சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Tamil Nadu workers speak to WSWS about Indian elections

தமிழ்நாடு தொழிலாளர்கள் இந்திய தேர்தல்கள் குறித்து WSWS உடன் உரையாடுகின்றனர்

By our correspondents
12 May 2014

Use this version to printSend feedback

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தொழிலாளர்கள், அரசு ஆதரவிலான மலிவு-உழைப்புக்கு எதிரான அவர்களின் போராட்டங்கள் குறித்தும், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழ் சபையான லோக் சபாவிற்கு நடக்கும் தேர்தல்களை நோக்கிய அவர்களின் மனோபாவம் குறித்தும் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தி தொடர்பாளர்களுடன் உரையாடினார்கள்.

இந்தியாவில் ஒன்பது கட்டமாக நடந்த தேர்தல்களில், இந்தியாவின் ஏழாவது மிகப் பெரிய மாநிலமான தமிழ்நாட்டின் வாக்காளர்கள், ஏப்ரல் 24 அன்று நடந்த ஆறாவது கட்ட வாக்கெடுப்பில் வாக்களித்தனர். பீஹார், உத்திர பிரதேசம், மற்றும் மேற்கு வங்காள பகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெறுகிறது, அனைத்து கட்ட வாக்குபதிவுகளின் வாக்குகள் மே 16இல் எண்ணப்பட உள்ளன.

அரசுக்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கமும், மின்சார உற்பத்தி நிறுவனமும் ஆன நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) தொழிலாளர்களும், சென்னையில் உள்ள மெட்ராஸ் ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலம் (மெப்ஸ்), மற்றும் ஒருங்கிணைந்த இரயில் பெட்டி உற்பத்தி ஆலையின் (ஐசிஎப்) தொழிலாளர்களும் WSWS உடன் உரையாடினார்கள். மாணவர்கள், வீட்டு பெண்மணிகள் மற்றும் ஏனைய உழைப்பாளர்களும் அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இந்த தேர்தல்கள் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் நடந்து வருகிறது. உழைக்கும் மக்கள், கடந்த ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வரும் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுகள், வேலையின்மை, அதுவும் குறிப்பாக பாடசாலை அளவில் இருப்பவர்களுக்கும் கல்லூரி பட்டதாரிகளுக்கும் நிலவும் வேலையின்மையால், அத்தோடு பொது மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்வி முறையின் பொறிவால் ஆத்திரமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்திய முதலாளித்துவம், அன்னிய முதலீட்டில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கும், 2011இல் இருந்து இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பாதியாக குறைந்திருப்பதற்கும், மேலதிக முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை வேகமாக திணிக்க கோருவதன் மூலமாக விடையிறுப்பு காட்டியுள்ளது. இவற்றில் பாரிய சமூக வெட்டுக்கள், எரிபொருள் மற்றும் உர மானியங்களைத் திரும்ப பெறுதல் மற்றும் படிப்படியாக நீக்குதல், வேலை நீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்களுக்கு இருக்கும் தடைகளை நீக்குதல், அத்தோடு பொது நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பை தனியார்மயமாக்குவதை தீவிரப்படுத்துவது ஆகியவையும் உள்ளடங்கும்.

பெருநிறுவன இந்தியாவின் பெரும்பான்மை, உத்தியோகபூர்வ எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் சுயபாணியிலான இந்து வகுப்புவாத ஜாம்பவானும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியைச் சுற்றி அணி திரண்டுள்ளன. ஆனால் அடுத்த அரசாங்கத்தின் அரசியல் வர்ணம் என்னவாக இருந்தாலும் அது பிஜேபி தலைமையிலானதாக ஆகட்டும், காங்கிரஸ் தலைமையிலானதாக ஆகட்டும் அல்லது பிராந்திய கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச இடது முன்னனியின் ஒரு அணிவகுப்பினது ஆகட்டும் அது முழுவதுமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்திற்கு அடிபணிந்தத ஒன்றாக, இந்திய மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை முற்றிலுமாக உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் ஒன்றாக விளங்கும் என்பதை நிரூபிக்கும்.

