சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

State murder in Oklahoma

ஓக்லஹோமாவில் அரச படுகொலை

Kate Randall
1 May 2014

Use this version to printSend feedback

செவ்வாயன்று மாலை ஓக்லஹோமா, மெக்அலெஸ்டெர் (McAlester) சிறைக்கூட மரண தண்டனை நிறைவேற்றும் வளாகத்தில் நடந்த சம்பவங்களில் உலகம் கொடூரத்தையும், வெறுப்பையும் கண்டது. 77 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு அதன் முதல் இரட்டை-மரண தண்டனையை நிறைவேற்றும் அளவிற்கு இறங்கி இருந்தது. ஒரு சக்கர நாற்காலியில் கட்டப்பட்டிருந்த கிளேட்டன் டி. லாக்கெட் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் முதல் நபராக கொண்டு வரப்பட்டார், மூன்று இரசாயனங்களின் ஒரு கலவையை அவர் நரம்புகளில் ஏற்ற சிறை அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

அந்த கோரமான நிகழ்முறை மாலை 6.23க்கு தொடங்கியது. பார்வையாளர்களின் கருத்துப்படி, நான்கு நிமிடங்களுக்குப் பின்னர், லாக்கெட் பார்வையாளர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டார். மாலை 6.30 வாக்கில், அவர் கண்கள் கட்டப்பட்டன, அரசு சிறை கண்காணிப்பாளர் அவர் அருகில் நின்று, “திரு. லாக்கெட் நனவிழக்கவில்லை,” என்று தெரிவித்தார். மாலை 6.33க்கு அவர் மயக்கமுற்றிருப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆனால், அதற்கு ஒரு சில நிமிடங்களுக்குப் பின்னர் லாக்கெட் ஏதோ புரிந்து கொள்ள முடியாதபடிக்கு "முனுமுனுத்ததாகவும்”, “வெடுக்கென" உடல் அசைத்ததாகவும் கைதியின் வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த அசைவு மிகவும் கொடூரமாக இருந்ததாகவும், “ஒரு வலிப்பு" போன்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “அவர் நிச்சயமாக உடலை முறுக்கினார். அவரது உடலின் மொத்த மேல்பகுதியும் நாற்காலிக்கு மேலே தூக்கியது”. “ஒருவர் மீண்டும் நனவுக்கு திரும்புவதை நாங்கள் பார்ப்பது போலிருந்தது”. பின்னர் பார்வையாளர்கள் பார்க்க முடியாதபடிக்கு, மரண தண்டனை வளாகத்தின் திரைகள் மூடப்பட்டன.

அதன் பின்னர் ஒரு சிறை அதிகாரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். லாக்கெட்டிற்குள் செலுத்தப்பட்ட அனைத்து மூன்று மருந்துகளும் நெறிமுறைகளின்படி பரிசோதிக்கப்படாதவை என்றும், அதனால் எந்த நரம்பில் செலுத்தப்பட்டதோ அது "தெறித்துவிட்டதென்று" சிறைக்கூட மருத்துவர்கள் தீர்மானித்ததையும் அவர் எடுத்துரைத்தார். அந்த மரண தண்டனை நிறுத்தப்பட்டது குறித்து ஓக்லஹோமாவின் ஆளுநருக்கும், பொது வழக்கறிஞருக்கும் தெரிவிக்கப்பட்டதோடு, திட்டமிடப்பட்டிருந்த அடுத்த மரண தண்டனைகள் 14 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

சரிபார்ப்பு துறை இயக்குனரின் கருத்துப்படி, அந்த நிகழ்முறை தொடங்கிய சுமார் 43 நிமிடங்களுக்குப் பின்னர், லாக்கெட் "ஒரு கடுமையான மாரடைப்புக்கு" உள்ளானதாக, மற்றும் மரண தண்டனை வளாகத்தில் பார்வையாளர்களின் பார்வைக்கு வெளியே அவர் மரணம் அடைந்ததாக தெரிகிறது.

