சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

An assessment of the International May Day Online Rally

சர்வதேச இணையவழி மே தின பொதுக்கூட்டம் குறித்த ஒரு மதிப்பீடு

David North
6 May 2014

Use this version to printSend feedback

ஞாயிறன்று, மே 4இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இணையவழி மே தின பொதுக்கூட்டம் ஒரு முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வாக இருந்ததோடு, உலக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு ஆற்றல் மிக்க சக்தியாக சோசலிசத்தின் மீள்எழுச்சியை முன்னறிவிப்பதில் அதுவொரு மைல்கல்லாகவும் அமைந்திருந்தது.

எந்தவொரு புறநிலை மதிப்பீட்டிலிருந்து நோக்கினும், இந்த பொதுக்கூட்டம் ஒரு உள்ளடக்கமிக்க மற்றும் கணிசமான அளவிற்கு ஒழுங்கமைக்கப்பட்ட, தொழில்நுட்பரீதியிலான ஒன்றாக இருந்ததோடு, அனைத்திற்கும் மேலாக, அரசியல் சாதனையாக இருந்தது. அந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே, சுமார் 2,000 பேர்கள் அந்த நிகழ்விற்காக பதிவு செய்திருந்தனர். அந்த இணையவழி கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். கனடா, அமெரிக்கா (இங்கே உள்ள 50 மாநிலங்களில் 48 மாநிலங்களில் இருந்து பங்கெடுத்திருந்தனர்), இலத்தீன் அமெரிக்கா (குறிப்பாக பிரேசில்), பிரிட்டன் மற்றும் மேற்கு ஐரோப்பா, தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ரஷ்யா மற்றும் உக்ரேன் இரண்டிலிருந்தும் அதை கேட்டிருந்தனர் என்பதை இட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மகிழ்ச்சி அடைந்தது. சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்தும் பங்கெடுத்திருந்தனர். மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலிருந்து கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர். இதுவரையில், அனைத்துலகக் குழு அரசியல்ரீதியாக செயல்படும் எந்தவொரு அமைப்பையும் கொண்டிராத நாடுகளில் இருந்தும் பலர் கேட்க வந்திருந்தனர் என்ற உண்மை, உலக சோசலிச வலைத் தளம் உலகளாவிய மட்டத்தை எட்டியிருப்பதை நிரூபிக்கிறது, அந்த பிரதான ஊடகம் மூலமாகவே இந்த பொதுக்கூட்டம் விளம்பரம் செய்யப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளான, பத்து பேச்சாளர்கள் அந்த கூட்டத்தில் உரையாற்றினர். அவர்களின் உரைகள், உக்ரேன் நெருக்கடி உட்பட, அதிகரித்து வரும் மூன்றாம் உலக யுத்த அபாயங்கள், உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அதீத அளவில் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என பரந்த சர்வதேச அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கி இருந்தன.

அனைத்து பேச்சாளர்களும் அவர்களது குறிப்புகளை, முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு மார்க்சிச பகுப்பாய்வு மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பரந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் அமைத்திருந்தனர். அவர்கள் தங்கு தடையின்றி, குழப்பத்திற்கு இடமின்றி, நான்காம் அகிலத்தின் போராளிகளாக உரை நிகழ்த்தினர். (அவர்கள் ஒவ்வொருவரின் உரையின் ஒலிப்பதிவும், அறிக்கையும் இவ்வாரம் தொடங்கி உலக சோசலிச வலைத் தளத்தில் பதிப்பிக்கப்பட்டு வருகிறது.)

