சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

After new sanctions on Russia, Ukraine moves closer to civil war

ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்குப்பின், உக்ரேன் உள்நாட்டுப் போருக்கு அருகே நெருங்குகிறது

By Barry Grey 
30 April 2014

Use this version to printSend feedback

வாஷிங்டனும் அதன் G7 ஐரோப்பிய நட்பு நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை சுமத்தியபின், அமெரிக்க கைப்பாவை கியேவ் அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு உக்ரேனில் எழுச்சியை பரவிவிட்டு, நாட்டை உள்நாட்டுப்போரில் அழுத்தப்பார்க்கிறது, பெருகிய முறையில் மேற்கத்திய சக்திகளுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே இராணுவ மோதல் என்னும் ஆபத்தை அதிகரித்துள்ளது.

திங்களன்று ரஷ்ய அதிகாரிகள், ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு நெருக்கமான தன்னலக்குழுவினர் மற்றும் புட்டினின் உள்வட்டத்துடன் பிணைந்துள்ள நிறுவனங்கள் மீதான முடுக்கிவிடப்பட்ட அபராதங்களை கோடிட்டுக் காட்டியபின், ரஷ்ய சார்பு போராளிகள் நகரவை கட்டிடத்தை கைப்பற்றி, பொலிஸ் நிலையத்தையும் கோன்ஸ்டான்டினோவ்காவில் (Konstantinovka) கைப்பற்றி, கியேவின் ஆட்சியில் இருந்து தன்னாட்சிக்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரினர்.

அன்றே ஆட்சி ஆதரவு உக்ரேனிய தேசியவாதிகள் டோனேட்ஸ்க்கில் நடத்திய ஆர்ப்பாட்டம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் சிதைக்கப்பட்டது; 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர் கார்க்கிவின் மேயர் கென்னடி கெர்னெஸ் அடையாளம் தெரியாத கொலையாளியால் சுடப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் ஒரு இஸ்ரேலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சரகம், ஒரு உக்ரேனிய சிப்பாய் டோனேட்ஸ்க் பிராந்தியத்தில் வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டதோடு, மற்றவர் காயமுற்றுள்ளார் என அறிவித்துள்ளது.

செவ்வாயன்று ஆயிரம் பேர் அடங்கிய (பல தகவல்கள்படி ஆயிரங்கள்) மக்கள் கூட்டம் ஒன்று ரஷ்ய எல்லைக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, கிட்டத்தட்ட 500,000 மக்கள் வசிக்கும் தொழில்துறை நகரான லுகன்ஸ்க்கில் பிராந்திய அரசாங்க கட்டிடத்தை முற்றுகையிட்டது. நடவடிக்கையாளர்கள் “லுகன்ஸ்க் மக்கள் குடியரசு” என அறிவித்து மே 11ம் தேதி தன்னாட்சிக்கான வாக்கெடுப்பு பற்றிய திட்டங்களையும் அறிவித்தனர். அன்றுதான் அண்டையிலுள்ள “டோனெட்ஸ்க் மக்கள் குடியரசும்” அதன் வாக்கெடுப்பை நடத்த திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன்பின் போராளிகள் லுகன்ஸக்கின் பிராந்திய அரசாங்க வக்கீல் அலுவலகத்தையும், பிராந்திய தொலைக்காட்சி மையத்தையும் கைப்பற்றினர்; கிட்டத்தட்ட 20 துப்பாக்கிதாரிகள் தானியங்கி ரைபிள்களால் உள்ளூர் பொலிஸ் தலைமையகத்தை தாக்கி, பொலிசார் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர்.

செவ்வாயன்றே எதிர்ப்பாளர்கள் டோனேட்ஸ்க் மக்கள் குடியரசின் கொடியையும் ஐந்து சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் உயர்த்தினர். லுகன்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் என்னும் இரு பகுதிகளும் டோன்பாஸ் நிலக்கரிச்சுரங்கப் பகுதியில் உக்ரேனின் மிக அதிக மக்களை கொண்ட தொழில்துறைத் தளம் ஆகும்.