கிளேட்டன் லாக்கெட் மீதான அரசு சித்திரவதையும், படுகொலையும் கேள்விக்கிடமின்றி "கொடூரமான மற்றும் அசாதாரணமான தண்டனை" என்பதோடு, அது அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின்படி தடை செய்யப்பட்டதாகும். மரணமூட்டும் மருந்தான மிடாசொலம் (midazolam) முழுமையாக வேலை செய்யாத போது, தசைகளைத் தளர்த்தும் வெகுரோனியம் புரோமைட் (vecuronium bromide) அவரது சுவாசத்தை நிறுத்த தொடங்கிய போது அவர் பெரும்பாலும் நனவுபூர்வமாகவே இருந்திருப்பார், பொட்டாஷியம் குளோரைட் அவரது இதயத்தை நிறுத்த வேலை செய்திருக்கும். பார்வையாளர்களின் அனைத்து கருத்துக்களின்படி, அவர் அடக்கம் பெறுவதற்கு முன்னர் அந்த கைதி தாங்கொணா வலியில் இருந்திருப்பார் என்று தெரிகிறது.

லாக்கெட், 2014இல் அமெரிக்காவில் மரணத்திற்கு கொண்டு வரப்பட்ட 20வது கைதி ஆவார். மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த இரண்டு குற்றவாளிகளை, மரணத்திற்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்ட பரிசோதிக்கப்படாத இரசாயனங்களின் தரம் மற்றும் அதன் மூல-ஆதாரம் என்ன என்பதன் மீது மாநில நீதிமன்றங்களுக்கும், ஓக்லஹோமா ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையில் ஒரு சட்டரீதியிலான சண்டை நடந்திருந்ததால், ஒத்தி வைக்கப்பட்ட அந்த இரட்டை-மரண தண்டனை சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அரச கொலை எந்திரம் நிறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதில் குடியரசு கட்சி ஆளுநர் மேரி ஃபாலின் விடாபிடியாக இருப்பதாக தெரிகிறது. கைதிகளின் மரண தண்டனைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் மூல-ஆதாரங்களை இரகசியமாக வைக்கும் மாநில அரசியலமைப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த வாரம் ஓக்லஹோமா உச்சநீதிமன்றம் ஒரு தற்காலிக தடை உத்தரவு விதித்த போது, அது அதன் அதிகாரத்தை மீறி இருப்பதாக ஆளுநர் மேரி ஃபாலின் குற்றஞ்சாட்டினார்.

ஓக்லஹோமா உச்சநீதிமன்றம் தவிர்க்க முடியாமல் மாநில சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகையின் வெறி பிடித்த முதலாளித்துவ-சார்பு தண்டனை உணர்வுக்கு அடிபணிந்து, அந்த தடையை நீக்கிக் கொண்டது. அந்த மரண தண்டனைகளை அதுவும் தற்காலிகமாக ஒத்தி வைக்க வாக்களித்த ஐந்து நீதிபதிகள் மீது குற்றஞ்சுமத்தும் ஒரு சட்டமசோதாவை குடியரசு கட்சியின் மாநில சட்டமன்ற பிரதிநிதியான மைக் கிறிஸ்டைன் தாக்கல் செய்தார்.

இரகசிய மூல-ஆதாரங்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதிக்கப்படாத இரசாயனங்களைப் பயன்படுத்தி இரட்டை மரண தண்டனை நிறைவேற்றும் அந்த திட்டம் சர்வதேச அளவில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. பிரிட்டன், ஜப்பான் மற்றும் நெதர்லாந்தின் செய்தி நிறுவனங்கள் மரண தண்டனைகளைப் பார்வையிட்டு சான்று வழங்குவதற்கு கோரிக்கை விடுத்தன. லாக்கெட் எவ்வாறு "சக்கர நாற்காலியில் வைத்து முரட்டுத்தனமாக இழுத்து வரப்பட்டார், வேதனையில் புலம்பினார், உடலை முறுக்கினார் என்பதை வர்ணித்தும், அது அரைகுறையாக செய்யப்பட்ட படுகொலை என்பது தெளிவாக இருப்பதாக" குறிப்பிட்டும், கார்டியன் செய்தியாளர் அந்த கோரமான காட்சியை அதிர்ச்சியூட்டும் விதத்தில் பதிவு செய்திருந்தார்.”

அந்த மரண தண்டனை வளாகத்திற்குள் என்ன நடந்ததோ அது குறிப்பாக அதிர்ச்சியூட்டுவதும், காட்டுமிராண்டித்தனமானதும் ஆகும், ஆனால் அது ஏதோ சித்தபிரமையால் செய்யப்பட்டதல்ல. ஓக்லஹோமாவில் செவ்வாயன்று கட்டவிழ்ந்த கொடூரம், ஒரு தொடர்ச்சியான பல அரைகுறை" கொலைகளில் சமீபத்திய ஒன்று மட்டுமே ஆகும், இந்த விதத்திலான கொலைகளில் அந்த நபர் சாவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு தாங்கொணா வலியைச் சகிக்க வேண்டியதிருக்கும்.