இந்தியாவின் ஏனைய இடங்களில் உள்ள தொழிலாளர்களை போன்றே, தமிழ்நாட்டின் தொழிலாளர்களும் ஊதிய உயர்வுகள், நல்ல நிலைமைகள் மற்றும் தங்களின் வேலை பாதுகாப்பிற்காக தனியார் மற்றும் பொதுத்துறை தொழில் வழங்குனர்களுக்கு எதிராக பல தொடர்ச்சியான போர்குணமிக்க போராட்டங்களை நடத்தி உள்ளனர், மேலும் அவற்றை அவர்கள் காட்டுமிராண்டித்தனமான அரசு ஒடுக்குமுறைக்கு இடையிலும் அடுத்தடுத்து நடத்தி உள்ளனர்.

சுமார் 10,000 வேலைகளை இல்லாதொழிக்கக் கூடிய ஆலைமூடல் அச்சுறுத்தலுக்கு எதிராக மார்ச் 31இல், சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நோக்கியா மொபைல் போன் நிறுவனத்தின் சுமார் 4,000 தொழிலாளர்கள் ஒரு போராட்டம் நடத்தினார்கள்.

மார்ச் 18இல் என்எல்சி நிறுவனத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என இருவருமே அதற்கு முந்தைய நாள் மத்திய தொழிலக பாதுகாப்பு படையால் (சிஐஎஸ்எப்) ஒரு சக தொழிலாளர், இராஜ்குமார் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். இராஜ்குமார் மற்றொரு தொழிலாளரை பார்க்க வேண்டுமென்ற அவரது கோரிக்கை மீது நடந்த ஒரு வாக்குவாதத்திற்கு இடையில் சிஐஎஸ்எப் சிப்பாயால் மிக நெருக்கமான தூரத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அந்த நிறுவனத்தின் ஒப்பந்த-தொழிலாளர் முறை மற்றும் எந்நேரமும் நிகழக்கூடிய தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்திருந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் என்எல்சி தொழிலாளர்களின் கிளர்ச்சியால் அந்நிறுவனம் அதிர செய்யப்பட்டுள்ளது.

பெரும்-இலாபங்களை காப்பாற்றுவதற்காக, என்எல்சி நிர்வாகம் அந்நிறுவனத்தின் 30,000 பலமான தொழிலாளர்களில் சுமார் பாதி பேருக்கு நிரந்த அந்தஸ்து வழங்க மறுக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் அவர்களின் சக தொழிலாளர்களான நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் அதே வேலைகளைச் செய்வதற்கு அவர்களின் ஊதியத்தில் வெறும் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பெறுகிறார்கள் என்பதோடு குடிசைகளில் வாழ தள்ளப்பட்டு, குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில் விடப்பட்டுள்ளனர்.

CISF ஆல் கொல்லப்பட்ட என்எல்சி தொழிலாளி இராஜ்குமாரின் தாயார், அவரது மகன் இறந்த பின்னர் அவர்களின் குடும்ப நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்துள்ளன என்பதை WSWSக்கு விவரித்தார். “இந்த வீட்டை என் மகன் செப்பனிட முயன்று வந்தார். ஆனால் இப்போது நாங்கள் ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம். அவர்கள் [என்எல்சி நிர்வாகம்] எங்களுக்கு உதவுவதாக அல்லது இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தார்கள், ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனது பேரக் குழந்தைகளைக் காப்பாற்றுவதும் கூட எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது,” என்றார்.

