சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French elections: Rising neo-fascist vote exposes bankruptcy of pseudo-left NPA

பிரெஞ்சுத் தேர்தல்: அதிகரிக்கும் நவ-பாசிச வாக்களிப்பு போலி-இடது NPA இன் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது

By Kumaran Ira
29 March 2014

Use this version to printSend feedback

நடந்து வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணிக்கு (FN) கிட்டி வருகின்ற ஏற்றங்கள், பிரதான முதலாளித்துவ கட்சிகளின் உருக்குலைவையும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது கட்சிகளின் அரசியல் திவால்நிலையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவை ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமையிலான மதிப்பிழந்த முதலாளித்துவஇடதுகட்சிகளின் அரசியல் நிழலுருக்கள் என்பதற்கு மேல் ஏதுமில்லை. “PS மீதான நிராகரிப்பும் FN இன் கவலைக்குரிய எழுச்சியும்என்ற தலைப்பில் மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் NPA இந்தத் தேர்தலைPS மற்றும் அரசாங்கத்தில் அதன் கொள்கைகள் மீதான பரிதாபகரமான நிராகரிப்புஎன்று அழைக்கிறது. அந்த அறிக்கை பின்வருமாறு நிறைவுபெறுகிறது, “இந்தத் தேர்தல் தேசிய முன்னணியின் புதிய கவலைக்குரிய எழுச்சியாலும் குறிக்கத்தக்கதாக இருக்கிறது. இந்த எழுச்சி குறிப்பான பல நகரங்களை அச்சுறுத்துகிறது. இந்த சூழலுக்கு முகம்கொடுக்கும் நிலையில், NPA மக்களை அதிவலதுக்கு எதிராக அணிதிரள்வதற்கும், FN க்கு பாதை உருவாக்கித் தருவதாய் அமையும் அரசாங்கத்தின் சமூக மற்றும் ஜனநாயகப் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு ஒரு தீவிரமான மாற்றினை தேர்தலுக்கு பின்னர் கட்டியெழுப்புவதற்கும் அழைப்பு விடுக்கிறது.”

மார்ச் 30 அன்று நடக்கவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலின் இறுதிச் சுற்றில்அதிவலதுக்கு எதிராக அணிதிரளவாக்காளர்களுக்கு NPA அழைப்பு விடுப்பதென்பது, இறுதிச் சுற்றில் FN வேட்பாளரை தோற்கடிப்பது PS வேட்பாளராயினும் சரி அல்லது வலது-சாரி வெகுஜன இயக்கத்திற்கான ஒன்றியத்தின் (UMP) வேட்பாளராயினும் சரி அதனால் பிரச்சினையில்லை என்று வழிமொழிவதற்கு ஒப்பானதாகும். பிரான்சில் நவ-பாசிசத்தின் எழுச்சியையும் PS இன் பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் இரண்டையுமே எதிர்த்துப் போராட எண்ணுகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது எந்த அரசியல் முன்னோக்கையும் வழங்கவில்லை.

PSக்கு ஒருதீவிரமான மாற்றினைக் கட்டியெழுப்புவதற்கு வாக்காளர்களுக்கு வெற்றாவேசமான மற்றும் சிடுசிடுப்பானதொரு விண்ணப்பத்தை வழங்குகின்ற போதிலும் NPA அதுவேயும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, அவ்வாறாகவே பரவலாய் பார்க்கப்படுகிறது. PS உடன் நெடுங்கால அரசியல் கூட்டாளிகளாக இருந்து வந்திருக்கக் கூடிய இடது முன்னணியுடன் சேர்ந்து ஏப்ரல் 12 அன்று பிரயோசனமற்ற பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பது மட்டுமே ஒருதீவிரமான மாற்றினை உருவாக்குவதற்கு அதன் ஒரே திட்டமொழிவு.

