சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Detroit water cutoffs and the social counterrevolution in America

டெட்ராய்ட் தண்ணீர் வினியோக வெட்டும், அமெரிக்காவில் சமூக எதிர்புரட்சியும்

Joseph Kishore
29 March 2014

Use this version to printSend feedback

நீர், நீர், எங்கெங்கிலும் நீர்,

ஆனால் குடிக்க ஒரு துளி நீரில்லை.

இது சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜால் “The Rime of the Ancient Marinerஇல் எழுதப்பட்டது.

உலகின் மிகப் பெரிய மேற்புற நன்னீர் அமைப்பை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு நகரில், வாரத்திற்கு 3,000 வீடுகளாக இலக்கில் வைத்து அடுத்த பல மாதங்களுக்கு, நிர்வாகிகள் குடிநீர் சேவைகளை நிறுத்த தொடங்கி உள்ளனர். இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், கோடை தொடங்குகையில் பத்தாயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்வின் மிக மிக அத்தியாவசிய தேவைகளில் ஒன்றை பெற முடியாமல் போவார்கள்.

இது முதலாளித்துவ அறிவீனத்தின் ஒரு கூர்மையான வெளிப்பாடு என்பது மட்டுமல்ல, இதுவொரு சமூக குற்றமும் ஆகும், மேலும் இதற்கு பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள்.

தங்களின் கட்டணங்களை செலுத்துவதில் பிழை செய்பவர்கள் மீது டெட்ராய்ட் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (DWSD) அதன் பார்வையைத் திருப்பி உள்ளது. மக்கள்தொகையில் மூன்று பங்கிற்கு அதிகமானோர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் அந்நகரின் மொத்த கணக்குகளில் அண்மித்தளவில் 50 சதவீதம் (324,000 கணக்குகளில் 150,000), நம்பவியலாத விதத்தில், இந்த வகைப்பாட்டிற்குள் வருகின்றன.

இந்த கொள்கையின் விளைவுகளை சுலபமாக முன்கூட்டியே கூறிவிட முடியும். குடும்பங்கள் ஒன்று அடிப்படை சுகாதார வசதியின்றி வாழவோ அல்லது உணவு, உடை மற்றும் மருத்துவ கவனிப்பு போன்ற ஏனைய தேவைகளா, தொடர்ச்சியாக வரும் தண்ணீரா என்பதில் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவோ நிர்பந்திக்கப்படுகின்ற நிலையில், கடுந்துன்பம், வியாதி மற்றும் மரணம் ஆகியவை உயரும்.

தொடர்ச்சியாக தண்ணீர் இல்லை என்பது, குளிக்கவோ, கழிவறைகளைப் பயன்படுத்தவோ, சமைக்கவோ அல்லது மருத்துவ பராமரிப்புகளில் ஈடுபடவோ இயலாது என்பதாகும். அது கட்டிடங்கள் அல்லது வீடுகள் சேதமடைவதற்கு இட்டு செல்லும் என்பதோடு, குடியிருப்போரை வீதிகளுக்கு வர நிர்பந்திக்கும். குழந்தைகள் உறவினர்களிடம் அனுப்பப்படுகிறார்கள் அல்லது அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்கிற நிலையில், அது குடும்பங்களின் உடைவை அர்த்தப்படுத்தும். டெட்ராய்டில் பாரியளவில் இயல்பான சம்பவங்களாக மாறி உள்ள, எரிவாயு அல்லது மின்சார நிறுத்தம் போலவே, தண்ணீர் வினியோக வெட்டு என்பதும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும், பலவீனப்படுத்தும் மற்றும் மனோரீதியாக நாசப்படுத்தும் ஓர் அனுபவமாகும்.

ஒருகாலத்தில் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்த, அந்நாட்டின் ஒரு முன்னாள் உற்பத்தி மையமாக விளங்கிய டெட்ராய்டில் வாழும் பத்து ஆயிரமாயிர மக்கள், இந்த தலைவிதியைத் தான் இப்போது முகங்கொடுத்துள்ளனர். அது அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதான மற்றும் அந்நாட்டை வழிநடத்தும் பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்பட்டின் மீதான ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றப்பத்திரிகையாகும்.

வரலாற்றுரீதியில், தண்ணீர் கிடைக்கப் பெறுவதென்பது சமூக நிகழ்வுபோக்கின் ஒரு உயர்ந்த கட்டமாக பார்க்கப்படுகிறது. 1950இல், மக்கள்தொகையில் ஒரு கால் பகுதியினருக்கு (அதாவது புறநகர் மக்கள்தொகையில் பாதி பேருக்கு) தண்ணீர் குழாய் வசதி இல்லாமல் இருந்தது, அதுவொரு தேசிய அவமானமாக கருதப்பட்டது.

