சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP speaks to Colombo residents about austerity and war

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யுத்தம் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் பற்றி கொழும்பு வாழ் மக்களுடன் கலந்துரையாடியது

By our correspondents
24 March 2014

Use this version to printSend feedback

கடந்தவாரம், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை தொடர்மாடி வீட்டு மக்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் அதன் வேட்பாளர்களுக்கு கணிசமான ஆதரவினைப் பெற்றுக் கொண்டனர். மார்ச் 29ம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி அதன் அரசியல் குழு அங்கத்தவர் தோழி விலானி பீரீஸ் தலைமையில் 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை தொடர்மாடி வீடுகள் 1970களில் கொழும்பில் கட்டப்பட்ட தொடர்மாடி வீடுகளில் மிகவும் பழமையான ஒன்று. இது அடிப்படைவசதிகளில் குறைபாடுடையது. குழந்தைகளுக்கான ஒரு சிறிய விளையாட்டு திடலைத் தவிர ஒரு வாசிகசாலையோ இளைஞர்களுக்கான எந்தவிதமான வசதிகளோ கிடையாது. அங்கு வாழும் மக்களின் தகவல்களின்படி, குப்பைகள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை அகற்றப்படுகிறது. பெரும்பான்மையான வீடுகள் சீர்குலைந்த நிலையில் உள்ளன. இந்த வீடுகளின் அமைப்பானது சிறிய சமையல் அறை, 15x20 அடி நீளமான அறை மற்றும் முன்னறையையும் கொண்டது. ஆனால் படுக்கை அறை கிடையாது. அதிகமான குடும்ப அங்கத்வர்களைக் கொண்ட குடும்பங்கள் மேலதிகமான பகுதிகளை அமைத்துள்ளார்கள்.


கொட்டாஞ்சேனை தொடர்மாடி வீடுகள்

பல்லாயிரக் கணக்கான நகரவாசிகளை வெளியேற்றும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டத்தில் இருந்து ஒரு தற்காலிக இடைநிறுத்தம் தமக்கு கிடைத்துள்ளதாக அங்கு வாழும் மக்கள் குறிப்பிட்டனர். கொழும்பினை ஆசியாவின் ஒரு வியாபார மையமாக மாற்றும் முயற்சியாக அங்கு வாழும் 70,000 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. (See: “Sri Lankan chief justice backs Colombo evictions”)

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தினை விநியோகித்திருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்! யுத்தம், சிக்கனம் மற்றும் பொலிஸ்-அரச வழிமுறைகளுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்துக்காக போராடு! அத்துடன், அதிகரித்து வரும் மூன்றாம் உலக யுத்த அபாயம், இலங்கை அரசாங்கத்தின் சமூக வெட்டு நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றியும் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினர். அவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் கண்ணோட்டத்தினையும் சோசலிச வேலைத் திட்டத்தினையும் தெளிவுபடுத்தினர். மக்கள் அவதானமாக செவிமடுத்தனர்.

மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்கள் வெளிக் கொணராத நிலையில், ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய திருப்பத்தின் ஏகாதிபத்திய யுத்த அபாயத்தினைப் பற்றி மக்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். சீனாவை சுற்றி வளைப்பதின் அரசியல் இராணுவ மூலோபாயம் தொடர்பாகவோ அல்லது பாசிச அமைப்புக்களை ஒருமுகப்படுத்தி அவர்களின் பின்புலத்துடன் அமெரிக்கா உக்ரேனில் மேற்கொண்டிருக்கும் ஆட்சி சதி பற்றியோ மக்கள் அறியாதுள்ளனர்.

ஒரு தொலைத் தொடர்பு தொழிலாளிநீங்கள் எனக்கு தெளிவுபடுத்தும் வரை உலக யுத்தம் தொடர்பாக நான் எதையும் அறிந்துகொள்ளவில்லை. நீங்கள் சொல்வது போல தொடர்பு சாதன ஊடகவியலாளர்களோ, ஏனைய கட்சிகளோ இதைப்பற்றிக் கதைப்பதில்லை. உலக யுத்தம் ஏற்பட்டால் உலக மக்களுக்கு என்ன நிகழும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.”


சோசலிச சமத்துவ கட்சி தொழிலாளர்கள் குடியிருப்பாளர்களுடன் பேசுகின்றனர்

இந்த இளம் தொழிலாளர்கள், அமெரிக்கா இலங்கை மீது மேற்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தினை அறிந்திராததோடு, அமெரிக்காவின் இந்த பிரச்சாரத்திற்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கத்தினை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் நம்புகின்றனர்.