அந்த உரைகள் மிகத் தெளிவாக, உலகம் முழுவதிலும் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது. வெறும் இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாக நீடித்திருந்த அந்த கூட்டம் முழுவதிலும், அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து கருத்துரைகள் வந்த வண்ணம் இருந்தன மொத்தமாக 700க்கும் மேல் வந்திருந்தன. அன்றைய நாளில் மட்டும், 50,000க்கும் மேலான தனிப்பட்ட பார்வையாளர்களால் உலக சோசலிச வலைத் தளம் பார்க்கப்பட்டது, அது சராசரியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கப்படும் WSWS வாசகர்களின் எண்ணிக்கையை விட கணிசமான அளவிற்கு அதிகமாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலகெங்கிலும் உள்ள அதன் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் இந்த நிகழ்வின் வெற்றியை அங்கீகரிக்கின்றனர். எவ்வாறிருந்த போதினும், நம்மை நாமே பாராட்டிகொண்டு நாம் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கவில்லை. மார்க்சிஸ்டுகளாக நாம், அரசியல் அபிவிருத்திகளைப் புறநிலையாக அணுகுகிறோம் அதில் நாம் வகிக்கும் நேரடி பங்கும் உள்ளடங்கும். அதாவது, இயக்கத்தின் காரியாளர்களின் நேரடியான முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, இந்த கூட்டத்திற்கான அசாதாரண பிரதிபலிபிற்கான இன்றியமையா காரணங்களைப் புரிந்து கொள்ள நாம் முயல்கிறோம். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முற்போக்கான பிரிவுகளின் இடதுசார்ந்த அரசியல் நிலைநோக்கிய திருப்பத்தின் ஒரு பண்பார்ந்த முக்கிய நிகழ்வை அந்த கூட்டம் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை அதில் பங்கு பெற்றிருந்தோரின் பரப்பெல்லையும், பிரதிபலிப்பும் அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே தெளிவுபடுத்திவிட்டது.

இந்த மாற்றத்திற்கு அடியிலுள்ள மிகவும் தீர்க்கமான காரணி என்னவென்றால் முதலாளித்துவத்தின் புறநிலையான நெருக்கடி ஆகும். தொழிலாள வர்க்கத்தினது சமூக நிலைமைகளின் சீரழிவு என்பது ஒரு நீடித்த நிகழ்வுபோக்காக நடந்துள்ளது, அது பல தசாப்தங்களாக நீடிக்கிறது. 2008 பேரழிவு முதலாளித்துவத்தின் மீது ஏற்பட்ட ஏமாற்றத்தை தீவிரப்படுத்தி உள்ளதோடு, சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் அளவானது உலகம் முழுவதிலும் சீற்றத்தை தூண்டி விட்டுள்ளது. முடிவில்லா யுத்தங்களும், கொடூர சர்வாதிகார போக்குகளின் வளர்ச்சியும் முதலாளித்துவ "ஜனநாயகத்தின்" நம்பகத்தன்மைக்கு ஆழமாக குழி பறித்துவிட்டிருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக, அதிகரித்து வரும் ஒரு சர்வதேச அணுஆயுத மோதல் அபாயம், சான்றாக உக்ரேனிய நெருக்கடி, பாரிய மக்களிடையே ஆழ்ந்த அச்சத்தை தூண்டி உள்ளது.

சோவியத் ஒன்றியமும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளும் கலைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டன. அப்போதிருந்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலுமான மக்களுக்கு கொண்டு வரப்பட்ட முதலாளித்துவ மீட்சியின் பேரழிவுகரமான விளைவுகள் "சந்தையின் அற்புதங்கள்" மீதிருந்த நப்பாசைகளை தகர்த்துள்ளன. சீனாவில், ஜூன் 1989 தியானன்மென் சதுக்க படுகொலைக்குப் பின்னர் நிகழ்ந்திருந்த கணிசமான பொருளாதார வளர்ச்சிக்கு இடையே, தொழிலாள வர்க்கம் அந்த வளர்ச்சின் சமூக விளைவுகளைக் குறித்து ஆழமாக அதிருப்தி அடைந்துள்ளது.

ஸ்ராலினிச ஆட்சிகளின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் அதன் இழிவார்ந்த பொறிவால் மட்டுமல்லாது அனைத்து பழைய சந்தர்ப்பவாத தொழிலாளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களாலும் உருவாக்கப்பட்ட சர்வதேச அரசியல் நிலைநோக்கற்ற தன்மை, தொழிலாள வர்க்கத்திற்குள், குறிப்பாக இளைஞர்களுக்குள், ஒரு புதிய அரசியல் மனோபாவத்தை அளித்து வருகிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்பு மனோபாவம் அபிவிருத்தி அடைந்து வருவது, இந்த பொதுக்கூட்டத்தின் பிரதிபலிப்பில் வெளிப்பாட்டைக் கண்டது.

