சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

US, Europe issue further threats over self-rule referenda in eastern Ukraine

அமெரிக்கா, ஐரோப்பா கிழக்கு உக்ரேனில் சுய ஆட்சி வாக்கெடுப்பு குறித்து மேலும் அச்சுறுத்தல்களை வெளியிடுகின்றன

By Chris Marsden
12 May 2014

Use this version to printSend feedback

ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகள், உக்ரேனின் இரண்டு கிழக்குப் பிராந்தியங்களான டோனேட்ஸ்க், லுஹன்ஸ்க்கில் நேற்று நடைபெற்ற சுய ஆட்சி பற்றிய வாக்கெடுப்பு ஒரு வெற்றி என அறிவித்தனர். கியேவ் ஆட்சி மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களின் கண்டனத்தையும் மீறி இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது; ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட வேண்டும் என முறையிட்டிருந்தார்.

வாஷிங்டன், பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவற்றின் முழு ஆதரவுடன், கிழக்கில் அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கியேவ் கட்டவிழ்த்துள்ள பயங்கரவாதம் ஞாயிறன்றும் தொடர்ந்தது. நவ-நாஜிக்களுடன் பிணைந்த வலது பிரிவு மற்றும் ஸ்வோபோடா கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கியேவின் தேசியப் பாதுகாப்புப் படையின் டஜன் கணக்கான உறுப்பினர்கள், கரஸ்நோவராமெய்ஸ்க் சிறுநகரில் வாக்கெடுப்பை பலவந்தமாக நிறுத்தினர், நகர அரங்கிற்கு வெளியே இருந்த கூட்டத்தின்மீது சுட்டனர், பல நிராயுதபாணியான குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

வாக்கெடுப்பு தாட்களில்: “நீங்கள் டோனேட்ஸ்க் மக்கள் குடியரசு/லுஹன்ஸ்க் மக்கள் குடியரசில் சுய ஆட்சி அராசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறீர்களா? என உக்ரேனிய, ரஷ்ய மொழிகளில் கேட்கப்பட்டிருந்தது.

3.2 மில்லியன் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன; இது இரு மாநிலங்களிலும் வசிக்கும் 7 மில்லியன் மக்களில் பாதிக்கும் குறைவாகும். ஆனால் அதிகாலையில் இருந்து நின்ற நீண்ட வரிசைகள் பெரும் ஆதரவைக் கொடுத்தன எனக் கூறப்படுகிறது.

டோனேட்ஸ்க் மக்கள் குடியரசின் இணைத் தலைவரான டெனிஸ் புஷிலின், “உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், எங்கள் பகுதியில் இருக்கும் கியேவின் அனைத்து இராணுவத் துருப்புக்களும் சட்டவிரோதம் எனக் கருதப்படும், ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவிக்கப்படுவர். அரசாங்க அமைப்புக்களை நிறுவுதல் முக்கியம், பல இராணுவ அதிகாரங்களும் விரைவில் கட்டமைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தார்.

சனிக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை இரு வாக்கெடுப்புக்களையும் சட்டவிரோதம் என அழைத்து, “இன்னும் பிளவுகளையும் சீர்குலைவையும் தோற்றுவிக்கும் முயற்சிகள்” என்றது. இந்த விளைவுகளை அமெரிக்கா அங்கீகரிக்காது என அந்த அறிக்கை கூறியுள்ளது.

