சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

After Indian elections, US to press for greater support for “pivot to Asia”

இந்திய தேர்தல்களுக்குப் பின்னர், அமெரிக்கா "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கான" பெரும் ஆதரவிற்கு அழுத்தம் அளிக்க உள்ளது

By Keith Jones
16 May 2014

Use this version to printSend feedback

கடந்து சென்ற திங்களன்று முடிந்த இந்திய பொது தேர்தலின் கடைசி கட்ட வாக்கெடுப்புகள் முடிந்த உடனேயே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அமெரிக்க வெளியுறவுத் துறையும் இந்தியாவை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட "ஜனநாயகமாக" புகழ்ந்ததோடு, இந்தியாவின் புதிய அரசாங்கத்தோடு நெருக்கமாக வேலை செய்ய வாஷிங்டனின் விருப்பத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.

திட்டமிட்ட அந்த திங்கட்கிழமை அறிக்கைகள், இந்தியாவுடனான உறவுகளை "மீட்டமைக்கும்" மற்றும் (சீனாவை தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க, மற்றும், தேவைப்பட்டால் அதன் மீது தாக்குதல் நடத்துவதற்கான உந்துதல் கொண்டதான) அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்போடு" அதை இன்னும் இறுக்கமாக கட்டி வைப்பதற்கான அமெரிக்க உந்துதலின் பாகமாகும்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி அவரது வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியை புது டெல்லியின் அதிகாரத்திற்கு தலைமை ஏற்று செல்ல இருக்கின்ற நரேந்திர மோடியை எந்தவொரு அறிக்கையும் நேரடியாக குறிப்பிடவில்லை. இருந்த போதினும், மோடி இந்தியாவின் பிரதம மந்திரியானால், அவர் வாஷிங்டனால் வரவேற்கப்படுவார் என்பதை ஒரு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பின்னர் எடுத்துரைத்தார்.

2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டியதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக அமெரிக்கா 2005இல் மோடியின் விசாவை இரத்து செய்தது. அதற்கடுத்த எட்டு ஆண்டுகளில், அதன் இராஜாங்க அதிகாரிகள் குஜராத் முதல் மந்திரியைத் தவிர்த்து வந்தனர். ஆனால் 2014இன் தொடக்கத்தில், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பவெல் மோடியைச் சந்திக்க குஜராத்திற்கு பகிரங்கமான ஒரு விஜயம் மேற்கொண்டார், அது அமெரிக்கா அவருடன் வேலை செய்ய தயாராக இருப்பதை சமிக்ஞை காட்டியது.

அதற்கு பின்னர் நீண்ட காலம் ஆகவில்லை, தொழில்ரீதியில் ஒரு இராஜாங்க அதிகாரியான பவெல், ஓய்வு பெறுவதாக அறிவித்தார் - இந்த நகர்வு வாஷிங்டன் மோடி உடன் மட்டுமல்ல, மாறாக மிக பொதுவாக இந்தியா உடனேயே அதன் உறவுகளை "மீட்டமைக்க" அனுமதிப்பதாக பரவலாக இந்திய மற்றும் அமெரிக்க பத்திரிகைகளால் விளக்கம் அளிக்கப்பட்டன.

ஒபாமா நிர்வாகம் பாவெலுக்கு அடுத்ததாக அடுத்தவரின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் பெயர் அடிபடுபவர்களின் மத்தியில் அஷ்டோன் கார்டரின் (Ashton Carter) பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொழில்ரீதியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரியான கார்டர் டிசம்பர் 2013 வரையில் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க துணை பாதுகாப்பு செயலராக சேவை செய்தார். அவர் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" அபிவிருத்தி செய்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.

அவர் அவரது பெண்டகன் வேலையை விடுத்ததும், Foreign Policy இணைய இதழில், “இமயத்தில் இருக்கும் வீரதீர ஹெர்குலஸ்: அமெரிக்கா இந்தியாவுடன் எவ்வாறு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த இருக்கிறது,” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் அரும்பி வரும் இந்தோ-அமெரிக்க இராணுவ உறவுகள் மற்றும் ஆசியா "முன்னெடுப்பில்" இந்தியாவின் முக்கியத்துவத்தை ஜம்பமடித்து எழுதி இருந்தார்.

