சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Modi reiterates pledge to expel “Bangladeshi” Muslims in wake of communal massacre

இந்தியா: வகுப்புவாத படுகொலையை அடுத்து "பங்களதேஷ்" முஸ்லீம்களை வெளியேற்றும் சூளுரையை மோடி மீண்டும் வலியுறுத்துகிறார்

By Deepal Jayasekera
8 May 2014

Use this version to printSend feedback

அசாமில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட இதில், அனைவரும் இல்லை என்றாலும், பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் வகுப்புவாத வன்முறையை அடுத்து, உத்தியோகபூர்வ எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள புலம்பெயர்ந்த பங்களதேஷ் முஸ்லீம்களின் மீது அவரது வகுப்புவாதம் பெருக்கெடுக்கும் குற்றச்சாட்டுக்களை பெரிதாக்கி உள்ளார்.

கடந்த ஞாயிறன்று மேற்கு வங்காளத்தின் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், மோடி பங்களதேஷில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக சீறினார், பிஜேபி அரசாங்கம் அவர்களை வெளியேற்றும் என்ற அவரது மீண்டும் மீண்டும் கூறப்படும் தேர்தல் அறைகூவலை மீண்டும் உரைத்தார்.

மோடி உரையின் செறிந்த வகுப்புவாத குணாம்சமானது, பங்களதேஷில் இருந்து வரும் இந்து மற்றும் முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் இடையே அவர் வரையும் பேதங்களால் அடிக்கோடிடப்பட்டது. அவர் முந்தையவர்களை "நமது சகோதர்கள்" என்று அழைத்ததோடு, அவர்களுக்கு விஸ்தரிக்கப்பட்ட பிரஜா உரிமைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார், அதேவேளையில் பிந்தையவர்களை அவர் குற்றஞ்சாட்டினார். அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள், தேர்தல் ஆதாயங்களுக்காக பங்களதேஷ் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

பங்களதேஷில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டவர்களும் இந்திய தாயின் மைந்தர்களும், இந்த தேசத்தை நேசிப்பார்கள், [இந்து பெண் தெய்வமான] காளி தாயை வணங்குவார்கள், வங்காள மொழி பேசுவார்கள் ... அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், அவர்களுக்கு இந்திய தாயின் இதர மைந்தர்களுக்கு வழங்கப்படும் அதே அந்தஸ்து வழங்கப்படும். ஆனால் வாக்கு-வங்கி அரசியலுக்காக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படும் சட்டவிரோத பங்களதேஷ் புலம்பெயர்ந்தோர், பங்களதேஷிற்கு திரும்ப செல்ல வேண்டி இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து இந்த அதி-பிற்போக்குத்தனமான அடிநாதத்தில், மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள BJPஇன் முக்கிய தேர்தல் எதிரிகளை விமர்சித்தார், அதேவேளையில் மாநிலத்தின் பாரிய வேலைவாய்ப்பின்மைக்கு பங்களதேஷின் முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை குற்றஞ்சாட்ட முனைந்தார்: “நம் தேச இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதிபடுத்துவதற்கு மாறாக, காங்கிரஸ் [கட்சி], சிபிஐ-எம் [இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி], தீதி [அக்கா என்று அழைக்கப்படும் மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி] பங்களதேஷ் புலம்பெயர்ந்தோரை வாக்கு வங்கிகளாக ஆக்க அவர்களுக்கு வேலைகள் கிடைக்க உறுதிப்படுத்தி வருகின்றனர். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தர விரும்புபவர்கள் அந்த திசையிலிருந்து திரும்ப வேண்டும்,” என்றார்.

ஏனைய தேர்தல் பொதுக்கூட்டங்களிலும் அவரால் மீண்டும் மீண்டும் கூறப்பட்ட மோடியின் கருத்துரைகள், அசாமில் கடந்த வாரம் ஏற்பட்ட முஸ்லீம் கிராமவாசிகளின் படுகொலைகளில் இந்து மேலாதிக்கவாத BJPக்கும் மற்றும் அவருக்கும் சிறிது பொறுப்புண்டு என்ற அவரது அரசியல் எதிர்ப்பாளர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரது பதிலிறுப்பாக வந்தன. அவர்கள் இந்தியாவின் வடகிழக்கில் செய்த அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் பங்களதேஷ் முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை குற்றஞ்சாட்டி இருந்தனர்.