பயன்படுத்தப்பட்ட முறைகளும், சகிக்க வேண்டிய வலிகளும் அமெரிக்க சமூகத்தின் காட்டுமிராண்டித்தனத்தையும், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் நாளாந்திரம் பழிவாங்கும் விதத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இவை, உலகின் எங்கோவொரு மூலையில் வாழும் மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவவாதத்தால் செய்யப்படுவது மட்டுமல்ல, மாறாக அதன் சொந்த பிரஜைகளுக்கு எதிராகவும் செய்யப்படுகிறது.

கிளேட்டன் லாக்கெட் போலவே மில்லியன் கணக்கான சாமானிய மக்கள் இருக்கின்றனர், அவர்களின் வாழ்க்கை முதலாளித்துவத்தின் தினசரி வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தால் சீரழிக்கப்படுகிறது, ஆனால் அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் வருவதில்லை. வழக்கமாக, பெரும்பாலும் படுகொலைகளாக, பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் நாடெங்கிலும் உள்ள சமூகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நியூ மெக்சிகோவின் அல்புகெர்கி எனும் ஒரு நகரில் கடந்த நான்கு ஆண்டுகளில் பொலிஸால் துப்பாக்கியால் சுடப்பட்டு 23 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பெரும்பாலான நாடுகளில், ஒருவேளை எல்லா இடத்திலும் இருக்கும், இந்த உச்சக்கட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துவது கடந்த கால காட்டுமிராண்டித்தனத்தின் எச்சசொச்சமாகும். அமெரிக்காவில் அது மலர்ந்து வருவதென்பது, அமெரிக்க ஜனநாயகமெனும் கிழிந்து தொங்கும் பிம்பத்திற்கு பின்னால், சமூக உறவுகளில் ஏற்பட்டு வரும் வன்முறைக்கும் மற்றும் பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக ஒடுக்கும் சுபாவத்திற்கும் நிரூபணமாக உள்ளது.

2.4 மில்லியன் அமெரிக்கர்கள் சிறையிலோ அல்லது தடுப்பு காவலிலோ இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது மக்கள்தொகையில் உலகின் வேறெந்த நாட்டையும் விட அதிக பங்காகும். இந்த புள்ளிவிபரம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பில் (OECD) உள்ள தொழில்துறைமயப்பட்ட நாடுகளுக்கான சராசரியை விட ஐந்து மடங்காகும்.

இதை தவிர மேலும் 4.8 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் நன்னடத்தைக் காலத்தில் அல்லது பிணையில் உள்ளனர். அமெரிக்கா 2010இல் அதன் சிறை அமைப்புமுறைக்காக 80 பில்லியன் டாலர், அல்லது குடியிருக்கும் ஒவ்வொருக்கும் என இதற்காக 260 டாலர் செலவிட்டது. ஆனால் உணவு மானிய கூப்பன்களுக்கான செலவோ ஒரு நபருக்கு 227 டாலர் ஆகும்.

இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஏழைகள், அத்தோடு சிறுபான்மையினரும் பாரபட்சமின்றி இடம் பெற்றுள்ளனர். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக அவர்கள் "மக்கள்-நல மையங்களில்" (civil-commitment centers) அடைத்து வைக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் தடுப்பு காவல் மையங்களில் அடைக்கப்படுகின்றனர், சிறிய விதிமீறல்களுக்காகவும் அவர்களில் பலர் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒபாமா நிர்வாகம் சாதனையளவாக 2 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது, அதேவேளையில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைகளை இராணுவமயமாக்கி உள்ளது.

குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நாடெங்கிலும் உள்ள 3,000த்திற்கும் மேற்பட்டோர் மரண தண்டனையை எதிர்நோக்கி வரிசையில் உள்ளனர். இந்த நவீன யுகத்தில் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மொத்த பிரதிவாதிகளில் 4 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அப்பாவிகளாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை மீளமர்த்திய 1976ஆம் ஆண்டில் இருந்து, 1,300 பேர் மரணிக்க அனுப்பப்பட்டு உள்ளனர். மனநோயாளிகள் மற்றும் ஊனமுற்றோரும், தங்களின் தூதரக உரிமைகள் மறுக்கப்பட்ட வெளிநாட்டினரும், மற்றும் இளம் வயதில் குற்றம் புரிந்ததற்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களும் கூட இதில் உள்ளடங்குவர். சந்தேகத்திற்கு இடமின்றி எந்த குற்றத்திற்காக குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களோ அது குறித்து ஒன்றும் அறியாதவர்களும் கூட மரண தண்டனைக்கு உள்ளானவர்களில் உள்ளடங்குவர்.