கார்டர் எழுதினார், “நமது புதிய மூலோபாயத்தின் கருத்துருவில் இருந்து, அமெரிக்கா இந்தியாவை வெறுமனே ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்குள் மட்டுமல்ல, மாறாக அந்த முழு பிராந்தியம் முழுவதற்கும்" — வடகிழக்கு ஆசியாவிலிருந்து ஆசியான் நாடுகள், தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் வரையில் (இந்த பாதை வழியாக தான் சீனாவின் பொருளாதார பாய்விற்கு தேவையான எண்ணெய் மற்றும் ஏனைய முக்கிய ஆதார வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன) அதை மறுசமப்படுத்தலுக்கான ஓர் உள்காரணியாக பார்க்கிறது.

கார்டரின் கட்டுரை, அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தி காட்டியதோடு இந்த மூலாபாய மாற்றத்தை ஒபாமா நிர்வாகமும், பெண்டகனும் இப்போது "மறுசமப்படுத்தல்" என்றழைக்கின்றன "பார்வைக்கு தெரியாத" நிகழ்முறையில் வாஷிங்டனின் மூலோபாய நோக்கத்தோடு இந்தியாவை இணைப்பதில் அது செய்திருந்த வேலைகளை உயர்த்தி காட்டியது. “அமெரிக்க-இந்திய பாதுகாப்பு கூட்டுறவை ஆழப்படுத்துவது, எங்களின் ஏனைய ஆசிய-பசிபிக் முயற்சிகளில் சிலவற்றை போலவே பார்வைக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் செயலர் சக் ஹாகெலின் கீழ் பாதுகாப்பு துறை எவ்வாறு மறுசமப்படுத்தலில் நமது பாத்திரத்தை செயல்படுத்தி வருகிறது என்பதற்கு அந்த நடவடிக்கை ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்,” என்று கார்டர் எழுதினார்.

கார்டர் இராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ஒரு நிபுணர் ஆவார், அவர் இராணுவ தளவாடங்கள் வாங்குதல், தொழில்நுட்பம் மற்றும் சரக்கு கையாள்கை துறையின் துணை செயலராக சேவை செய்துள்ளார். இதிலும் மற்றும் அதற்கடுத்த துணை பாதுகாப்பு செயலர் வேலையிலும் அவர் இருந்தபோது, நவீன ஆயுத தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு கைமாற்றுவதை அனுமதிப்பதில் மற்றும் இந்தோ-அமெரிக்க கூட்டு-உற்பத்திக்கான பரிந்துரைகளை அபிவிருத்தி செய்வதில் மற்றும் இறுதியாக ஆயுத எந்திரமுறைகளின் கூட்டு-அபிவிருத்தியை செய்வது மீதான அமெரிக்க கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் பேரத்தில் உதவினார்.

கார்டர் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பெயரிடப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கவனத்தை கவர ஓர் உயர்மட்ட நியமனத்தை ஒபாமா நிர்வாகம் செய்யும் என, வாஷிங்டன் மற்றும் புது டெல்லி இரண்டு இடங்களிலும் கருதப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்க அலுவலகங்களுக்கு வெளியே இந்தியா பாதுகாப்பைக் குறைத்து, அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான சிறப்பு விலக்குரிமைகளை திரும்ப பெற்றபோது, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில், பவெல் தாம் ஒரு இராஜாங்க சர்ச்சையின் மையத்தில் இருப்பதைக் கண்டார். அது நியூ யோர்க்கில் இருந்த ஒரு இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடேயை, குறைந்தபட்ச ஊதிய சட்டங்களை மீறியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவரை, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தமை மற்றும் தரக்குறைவாக நடத்தியமை மீது எடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையாக இருந்தது.