அறிக்கை, “கிரெம்ளின் ஆதரவுடைய சமூக செய்தி ஊடகமும், செய்தி நிலையங்களும் கிழக்கு உக்ரேன் மக்களை நாளைக்கு வாக்களிக்குமாறு ஊக்கம் அளிக்கின்றன என குற்றம் சாட்டியதோடு, சர்வதேச சமூகத்தின் குவிப்பு இப்பொழுது உக்ரேனிய அரசாங்கத்தின் தொடர்ந்த முயற்சியான ஜனாதிபதித் தேர்தல்களை மே 25ல் நடத்துவதற்கு ஆதரவு என இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கை மிரட்டும் வகையில் மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தி அறிவிக்கிறது: “ஜனாதிபதி ஒபாமாவும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கேலும் மே 2 அன்று கூறியபடி, ரஷ்ய தலைமை கிழக்கு உக்ரேனை அது தொடர்ந்து உறுதிகுலைத்து இம்மாத ஜனாதிபதி தேர்தல்களை தடைக்குட்படுத்தினால், நாங்கள் விரைவில் செயல்பட்டு ரஷ்யா மீது இன்னும் செலவுகளை சுமத்துவோம்.”

அமெரிக்க நிலைப்பாடு, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் மேர்க்கலால் எதிரொலிக்கப்பட்டது. ஜேர்மனியில் சனியன்று Stralsund இல் ஒரு கூட்டத்திற்குப்பின் இருவரும் எச்சரித்தனர்: “ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயார்.

நேட்டோ, அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ரஷ்யா துருப்புக்களை பின்வாங்கியதற்கான சான்றுகளை அது காணவில்லை என்றும், எல்லையில் கூடுதல் துருப்புக்கள் இருப்பதாகக் காட்டும் தோற்றங்களையும் வெளியிட்டது.

மக்களுடைய “ஆமாம்” வாக்கு எல்லாவற்றிற்கும் மேலாக, கியேவில் மேற்கத்திய-சார்பு தன்னலக்குழுவினர் மற்றும் பாசிஸ்ட்டுகள் நிறைந்த ஒரு அரசாங்கம், ஆட்சி கவிழ்ப்பின் மூலம் பிப்ரவரி 22 அன்று இருத்தியதைத் தொடர்ந்த குருதி கொட்டிய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மற்றும் அவற்றின் நிதிய ஆதரவின் பேரில் மிருகத்தன சிக்கன நடவடிக்கைக்கு உறுதி கொடுத்துள்ளது; அதே நேரத்தில் ரஷ்ய எதிர்ப்பு உணர்வை நாட்டின் இனவழி கலப்பு உள்ள மக்களிடையே தூண்டி விட்டுள்ளது. இது தொடர்ந்து ஸ்வோபோடா மற்றும் வலது பிரிவைச் சூழ்ந்த வலதுசாரி சக்திகளை திரட்டி வலுப்படுத்துகிறது; இது தவிர்க்க முடியாமல் அரசியல் எதிர்விளைவுகளை தூண்டும்.

மார்ச் மாதம் மக்களின் செல்வாக்கு நிறைந்த வாக்கெடுப்பு ரஷ்யாவின் முக்கிய கருங்கடல் கடற்படை தளம் உள்ள செவஸ்டாபோலில் நடந்ததைத் தொடர்ந்து கிரிமிய தீபகற்பத்தை ரஷ்யா இணைத்தது, இது கிழக்கே மற்ற இடங்களிலும் இதேபோன்ற ரஷ்ய-சார்பு இயக்கங்களுக்கு ஊக்கம் கொடுத்தது. இவை பெருகிய முறையில் கியேவின் ஆயுதப்படைகள் மற்றும் அதன் பாசிச கூலிப்படைக் குண்டர்கள் நடத்தும் மிருகத்தன அடக்குமுறையையும் மீறி ஆதரவை பெற்றுள்ளன.

வெள்ளியன்று டாங்குகள், ஆயுதந்தாங்கிய துருப்புக்கள் இருந்த கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் மாரியுபோலில் 20 முதல் 30 நிராயுதபாணிகளான பொதுமக்கள் படுகொலை செய்யப்படுள்ளனர் எனக்கூறப்படுகிறது. உக்ரேனில் மேலும் கூடுதலான மேற்கத்திய தலையீட்டை நியாயப்படுத்த மற்றும் ஊக்குவிக்க, ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டல், சோவியத் செஞ்சேனையால் நாஜி ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டதின் 69 வது ஆண்டு நிறைவின் வெற்றிநாளை கொண்டாடுபவர் மீது நடத்தப்பட்டது.

