சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Pro-government forces issue death threats against Jaffna university teachers and students

 இலங்கை: அரசாங்க-சார்பு சக்திகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்

By S. Jayanth
14 May 2014

Use this version to printSend feedback

இலங்கையில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் வெள்ளி நண்பகல் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இராணுவ ஆதரவிலான குண்டர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை கண்டனம் செய்தே இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

பல்கலைக்கழக வளாகத்தைச் சூழ ஊர்வலமாக வந்த ஆசிரியர்கள் பின்னர் நுழைவாயிலில் மறியல் போராட்டம் செய்தனர். “சட்டத்திற்குப் புறம்பாக ஆசிரியர்களை கொல்வதும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும்தான் ஆசியாவின் அதிசயமா?” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். “பல்கலைக் கழகம் கல்விக் களமா அல்லது கொலைக் களமா?”, “மாணவர் மையக் கல்வி என்பது பல்கலைக்கழகத்தை எதேச்சதிகாரமாக மூடுவதா?”, “அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்கள் பயங்கரவாதம் இல்லையா?” போன்ற சுலோகங்களும் அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன.

கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட துண்டுப் பிரசுரம், “பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்க முடியாதுஎனத் தலைப்பிடப்பட்டிருந்தது. அதுநாட்டைப் பாதுகாக்கும் மாணவர் படைஎன அநாமதேயமான போலிப் பெயரில் விநியோகிக்கப்பட்டிருந்தது.

2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இராணுவ வெற்றியை கொண்டாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம்வீரர்கள் மாதத்தைபிரகடனம் செய்த பின்னரே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிடுவதற்காக இராணுவ அணிவகுப்புகளையும் ஏனையவெற்றி வீரர் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துவருகின்றது.

அதே சமயம், இராணுவம் தீவின் வடக்கில் மக்கள் தமது குடும்ப அங்கத்தவர்களின் மரணத்தை நினைவுகூருவதை தடை செய்துள்ளது. ஐநா மதிப்பீட்டின்படி, 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி இராணுவத் தாக்குதலின் போது 40,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் துண்டுப் பிரசுரம், கலைப் பீடாதிபதி வி.பீ. சிவநாதன், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், மாணவர் சங்கத் தலைவர் சுபாகர் மற்றும் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர் தலைவர்களான கோமஸ் மற்றும் வேனுகோபன் மீதும் பல்கலைக்கழகத்துக்குள் புலிகளை புதுப்பிக்க முயற்சிப்பதாக பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விரிவுரையாளர்களும் மாணவர்களும் நீண்டகாலமாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதோடு நேரடியாக எச்சரிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அது பயனளிக்கவில்லை,” என அந்த துண்டுப் பிரசுரம் கூறுகின்றது. “உங்கள் உயிருக்கு எங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாதுஎன அந்த துண்டுப் பிரசுரம் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளதுஇது ஒரு தெளிவான கொலை மிரட்டலாகும்.

பல்கலைக்கழகத்தை மே 16 முதல் 21 வரை மூடுமாறு இராணுவம் கட்டளையிட்டுள்ள போதிலும், இதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று பகிரங்கமாக மறுத்துள்ளது. விடுதிகளில் உள்ள மாணவர்கள் 16ம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை, யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டிலான விடுதிக்கு பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கும் அழைப்புக் கட்டளை விடுத்திருந்ததோடு, 2009 கொலைகளை கூட்டாக நினைவுகூர்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். புலிகளை நினைவுகூர அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் பெரேரா எச்சரித்தார். அவர் அரசியல் விடயங்களை தவிர்க்குமாறும் கல்வியில் அக்கறை காட்டுமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிருபர்கள் மாநாட்டில் பேசிய இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய, அஞ்சலி செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை எனஉறுதியாககூறிய போதிலும், “புலி உறுப்பினர்களையும் அவர்களோடு ஒத்துழைத்து கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூர்வதைஅனுமதிக்க முடியாது என வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகத்தில் இத்தகைய அச்சுறுத்தல் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது இது முதல் தடவையல்ல. நவம்பர் 27 புலிகளின்மாவீரர் தினத்தைகொண்டாட மாணவர்கள் திட்டமிடுகின்றனர் என்று அதிகாரிகள் கூறிய சாக்குப்போக்குடன், கடந்த நவம்பரிலும் பல்கலைக்கழகம் மூடப்பட்டதுபுலிகளின் முன்னாள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினத்தன்று போரில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் நினைவாகமாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஓராண்டுக்கு முன்னர் 2012 நவம்பரில், புலிகளின்மாவீரர் தினத்தைகொண்டாடினர் என்ற போலி குற்றச்சாட்டில் பல யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பல வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கைதுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது இராணுவம் மற்றும் பொலிஸ் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது.