வாஷிங்டனுடன் தன்னைத்தானே இந்தியா வெளிப்படையாக மேலதிகமாக இணைத்துக் கொள்ளவில்லை என்ற அதிருப்தி மற்றும் கோபம், அமெரிக்காவின் தரப்பில், அங்கே இருக்கிறது. வாஷிங்டனின் பீதி ஊட்டும் நடவடிக்கைகளால், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான நாற்கர இராணுவ ஒத்திகைகளில் சேர இந்தியா தயங்கி உள்ளது.

அமெரிக்க சிந்தனை கூடங்களின் கொள்கை ஆய்வறிக்கைகளில், “மூலோபாய சிந்தனை" இல்லாமை, “அணி சேராமை" மற்றும் "மூலோபாய சுயஅதிகாரம்" போன்ற காலங்கடந்த கருத்துருக்களை பிடித்துக் கொண்டிருப்பதற்காக இந்தியாவின் வெளியேற இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரம்பி உள்ளன.

இதற்கிடையில், அமெரிக்க பெரு வணிகங்கள் இந்தியா மீது கடுப்பாகி உள்ளன, இந்தியாவின் மருந்து பொருள் காப்புரிமை சட்டங்கள் மற்றும் அன்னிய முதலீடு மீதான கட்டுப்பாடுகள் குறித்து அவை குறை கூறி வருகின்றன. 2008 இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை இந்தோ-அமெரிக்க "மூலோபாய கூட்டுறவை" பலப்படுத்துவதற்காக மட்டுமல்ல; அது அமெரிக்க அணுசக்தி தொழில்துறைக்கு ஆதாயமளிக்கும் ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்கான முன்நடவடிக்கையாகவும் இருந்தது. ஆனால் அமெரிக்க அணுசக்தி தொழில்துறைக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில், 1984 போபால் பேரழிவில் எந்தவொரு இழப்பீடும் வழங்காமல் யூனியன் கார்பைடின் அமெரிக்க உரிமையாளர்கள் எவ்வாறு தப்பித்து கொண்டார்கள் என்ற நினைவூட்டலால் உந்தப்பட்ட போராட்டங்களுக்குப் பின்னர், இந்தியா அமெரிக்க உடன்படிக்கைகளோடு ஒரு இழப்பீட்டு சட்டத்தை ஒட்டு போட மறுத்துவிட்டது.

ஈரானை நெருக்கும் யுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கு எதிரான அமெரிக்க தடைகள் உட்பட அதன் சொந்த கருத்துக்களோடு ஒத்து போனால் ஒழிய, இந்தியாவின் கருத்துக்களை ஏற்க அமெரிக்கா காட்டும் மறுப்பால், இந்தியாவின் ஆளும் மேற்தட்டு அதன் பங்கிற்கு, நசுங்கி போயுள்ளது. அதேபோல அது பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் உறவுகள் மீதும் எச்சரிக்கையோடு இருக்கிறது, பனிப்போரின் போது இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்தது, மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் யுத்த ஆதரவுக்கு அதே அடிப்படையில் அது பாகிஸ்தானைத் தொடர்ந்து சார்ந்துள்ளது.

இருப்பினும், இந்தியா இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவை நோக்கி சாய்ந்தது. இந்திய தரப்பில் பெரும்-வெளிப்படையான சந்தேகங்களுக்கும் மற்றும் இந்தியா போதுமான அளவிற்கு ஒத்துழைக்கவில்லை என்ற வாஷிங்டனிடம் இருந்து வரும் குறைகூறல்களுக்கும் இடையே, அமெரிக்கா இன்னும் மேலதிகமாக மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த ஆக்ரோஷத்தோடும், கொடூரத்தோடும் நகர்ந்துள்ள நிலையில், அந்த சாய்வு முன்பில்லாத அளவிற்கு கூர்மையாக வளர்ந்துள்ளது.

