சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Pointing to rise of neo-fascists, banks demand austerity in France

நவ-பாசிஸ்டுகளின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி, பிரான்சில் வங்கிகள் சிக்கன நடவடிக்கையைக் கோருகின்றன

By Kumaran Ira 
30 April 2014

Use this version to printSend feedback

நிதிச் சந்தைகள் பிரான்சில் தொழிலாளர்களின் மீது பெருவாரியான, கிரேக்க பாணியிலான தாக்குதல்களைக் கோருகின்றன. சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதில் மிகவும் பின்தங்கியிருப்பதற்காக பிரான்சின் அரசியல் ஸ்தாபகத்தை அவை விமர்சனம் செய்கின்றன.

இணையத்தின் நிதித்துறைப் பத்திரிகையான Market Watch ஏப்ரல் 23 அன்று வெளியான உலகில் மிகவும் மிகையாக மதிப்பிடப்படுகின்ற சந்தை? பிரான்ஸ் என்ற தலைப்பிலான ஒரு தலையங்கப் பக்க பத்தியில் எழுதியிருந்தது: பொருளாதாரம் தட்டையாகச் சென்று கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை நாள்பட்ட வியாதி போல் தொடர்கிறது. போட்டித்திறன் வீழ்ச்சி கண்டு வருகிறது. அரசியல் அமைப்புமுறை ஒரு உருக்குலைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் உலகில், பிரான்சை விட மிகத் தீவிரமான சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற ஒரு நாடோ அல்லது சீர்திருத்தங்களும் மறுமலர்ச்சியும் அதிக அளவில் அவசியப்படுகின்றதொரு நாடோ கிடையாது.  

ஐரோப்பிய பங்குகளுக்கான உற்சாக அலையால் மேல்நோக்கி செலுத்தப்பட்டு பங்குச் சந்தை நல்லநிலையாகத் தான் இருக்கிறது. பத்திர வட்டி குறைவாகவே இருக்கிறது. நம்பிக்கை இன்னும் போய் விடவில்லை என்பதையெல்லாம் அது ஒப்புக்கொள்கிறது. ஆயினும் அவையெல்லாம் நீடிக்கவியலாது: பிரான்ஸ் ஜேர்மனியை விட அல்லது இன்னும் ஸ்பெயினை விடவும் மிக மோசமானதொரு நிலையில் ஏறக்குறைய இத்தாலி அளவுக்கான மோசமான நிலையில் இருக்கிறது என்று அது எழுதியது. 

இந்தக் கட்டுரையின் மூலமாக வங்கிகள், பதவிக்கு வந்திருக்கும் பிரதமர் மானுவேல் வால்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் செயற்படுத்த வேண்டிய தமது உத்தரவுகளை வழங்க முனைகின்றன. பிரான்சில்  வேலைதேடுவோர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் 5 மில்லியனாக இருப்பது கண்டு பொதுமக்களின் கோபம் பெருகிக் கொண்டிருக்கிறது, இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 சதவீதமாக இருக்கின்ற பிரான்சின் பொதுச் செலவினங்களில் ஆழமான வெட்டுகளை சந்தைகள் விரும்புகின்றன. வால்ஸ் PS ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பொறுப்புடைமை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதான ஒன்றின் பகுதியாக 50 பில்லியன் யூரோ செலவின வெட்டுகளுக்கும் 30 பில்லியன் யூரோ பெருநிறுவன வரிச் சலுகைகளுக்கும் உறுதியளித்திருக்கின்ற அதேசமயத்தில் அதி-வலது மனோநிலைக்கு சட்டம்-ஒழுங்கு விண்ணப்பங்களையும் செய்திருக்கிறார்.