இது மனித உரிமை மீதான அமெரிக்காவின் அக்கறையால் மேற்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவின் ஆசியாவை நோக்கித் திரும்பும் வேலைத் திட்டத்தினை முழுமையாக ஆதரிக்குமாறு இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கொடுக்கும் அழுத்தம் மட்டுமே என சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரக் குழுவினர் தெளிவுபடுத்தினர்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் வாஷிங்டனின் போலி மனித உரிமை பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு போன்றவை, அரசாங்கம் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மீதான பரந்த எதிர்ப்பில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சியாகும்.

இதை விளங்கிக் கொண்ட ஒரு தொழிலாளி,நான் நினைக்கின்றேன் இது சரியானது, உண்மை நிலையை விளங்கிகொள்ள நீங்கள் எனக்கு உதவி புரிந்துள்ளீர்கள்என்றார்.

ஒரு ஓய்வுபெற்ற துறைமுக தொழிலாளிஉலக யுத்தம் ஏற்பட்டால் முழு உலகமும் அழிக்கப்படும். அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. திட்டமிட்ட நாட்டிற்கு பல மைல்களுக்கு அப்பால் இருந்து அவற்றை ஏவ முடியும்,” என்றார். இந்த தொழிலாளி வழமையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டில் உள்ள
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராக இருந்துள்ளார். கடந்த தேர்தலில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ளார்
.

இந்த தேர்தலில் நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை, எல்லோரும் மக்களை ஏமாற்றுகின்றனர். தேர்தலின் போது அவர்கள் போலி வாக்குறுதிகளுடன் சுற்றிசுற்றி வருவார்கள் தேர்தலின் பின்னர் அவர்களைக் காண முடியாது,” என அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பதை நிராகரிப்பது மட்டும் போதுமானதல்ல. ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தினை கட்டியெழுப்ப போராட வேண்டும், என சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் விளக்கினர்.

இன்னொமொரு தொழிலாளிநான் தேர்தலில் வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். நீங்கள் மாத்திரமே அரசியல் நிலமைகளை விளங்கப்படுத்தினீர்கள், தற்போது எனக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது என்பதையிட்டு சந்தோஷமடைகிறேன். என்னுடைய வாழ்க்கையில் இவ்வாறான ஒரு அரசாங்கத்தை காணவில்லை. யுத்தத்தின் போது (புலிகளுக்கு எதிரான யுத்தம்) கூட நாங்கள் இவ்வாறு பார்த்ததில்லை. அப்போது குண்டு வெடிப்பு தொடர்பாகவே பயம் இருந்தது. ஆனால் தற்போது எந்நேரமும் பயத்துடன் வாழ்கின்றோம். அரசுக்கு எதிராகப் பேச முடியாது. ஏனெனில், சர்வதேச சதியின் ஒருபகுதி எனக் கூறி கடத்திச் சென்றுவிடுவார்கள். தற்போது நீங்கள் உங்கள் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தாலும் நீங்கள்சர்வதேச சதியின்ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்படுவீர்கள்,” என்றார்.

ஒரு ஆசிரியை, அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் .நா மனித உரிமைப் பேரவையில் (UNHRC) யுத்த குற்றப் பிரேரணையை கொண்டு வருவது சம்பந்தமாக குறிப்பிடும் போது, “இதே அமெரிக்காவும் பிரிட்டனும் யுத்தத்துக்கு ஆதரவளித்தன. இன்று தமது சொந்த நலனுக்காகவே தீர்மானம் கொண்டு வருகின்றன. மனித உமையை பாதுகாப்பதற்கு அல்ல,” என்றார்.

ஒரு தமிழ் பெண்மணி, பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்தபோதிலும் பல்வேறு தேர்தல்களில் வாக்குறுதியளித்தது போல, வாழ்க்கைச் செலவினை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. “பதிலாக, அரசை விமர்சிப்பவர்களையும் எதிரப்பவர்களையும் மக்களையும் பயமுறுத்துவதற்காக, புலிகளின் மீள்வருகை தொடர்பாக பிரச்சாரம் செய்கின்றது.”

அப்பெண்மணி தொடர்கையில், தமிழ் விதவையும் மனித உரிமை பிரச்சாரகருமான பாலேந்திரன் ஜெயகுமாரியும் அவரது 13 வயது மகளும் தடுத்து வைக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்டார். ஜெயகுமாரி முன்னாள் புலி உறுப்பினருக்கு புகலிடம் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். “அரசு எல்லாவற்றையும் இழந்த ஒரு குடும்பத்தை தண்டிக்கின்றதுஎன அவர் குறிப்பிட்டார்

அப்பெண்மணி, சிவில் யுத்தத்தின் ஆரம்ப புள்ளியான 1983 யூலை இனக் கலவரத்தின் போது அயல் வீட்டாரான சிங்கள மக்கள் எவ்வாறு தன்னைப் பாதுகாத்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். பலர் வீதிகளில் கொல்லப்பட்டனர், பல வீடுகள் எரிக்கப்பட்டன. அவ்வாறன ஒன்றை தோற்றுவிக்கவே அரசு முற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.