கடந்த வியாழனன்று தொடங்கி, போடா தேசிய-இன பிரிவினைவாதிகள் என்று நம்பப்படும் துப்பாக்கிதாரிகள் அசாமின் பாக்சா மற்றும் கோக்ராஜ்ஹார் மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட முஸ்லீம் கிராமவாசிகளின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினார்கள். அந்த வன்முறை சனிக்கிழமை வரை தொடர்ந்ததோடு, அதில் குறைந்தபட்சம் 41 பேர் கொல்லப்பட்டனர்.

பழிவாங்கும் கூடுதல் நடவடிக்கைகள் நடக்கலாம் என அஞ்சி, வங்காள மொழி பேசும் முஸ்லீம்களும், போடா பழங்குடியினரும் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். கோக்ராஜ்ஹாரின் முஸ்லீம்களோ, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அண்டை மாவட்டமான தூபுரிக்கு சென்றுள்ள நிலையில், போடா குடும்பங்களோ தூபுரியில் இருந்து கோக்ராஜ்ஹார் சென்றனர், அந்த மாவட்டம் இந்திய அரசால் பகுதியாக ஸ்தாபிக்கப்பட்ட போடாலாந்து பிராந்திய கவுன்சிலின் சட்டத்துறையின் கீழ் வரும் அசாமிய மாவட்டங்களில் ஒன்றாகும்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அசாமின் காங்கிரஸ் மாநில அரசாங்கம் இந்திய இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு படைகளை நிறுத்தியதோடு, முதல் மந்திரி தரூண் கோங்காய் கூடுதல் துருப்புகளை அனுப்ப மத்திய அரசாங்கத்தைக் கோரி வருகிறார்.

இந்த தாக்குதல்கள், ஒரு "இறையாண்மை போடாலாந்துக்கான" ஆயுதமேந்திய இயக்கத்தை நடத்தி வரும் ஒரு பிரிவினைவாத இயக்கமான தேசிய ஜனநாயக போடாலாந்து முன்னணியால் (NDFB) நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பங்களதேஷ் மற்றும் இந்தியா மாநிலமான மேற்கு வங்காளம் இரண்டிலும் இருக்கும் போடா வம்சாவளி நிலங்களை, வங்காளம் பேசும் முஸ்லீம்கள் ஆக்கிரமித்திருப்பதாக போடா பிரிவினைவாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஜூலை-ஆகஸ்ட் 2012இல் அதே பகுதியில் போடா பழங்குடியினருக்கும் வங்காளம் பேசும் முஸ்லீம்களுக்கும் இடையில் நடந்த வகுப்புவாத மோதல்களில் நூறுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டார்கள் மற்றும் 400,000கும் அதிகமானவர்கள் இடம் பெயர்த்தப்பட்டார்கள். இது இந்திய துணைகண்டத்தின் 1947 வகுப்புவாத பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய இடம்பெயர்வாக கருதப்பட்டது.

காங்கிரஸ் கட்சியும், மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் காங்கிரஸூம் (இதுவும் காங்கிரஸில் இருந்து வந்தது தான்) அசாமில் வகுப்புவாத குழப்பங்களைத் தூண்டுவதில் BJPஇன் வரிசையான வகுப்புவாத முறையீடுகளைக் குற்றஞ்சாட்டி உள்ளன. இதில் அவை மோடியின் உணர்ச்சிகரமான உரைகளை மட்டும் குறிப்பிட்டு காட்டவில்லை, மாறாக பங்களதேஷில் இருந்து வந்த அனைத்து முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்கான அசாம் BJPஇன் சூளுரையையும் இது அதன் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது குறிப்பிட்டு காட்டின.

காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் கூறுகையில், அசாம் கலவரம் பிஜேபி மற்றும் மோடியால் வடகிழக்கில் வாக்குகள் திரட்டுவதற்காக ஊக்குவிக்கப்பட்ட "வகுப்புவாத துருவமுனைப்பாட்டின்" ஒரு விளைவு என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

திங்களன்று, கிருஷ்ணாநகர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றுகையில், மோடி வகுப்புவாத மற்றும் ஜாதிய-அடிப்படையிலான வன்முறையைத் தூண்டிவிட முனைந்துள்ளார் என்று குறிப்பிட்டார்: “அவர் கைது செய்யப்பட வேண்டும், மேற்கு வங்காளத்தில் பிரச்சாரம் செய்ய அவரை அனுமதிக்கக் கூடாதென நாங்கள் தேர்தல் கமிஷனுக்கு கூறி வருகிறோம்,” என்றார்.