உக்ரேனில் உள்நாட்டுப் போருக்கான மற்றும் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் ஐரோப்பாவில் மிகப் பெரிய நெருக்கடி என விவாதிக்கக்கூடிய நிகழ்விற்கான பொறுப்பு மிகப் பெரிய அளவில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் தொடங்கி அதன் ஐரோப்பாவிலுள்ள ஏகாதிபத்திய சக்திகளிடம்தான் உள்ளன. திங்களன்று புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிக்கையில், ஒபாமா நிர்வாகம், ஏப்ரல் 17ல் ஜெனீவாவில் உக்ரேன் நெருக்கடியைக் குறைக்க அடையப்பட்ட நான்கு நாடுகள் உடன்பாட்டை ரஷ்யா மீறியதென குற்றம் சாட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டு, உத்தியோகபூர்வ மேற்கத்திய உக்ரேன் பற்றிய பிரச்சாரம் பெப்ருவரி 22க்கு முன்பும் பின்பும் நடப்பதில் இருக்கும் பாசாங்குத்தனத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அன்று நடந்த ஆட்சி மாற்றம் ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றி தீவிர தேசியவாத ஆட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவும் IMF ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த உறுதியளித்துள்ள ஒன்றை நிறுவியது. இந்த ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க ஆதரவு கொண்ட நவ நாஜி துணை இராணுவ வலது பிரிவு மற்றும் பாசிச ஸ்வோபோடா கட்சியால் தலைமை தாங்கப்பட்டது; அவற்றின் பிரதிநிதிகள் இப்பொழுது கியேவ் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

முன்னாள் சோவியத் குடியரசும், மத்தியதரைக் கடலை அணுக உதவும் மாஸ்கோவின் முக்கிய கடற்படை தளத்தை கொண்டுள்ள உக்ரேனில் ஒரு வெறித்தன ரஷ்ய விரோத அரசாங்கத்தை இருத்துவது ரஷ்யாவிடம் இருந்து எதிர்கொள்ளலை தூண்டும் என்று வாஷிங்டனுக்கு தெரியும். அது கிரிமியாவில் பிரிவினை எழுச்சிக்கு ஆதரவு என்ற வகையில் வந்தது, அத்தீபகற்பம் ரஷ்யக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்கு ஆதரவு பெற்றுள்ளது.

கியேவிற்கு CIA இன் இயக்குனர் ஜோன் பிரென்னன் மேற்கொண்ட இரகசிய பயணம் ஒன்றைத் தொடர்ந்து, கிழக்கே எதிர்ப்புக்கள், ஆக்கிரமிப்புக்களை உக்ரேனிய இராணுவம் நசுக்க முற்பட்ட தோல்வியுற்ற முயற்சிக்குப் பின் ஜெனீவா மாநாடு வந்தது. அமெரிக்கா மோசமான எண்ணத்துடன்தான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது என்பது துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் கியேவிற்கு பயணித்தது, மற்றும் அவர் புறப்பட்ட சில மணி நேரத்திற்குள் இரண்டாம் இராணுவத் தாக்குதல் கிழக்கு உக்ரேனில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடைபெற்றது மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அத்தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

திங்களன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, கியேவ் அரசாங்கம் தென்கிழக்கு உகரேனில் 11,000 துருப்புக்கள், 160 டாங்கிகள், 230 கவச வாகனங்கள், குறைந்தப்பட்சம் 150 பீரங்கி அமைப்புகள் மற்றும் “ஏராளமான விமானங்கள்” ஆகியவற்றை நிலைநிறுத்தியுள்ளது எனத் தெரிகிறது.

அதே நேரத்தில், அமெரிக்காவும் நேட்டோவும் முன்னோடியில்லாத இராணுவப் படைகளை முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் வார்சோ உடன்படிக்கை நாடுகளில் நிலை கொண்டுள்ளன, மேற்கத்திய இராணுவப் படைகள் ரஷ்யாவின் மேற்கு எல்லைகள் வரை இப்பொழுது வந்துவிட்டன.

அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையில் இருந்து நிர்வாகத்தின் எரியூட்டும் கொள்கையை எதிர்க்கும் எதிர்ப்புக் குரல்கள், ஒபாமா இன்னும் மோதல் வழிவகையைக் கொள்ளவில்லை என்று தாக்குபவர்கள்தான். செவ்வாயன்று Washington Post ஒரு தலையங்கத்தில் திங்களன்று அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் “வெறும் அரைகுறை நடவடிக்கைகள்” என உதறித்தள்ளியுள்ளது.

பல குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள், கியேவ் ஆட்சிக்கு ஆயுதங்கள் அனுப்பும் திட்டத்தை நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். பெய்ஜிங்கில் பைனான்சியல் டைம்ஸ் உடனான பேட்டி ஒன்றில் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் கூறினார்: “நான் தனிப்பிட்ட முறையில் இன்னும் கடுமையான அமெரிக்கப் படைகள் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என நம்புகிறேன்” என்றார்.