PS குறித்த அதன் அரைகுறையான விமர்சனங்கள் எல்லாமே இரட்டைவேடம் தான். 2012 ஜனாதிபதித் தேர்தலில் இறுதிச் சுற்றில் ஹாலண்ட் மற்றும் UMP வேட்பாளரான நிக்காலோ சார்க்கோசி இடையேயான போட்டியில், ஹாலண்ட் பிற்போக்குத்தனமான கொள்கைகளையே ஏற்பார் என்று கடுகடுப்புடன் ஒப்புக்கொண்ட அதேநேரத்தில் ஹாலண்டுக்கு வாக்களிக்க NPA அழைப்பு விட்டது. ஆகவே வணிகங்களுக்கான வரிகள் குறைப்புக்கும் மற்றும் சமூக செலவினங்களிலான பத்து பில்லியன் கணக்கான யூரோக்கள் வெட்டப்பட்டதற்கும், மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஹாலண்ட் நடத்தியிருக்கும் போர்களுக்குமான அரசியல் பொறுப்பு அதற்கே உரியதாகும்.

NPA போன்ற போலி-இடது கட்சிகள் ஆளும் கட்சிகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவதாலும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு முட்டுக்கட்டை போடுவதாலும் தான், PS மற்றும் UMP ஆகியவற்றின் மீதான ஆழமான வெகுஜனக் கோபத்தையும் அவற்றின் மீதான பிரமை விலகலையும் பிரதிபலிக்கின்ற ஒரே உண்மையான எதிர் கட்சியாக காட்டிக் கொண்டு FN எழுச்சி காணமுடிகிறது.

FN “ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே அச்சுறுத்துவதாக NPA மிகவும் சுலபமாக சொல்லி விட்டு நகர்கின்ற அதேசமயம், அந்தக் கட்சியோ நாடு முழுவதும் எழுச்சி கண்டு வருகிறது என்பதோடு PS மற்றும் UMP க்கு அடுத்து சாத்தியமுள்ள மூன்றாம் ஆளும் கட்சியாக முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளால் மும்முரமாக பரிசீலிக்கப்பட்டும் வருகிறது.

நகராட்சித் தேர்தல்களின் முதல் சுற்றில் பிரான்சின் 36,000 நகராட்சிகளில் 600க்கும் குறைவான இடங்களில் தான் FN போட்டியிட்டது என்றபோதிலும் Forbach, Fréjus, Béziers, Perpignan மற்றும் Avignon உள்ளிட்ட 17 முக்கிய நகரங்களில் FN முதலாவதாக வந்தது. சுமார் 230 நகராட்சிகளில் FN இரண்டாம் சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கிறது. வடக்கில் பாரம்பரியமாக முதலாளித்துவஇடதுகட்சிகளுக்கு வாக்களித்து வந்திருக்கக் கூடிய முன்னாள் நிலக்கரி சுரங்கப் பகுதியான Hénin-Beaumont இல் முதல் சுற்றில் ஒரு FN மேயர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தர்களுக்கான செவிபோஃப் ஆய்வு மையத்தில் (Cevipof research centre) அரசியல் ஆய்வாளராய் இருக்கும் மடானி செயூர்ஃபா (Madani Cheurfa) கூறினார்: “அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் நிலவும் அந்நியப்பட்ட உணர்வு கடந்த நான்காண்டுகளில் மிகவும் மோசமாகி விட்டிருக்கிறது.” செயூர்ஃபா கூறினார்: “தேர்தல் முடிவுகளுக்கு மூன்று காரணிகளைக் கூறலாம்: அரசியல்வாதிகளுக்கும் வாக்களிக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் சென்றமை, சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதான அரசியல் கட்சிகள் எதனிடமும் தீர்வுகள் இல்லை என்பதான ஒரு உணர்வு, அத்துடன் சமீபத்திய பெரும் ஊழல்களின் ஒரு வரிசை.”

சமீபத்திய செவிபோஃப் கணக்கெடுப்பு ஒன்றின் படி, “அரசியல்வாதிகள் சாதாரண மக்கள் சிந்திக்கும் விதத்தில் சிந்திப்பதில்லை என்றே கேட்கப்பட்டவர்களில் 87 சதவீதம் பேர் கருதினார்கள், இடது அல்லது வலதில் தங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று 60 சதவீதம் பேர் தெரிவித்தனர்.”

பாசிசத்திற்கு எதிரான போராட்டமானது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு போராட்டத்தில், புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதுடன் பிணைந்திருக்கிறது. இந்த முன்னோக்கை NPA எதிர்க்கிறது, ஏனென்றால் அதன் குட்டிமுதலாளித்துவ சமூக அடித்தளம் தனது நலன்கள் நடப்பு சமூக ஒழுங்குடன் பிணைக்கப்பட்டுள்ளதாகக் காண்கிறது. அதன் வேலை, தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற பாரிய எதிர்ப்பை அணிதிரட்டுவதாக இருக்கவில்லை, மாறாக சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தில் எழும் எந்தப் போராட்டத்திற்கும் முட்டுக்கட்டையிடுவதாக இருக்கிறது.