வாழ்க்கை தரங்களில் ஏற்பட்ட பொதுவான முன்னேற்றத்தோடு சேர்ந்து, அரசாங்க திட்டங்கள் மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினருக்கு தண்ணீர் குழாய் வசதியை ஏற்படுத்தி அளித்தன இருந்த போதினும், சுமார் 2 மில்லியன் அமெரிக்கர்கள் இன்னமும் போதிய தண்ணீர் வசதியின்றியோ அல்லது தொடர்ந்து கிடைக்கும் தண்ணீர் வசதியின்றியோ உள்ளனர். அதேவேளையில், தண்ணீருக்கான நுகர்வு கட்டணம், கொள்கை அடிப்படையில் குறைபட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான தண்ணீர் வினியோக நிறுவனங்கள் பொதுச் சேவை நிறுவனங்களாக அமைக்கப்பட்டதோடு, மத்திய மற்றும் மாநில அரசு செலவினங்களில் இருந்து அவற்றிற்கு மானியம் வழங்கப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து வென்றெடுப்புகளோடு சேர்ந்து, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்த முன்னேற்றங்களும் சமூக போராட்டத்தின் விளைபொருளாக இருந்தன. ஆனால் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலக்கட்டத்தில், இதை திருப்பி போடுவதில் அங்கே ஆளும் வர்த்தால் ஒரு திட்டமிட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது இந்தவொரு பாரிய பின்னோக்கிய திருப்பம், 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து, ஒரு சமூக எதிர்புரட்சிக்குள் திரும்பி உள்ளது.

அது தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் ஊதியங்களை இலக்கில் வைத்துள்ளதோடு, ஆளும் வர்க்கம் முறையாக சமூக உள்கட்டமைப்பு மீதான செலவினங்களைக் குறைத்துக் கொண்டுள்ளது. ஜோர்ஜ்டவுன் சட்ட மனித உரிமைகள் பயிலகத்தின் ஒரு சமீபத்திய அறிக்கை குறிப்பிட்டதாவது: வரலாற்றுரீதியில், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் உள்கட்டமைப்பு மானிய வடிவங்களில் சில நீண்டகால செலவுகளுக்குப் பொறுப்பேற்கின்றன. ஆனால், 1980களில் இருந்து, இத்தகைய மானியங்கள் உள்கட்டமைப்பு கடன்களுக்கு வழிவிட்டுள்ளதோடு, தண்ணீர் வினியோக முறை அவற்றின் வாடிக்கையாளர்கள் மீது முழு கட்டணத்தை, அல்லது முழு கட்டணத்திற்கு அண்மித்த அளவிற்கு, விகிதங்களைத் திணித்து வருகிறது," என்று குறிப்பிட்டது. (Tapped Out: Threats to the Human Right to Water in the Urban United States)

2000 மற்றும் 2012க்கு இடையே, டெட்ராய்டில் தண்ணீர் கட்டண விகிதங்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக 119 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதே காலக்கட்டத்தில், அந்நகரின் மத்திய தட்டு குடும்பங்களின் வருவாய் ஏறக்குறைய 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இன்று, அந்நகரின் மாதாந்திர சராசரி தண்ணீர் கட்டணம் 75 டாலராக (ஆண்டுக்கு $900) — அல்லது மத்தியதர வருவாயில் ஏறக்குறைய 3.5 சதவீதமாக உள்ளது.

சமூக குற்றங்கள் அதிகரித்திருப்பது இந்த மாற்றங்களின் ஒரு நேரடி விளைவாகும். மேலும் இவை டெட்ராய்டில் மட்டும் அல்ல. கடந்த தசாப்தத்தில் தண்ணீர் கட்டண விகிதங்கள் தேசியளவில் உயர்ந்துள்ளதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 100 நகரங்களில் ஒரு கால் பகுதி நகரங்களில் அது இரண்டு மடங்கிற்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் 2012இல் USA Today அறிக்கை கண்டறிந்தது.

தண்ணீர் வாழ்வின் ஓர் அத்தியாவசிய தேவை என்பதற்கு மாறாக, தண்ணீர் வழங்குவது அதிகளவில் ஒரு பணமீட்டும் தொழில் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க தண்ணீர் வினியோக நிறுவனங்களில் சுமார் 85 சதவீதம் இன்னமும் பெயரளவிற்கு பொதுச் சேவைகளாக உள்ளன. டெட்ராய்ட் தண்ணீர் மற்றும் கழிவுநீர் வாரியம் உட்பட பல நிறுவனங்களுக்கு, பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு பத்திரதாரர்கள் வழங்கும் கடன்கள் மூலமாக அதீத நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன இந்த கடன்கள் கட்டண விகிதங்களை உயர்த்துவதன் மூலமாகவும், கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு சேவைகளைத் துண்டிப்பதன் மூலமாக திருப்பி அளிக்கப்படுகின்றன.