அதை இவ்வாறு கூறலாம், நாம் பங்களிப்பாளர்களின் அளவை பெரிதுபடுத்திக் காட்ட முனையவில்லை. அங்கே செவிமடுத்தவர்களில், மில்லியன் கணக்கானவர்களை விட்டுவிடுவோம், பத்து ஆயிரக்கணக்கானவர்கள் கூட இல்லை. ஆனால் அந்த பங்களிப்பு மகத்தானதாக இருந்தது, மற்றும் கேள்விக்கிடமின்றி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நிலைநோக்கு மற்றும் ஒழுங்கமைவில் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கிய மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, அதை எதிர்நோக்க செய்திருக்கிறது.

ஒரு அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, இந்த கூட்டத்தின் வெற்றியில் இருக்கும் மற்றொரு தீர்க்கமான முக்கிய காரணிக்கு இங்கே நாம் வருகிறோம். புறநிலையான நிகழ்வுபோக்குகள் வரலாற்றில் ஒரு சக்தி வாய்ந்த பாத்திரம் வகிக்கின்றன. ஆனால் இந்த பொதுக்கூட்டம் தானாக நடந்துவிட வில்லை. அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் திட்டமிடப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் பங்கெடுத்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், உலகெங்கிலும் இருந்து பங்கு பெற்றிருந்தவர்கள், அவர்களின் அரசியல் நனவு வெகு ஆழமாக உலக சோசலிச வலைத் தளத்தால் தாக்கம் பெற்றிருந்தது. அது கடந்த 16 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு உண்மையான மார்க்சிச புரட்சிகர அரசியல் கலாச்சாரத்தை மறுகட்டமைப்பு செய்ய சளைக்காது உழைத்திருந்தது.

உலக சோசலிச வலைத் தளமே கூட, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகவாதம் மற்றும் எண்ணில்லா வகையிலான குட்டி-முதலாளித்துவ தீவிர கொள்கையினரின் தேசியவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நிரந்தரப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை பாதுகாக்க அனைத்துலகக் குழுவின் தலைமையில் நான்காம் அகிலத்தால் நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒட்டுமொத்த முந்தைய வரலாற்றின் அடித்தளத்தில் உருவானதாகும்.

பல தசாப்தங்களாக, இத்தகைய கோட்பாடுகளைத் விடாது தாங்கி பிடிப்பதற்கான நீண்ட போராட்டம், இப்போதைய பாரிய அரசியல் தீவிரத்தன்மையின் நிகழ்வுபோக்கில் குறுக்கிடுகிறது. சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தி தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இயக்கத்தின் தலையீடு இல்லாமல், முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியால் உந்தப்பட்டு, கட்டவிழ்ந்து வரும் வரலாற்று சுழலில், அனைத்துலகக் குழுவின் அரசியல்ரீதியிலான நனவுபூர்வமான அகநிலையான தலையீட்டில் இருந்து எழுந்துள்ளது.

அந்த கூட்டத்தின் முடிவில், அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் தோழர் ஜோசப் கிஷோர் கூறுகையில், இந்த பேரணி குறித்து ட்ரொட்ஸ்கி பெருமைப்பட்டிருப்பார் என்று குறிப்பிட்டார். ஆம், நிச்சயமாக அவர் பெருமை அடைந்திருப்பார். மேலும் அவர் இந்த வெற்றியிலிருந்து எழும் புதிய சவால்களை பகுத்தாராயவும் மற்றும் விளங்கப்படுத்தவும் நகர்ந்திருப்பார்.

மே 4, 2014 இன் சர்வதேச கூட்டம் இப்பொழுது வரலாற்றின் பாகமாக உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் புதிய பிரிவுகளுக்குள் சோசலிசத்திற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலமாக, இந்த சாதனையின் மீது அரசியல்ரீதியாக கட்டியெழுப்ப முன்நோக்கி செல்லும்.