அதே நாள், உக்ரேனின் தெற்கு கெர்சன் (Kherson) பிராந்தியத்தின் கவர்னர் யூரி ஓடர்செங்கோ, ஒரு வெற்றி தின கொண்டாட்டத்தில் ஹிட்லர் ஒரு “விடுதலையாளன்” என்றார். சோவியத் “ஆக்கிரமிப்பாளர்கள்” உக்ரேனை அடிமைப்படுத்த முயன்றனர் என்றார். அதே நேரத்தில் ஹிட்லர், “கொடுங்கோலன் ஸ்ராலினின் கம்யூனிச பிடியில் இருந்து மக்களை விடுவிக்கும் கோஷத்தை முன்வைத்தார் என்றார்.

இவருடைய நாஜி-சார்பு அறிவிப்பு, மக்களால் ஏளனக் குரல்களுடனும் "அவமானம்" என்ற கூச்சல்களுடனும் வரவேற்கப்பட்டது. ஒரு இளம் பெண் அவருடைய ஒலிவாங்கியை (microphone) கைப்பற்றி தரையில் தூக்கி எறிந்தார்.

தேசிய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சனிக்கிழமை காலை மாரிபாலில் (Mariupol) இருந்து போலிஸ் பாசறைகளை அகற்றினர்; குறைந்தது மூன்று கவச வாகனங்கள், கலகப்பிரிவு கேடயங்கள், தலைக்கவசங்கள், எரிவாயு முகமூடிகள், உடைகளை விட்டுச் சென்றனர். டோனேட்ஸ்க்கில் பிரிவினை வாதிகளால் அவர்களுடைய முகாம் தாக்கப்பட்டபோது, பொலிஸ் குழு ஒன்று வெள்ளியன்று தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டது. 70 தானியங்கி ரைபிள்களும் 16,000 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

பல பொலிஸ் அதிகாரிகள் “பிரிவினைப் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்ற உத்தரவு குறித்த உளைச்சலில்.... சமீபத்திய வாரங்களில் படையை விட்டு நீங்கிவிட்டனர், உள்ளூர் மக்கள் மத்தியில் பரவலான நம்பிக்கை, பொலிஸ் பிரிவினை வாதிகள் பக்கம் முற்றிலும் சென்று விட்டனர், பொலிசுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்க இராணுவம் வந்துள்ளது என்பதாகும்” என கார்டியன் தெரிவித்துள்ளது.

கியேவ் நடத்தும் கொடூரங்கள் முழுவதிலும் வாஷிங்டனின் கறைபடிந்த கைரேகைகள் உள்ளன.

வெள்ளியன்று ஒபாமா நிர்வாகம், கியேவ் அதிகாரிகளுக்கு 1 பில்லியன் டாலர்கள் கடன் உத்தரவாதங்களைக் கொடுத்தது; இது கிழக்கு உக்ரேனில் திறம்பட நடக்கும் குருதி கொட்டும் இராணுவ நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் பணம் ஆகும். மே 7, புதன் அன்று, உக்ரேன் அதன் முதல் அவசரக்கால மீட்பு நிதியின் முதல் பகுதியை IMF இடம் இருந்து பெற்றது; இது பெரும் சக்திகள் உறுதியளித்துள்ள கடன்கள், உத்தரவாதங்கள் என்று 27 பில்லியன் டாலர்கள் தொகுப்பின் ஒரு பகுதியாக 17 பில்லியன் டாலர்களை பெற்றது.