அடுக்கடுக்கான போலித்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தை தோலுரித்துக் காட்டும் இத்தகைய சம்பவங்களில் கிளேட்டன் லாக்கெட்டின் மரண தண்டனையும் ஒன்றாகும், அது சுரண்டல் மற்றும் ஆழங்காண முடியாத பெரும் சமத்துவமின்மை அளவுகளை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகத்தின் அசிங்கமான உண்மையை அம்பலப்படுத்தி காட்டுகிறது.

ஓக்லஹோமா சிறைக்கூட அதிகாரிகளில் இருந்து, மாநில சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் வரை, ஆளுநர் அலுவலகம் வரை, அமெரிக்க காங்கிரஸ் வரையில், மற்றும் ஒபாமா நிர்வாகம் வரையில் ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகத்தின் நிலைப்பாடுகளும் செவ்வாய் இரவு என்ன நடந்ததோ அதற்கான குற்றத்திற்குரியவையாகும். சிறார் குற்றவாளிகள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்று சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்த போதினும், அது தொடர்ச்சியாக உச்சபட்ச தண்டனையை உறுதி செய்துள்ளது.

இந்த ஜனாதிபதியிடமிருந்து ஒருவர் எதிர்பார்க்க கூடிய இரு-தோரணை முகத்தோடு, ஒபாமா நிர்வாகம் புதனன்று கிளேட்டன் லாக்கெட்டின் மரண தண்டனையை எடை போட்டு பார்த்தது. பின்னர் ஜனாதிபதி ஒபாமா மரண தண்டனையை ஆதரிப்பதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர்களுக்கான செயலர் ஜே கார்னே தெளிவுபடுத்தினார். “குற்றங்களைத் தடுப்பதில் மரண தண்டனை வெகு குறைவாகவே பங்கு வகிக்கிறது என்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்ற போதினும், மிகவும் கொடூரமான சில குற்றங்களுக்கு மரண தண்டனையே பொருத்தமானதென அவர் நம்புகிறார்,” என்று அவர் தெரிவித்தார்.

அதை தொடர்ந்தும் அவர் கூறினார், “ஆனால் மரண தண்டனையை நியாயப்படுத்தும் போதும் கூட நாம் இந்த நாட்டில் ஒரு அடிப்படை தர நெறிமுறைகளைக் கொண்டிருக்கிறோம், அது இரக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் விடயமாகும். மேலும் இந்த விடயத்தில் அந்த தர நெறிமுறைகளின் தரம் குறைந்திருப்பதை நாம் ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்வோம் என்றே நான் நினைக்கிறேன்", என்றார்.

அந்த "இரக்க" தோரணை என்று கூறப்படுவதோடு, அமெரிக்க அரசால் மரணத்திற்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களின் நினைவுகளுக்கு முன்னால் இது போன்ற அறிக்கைகள் பாசாங்குத்தனத்தின் மற்றும் அவமானத்தின் உச்சத்தில் நிற்கின்றன.

ஒருவரை சக்கர நாற்காலியில் வைத்து கட்டுவதும், மரணத்திற்கு உட்படுத்த அவரது நரம்புகளுக்குள் விஷ இரசாயனங்களைச் செலுத்துவதும் ஒருபோதும் "இரக்கத்தோடு" செய்ய முடியாது, மேலும் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அதை தேர்ந்தெடுக்கவும், கையில் எடுக்கவும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உரிமையும் கிடையாது. இந்த பழி வாங்கும் பழக்கத்தை எந்தவொரு விடயத்திலும் எதிர்ப்பதென்பது வர்க்க நனவுபூர்வமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கடமையாகும், ஆனால் இதற்காக அதை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் அரசியல் ஸ்தாபகத்தில் உள்ளவர்களை மட்டும் எதிர்த்தால் போதாது, மாறாக அதற்கு அடியில் உள்ள வர்க்க சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட வேண்டும்.