மோடி மற்றும் BJP'இன் கரங்கள் இரத்தத்தில் நனைந்துள்ளன என்பதில் எந்த கேள்வியும் இல்லை. அவர்கள் வகுப்புவாத வன்முறையை ஊக்குவிப்பதில் தசாப்த கால வரலாறைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அசாமில் உள்ள வங்காளம் பேசும் முஸ்லீம்வாசிகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடும் நோக்கத்தோடு அசாமில் அவர்களின் இழிவார்ந்த பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர், மேலும் அது இரத்த ஆறில் தான் போய் முடியும் என்பதை அவர்கள் நன்கு முழுமையாக அறிந்திருந்தும் அதை செய்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியும், பானர்ஜியும் இந்த குற்றத்தில் அவர்களின் பங்கைக் கொண்டிருக்கவில்லை என்றாகாது. அவர்களும் இந்து வகுப்புவாதிகளோடு இணங்கி உள்ளனர், அவர்களைக் கண்டுங்காணாதது போல் இருந்துள்ளனர். அவர்கள் BJP'ஐ அரசியல்ரீதியாக, குறிப்பாக தேர்தல் களத்தில், ஆதாயத்திற்காக பார்க்கும் போது அதை குற்றஞ்சாட்டுவார்கள், ஆனால் இதர நேரங்களில் பிஜேபி மற்றும் அதன் இந்து தேசியவாத முறையீடுகளுக்கு சட்டப்பூர்வதன்மையை வழங்குகிறார்கள்.

இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்து மேலாதிக்க இந்தியா மற்றும் முஸ்லீம் பாகிஸ்தான் என இந்தியாவை பிரிப்பதில், இந்தியாவிலிருந்து வெளியேறிய பிரிட்டிஷ் காலனித்துவ மேலாளர்கள் மற்றும் முஸ்லிம் லீக்குடன் ஒத்துழைத்தார்கள்.

1999இல் இருந்து 2001 வரையில் பிஜேபி-தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பானர்ஜி அதன் இரயில்வே துறை மந்திரியாக சேவையாற்றி, ஒரு கூட்டாளியாக இருந்தது. 2004 தேசிய தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் NDA மடிப்பிலிருந்து வெளியேறியது.

அசாமில் வங்காளம் பேசும் முஸ்லீம்களுக்கும் போடா பழங்குடியினருக்கும் இடையிலான பதட்டங்கள், 1947 பிரிவினையில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியாவை அதிர வைத்த பாரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தின் மீதான முதலாளித்துவ ஒடுக்குமுறையில் அவற்றின் வேர்களைக் கொண்டுள்ளன. வங்காளம் அதன் வரலாற்று மற்றும் பொருளாதார தர்க்கத்தின் எதிர்ப்பால் ஒரு இந்திய மாநிலமாக மாறிய மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக மாறிய கிழக்கு வங்காளம் என துண்டாடப்பட்டது, பின்னர் கிழக்கு பாகிஸ்தான் 1971இல் பாகிஸ்தானிடம் இருந்து உடைத்துக் கொண்டு பங்களதேஷாக மாறியது.

வடகிழக்கு இந்திய பழங்குடி மக்கள் மீதான இந்திய முதலாளித்துவத்தின் அலட்சியமும், ஒடுக்குமுறையும் அவர்கள் மத்தியில் போடா உட்பட இன பிரிவினைவாத இயக்கங்களை எரியூட்ட உதவியுள்ளது. போடா பிரிவினைவாதிகள் அசாமிலிருந்து போடாலாந்து எனும் இனரீதியில் வரையறுக்கப்பட்ட தேசிய-மாநிலம் கோருகின்றனர். அவர்கள் உண்மையான ஜனநாயக மற்றும் சமூக மனக்குறைகளைச் சுரண்டு கொள்கின்றனர், ஆனால், அவர்கள் வங்காள முஸ்லீம்கள் மீதான வகுப்புவாத-பிரத்யேகவாத தாக்குதல்களுக்கு வெறுப்பூட்டி வருகின்ற நிலையில், அது இந்திய முதலாளித்துவ ஆட்சிக்கு அது எந்த முற்போக்கான மாற்றீட்டையும் வழங்கவில்லை என்பதை அடிக்கோடிடுகிறது. அவர்கள் போடா மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக தங்களின் "சொந்த" போடா தொழிலாளர் வர்க்கத்தை மற்றும் அந்த பிராந்திய இயற்கை வளங்களைச் சுரண்ட மற்றும் சர்வதேச மூலதனத்தோடு தங்களின் சொந்த பேரங்களை நடத்த ஒரு தனி வளையத்தை விரும்பும் ஒரு சிறிய போடா மேற்தட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

