சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Defeat in French municipal elections staggers ruling Socialist Party

பிரெஞ்சு நகரசபை தேர்தல்களின் தோல்வியால் ஆளும் சோசலிஸ்ட் கட்சி தடுமாறுகிறது

By Antoine Lerougetel
29 March 2014

Use this version to printSend feedback

நவ-பாசிச தேசிய முன்னணியின் வளர்ச்சியும், நாளைய பிரெஞ்சு நகரசபை தேர்தல்களின் இறுதி சுற்றில், நிர்வாக சபைகளில் சோசலிஸ்ட் கட்சி (PS) பாரியளவில் தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறு இருப்பதும் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பல PS அதிகாரிகள் அல்லது உள்ளூர் கவுன்சிலர்கள், சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி ஜோன்-மார்க் எய்ரோவை (Jean-Marc Ayrault) பதவியிலிருந்து நீக்கவும், மற்றும் PSஇன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் முழு மந்திரிசபை மாற்றத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஹாலண்டும் சரி, எய்ரோவும் சரி இருவருமே ஏறத்தாழ 27 சதவீதத்தோடு முன்பில்லாத அளவிற்கு கருத்துக் கணிப்புகளில் மிகக் குறைந்த மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளனர். கருத்துக் கணிப்புகளில், 69 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்தை ஜனாதிபதி மாற்ற வேண்டுமென விரும்புகின்றனர். அதன் யுத்தங்கள், சிக்கன கொள்கைகள், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களால் தொழிலாளர்களும், இளைஞர்களும் வெறுப்படைந்து, ஆத்திரமடைந்துள்ளனர்.

பிரான்சின் 36,000கும் மேலான கம்யூன்கள் அல்லது நகரசபைகளில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் நகரங்களில் தேசிய முன்னணி 562 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற, அதற்கு 229 கம்யூன்களில் 10 சதவீத வாக்குகளை பெற வேண்டிய அவசியம் உள்ளதோடு, அந்த சுற்றில் அது முதலாளித்துவ "இடது" மற்றும் UMP ஆகியவற்றோடு மும்முனை போட்டிகளில் இருக்கும்.

1995 இல் 116 நகரசபைகளில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த FNஇன் முந்தைய அதிக எண்ணிக்கையை விட, இது அண்மித்தளவில் இரண்டு மடங்காகும். 1990களில் FN நான்கு நிர்வாக சபைகளை —Marignane, Orange, Toulon and Vitrolles— கைப்பற்றியது. நகரசபை வரி விகிதங்களில் பெரும் உயர்வுகள் மற்றும் நகர நிர்வாக சபையின் கடன் உயர்வு என, அந்த நகரசபைகள் கட்சியின் பிம்பத்தை அழிவுகரமாக சேதப்படுத்தியது. மேலும் Toulon மற்றும் Vitrolles நகரசபைகளை பொறுத்த வரையில், பொது நிதியின் துஷ்பிரயோகத்திற்கு ஒரு குற்றப்பத்திரிகையாக இருந்தன. அதன் விளைவாக, இந்த நிர்வாக சபைகள் அனைத்திலும் FN தோல்வி அடைந்தது. ஒரு முன்னாள் சுரங்க தொழில் நகரமும், 60 ஆண்டுகளாக PS இன் பலமான கோட்டையாக விளங்கிய வடக்கு பிரான்சின் Hénin-Beaumont இல் 50.26 சதவீத வாக்குகளோடு FN வேட்பாளரின் முதல் சுற்று நேரடி வெற்றிக்கு கூடுதலாக, Fréjus, Saint-Gilles, Forbach, மற்றும் Béziersஇன் நிர்வாக சபைகளையும் தேசிய முன்னணி கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, நாடு முழுவதும் அதன் வேட்பாளர்களை நிறுத்த FNக்கு பலம் இல்லாததால், தேசியளவிலான வாக்குகளில் அதன் மொத்த பங்கு வெறும் 4.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. இருந்த போதினும், 1,000திற்கு அதிகமான கவுன்சிலர்கள் என்ற அதன் இலக்கை அது தாண்டிச் செல்ல உள்ளது, இது 2008இல் நடந்த கடந்த நகரசபை தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் 80 கவுன்சிலர்களை விட மிக பெரிய அதிக எண்ணிக்கையாகும்.

அதன் நிலையை காப்பாற்றும் ஒரு முயற்சியில் சோசலிஸ்ட் கட்சி, "குடியரசு முன்னணி" (Republican Front) என்றழைக்கப்படுவது FNஇன் வளர்ச்சியைத் தடுக்குமென்று தவறாக வாதிட்டு கொண்டு, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் வலதுசாரி Union for a Popular Movement க்கு (UMP) முறையீடு செய்து வருகிறது.

PS, UMP மற்றும் FNஇன் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ள மும்முனை போட்டியில், UMPக்கு சாதகமாக நிற்க கோரிய தலைமையின் அழைப்பை பெரும்பாலான PS வேட்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். Béziers நகர வேட்பாளர் போன்ற ஒரு சிலர் மட்டும் அதில் விதிவிலக்காக உள்ளனர்அந்நகரில் PS நிர்வாகிகள், FN ஆதரவிலான வேட்பாளர் ரோபர்ட் மினார்டும் (Robert Ménard), UMP வேட்பாளர் Elie Aboudஉம் வேறுபாடின்றி இருப்பதாக ஆட்சேபித்துள்ளனர்.