NPA செய்தித் தொடர்பாளரும் 2007 ஆம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளருமான ஒலிவியே பெசென்செனோ கூறும்போது, “அரசியல் அமைப்புமுறை ஆக மோசமாக ஆக்கப்பட்டு விட்டிருக்கிறதுஎன்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கூறினார். “... அதற்கு அரசாங்கக் கொள்கை தான் காரணம், அது தான் அதி-வலதின் எழுச்சிக்கு வலுவூட்டியிருக்கிறதுஎன்றார். எப்படியிருந்தபோதிலும்ஜனநாயக எழுச்சிக்கான ஒரு தெளிவற்ற அழைப்பை விடுத்துள்ளது மட்டுமே பெசென்செனோவின் விடையிறுப்பாக இருந்தது.

இந்த வார்த்தைப் பிரயோகமே சற்று ஆபத்தானது தான். ஏனெனில் லிபிய மற்றும் சிரிய போர்களில் சிஐஏ மற்றும் அல்கெய்தாவின் ஆதரவுடன் இயங்கும் லிபிய மற்றும் சிரியப் போராளிகள் தொடங்கி கியேவில் பாசிசத் தலைமை கொண்ட உக்ரேன் ஆர்ப்பாட்டங்கள் வரையிலும் NPA எல்லாவற்றுக்குமே இதே வார்த்தைகளையே பிரயோகிக்கிறது.

நடப்பு நெருக்கடியானது 2002 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைத்த ஒரு முன்னோக்கை ஊர்ஜிதம் செய்கிறது. அச்சமயத்தில் முதல்சுற்று தேர்தலில் FN தலைவரான ஜோன்-மரி லு பென், PS பிரதமரான லியோனல் ஜோஸ்பனைத் தோற்கடித்ததை அடுத்து, லு பென்னுக்கும் அப்போது ஜனாதிபதியாக இருந்த வலது-சாரி ஜாக் சிராக்குக்கும் இடையிலும் தான் போட்டி என்பதான நிலை உண்டானதையொட்டி பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR, NPA இன் முன்னோடிக் கட்சி), தொழிலாளர் போராட்டம் (LO) மற்றும் தொழிலாளர்கள் கட்சி (முன்னதாக OCI என்றிருந்தது) ஆகிய போலி-இடது கட்சிகள் எல்லாம் சிராக்கை தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் உயரடுக்கின் பிரச்சாரத்தின் பின்னால் அணிவகுப்பதன் மூலம் பதிலிறுப்பு செய்தன. இந்தக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து தேர்தலின் முதல் சுற்றில் மொத்தமாக 11 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையிலும், அவை, சட்டமுறைதவறிய ஒன்றாகப் பரவலாய் பார்க்கப்பட்ட ஒரு தேர்தலுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு மறுத்து விட்டன. அதற்கு பதிலாய், சிராக்கை ஆதரிப்பது தான் பிரான்சில் பாசிசத்தின் எழுச்சியை தடுத்து நிறுத்தும் என்பதாய் அவை கூறின.  

சிராக்கின் ஆட்சி ஒன்று வந்தால் நிச்சயம் நடந்தேறவிருக்கும் சமூகத் தாக்குதல்கள் மற்றும் போர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையாக தேர்தலை முழுமூச்சாக புறக்கணிப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்த அழைப்பை அவை நிராகரித்தன.

கடந்த பத்தாண்டு காலத்தில் FN பெற்றிருக்கக் கூடிய மேல்நோக்கிய வளர்ச்சிப் பாதையும் மற்றும் NPA பிற்போக்கு சக்திகளுக்கு மிகவும் வெளிப்படையான ஆதரவை வழங்குவதை நோக்கி நகர்ந்திருப்பதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்த நிலைப்பாடு சரியானது என்பதையும், பிரான்சின் முதலாளித்துவ கட்சிகளை நோக்கி NPA நோக்குநிலை கொள்வதன் திவால்நிலையையும் ஊர்ஜிதம் செய்கின்றன.