NLC இல் ஒரு துணை-ஒப்பந்த தொழிலாளியான செல்வகுமார், அவர் ரூ, 5000 (80 அமெரிக்க டாலர்) மாத சம்பளத்தில் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக அங்கே 13 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாக தெரிவித்தார். “நான் மாதம் ரூ. 500 வாடகை கொடுக்க வேண்டும், சுமார் 150 ரூபாய் மாதந்தோறும் மின்சார செலவுக்கு கொடுக்க வேண்டும். என்னுடைய அம்மா, குழந்தையோடு நாங்கள் நான்கு பேர் இந்த சிறிய குடிசையில் இருக்கிறோம். என்னுடைய மனைவிக்கும் எந்த நிரந்தர வேலையும் கிடையாது. அவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்காக (80 சென்டுகள்) அன்றாடம் கடினமான வேலைகளைச் செய்து வருகிறார். அரசு பாடசாலைகளில் போதிய வசதிகள் இல்லாததால், நாங்கள் எங்களுடைய குழந்தைகளை மாதந்தோறும் ரூ. 500 கட்டணமாக செலுத்தி தனியார் பள்ளிக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது,” என்றார்.

ஒரு என்எல்சி நிரந்தர தொழிலாளியான அலி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஜாதிய மற்றும் மத பிரிவினைகளை எவ்வாறு தூண்டிவிடுகின்றன என்பதைக் குறிப்பிட்டு காட்டினார். “மக்களுக்காக அவர்களிடம் எந்த கொள்கையும் இல்லை. [ஆளும்] காங்கிரஸ் கட்சி அதன் குடும்ப ஆட்சியை ஸ்தாபிக்க முயன்று வருகிறது [இது நேரு-காந்தி குடும்பத்தால் பல தசாப்தங்களாக தலைமை ஏற்று நடத்தப்பட்டு வரும் கட்சித் தலைமையின் பரம்பரை இயல்பைக் குறித்த ஒரு குறிப்பாகும்]. பாரதிய ஜனதா கட்சியோ பாபரி மசூதியை இடிப்பதிலேயே இருக்கிறது [உத்தரபிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள 16ஆம் நூற்றாண்டு மசூதி. இதை இடித்தமை பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் மிக மோசமான வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிட்டது]. ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் அது நிகழ்ந்திருக்க முடியாது.

பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி, 2002 குஜராத் [முஸ்லீம் விரோத] படுகொலையில் உடந்தையாய் இருந்தார். இதுபோன்ற தலைவர்களும், கட்சிகளும் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டில் ஒரு பதட்டமான சூழ்நிலை தொடந்து கொண்டே இருக்கும்,” என்றார்.

காசனூரில் இருந்து ஒரு வேலை தேடி நெய்வேலிக்கு வந்திருந்த ராமு கங்கையம்மா, வேலை கிடைக்காததால் ஓலைக் கூடைகள் செய்து வருகிறார். “ஒரு கூடை முடைய (பின்ன) நாங்கள் ஒரு வாரம் செலவிட வேண்டி உள்ளது, அதை 400 ரூபாய்க்கு விற்க முடியும். அதுவும் அதை அவ்வளவு சுலபமாக விற்றுவிட முடியாது. ஏதேனும் சில நாட்கள் நாங்கள் பட்டினி கிடக்க வேண்டி இருக்கிறது. எங்களுடைய தினசரி சாப்பாடு வெறுஞ்சோறும், வெங்காயமும் தான். எங்களிடம் தண்ணீர் பானையும், அரிசி பானையும் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் முகங்கொடுத்து வந்த இந்த ஏழ்மை நிலைமையால் பெரும்பாலும் என் கணவருக்கும், மகளுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது, இறுதியில் என் மகள் தற்கொலை செய்து கொண்டாள். எங்களால் அவளது இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பாடு கூட கொடுக்க முடியவில்லை,” என்றார்.

