளைக்காத போராட்டம் அவசியப்படுகிறது.

இத்தகைய சக்திகள் பல தசாப்தங்களாக, 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், 1971 இல் பிரெஞ்சு சர்வதேச கம்யூனிச அமைப்பு (OCI) —உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிலிருந்து எந்த அடித்தளத்தில் உடைந்துச் சென்றதோ, அதே அடித்தளத்தைக் கொண்டிருக்கும் "இடதுகளின் ஐக்கியம்" (Union of the Left) என்னும் திவாலாகிப் போன முன்னோக்கை பின்தொடர்கின்றன. அப்போது புதிதாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த சோசலிஸ்ட் கட்சியையும் மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியையும் (PCF) இடதிற்குத் திருப்ப அழுத்தம் கொடுக்கும் பாசாங்குத்தனத்தோடு, OCI அனைத்து "இடது" கட்சிகளோடு ஒன்றாக வேலை செய்ய முனைந்திருந்தது.

இந்த வழிவகைகளில், OCI சோசலிஸ்ட் கட்சியின் ஒரு கருவியாக ஆனதுசோசலிஸ்ட் கட்சியே, இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜி ஒத்துழைப்பாளரான விச்ஷி ஆட்சியின் (Vichy regime) ஒரு முன்னாள் அதிகாரி பிரான்சுவா மித்திரோன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாகனமாக இருந்தது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணியுடன் 1981இல் மித்திரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் அவரது மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்த திட்டத்தைக் கைவிட்டு, உயர்ந்து வந்த வரவு-செலவு திட்ட பற்றாக்குறைக்கும், வங்கிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதன உயர்வுக்கும் விடையிறுப்பு காட்டினார். அவர் போட்டித்திறனற்ற தொழிற்சாலைகளை மூடியும், சமூக செலவினங்களை வெட்டியும் ஒரு "சிக்கன திருப்பத்தை" நடைமுறைப்படுத்தினார், அந்த தொழிற்சாலைகளோ 1968க்குப் பின்னர் தொழிலாள வர்க்க தீவிரத்தன்மையின் கோட்டையாக விளங்கின.

ஒரு நகர்வில் அவரது பிற்போக்குத்தனமான செயல்பாடுகள் முன் எப்போதையும் விட மிக தெளிவாக இருந்தது, அதிகரித்து வந்த சமூக கோபத்திற்கிடையிலும், தேசிய முன்னணியின் ஊடக விபரங்களை ஊக்குவித்தும், வலதுசாரி வாக்குகளைப் பிரிக்க அதை பயன்படுத்தியும் மித்திரோன் 1980கள் மற்றும் 1990களில் அதிகாரத்தை தக்க வைத்திருந்தார்.

இருந்தும் கூட, OCI மற்றும் ஏனைய போலி-இடது சக்திகளும் சோசலிஸ்ட் கட்சி சமூக ஜனநாயகவாதிகளை தொடர்ந்து ஆதரித்து வந்தன. 1997-2002இல் சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான பிரதம மந்திரி லியோனெல் ஜோஸ்பனின் "பன்முக இடது" (Plural Left) அரசாங்கம் அதன் சிக்கன கொள்கைகளால் மதிப்பிழந்த பின்னர், 2002 ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் அப்போது பதவியிலிருந்த UMPஇன் Jacques Chirac மற்றும் அப்போதைய FN தலைவர் ஜோன்-மரீ லு பென்னால் ஜோஸ்பன் வெளியேற்றப்பட்டார். இது இரண்டாவது சுற்றில் வலதுசாரி சிராக்கிற்கோ அல்லது அதிவலது லு பென்னுக்கோ வாக்களிக்கும் நிலைக்கு தொழிலாள வர்க்கத்தை கொண்டு வந்தது.

தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்பில் மொத்தமாக 11 சதவீத வாக்குகளை அவை பெற்றிருந்த போதினும், புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் (LCR)—NPAஇன் முன்னோடி அமைப்பு லூத் ஊவ்ரியேர் (LO), மற்றும் தொழிலாளர் கட்சி (முந்தைய OCI) ஆகியவை, சட்டத்திற்கு புறம்பானதாக பரவலாக பார்க்கப்பட்ட ஒரு தேர்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முயலவில்லை. மாறாக அவை பிரான்சில் பாசிசத்தின் உயர்வை பாதியாக அது குறைக்குமென்று வாதிட்டு சிராக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அழைப்புகளின் பின்னால் அணிவகுத்து நின்றன.

சிராக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயமாக வரவிருந்த சமூக தாக்குதல்கள் மற்றும் யுத்தங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு அடிப்படையாக, ஜனாதிபதி தேர்தலை ஒரு செயலூக்கத்தோடு புறக்கணிக்க ICFI விடுத்த அழைப்பை அவை நிராகரித்தன. அதன் பின்னர் வந்த தசாப்தங்களின் சம்பவங்கள் ICFIஆல் முன்னெடுக்கப்பட்ட கொள்கையை முற்றிலுமாக நிரூபித்தன. ஒரு வலதுசாரி ஜனாதிபதிக்கு பின்னால் போலி-இடது கட்சிகள் அணிவகுத்தமை, அவற்றின் மேலதிக வலது தரப்பு பரிணாமத்திலும் மற்றும் முதலாளித்துவ அரசியலின் முகாமிற்குள் திரும்புவதிலும் ஒரு திருப்புமுனையாக இருந்ததை நிரூபித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளாக புரட்சிகர கட்சிகளைக் கட்டுவதே பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள மைய பிரச்சினையாகும். இது தான், நேரடியாக தேசிய முன்னணியின் கரங்கள் மூலமாகவோ அல்லது அதன் கொள்கைகளை ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஏற்றுக் கொள்வதன் மூலமாகவோ, பெரும் சமூக தோல்விகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் வகையில், போலி இடது சக்திகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணிய செய்வதைத் தடுக்கும் திறவுகோலாக உள்ளது.