உழைக்கும் மக்களை மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களை இன மற்றும் மத வகுப்புவாத வழியில் பிரிக்கும் மற்றும் சிறிய போடா மேற்தட்டின் நலன்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பிற்போக்குத்தனமான பிரிவினைவாத வேலைத்திட்டத்தின் பாகமாக, போடா பிரிவினைவாதிகள் வறிய போடா பழங்குடியினரை அதேபோன்று நசுக்கப்பட்ட வங்காளம் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராக நிறுத்த வேலை செய்கின்றனர்.

சட்டவிரோத பங்களதேஷ் புலம்பெயர்ந்தோர்" மீதான மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு விடையிறுப்பாக பங்களதேஷ் அரசாங்கம் எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை, ஐயத்திற்கிடமின்றி இது ஏனென்றால் இந்தியாவின் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டைப் பெற அது விரும்பவில்லை. ஆனால் மோடியின் அறிக்கைகள் மீது பங்களதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா, "ஒரு பிரத்யேக கூட்டத்தில் அவரது நெருங்கிய கூட்டாளிகளிடம்" மோடியின் கருத்துக்கள் "தேவையற்றதும், ஆதாரமற்றதுமாகும்", மேலும் "எதிர்கால இந்திய அரசாங்கத்திற்கும், பங்களதேஷ் பிரஜைகளுக்கு இடையிலான உறவுகளை பாதிக்கும்" என்று கூறி, அவரது கவலைகளை வெளிப்படுத்தியதாக எகானோமிக்கல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

பங்களதேஷ் முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் மீதான மோடியின் குற்றச்சாட்டுகளும், அசாமின் வகுப்புவாத படுகொலையின் அலையில் அவற்றை தூபமிடும் அவரின் முடிவும் இந்தியாவிலும் அந்த பிராந்தியத்தில் மரணகதியிலான தாக்கங்களைக் கொண்டிருக்கும்.

சந்தேகத்திற்கிடமின்றி, மோடி மற்றும் பிஜேபி பங்களதேஷ் புலம்பெயர்ந்தோர் பிரச்சினையை இந்தியா முழுவதிலும் உள்ள BJP'இன் இந்து தேசியவாத காரியாளர்களுக்கு முறையீடு செய்ய ஒரு கருவியாக பயன்படுத்தி உள்ளனர் மற்றும் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான நேரடியான தாக்குதலாக இல்லாமல் இருந்தாலும் அவர்களின் இழிவார்ந்த இந்துத்வா சித்தாந்தத்தை இது இந்தியாவே முதலும் முற்றிலுமான இந்துக்களின் புனித பூமி மற்றும் தாய்வீடு என்று கூறுகிறது ஊக்குவிக்க அந்த பிரச்சினையை ஊக்குவித்துள்ளனர்.

தற்போதைய தேர்தல் முடிவில் பிஜேபி அதிகாரத்திற்கு வந்தால், பெரும்பாலானவர்கள் உத்தேசிப்பதைப் போல, இந்தியாவிலிருந்து அது "பங்களதேஷி முஸ்லீம்களை" வெளியேற்றும் அதன் சூளுரையை நல்லபடியாக நிறைவேற்ற முனைந்தால், ஹசீனாவின் மதிப்பிழந்த குறிப்புகள் காட்டுவதைப் போல, பங்களதேஷ் அரசாங்கத்துடனான பதட்டங்களுக்கு எரியூட்டும். அது பங்களதேஷின் இந்து சிறுபான்மையினர் மீதான முஸ்லீம் வகுப்புவாதிகளின் மேலதிக வகுப்புவாத தாக்குதல்களுக்கு இட்டுச் செல்லும்.

இந்தியாவில் ஏறக்குறைய 20 மில்லியன் "சட்டவிரோத" பங்களதேச புலம்பெயர்ந்தோர் இருப்பதாக பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் வாதிடுகின்றனர்.