முழுமையாக தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. டெட்ராய்டின் அவசரகால நிர்வாகி Kevyn Orr சாத்தியமாள அளவிற்கு தண்ணீர் வினியோக துறையை விற்கவோ, அல்லது எதிர்காலத்தில் விற்பதற்கான ஒரு தயாரிப்பாக ஒரு பிராந்திய ஆணையத்திடம் அதை ஒப்பந்தரீதியில் ஒப்படைப்பதற்கோ அழுத்தம் அளித்து வருகிறார். 1 பில்லியன் டாலர் ஆண்டு வருவாயுடன், DWSD அந்நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய தண்ணீர் வினியோக நிறுவனமாக உள்ளது. அது பணம் கறக்கும் கறவை மாடாக கருதப்படுகிறது. இந்நிலையில், DWSDஐ முழுவதுமாக இலாபகரமாக மாற்ற, கேடிழைக்கும் கணக்குகள் இரக்கமின்றி அழிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

இது தான் டெட்ராய்ட் திவால்நிலைமையின் உண்மை முகமாக உள்ளது. ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகமும் டெட்ராய்டின் "மறுமலர்ச்சிக்கு" அறைக்கூவல் விடுக்கின்ற அதேவேளையில், என்ன நடந்து வருகிறதென்றால், பொது ஆதாரவளங்கள் மற்றும் நகர தொழிலாளர்களின், குடும்பங்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சலுகைகள் ஒட்டுமொத்தமாக திருடப்பட்டு வருகின்றன.

வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டமை, பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சூறையாடும் வங்கி கடன்கள், வரி குறைப்புகள் மற்றும் ஏனைய பிணை கொடுப்புகளோடு, மாநில மற்றும் மத்திய நிதியுதவிகளில் பாரிய வெட்டுக்கள் மூலமாக அந்நகரத்தின் நிதிகளுக்கு குழி பறித்த பின்னர், ஆளும் வர்க்கம் அந்நகரின் பெரும் பகுதிகளை ஹைட்டி மற்றும் ஏனைய வறிய நாடுகளில் உள்ள சேரிகளில் நிலவும் நிலைமைகளைப் போன்ற விதத்திற்கு குறைக்க நகர்ந்து வருகிறது. இதர தொழிலாளர் வர்க்க பகுதிகளும் வெளியேற்றப்பட்டு, ரியல் எஸ்டேட் ஊக வணிகர்களுக்குக் கிடைக்க செய்யப்படும்.

தண்ணீர் வினியோக சேவைகளை நிறுத்துவதில் மற்றும் தனியார்மயமாக்குவதில் மற்றும் ஒட்டுமொத்த மறுகட்டமைப்பில் ஒரு பாகமாக உள்ள டெட்ராய்ட், ஒட்டுமொத்த நாட்டிற்கும், உண்மையில், உலகிற்கே ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. இந்த காரணத்திற்காக தான் டெட்ராய்டின் திவால்நிலைமைக்கு ஒபாமா நிர்வாகத்தால் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியால், முழுமையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவின் மூல ஆதாரம், மனிதயினத்தின் உற்பத்தி சக்தியிலோ அல்லது இயற்கையால் வழங்கப்பட்ட ஆதாரவளங்களிலோ தங்கியிருக்கவில்லை, மாறாக முதலாளித்துவ சமூக அமைப்புமுறையில் தங்கி உள்ளது இந்த அமைப்புமுறையானது, தனியார் இலாபம் மற்றும் ஒவ்வொரு சமூக உரிமையையும் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் வெறித்தனமான கட்டளைகளுக்கு அடிபணிய செய்வதை அடிப்படையாக கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, தண்ணீர் நிறுத்தத்திற்கான குற்றத்தனமான கொள்கைக்கு எதிரான எதிர்ப்பை ஒன்றுதிரட்ட அந்நகரம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. நகர நிர்வாகிகளின் நடவடிக்கைகளில் இருந்து வீடுகளைக் காப்பாற்ற ஒவ்வொரு அண்டை பகுதியிலும் கமிட்டிகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். தங்களின் சொந்த வேலைகள் மற்றும் ஊதியங்களில் ஒரு கொடூர தாக்குதலை முகங்கொடுத்துள்ள தண்ணீர் மற்றும் கழிவுநீர் துறை தொழிலாளர்கள் தங்களின் மேலதிகாரிகளின் கட்டளைகளை நடைமுறைப்படுத்த மறுக்குமாறு, நாம் அவர்களுக்கு முறையீடு செய்கிறோம்.

இந்த பரந்துபட்ட அணிதிரள்வு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். சுதந்திரமாகவும், முழுமையாகவும் வழங்க உத்தரவாதம் அளிப்பதற்குத் தேவையான ஆதாரவளங்கள், பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமாக பெறப்பட வேண்டும். டெட்ராய்ட் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள தண்ணீர் வினியோக முறை உண்மையான மக்கள் உடமையாக மாற்றப்பட்டு, பொருளாதார வாழ்வின் சோசலிச மறுஒழுங்கமைப்பின் பாகமாக, அது உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் நிறுத்தப்பட வேண்டும்.