சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Stop Egypt’s Pinochet from murdering 529 Muslim Brotherhood prisoners!

முஸ்லீம் சகோதரத்துவத்தின் 529 கைதிகளை படுகொலை செய்யும் எகிப்திய பினோசே நடவடிக்கையை நிறுத்து!

Johannes Stern
26 March 2014

Use this version to printSend feedback

முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB – Muslim Brotherhood) 529 ஆதரவாளர்களுக்கு எகிப்தின் ஒரு கட்ட பஞ்சாயத்து நீதிமன்றத்தால் (kangaroo court) திங்களன்று வழங்கப்பட்ட மரண தண்டனையானது, பரந்த மக்கள் எதிர்ப்பை அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் இராணுவ ஆட்சிக் குழுவின் கொடூர முயற்சிகளில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.

தெற்கு நகரமான Minya இல் நடந்த அந்த வழக்கு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கே அழைத்து வரப்படவில்லை. இரத்த தாகமெடுத்த இராணுவத்தின் ஒரு சேவகராக, நீதிபதி, நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருசில பிரதிவாதிகளை அவமானப்படுத்தி கூச்சலிட்டார். எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்த இழிவுகரமான விசாரணைகள் இரண்டுக்கும் குறைவான நாட்களுக்குள் முடிந்து போனதோடு, ஒரு பொலிஸ் சிப்பாயின் படுகொலைக்காக 500க்கும் மேற்பட்ட பிரதிவாதிகளைத் தூக்குமேடைக்கு அனுப்பும் தீர்ப்போடு முடிவு பெற்றது.

அந்த வழக்கு விசாரணை, இராணுவ சர்வாதிகாரத்திற்கு பிரதான அரசியல் எதிர்ப்பான முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஆதரவாளர்களின் அரசு படுகொலைக்கு, ஒரு போலி-சட்டத்திரையை வழங்கும் முழுமுதல் நோக்கத்திற்காக நடத்தப்பட்டிருந்தது.

முற்றிலும் எரிச்சலூட்டும் விதமாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், பாரிய படுகொலையாளர்களின் அந்த ஆட்சிக்கு ஆதரவை அறிவித்ததோடு இணைந்து, மரண தண்டனைகளின் மீது பெயரளவிலான ஒரு விமர்சனத்தை வழங்கின. அவற்றின் "ஆழ்ந்த கவலையும்", அதிர்ச்சியும்" இராணுவ ஆட்சி குழுவுடனான அவற்றின் "முக்கிய உறவுகளுக்கு" குழிபறிக்க அனுமதிக்காத விதத்தில் அமைந்திருந்தன. அந்த மரண தண்டனையை" ஐரோப்பிய ஒன்றியம் "கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும்" என வர்ணித்ததோடு, எகிப்திய இடைக்கால அதிகாரிகள்" சர்வதேச தரமுறைகளைப்" பின்பற்ற வேண்டுமென அழைப்பு விடுத்து, இது குறிப்பாக ஜனநாயகத்தை நோக்கி எகிப்து மாறி வருவதன் மீது நம்பகத்தன்மையைப் பெற அவசியமாகும், என்று வலியுறுத்தியது.

இராணுவ ஆட்சி குழு ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளதோடு, அதன் எதிர்பாளர்களில் நூற்றுக்கணக்கானவர்களை தூக்கிலிட உள்ளது, இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எகிப்தின் "ஜனநாயகத்தை நோக்கிய மாற்றம்" குறித்து பேச துணிந்துள்ளது.

அதற்கு சற்றும் சளைக்காமல், ஒரு அருவருக்கத்தக்க நகைச்சுவை எழுத்தப்பட்டதைப் போன்றவொரு அறிவிப்பில், அமெரிக்க வெளியுறவுத்துறை, அவர்களின் ஜனநாயக மாற்றம் முன்னோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில், எகிப்தில் உள்ள அனைத்து கட்சிகளும், குழுக்களும், இது அனைத்தையும் உள்ளடக்கிய விதத்தில் செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்று அழைப்பு விடுத்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த 529 நபர்களும், அவர்களின் கைகள் கட்டப்பட்டு, அவர்களின் கழுத்தைச் சுற்றி கயிறு தொங்க விடப்பட்டு தூக்குமேடையில் நிற்கின்ற நிலையில், எவ்வாறு அவர்கள் ஜனநாயகத்தை நோக்கி "நகர வேண்டுமென" வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியிடம் இருந்து மேலதிக தகவல்கள் வரும் வரையில் காத்திருக்க வேண்டியது தான்.

ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவோடு அது செயல்படுகிறதென்பதில் இராணுவத்திற்கு நம்பிக்கை இல்லாதிருந்தால், அது மரண தண்டனைகளை விதிக்க துணிந்திருக்காது. பீல்டு மார்ஷல் அப்தெல்-பதாஹ் அல்-சிசி, சிலியின் மறைந்த சர்வாதிகாரி ஜெனரல் ஆகஸ்டோ பினோசேயின் ஒரு நவீன எகிப்திய வடிவம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. சிலியின் முன்னாள் சர்வாதிகாரியைப் போலவே, அல்-சிசியும் அமெரிக்க ஆதரவுடனான இராணுவ சதியில் அதிகாரத்திற்கு வந்தார்; ஒரு பாசிச இராணுவ சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்புவதில் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக யுத்தத்தை அறிவிப்பதில் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடோர் அலெண்டேக்கு எதிரான அமெரிக்க ஆதரவிலான 1973 ஆட்சி சதியை தொடர்ந்து, பினோசே கொலைப் படைகள், கொடுங்சிறை முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்களின் உதவியோடு சிலியை சர்வதேச நிதியியல் மூலதனத்திற்கான ஓர் இரத்தந்தோய்ந்த ஆடுகளமாக மாற்றினார். மத்திய உளவுத்துறை (CIA) மற்றும் பல்வேறு அமெரிக்க அரசாங்கங்களின் ஒத்துழைப்போடு, பினோசேயின் இராணுவ ஆட்சி குழு அரசியல் எதிர்ப்பாளர்களை கொன்றுள்ளதோடு, காணாமல் போக செய்ததோடு, குறைந்த ஊதியங்கள் மற்றும் உயர்ந்த வட்டி விகிதங்களை கொண்டு வந்து, ஒரு சிறிய ஆளும் மேற்தட்டிற்கு அதிகபட்ச இலாபங்களை திரட்ட துப்பாக்கி முனையில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டியது.

சிலியை போன்றே, எகிப்திய இராணுவ ஆட்சி குழுவின் கொடூரமான வழிமுறைகளும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் நலன்களுக்குச் சேவை செய்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஜூலை 3, 2013 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தன மற்றும் அதைத் தொடர்ந்து எண்ணற்ற உள்ளிருப்பு போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இராணுவ ஆட்சி குழு ஒடுக்கியதையும் ஆதரித்தன. முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB) ஜனாதிபதி மொஹம்மத் மூர்சிக்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட அந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னரில் இருந்து, இராணுவ ஆட்சி குழு MBக்கு தடை விதித்துள்ளது; அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை கொன்றுள்ளது மற்றும் சிறையில் அடைத்துள்ளது; போராட்டங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்துள்ளது மற்றும் ஒரு புதிய அரசியலமைப்பில் அதன் தனிச்சலுகைகளை காப்பாற்றி வைத்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் புரூஸ்ஸெல்சின் ஆதரவோடு, எகிப்திய இராணுவ இராணுவ ஆட்சி குழு அதன் கொடூர ஆட்சியை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் விஸ்தரிக்க முனைந்து வருவதோடு, சர்வதேச நிதியியல் மூலதனத்தின் சாதகமான விதத்தில் அனைத்து வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை வன்முறைரீதியில் நசுக்கவும் முயன்று வருகிறது.

இது, மிகத் தெளிவாக தொழில்துறை, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான எகிப்திய மந்திரி மவ்னிர் ஃபக்ரி அப்தெல் நௌரால் வெளிப்படுத்தப்பட்டது. சிசி'யின் ஜனாதிபதி காலம் ஸ்திரப்பாட்டைக் கொண்டுவருமென எகிப்திய முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்" என்ற தலைப்பில் வெளியான ராய்ட்டர்ஸின் ஒரு கட்டுரையில் இவ்வாறு அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டது:

ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றாம் உலக நாட்டில் ஓர் இராணுவ அதிகாரியோ அல்லது ஒரு முன்னாள் அதிகாரியோ ஒரு ஜனாதிபதி வேட்பாளராக அல்லது ஒருவேளை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது, மேற்கில், புருவங்களை உயர்த்த செய்யும், அத்தோடு அது ஒரு ஜோர்ஜ் வாஷிங்டனின் பிம்பத்தை அல்ல மாறாக... ஒரு சீர்திருத்தவாதி என்பதை விட ஒரு சர்வாதிகாரியான பினோசேயின் பிம்பத்தை மனதில் கொண்டு வரக்கூடும்... [ஆனால்] இந்த நாட்டிற்கு, இன்று நின்றிருக்கும் நிலையில், அதை ஒட்டுமொத்தமாக இழுத்துச் செல்லும் ஒரு பலசாலி அவசியப்படுகிறார்... சட்டம் ஒழுங்கானது முதலீடு மற்றும் பொருளாதாரத்தை நோக்கிய ஒரு நல்ல விடயமாகும்.