எவ்வாறிருந்த போதினும், தேசிய முன்னணியின் உயர்வைத் தடுப்பதில் இதுவொன்றும் செய்யப் போவதில்லை. சோசலிஸ்ட் கட்சி பெரிதும் UMPஆல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த ஆளும் மேற்தட்டும் வேகமாக வலதிற்குத் திரும்பி வருகின்ற நிலையில், PSக்கு நெருக்கமான ஊடக அடுக்குகள் உட்பட, முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகளும், பிரதான முதலாளித்துவ அரசியலின் ஓர் உள்ளார்ந்த பாகமாக FNஐ ஒருங்கிணைக்க நகர்ந்து வருகின்றன. எவ்வாறிருந்த போதினும், UMP கட்சி தலைவர் ஜோன்-பிரான்சுவா குப்பே, அத்தோடு முன்னாள் பிரதம மந்திரிகள் பிரான்சுவா ஃபிய்யோன் மற்றும் அலென் ஜூப்பே போன்ற முன்னணி UMP அங்கத்தவர்கள், PSஆல் பரிந்துரைக்கப்பட்ட குடியரசு முன்னணி உபாயத்தை மறுத்தளித்தனர். ஆகவே இரண்டாம் சுற்று தேர்தல்களில், எங்கே FNஐ தோற்கடிக்கக் கூடிய சக்தியாக PSஇன் வேட்பாளர்கள் உள்ளனரோ, அங்கே தான் மும்முனை போட்டி நிலவுகிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.

பல UMP அங்கத்தவர்கள், FN க்கு ஆதரவாக வேலை செய்து வருகின்றனர்—UMPஇல் மிகப் பெரிய கன்னையாக உள்ள மக்கள் வலது (Droite Populaire) போக்கு, FN க்காக பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறது. கடந்த ஞாயிறன்று வெளியான நகரசபை தேர்தல்களின் முதல் சுற்று முடிவுகள், PS மற்றும் UMPக்கு இடையிலான "இரண்டு கட்சி முறையை முடிவுக்கு" கொண்டு வந்ததை அர்த்தப்படுத்துவதாக மரீன் லு பென்னின் கூற்றுக்களோடு, PSக்கு ஆதரவான நாளிதழ் Le Monde, மார்ச் 25இல், அதன் உடன்பாட்டை உறுதிப்படுத்தியது. "வலது மற்றும் இடத்திற்கு இடையில் தவறாக தேர்ந்தெடுக்கப்படுவதை", FN இன் வளர்ச்சி முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகவும், FN "ஒரு பெரிய, சுய அதிகார சக்தியாக" மாறியுள்ளதாகவும் கூறிய அப்பெண்மணியின் வாதங்களை அந்த பத்திரிகை மேற்கோளிட்டு காட்டியது. அரசியல் களத்தில் மூன்றாவது சக்தியாக அவரது கட்சியைக் கொண்டு வந்து, அதை பிராந்தியங்களில் நிலைநிறுத்தும்" அவரது பந்தியத்தில் மரீன் லு பென் வென்று வருகிறார்," என்பதை Le Monde ஒப்புக் கொண்டுள்ளது. FN ஒரு அரசாங்க கட்சியாக மாறும் பாதையில் பயணித்து வருகிறது," என்று Le Matin இன் மார்ச் 25 தலையங்கம் குறிப்பிட்டது.

இந்த கருத்துக்கள், பிரெஞ்சு முதலாளித்துவ "இடது", வலதுசாரி UMP உடன் சேர்ந்து கொண்டு, சமூக எதிர்புரட்சி கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதோடு, தீவிர வலதின் அரசியல் முகாமில் இருந்து பல கொள்கைகளை எடுத்து கையாண்டுள்ளது என்பதையே பிரதிபலிக்கின்றன. முக்காடு மற்றும் பர்தாவிற்கு எதிராக இஸ்லாமிய எதிர்ப்பு சட்டங்களுக்கு அது ஆதரவளித்ததோடு, லிபியா, சிரியா, மாலி, மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் காட்டுமிராண்டித்தனமான யுத்தங்களுக்கும் ஆதரவளித்தது.

PS இன் உள்துறை மந்திரி மானுவேல் வால்ஸ், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் பாரிய வெளியேற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறார், அத்தோடு ஒட்டுமொத்த ரோமா இன மக்களும் பிரான்சை விட்டு வெளியேற வேண்டுமென்ற அவரின் அழைப்பானது, ஒரு நவ-பாசிச ஆட்சி எதை உற்சாகத்தோடு நடைமுறைப்படுத்துமோ அந்த கொள்கைகளுக்கு ஆதரவு காட்டும் சக்திகள், PS இன் சமூக அடித்தளத்திற்குள்ளேயே, அங்கே உள்ளன என்ற உண்மையைப் பிரதிபலிக்கின்றது.