சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government revives terror campaign against Tamils

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை புதுப்பிக்கின்றது

By Subash Somachandran and W. A. Sunil
27 March 2014

Use this version to printSend feedback

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம், வட மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ள இராணுவப் பாய்ச்சல், 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின்போது முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதப் பிரச்சாரத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது. வீடு வீடாக முன்னெடுக்கப்படும் தேடுதல் வேட்டை, விசாரணைகள் மற்றும்சந்தேக நபர்கள் என சொல்லப்படுபவர்களை கைது செய்தலும் இந்த ஒடுக்குமுறையில் அடங்கும். 2009 மே மாதம் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு முன்னாள் உறுப்பினர்கள் அந்த அமைப்பை புதுப்பிக்க முயற்சிக்கின்றனர் என்பதே அரசாங்கம் கூறும் சாக்குப் போக்காகும்.

பொலிசும் இராணுவமும் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்கள் உட்பட வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பீதிக்குள்ளாக்குகின்றனர். சுற்றிவளைக்கப்படும் மக்கள், விசாரணைகள் முடியும் வரை மைதானமொன்றில் அல்லது ஒரு திறந்த வெளியில் நிற்க கட்டளையிடப்படுகிறார்கள் அல்லது அவர்களது வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கப்படுகிறார்கள்.

கடந்த வாரங்களில் பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. முல்லைத்தீவில் சுதந்திரபுரம், இருட்டு மடு ஆகிய இரு கிராமங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பூந்தோட்டம், அண்ணா நகர், மாரம்பைக்குளம், கருப்பணிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் போன்ற கிராமங்கள் நூற்றுக்கணக்கான சீருடையணிந்த படையினராலும் அவர்களது சாதாரண உடையணிந்த முகவர்களாலும் சுற்றி வளைக்கப்பட்டன. அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்ட பின்னரே மக்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வவுனியாவில் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளூர் இராணுவத் தலைமையக மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டதோடு சந்தேக நபர்களுக்கு தஞ்சம் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டார்கள்.

மார்ச் 22, யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை நகரில் 300க்கும் அதிகமான இளைஞர்கள் வயல்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த காந்திலியன் என்ற இளைஞர் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியில் இரு கிராமங்களில் நடத்தப்பட்ட இன்னொரு சோதனையில் 20 வயது துரைராஜாவும் ஜெயரமேசும் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 12 அன்றே இந்த பயங்கர மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரம் தொடங்கியது. அன்றுதப்பிவந்த புலி உறுப்பினர் என சொல்லப்படும்கோபி என்றழைக்கப்படும் கே.பீ. செல்வநாயகத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (டீஐடி), அவரைப் பற்றி பொதுமக்கள் தகவல் தரவேண்டும் எனக் கோரியது. அடுத்தநாள், கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரத்தில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரியின் வீட்டுக்கு செல்வநாயகம் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என (டீஐடி) அறிவித்தது. அந்தப் பிரதேசத்தை நூற்றுக்காணக்கான படையினரும் பொலிசாரும் சுற்றி வளைத்தனர்.

வீட்டுக்குள் டீஐடி அதிகாரிகள் நுழைந்தபோது, அந்த சந்தேக நபர் அவர்களில் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிவிட்டார் என பொலிஸ் கூறிக்கொள்கின்றது. ஜெயக்குமாரியும் அவரது பதின் வயது மகளும் டீஐடியால் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமாரி தென்பகுதியில் உள்ள சிறை ஒன்றில் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் (பீடீஏ) 18 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவரது மகள் விபூஷிகா சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 16, மேலும் இரு மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருகி பெர்ணான்டோ மற்றும் கத்தோலிக்க மதகுரு பிரவீன் மகேசனையும் கைது செய்ய பீடீஏயில் உள்ள பரந்த அதிகாரங்ளை டீஐடி பயன்படுத்திக்கொண்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்த நிலையில், நீதிமன்றம் ஒன்று அவர்களை விடுவித்த போதிலும், வெளிநாட்டு செல்ல முடியாது மற்றும் இலங்கை அல்லது வெளிநாட்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்ற வெளிப்படையான ஜனநாயக விரோத நிபந்தனைகளின் கீழேயே விடுதலை செய்தது.

புலி சந்தேக நபர்கள் என்று சொல்லப்படுபவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (7,650 அமெ. டொலர்) சன்மானம் அறவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24 அன்று செல்வநாயகத்தின் தாயாரின் வீட்டை சோதனையிட்ட இராணுவம், அவரையும் இன்னொரு பெண்ணையும் செல்வநாயகம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தனர் என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்தது.