சர்வதேச வங்கிகளும், முதலீட்டாளர்களும் நீண்ட காலமாகவே சிசி'ஐ ஜனாதிபதியாக நியமிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். எகிப்தில் செயல்பட்டு வரும் இலண்டனை மையமாக கொண்ட எல்லைக் கடந்த சந்தைசார் வங்கி Exotix இன் கப்ரியல் ஸ்டேர்ன் கூறுகையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் அது [எகிப்து] ஜனநாயகரீதியில் இல்லையென்று தோன்றுவதாக கூறுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது மிகவும் ஸ்திரமானது, ஆகவே எனது முதலீடும் பாதுகாப்பாக இருக்கும், என்றார். அமெரிக்க மத்திய வங்கியின் நிதி மேலாண்மை பிரிவால் (Merrill Lynch) கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, சிசி ஜனாதிபதியாகும் வாய்ப்பை "சந்தைக்கு நேசமான ஒரு காலம் நெருங்குவதாக" வர்ணித்ததோடு, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து ஒரு "பெரிய" கடனையும் கோரியது.

இந்த மாத தொடக்கத்தில், சிசி எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பல ஆண்டு கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அவலங்களைக் காட்டி அச்சுறுத்தினார்: ஒட்டுமொத்த நேர்மையோடும் ஒட்டுமொத்த புரிதலோடும் கூறுவதானால், நமது பொருளாதார சூழல்கள், மிக மிக சிரமத்தில் உள்ளன... ஒன்றிரண்டு தலைமுறைகள் [கஷ்டப்பட வேண்டியதிருக்கும்], அதனால் அதற்கடுத்த தலைமுறைகள் உயிர் வாழ முடியும், என்றார்.

அதன் ஆட்சிக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் வன்முறைரீதியில் நசுக்கும் அதன் எதிர்புரட்சிகர முயற்சிகளில் இராணுவ ஆட்சி குழுவின் தீவிரம், அதிகரித்து வரும் சமூக மோதல்களின் மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் ஒரு புதிய வெடிப்பின் அறிகுறிகளுக்கு இடையே வருகிறது. மருத்துவர்கள், ஜவுளித்துறை தொழிலாளர்கள், பொதுத்துறை சேவகர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர்கள் உட்பட எகிப்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் எண்ணிக்கை பெப்ரவரியில் 1,044ஐ எட்டியதாக ஓர் எகிப்திய ஆய்வு மையமான Democracy Meter, திங்களன்று, எழுதியது.

ஊடக அறிக்கைகளின்படி, அலெக்சாண்டிரியாவின் கடலோர நகரில் தபால்துறை தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் ஐந்து தலைவர்கள் செவ்வாயன்று அதிகாலை வேட்டையில் அவர்களின் வீடுகளில் கைது செய்யப்பட்டனர். அதே நாள், சாத்தியமற்றவற்றையும் இராணுவத்தால் செய்ய முடியுமென" அச்சுறுத்தி, சிசி ஒரு புதிய "பயங்கரவாத-எதிர்ப்பு பிரிவு" ஸ்தாபிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். எகிப்திய நாளிதழ் Al-Mary Al-Youm இன் செய்தியின்படி, உள்நாட்டு தேசிய பாதுகாப்பிற்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள அதிகபட்ச முயற்சி செய்யப்படுமென" அவர் அறிவித்தார்.

முன்பில்லாத அளவிற்கு மேலதிகமாக நேரடி பாசிச சர்வாதிகாரத்திற்கான இராணுவ ஆட்சி குழுவின் தயாரிப்புகளும், மரண தண்டனைகளும் ஓர் எச்சரிக்கை ஆகும். இது, ஆளும் வர்க்கம் எங்கும் நிற்க போவதில்லை என்பதையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சவாலுக்கு எதிராகவும் இரத்தந்தோய்ந்த முறைமைகளோடு அதன் வர்க்க நலன்களைப் பாதுகாக்க அது தயாராக உள்ளதென்பதையும் உறுதிப்படுத்துகிறது.

தண்டிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் மற்றும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பிற்கு உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்கள் முன்வர வேண்டுமென நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஏகாதிபத்திய-ஆதரவிலான இராணுவ ஆட்சி குழுவைக் கண்டித்தும், மரண தண்டனையை திரும்பப் பெற வேண்டும் மற்றும் அந்த அனைத்து பிரதிவாதிகளையும் விடுவிக்க வேண்டுமென கோரி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.