செய்தி ஊடகத்தில் இருந்து இடையறா பெரும் ரஷ்ய விரோத பிரச்சாரம் இருந்தபோதிலும், ஆளும் உயரடுக்கு மக்களின் ஜனநாயக விருப்பத்தை முற்றிலும் மதிக்காமல் இருந்தாலும் கூட, இந்த வாரம் வெளிவந்த இரு கருத்துக் கணிப்புக்கள், வாஷிங்டனின் போர்வெறிக் கொள்கைக்கு மக்களின் பரந்த எதிர்ப்பைக் காட்டுகின்றன.

USA Today / Pew  Research Centre ஆகியவற்றின் கருத்துக்கணிப்புக்கள் மாஸ்கோவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு குறுகிய பெரும்பான்மையில் ஆதரவு கொடுக்கிறது; ஆனால் இரண்டில் இருந்து ஒன்றுக்கு மேலாக (62%ல் இருந்து 30%வரை) பொதுமக்கள் ஆயுதங்கள் அனுப்புதல், இராணுவ தளவாடங்களை உக்ரேனிய அரசாங்கத்திற்கு கொடுப்பதை எதிர்க்கின்றனர்.

வாஷிங்டன்போஸ்ட்-ABC News கருத்துக்கணிப்பு ஒபாமாவின் ஒப்புதல் தரம் ஆண்டின் முதல் காலாண்டில் 46%ல் இருந்து 41% எனக் குறைந்து விட்டதைக் காட்டுகிறது. இது அவருடைய ஜனாதிபதி காலத்திலேயே மிகவும் குறைவாகும். 34 வீதத்தினர்தான் உக்ரேன் நெருக்கடி கையாளப்படுவதை ஒப்புக்கொள்கின்றனர், 46% ஒப்புக் கொள்ளவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சி அழுத்தங்களை குறைக்க வேண்டும் என்று சமிக்ஞை காட்டி, மேற்குடன் எப்படியும் ஒத்துப்போக வேண்டும் என நினைத்தாலும், வாஷிங்டன் இதைத் திரும்ப அளிக்கும் விருப்பத்தை குறிக்கவில்லை.

திங்கள் பிற்பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகலுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், மாஸ்கோவின் மறுப்புக்களை மீண்டும் கூறினார்; அதன் துருப்புக்கள் கிழக்கு உக்ரேன் எழுச்சிக் குழுக்களுக்கு பின் உள்ளன என்பதை மறுத்தார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரகத்தின் கருத்துப்படி, ஷோயகு ஹேகலை “வனப்புரையைக் குறைக்குமாறு” வலியுறுத்தினார்.

ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் ஹேகலிடம், உக்ரேன் எல்லைக்கு அருகே இருந்த ரஷ்ய துருப்புக்கள் கியேவ் அரசாங்கம் தான் இராணுவப் பிரிவுகளை “நிராயுதபாணிகளான மக்களுக்கு எதிராக” பயன்படுத்தாது என்று கூறியவுடன் முகாம்களுக்குத் திரும்பி விட்டன” என்றார்.

ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜீ ரையப்கோவ் செவ்வாயன்று கிழக்கு உக்ரேன் மீது படையெடுப்பது அல்லது அதை இணைப்பது என்ற விருப்பம் மாஸ்கோவிற்கு இல்லை என்றார். “எங்களுக்கு முற்றிலும் அத்தகைய எண்ணம் இல்லை, அதை நான் வலியுறுத்துகிறேன், உக்ரேனில் தென்கிழக்கில் கிரிமிய சூழ்நிலை எனப்படுவது மீண்டும் வராது” என்று ரையப்கோவ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஷோய்குவிற்கும் ஹேகலுக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பை பென்டகன் உறுதிப்படுத்தியது, ஆனால் மாஸ்கோவின் சமரச உடன்பாடுகளை இழிவுடன் புறக்கணித்துள்ளது; ரஷ்யா உக்ரேனை “உறுதிகுலைப்பதை” நிறுத்த வேண்டும் என்று ஹேகல் கோரி “தொடர்ந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக” எச்சரித்துள்ளது.

மூத்த அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் புதன் அன்று பிரஸ்ஸல்ஸில் ரஷ்யாவுடன் மோதலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை விவாதிக்க உள்ளனர். வாஷிங்டன் மாஸ்கோவிற்கு எதிராக கடினப்போக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பியர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பின்னர் இந்த வாரம், ஜனாதிபதி ஒபாமா ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலை வெள்ளை மாளிகையில் சந்திப்பார்.