ஆயினும் வால்ஸின் முன்னெடுப்புகளுக்கு, தொழிலாள வர்க்கத்தில் ஆழமான எதிர்ப்பு உள்ளது. அவை பிரதானமாக நவ-பாசிச தேசிய முன்னணிக்கே(FN)வலுவூட்டும். PS மற்றும், இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற அதன் போலி-இடது குழுக்கள்கள் மீதான வெகுஜனப் பிரமை மறைந்து வருவதன் காரணத்தால் மார்ச் மாதத்தில் நடந்த நகராட்சித் தேர்தல்களில் FN கணிசமான முன்னேற்றங்களைக் கண்டது.

மேலும், முக்கியமானதாக, வால்ஸின் வேலைத்திட்டத்தை முன் தள்ளுவதற்கு PS ஆல் இயலாது என்று கவலைப்படும் Market Watch அது ஒரு தோல்வி என்று கூறி அதனை நிராகரிக்கிறது. அது எழுதியது: ஆபத்தான சகுனமாக, கண்ணுக்கெட்டிய வரை அரசியல் சீர்திருத்தத்திற்கான எந்த வாய்ப்புவளமும் தென்படவில்லை - ஒரே மாற்றீடுகளும், தோல்வியுற்றுக் கொண்டிருக்கும் நடப்பு ஸ்தாபகத்தை விட மோசமானவையாக இருக்கின்றன. FN இன் எழுச்சியையே அது இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது. மிக சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் கூட அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் FN மிகப்பெரும் வாக்குகளைப் பெறும் என்றே இன்னும் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.

வெகுவிரைவில் முதலீட்டாளர்கள் அந்த உண்மைக்காய் விழிப்படைந்து தமது பணத்தை வெளியில் எடுக்கத் தொடங்கப் போகிறார்கள்என்றும் மே இறுதியில் நடைபெறவிருக்கும் ஐரோப்பியத் தேர்தல் அதற்கானத் தூண்டுதலாக எளிதில் ஆகக் கூடும் என்றும் அது எழுதியது. 

அப்படியொரு நெருக்கடி நடக்குமாயின், அது கிரேக்க கடன் நெருக்கடி ஏற்படுத்தியதைக் காட்டிலும் மிகப் பரந்த விளைவுகளின் கிளைகளைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டின் இறுதியில் 2 டிரில்லியன் யூரோவைத் தொடவிருக்கும் பிரான்சின் அரசாங்கக் கடன் கிரீஸின் கடனைக் காட்டிலும் சுமார் 10 மடங்கு பெரியதாகும். ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கக் கடனைப் போலவே இதுவும் - கிரீஸுக்கு பெரும் வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு ஈடுகட்டுவதற்காக 2010 இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் திரட்டப்பட்ட - பிணையெடுப்பு நிதிகளால் சமாளிக்கப்பட முடியாத அளவுக்கு மிகப் பெரியதாகும். 

வங்கிகளும் அத்தனை வண்ணமான முதலாளித்துவ அரசியல்வாதிகளும் கிரீஸை நாசப்படுத்தியதைப் போன்றே தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான தாக்குதல்கள் தொடுப்பதற்கு இந்த நெருக்கடியை சுரண்டிக் கொள்வர். இது யூரோவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கூட முடிவினை உரைக்கக் கூடும். பாரிஸ் தனது நாணயமதிப்பைக் குறைக்க முடிவு செய்து, பிரான்சில் இருந்து வெளியேறும் மூலதன வெளிப்பாய்வுக்கு ஈடுகட்டுவதற்கும் தனது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்குமாய் பணத்தை அச்சடிக்க முடிவு செய்யுமாயின், அது பல ஐரோப்பிய தலைநகரங்களில் - குறிப்பாக பேர்லினில் எதிர்ப்பை முகம் கொடுக்க வேண்டி வரும். நடப்பில் ஜேர்மனி யூரோ நாணய மதிப்பை பிரான்சுடன் பகிர்ந்து கொள்கிறது.