2013இல், அமெரிக்க ஆயுதங்களை உலகில் மிக அதிகளவில் வாங்கிய நாடு இந்தியாவாகும். மேலும் பல ஆண்டுகள் ஓட்டத்தில், வேறெந்த நாட்டின் இராணுவ படைகளும் இந்தியா அளவிற்கு பெண்டகனுடன் அதிக இராணுவ ஒத்திகைகளை நடத்தி இருக்கவில்லை. இந்தியா அமெரிக்காவுடன் உத்தியோகபூர்வமாக அணி சேரவில்லை என்ற போதினும், வாஷிங்டன் அதை சீனாவிற்கு ஒரு மூலோபாய எதிர்பலமாக பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், புது டெல்லி பாரியளவில் அதன் இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை அமெரிக்காவுடன் விரிவாக்கி உள்ளது.

சமீபத்திய காலகட்டத்தில், புது டெல்லி தென் சீன கடலில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க கண்டனங்களை எதிரொலித்து உள்ளதோடு, ஜப்பானுடனான அதன் உறவுகளை வேகமாக அதிகரித்தது. ஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்போது சீனாவை மையப்படுத்தியுள்ள அதன் மலிவு உழைப்பு வினியோக வலையத்திற்கு ஒரு மாற்றீடாக இந்தியாவை அபிவிருத்தி செய்து அதை பயன்படுத்திக் கொள்வதற்கான தனது சொந்த நோக்கங்களை கொண்டுள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் உள்ளடக்கத்தில், ஜப்பான் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" முக்கிய அமெரிக்க பங்காளியாக உள்ளதோடு வாஷிங்டன் ஆசிர்வாதத்தில் மீண்டும் ஆயுதமேந்தி வருகின்ற நிலையில், ஜப்பானுடனான இந்தியாவின் கூட்டணி நடைமுறையில் வாஷிங்டன் உடனான அதன் கூட்டணியை பலப்படுத்துவதாக உள்ளது.

வாஷிங்டன் அதன் இந்திய கொள்கை மூலமாக தீர்க்கமான ஆதாயங்களைப் பெற்றிருப்பதாக வாதிட்ட ஒரு சமீபத்திய கட்டுரையில், ஒரு அமெரிக்க ஆலோசகர் இவ்வாறு வாதிட்டார்: “அந்த கூட்டணி ஆசியாவில் அமெரிக்காவின் நலன்களைப் பாதிக்குமா? நிச்சயமாக அதற்கு எதிர்விதமாக தான் இருக்கும்: அதாவது, அப்பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கவாதத்திற்கான எதிர்ப்பில் இந்தியா ஆர்வம் காட்டி உள்ளதோடு, தெற்கு சீன கடலில் சுதந்திர போக்குவரத்தை ஊக்குவித்து வருகிறது. அது ஆப்கான் அரசாங்கத்தின் ஒரு வலுவான அரசியல் மற்றும் நிதியியல் ஆதரவாளராக இருப்பதோடு, இந்தோ-பசிபிக்கில் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் தன்னைத்தானே ஒருங்கிணைக்க தொடங்கி உள்ளது,” என்று எழுதுகிறார்.

இந்தியாவை இன்னும் இறுக்கமாக அமெரிக்க சுற்றுவட்டத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில், ஒபாமா நிர்வாகம் இந்திய ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த கன்னைகளிடம் இருந்து ஆதரவைப் பெற நோக்குகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பொறிவால் மற்றும் பூகோள நிதியியல் ஓட்டத்திற்கு ஏற்ப அதன் நிலையற்ற தன்மையால் அதிர செய்யப்பட்ட (இது கடந்த ஆண்டின் ரூபாய் நெருக்கடியில் எடுத்துக்காட்டப்பட்டது) பெரும்பாலான இந்திய பெருநிறுவன மேற்தட்டு, இன்னும் அதிகப்படியான மூலதனத்தைப் பெற இட்டு செல்லும் என்ற கொடுக்கல்-வாங்கல் கணக்கீட்டின் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நெருக்கமான உறவுகளுக்கு அழுத்தம் அளித்து வருகிறது.