வெளிநாட்டில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் தீவின் வடக்கில் புலிகள் இயக்கம் புதுப்பிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டில் குவிமையப்படுத்தப்பட்ட அரசாங்கமும் ஊடகங்களும் முன்னெடுக்கும் வேட்டையாடல் மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் மத்தியிலேயே இந்த புதிய அச்சுறுத்தல்கள், விடுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் பாகமாக, அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளில் இயங்கும் 16 தமிழ் குழுக்களையும் அதேபோல் அதன் உறுப்பினர்களையும் அரசாங்கம் தடை செய்தது.

சுற்றி வளைப்புத் தேடுதல்கள், வீடு வீடாகச் சென்று விசாரித்தல் மற்றும் வீதித் தடைகள் போன்ற யுத்தகால இராணுவ நடவடிக்கைகளும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. கடந்த மாதங்களில், புலிகளை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றனர் எனக் கூறி அரசாங்கம் 60க்கும் அதிகமானவர்களை கைது செய்து அவர்களை கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது. எவ்வாறெனினும், கைது செய்யப்பட்ட எவர் மீதும் குற்றம் சாட்டப்படாமை, உண்மைத் தன்மையற்ற குற்றச்சாட்டுக்களின் பண்பை கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்த இராணுவ நடவடிக்கைகள், கோபி என்றழைக்கப்படும் ஒரு புதிய புலி தலைவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பாலேந்திரன் ஜெயகுமாரி என்ற மனித உரிமை செயற்பாட்டாளர், கிளிநொச்சியில் வைத்து மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே முன்னெடுக்கப்பட்டன. பின்னர், வடக்கில் நடந்த ஒரு பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையில் கோபி உட்பட மூன்று தலைவர்களை கொன்றுவிட்டதாக இராணுவம் அறிவித்தது. சூழ்நிலைகள் அனைத்தும் இந்த முழு நடவடிக்கையும் ஒரு நாடகம் என்பதை சுட்டிக் காட்டின.

இராணுவம் அதைத் தொடர்ந்து கிழக்கிலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டது. கடந்த வாரம் கிழக்கில் சுமார் 15 கிராமங்களில் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. செய்திகளின் படி, 15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை படையினர் விசாரித்துள்ளனர்.

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்குள் இராணுவ புலனாய்வுத் துறையினர் இயங்குவதோடு, யாழ்ப்பாணத்தில் குடும்பங்களின் தகவல்களை திரட்டுவதிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் பாடசாலைகளுக்குள்ளும் நுழைந்த இராணுவத்தினர், ஆசிரியர்களையும் சிரேஷ்ட மாணவர்களையும் படம் எடுத்ததோடு அவர்களது விபரங்களையும் சேகரித்துச் சென்றுள்ளனர். இராணுவம் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்குகிறது என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல்கலைக்கழகத்தை மூடுவதானது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அது மாணவர்களின் கல்வியை பாதிக்கின்றது என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். “இவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழகத்தை மூடினால் எமது எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு எமது கல்வியை முடிக்க காலம் எடுக்கும். காலம் எங்களுக்காக காத்திருக்கப் போவதில்லை. நாங்கள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றோம். இதற்கு ஒரு முடிவு வரவேண்டும்.”

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும், 2009ல் நடந்த யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஒரு சர்வதேச விசாரணையை இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொண்டிருந்த போதிலும், ஒடுக்குமுறை உக்கிரமாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் இனவாதமும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் வழியில் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக மேலும் சிக்கன நடவடிக்கைகளை திணிக்க முயற்சிக்கின்றது. சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள, மொத்த தேசிய உற்பத்தியில் 5.2 வீதம் என்ற வரவு- செலவு பற்றாக்குறை குறைப்பு இலக்கை அடைவதற்கு அரசாங்கம் இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மேலும் ஆழமான வெட்டுக்களை மேற்கொள்ள உள்ளது. கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 5.9 வீதமாக இருந்தது.

பொருளாதார மற்றும் சமூக பதட்டங்கள் உக்கிரமடைகின்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளரும் அமைதியின்மையை திசைதிருப்பி அவர்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவதற்காக, அரசாங்கம் அதன் இனவாத பிரச்சாரத்தை துரிதமாக்கியுள்ளது. இலங்கை ஆளும் வர்க்கம் பல தசாப்தங்களாக இந்த நச்சுத்தனமான அரசியலை நாடி வருகின்றது. தொழிலாள வர்க்கம் வடக்கில் இடம்பெறும் ஒடுக்குமுறையை எதிர்ப்பதோடு அதை நாடு பூராவும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.