இவை எதுவுமே கியேவ் ஆட்சிக்கான மக்கள் எதிர்ப்பை, ரஷ்ய தேசிய திசைப் பக்கம் திருப்புவதை நெறிப்படுத்தவில்லை. வாக்கெடுப்பு முயற்சி முதலாளித்துவ சக்திகளால் வழிநடத்தப்படுகிறது; அவை கியேவ் அல்லது ரஷ்யாவுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையை நாடுகின்றன, அதையொட்டி அப்பகுதியில் இருக்கும் ரஷ்ய மொழி பேசும் தொழிலாள வர்க்கத்தை தாங்கள் தொடர்ந்து சுரண்ட ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றன.

இதில் தொடர்புடைய கட்சிகள், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உடைவிலிருந்து  வெளிவந்து, உக்ரேனிய தன்னல போட்டிக் குழுக்களுடன் பிணைந்துள்ள தேசியவாத அமைப்புக்களாகும்.

முன்னாள் அரசியல் ஆலோசகரான, ரோமன் லையஜின் என்பவரே வாக்கெடுப்பு ஏற்பாட்டுக்கு பொறுப்பு ஆவார். “வாக்கெடுப்பின் அர்த்தம், நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையிட்டு நாம் மகிழ்ச்சியாக இல்லை, மாற்றங்களைக் கோருகிறோம், இந்தப் பிராந்தியத்திற்கு மற்றொரு பாதையை நாங்கள் விரும்புகிறோம்.” எனக் காட்டுகிறது என்றார்.

இந்த “மற்றொரு பாதை” என்பது பிராந்தியத்தின் தொழிலாள வர்க்கத்தை மிருகத்தனமாகச் சுரண்டுவது தொடரும் என்ற பொருளைத் தரும். இது ரஷ்யாவிற்கும் உக்ரேன் பேச்சாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆபத்தைத் தூண்டும். கிழக்கே உள்ள எதிர்த்தரப்பு தலைவர்களால், கியேவின் ஆட்சிக்கு எதிராக உக்ரேன் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விட எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

தொடர்புடைய சக்திகளின் மாதிரியாக, புஷிலின் உள்ளார். இவர் 1990 களில் அவப்பெயர் பெற்ற ரஷ்ய பொன்சி திட்டம் MMM ல் பணியாற்றினார்.  இது, 5,000 முதல் 40,000 வரையிலான மக்களிடம் இருந்து 10 மில்லியன் டாலர்கள் வரை மோசடி செய்துள்ளது. அவர் இன்னமும் MMM உடைய அரசியல் குழுவின் உறுப்பினர் ஆவார். இது பொன்சி திட்டத்தில் இருந்து வந்தது; சில்லறை விற்பனைக் குழு SolodkeZhittiaK உடன் தொடர்பு கொண்டது. இது போரிஸ் கோலெஸ்னிகோவிற்கு நெருக்கமானது; அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிரதம மந்திரி விக்டர் யானுகோவிச்சின் பிராந்தியங்களின் கட்சியின் செயலர் ஆவார்.

கைதுசெய்யப்பட்ட பவேல் குபரேவ் புதன் அன்று விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தலைவரானார். குபரேவ் முன்னதாக மாஸ்கோ-சார்பு, உக்ரேனிய முற்போக்கு சோசலிச கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார், இப்பொழுது வலதுசாரி ஸ்லாவிக் தழுவிய ரஷ்ய தேசிய ஒற்றுமை துணை இராணுவக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

தொழிலாள வர்க்கத்தை ரஷ்யா உட்பட, தன்னலக்குழுவின் அல்லது அவற்றின் அரசியல் கைக்கூலிகளின் ஏதேனும் ஒரு பிரிவிற்கு அடிபணியச் செய்யும் அனைத்து முயற்சிகளும் எதிர்க்கப்பட வேண்டும். மாறாக உக்ரேனிய, ரஷ்ய, சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், வாஷிங்டன், பேர்லின், லண்டன், பாரிஸ் இவற்றின் கொள்ளைமுறை திட்டங்களுக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட, சுயாதீனமான போராட்டத்திற்கு ஒரு அவசர அழைப்பு விடப்படவேண்டும்.