2010 இல், முதலாம் கிரேக்க பிணையெடுப்பு தொகுப்பு உருவாக்கம் தொடர்பாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் பதட்டங்கள் வெடித்த நிலையில், அப்போதைய பிரான்சு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி யூரோவில் இருந்து பிரான்சை திரும்பப் பெறுவதற்கு அச்சுறுத்தியதன் கீழ் இத்தகைய சிந்தனையோட்டங்கள் அமைந்திருந்தன. 

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தை தாட்சண்யமற்று பாதுகாப்பதாக FN எழுச்சி காணும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அதில், அக்கட்சிக்கு வங்கிகளின் ஆதரவு கிட்டும். அரசியல்ரீதியாக இது, நாஜி ஆக்கிரமிப்பு காலத்து பிரெஞ்சு ஒத்துழைப்புவாதிகள் மற்றும் அல்ஜீரிய சுதந்திரத்திற்கான போரின் போது பிரெஞ்சு அல்ஜீரியாவிற்கான அல்ஜீரிய-எதிர்ப்பு சுதந்திரப் போராளிகள் ஆகிய எதிர்ப்புரட்சியின் மிக ஆக்ரோஷமான சக்திகளிடம் இருந்து கூடுபாய்ந்திருக்கிறது. 

FN முதலாளித்துவத்திற்கான தனது விசுவாசத்தின் மீது வலியுறுத்துகிறது. அதற்கான நிர்ணயங்களும் PS மற்றும் அதன் பல அரசியல் கூட்டாளிகள் ஏற்றுக் கொண்டவற்றில் இருந்து அதிகம் பிரித்தறியப்பட முடியாததாகவே இருக்கின்றது. சென்ற ஆண்டில் FN இன் தலைவரான மரின் லு பென் கூறினார், எங்களுக்கு இப்போதும் சுதந்திரச் சந்தையின் மீது நம்பிக்கை இருக்கிறது. அத்தனை விதிகளும் நிதிச் சந்தைகளால் திணிக்கப்படுவதாக இருக்கும் அதிதீவிர-தாராளவாதம் தான் அபாயமாகும்.

எப்படியிருப்பினும் FN இன் செல்வாக்கு அதிகரிப்பதை ஒட்டி பிரான்சில் ஒரு கூடுதல் தேசியவாதக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனால் சர்வதேசரீதியாக விளையக் கூடிய தாக்கங்கள் குறித்த Market Watch இன் கவலை தான் அதன் ஆட்சேபங்களின் கீழ் அமைந்திருப்பதாகும்.  

FN இன் பொருளாதார வேலைத்திட்டம் கிறுக்குத்தனமாக இருக்கிறது என்று அது எச்சரிக்கிறது. யூரோவில் இருந்து திரும்பப் பெறுவது, வர்த்தகத் தடைகளைத் திணிப்பது, நிதிநிலை பற்றாக்குறைக்கு நிதியாதாரம் அளிக்க பணத்தை அச்சிடுவதற்கு பிரெஞ்சு மத்திய வங்கியை நிர்ப்பந்திப்பது, அத்துடன் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பது என இடது மற்றும் வலதின் ஒரு விநோதக் கலவையாக 1930கள் பாணி பொருளாதார தேசியவாதத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.

உண்மையில், FN இன் வேலைத்திட்டத்தின் இயல்பானது நேரடியாக வங்கிகளின், மற்றும் குறிப்பாக ஐரோப்பாவின் திவாலான முதலாளித்துவ இடது கட்சிகளின் குற்றவியல் கொள்கைகளில் இருந்து பிறக்கிறது. நிதிச் சந்தைகளும், ஐரோப்பிய ஒன்றியமும், மற்றும் சமூக ஜனநாயக PASOK அரசாங்கமும் கிரேக்க நலன்புரி அரசை சிதைக்கத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பாவெங்கிலும் சமூக ஜனநாயகக் கட்சிகள் வங்கிகளின் சர்வாதிகாரத்திற்கான கருவிகளாக இருப்பதைக் காண முடிகிறது. தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வெறுக்கின்றனர்.