மெப்ஸின் ஒரு கணினி நிறுவனத்தில் ஒரு இளம் சுத்திகரிப்பு தொழிலாயான முருகன் WSWSக்கு கூறுகையில், அவர் பெறும் 7,000 ரூபாய் மாத சம்பளத்தில், 2,000 ரூபாய் அறை வாடகைக்கே செலவிட வேண்டி உள்ளது என்றும், அந்த அறையில் அவர் அவர்தம் தாயார் மற்றும் சகோதரியும் உடன் வசிப்பதாகவும், தண்ணீர், மின்சார செலவுகள் மற்றும் உணவு போன்ற இதர செலவுகள் இருப்பதால் அவரால் வசதிகள் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அவர் சகோதரியை அனுப்ப முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஒரகடத்தில் ஒரு மூன்று-சக்கர வாகன ஓட்டுநரான இளைஞர் வெங்கடேசன் ஸ்தாபக கட்சிகள் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்தினார்: “காங்கிரஸூம், பிஜேபி-உம் பல ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டுள்ளன. திமுக [திராவிட முன்னேற்ற கழகம்] மற்றும் அஇஅதிமுக [அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்] தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தி உள்ளன. ஆனால் இந்த அரசாங்கங்கள் எதுவும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை,” என்றார். பிரதான ஸ்ராலினிச கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றால் ஊக்குவிக்கப்படும் மூன்றாம் அணி என்றழைக்கப்பபடுவதைக் குறித்து அவர் கூறுகையில், “அவை கடந்த காலத்தில் காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக-க்கு பின்னால் அணி வகுத்து நின்றிருந்ததால், அவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை,” என்றார்.

ஒரு நோக்கியா பொறியாளரான விக்னேஷ்வரன் கூறுகையில், எந்த கட்சியின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் இந்த தேர்தலில் அவர் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று தெரிவித்தார். “அவர்கள் தொழிலாளர்களுக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ ஒன்றும் செய்வதில்லை. காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற முதலாளித்துவ கட்சிகளுக்கு மக்களின் நலன்களில் எந்த கவலையும் இல்லை. இடது என்று போலியாக நடிக்கும் சிபிஎம் மற்றும் சிபிஐ, தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில் தொழிலாள வர்க்க விரோத கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தன. அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலேயே கூட, [மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில்] அவர்கள் முதலாளித்துவ கொள்கையைப் பின்பற்றின,” என்றார்.

எல்லா தொழிலாளர்களும் பொதுவான பிரச்சினைகளையே முகங்கொடுக்கின்றனர் என்று வலியுறுத்தும் அளவிற்கு அவர் சென்றார். இப்போதெல்லாம் ஒரு நாளுக்கு எட்டு-மணி நேர வேலை என்பது கிடையாது என்பதை அவர் குறிப்பிட்டு காட்டினார். “என்னை போன்ற நிர்வாக அதிகாரிகள் கூட ஒப்பந்த தொழிலாளர்களைப் போல நிரந்த வேலைநீக்க அச்சுறுத்தலில் இருக்கிறோம்,” என்பதையும் விக்னேஷ்வரன் சேர்த்துக் கொண்டார்.

ஒரு தனியார் நிறுவனத்தின் பெண் தொழிலாளர் ஒருவர் அரசியல் கட்சிகள் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்தியதோடு, அவர் ஏன் வாக்களிக்கவில்லை என்பதையும் அவர் விவரித்தார்: “அவர்கள் மக்களுக்காக பணியாற்றவில்லை. தேர்தல் சமயங்களில் தான் அவர்கள் எங்களைப் பார்க்க வருகிறார்கள், பின்னர் அவர்கள் மக்களின் நலன்களை விட்டுவிட்டு, அவர்களின் சொந்த நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள்,” என்றார். எந்தவித சம்பளமும் இல்லாமல் அவர் கூடுதல் வேலை நேரத்தில் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது, அவரது நிறுவனத்தில் தொழிற்சங்கங்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு விதவையான அவர், இரண்டு குழந்தைகளையும், ஒரு ஊனமுற்ற சகோதரரையும் அவரது 5,000 ரூபாய் (91.50 டாலர்) சம்பளத்தில் பராமரிக்க வேண்டியதுள்ளது.