இப்போது பொலிசார் புலி உறுப்பினர்கள் என சொல்லப்படுபவர்கள் பற்றிய சுவரொட்டிகளை கிழக்கு மாகாணத்திலும் ஒட்டியுள்ளனர். இது அந்தப் பிரதேசத்துக்கும் பாய்ச்சல் விரிவாக்கப்படும் என்பதற்கான அறிகுறியாகும்.

ஒரு தொகை ஆயுதங்களை கிளிநொச்சியில் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். “புலிகளை புதுப்பிக்கவும் ஒரு தனி அரசுக்கும் அழைப்புவிடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் கிடைத்ததாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்தார். “தற்போது எங்களிடம் உள்ள தகவல்களின்படி, அந்தக் கும்பலின் தலைவர் கோபி, ஆனால் எங்களால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது என அவர் அறிவித்தார்.

வடக்கில் இந்த இராணுவ-பொலிஸ் நடவடிக்கையானது ஜெனீவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் (யுஎன்எச்ஆர்சி) அமெரிக்க அனுசரணையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மறுபக்கமாக உள்ளது. இந்த தீர்மானம் உள்நாட்டு யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் இராஜபக்ஷ அரசாங்கமும் இலங்கை பாதுகாப்புப் படைகளும் மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த யுத்தத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஆதரித்தன. அவை இப்போது, இராஜபக்ஷ அரசை சீனாவில் இருந்து தூர விலகச் செய்வதற்கு நெருக்கும் தமது சொந்த நோக்கத்துக்காக யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு வஞ்சத்தனமாக அழைப்பு விடுக்கின்றன.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதன் பேரில் புலிகள் மீண்டும் ஒழுங்கமைவதாக இராஜபக்ஷவின் அரசாங்கம் வலியுறுத்துகிறது. இனவாதத்தையும் புதிய யுத்தத்தின் பீதியையும் கிளறிவிடுவதன் மூலம் சனிக்கிழமை நடக்கவுள்ள மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களில் வெற்றிபெறுவதே அதன் உடனடி இலக்காகும். எனினும், இராஜபக்ஷவின் உண்மையான இலக்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமுமே ஆகும்.

இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் ஒரு சமூக எரிமலையின் மீது அமர்ந்துள்ளனர். கடந்த மாதங்களில் தமது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்களும் இளைஞர்களும் வீதிக்கு இறங்கினர். கடந்த பெப்பிரவரி 18 அன்று, கொழும்பு புறநகர் பகுதியான வனாதமுல்லவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிராகவும் பொலிஸ் கும்பல் என சந்தேகிக்கப்படுபவர்களால் பிரதேசவாசி ஒருவர் கடத்தப்பட்டதற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். மார்ச் 16 அன்று, கொழும்புக்கு வெளியில் உள்ள ஹங்வெல்லையில், குடி நீரை தொழிற்துறை மாசுபடுத்துவதற்கு எதிராக கிராமவாசிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அதைத் தகர்ப்பதற்காக அரசாங்கம் பொலிசையும் இராணுவக் கமோண்டோக்களையும் நிறுத்தியது.

மார்ச் 20 அன்று, கொழும்பில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தை கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி கொண்டு பொலிஸ் அடக்கியது. மறுநாள், மூன்று பேரின் உயிரிழப்புக்கு காரணமான பாதுகப்பற்ற தொழில் நிலைமைகளை மாற்றுமாறு கோரி கொழும்புக்கு அருகில் அதிவேகப் பாதை திட்டங்களில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

பூகோள வீழ்ச்சியின் மத்தியில் இலங்கை பொருளாதாரம் சரிந்து வருகின்ற நிலைமையில், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள், ஊதியம் மற்றும் தொழில்கள் மீது கடுமையான தாக்குதலுக்கு வழி வகுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டு சிக்கன நடவடிக்கைகள் உக்கிரமாக்க தயாராகின்றது. சேவையில் இருந்து ஓய்வுபெறும் அரசாங்க ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு கொடுப்பதை நிறுத்தவுள்ளதாக கடந்த வாரம் திறைசேரி அறிவித்தது. மார்ச் 24 அன்று, மானியங்கள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து பத்தாயிரக்கணக்கான மீனவர்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதும் இனவாத வழியில் ஒடுக்குவதுமே வளர்ச்சிகாணும் சமூக பதட்டங்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கத்திடம் உள்ள ஒரே பதில். வடக்கில் தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை பயன்படுத்தும் அதேவேளை, அது கொழும்பிலும் தெற்கிலும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வகுப்புவாத பிளவை கிளறிவிடுவதன் பேரில், பொது பல சேனா, சிங்கள ராவய மற்றும் ராவனா பலகாய போன்ற பாசிச பௌத்த அதி தீவிரவாத அமைப்புக்களுக்கு மௌனமாக ஆதரவு கொடுக்கின்றது.