PSம் அதன் NPA போன்ற போலி-இடது துணைக்கோள்களும் ஆழமான பிற்போக்குத்தன அமைப்புகள் என்பதை நிரூபித்திருக்கின்றன. அவற்றின் சுதந்திர சந்தை கொள்கைகளையும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடனான அவற்றின் நெருக்கமான அணிவரிசையையும் வரலாற்றுவழியாகப் பார்த்தால், பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசியலின் பொருட்சூழலில் கூட அசாதாரணமானவை. அவை சுதந்திரச் சந்தை கொகைகளை ஏற்றுக் கொண்டன, அத்துடன் PS உருவாக்க உதவிய ஐரோப்பிய ஒன்றியத்தை ஊக்குவித்தன என்பது மட்டுமல்ல. சிரியா மற்றும் உக்ரேனில் அமெரிக்கா தலைமையிலான தலையீடுகளின் பின்னால் தங்களை நிறுத்திக் கொண்டதோடு துணை-சஹாரா ஆபிரிக்காவிலான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர்களில் அமெரிக்காவுடன் நெருக்கமாய் இணைந்து வேலை செய்தன. 

முதலாளித்துவ இடது கட்சிகளின் பிற்போக்கான பரிணாம வளர்ச்சியின் காரணத்தால் இடதின் பக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடம் தான், பிரான்சின் ஒரே எதிர்க் கட்சியாக FN தன்னை காட்டிக்கொள்வதற்கும் மற்றும் முந்தைய சகாப்தத்தில் பிரெஞ்சு முதலாளித்துவ இடது அரசியலுடன் தொடர்புபட்டிருந்த கொள்கைகளை அது வாய்வீச்சுடன் முன்னெடுப்பதற்கும் அனுமதித்திருக்கிறது.

FN ஒரு பலவீனமான-பணக் கொள்கையின் அடிப்படையில் யூரோவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான தனது எதிர்ப்பை தெரிவித்திருப்பதுடன் நிற்கவில்லை. PS மற்றும் NPA உக்ரேன் நெருக்கடியில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் பக்கமாய் நிற்கின்ற விடயத்தில் போல, மக்கள் வெறுக்கின்ற அவற்றின் சர்வதேசக் கொள்கைகளையும் கூட அது விமர்சனம் செய்துள்ளது (உக்ரேனில் ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படும் சுவோபோடா கட்சியைப் போன்ற பாசிச சக்திகள் எல்லாம் FN உடன் இணைப்பு கொண்டவை என்ற நிலையிலும்).  

இந்த மாதத்தில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த FN தலைவர் மரின் லு பென், ரஷ்யா முறையற்ற வகையில் பூச்சாண்டியாக்கப்படுவதாகவும் ரஷ்யாவுக்கு எதிரானதொரு பிரச்சாரம் அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையின் உயர் மட்டங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யாவின் மீது ஒரு பனிப்போர் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார் அவர். 

உக்ரேனிலான ஆத்திரமூட்டும் மேற்கத்திய தலையீட்டுக்கு பிரான்சில் மிக வலிமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற அரசியல் கட்சியாக நவ-பாசிஸ்டுகள் இருப்பதென்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு உண்மையாகும். முதலாளித்துவ இடது குழுக்களின் மதிப்பிழந்து போன கொள்கைகளுக்கான முதலாளித்துவ மாற்றாக அதிவலது எழுந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையானது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைந்து கொண்டிருப்பதன் மத்தியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியமானது எத்தகையதொரு வன்முறையான பயணக்கோட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்கி, முதலாளித்துவத்திற்கும் போலி-இடது கட்சிகள் மற்றும் முதலாளித்துவ இடது கட்சிகள் தொடங்கி நவ-பாசிஸ்டுகள் வரையிலுமான முதலாளித்துவத்தின் அத்தனை பிரதிநிதிகளுக்கும் எதிராக ஒரு சோசலிச, சர்வதேசிய தளத்தில் போராடுவதற்கு அவசரமான அவசியம் இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.