சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Nearly a billion ocean-dependent people at risk because of global warming

புவி வெப்பமயமாதல் காரணமாக கிட்டத்தட்ட கடலைச் சார்ந்திருக்கும் ஒரு பில்லியன் (100 கோடி) மக்கள் ஆபத்தில் உள்ளனர்

By Henry Allan and Bryan Dyne
29 November 2013

Use this version to printSend feedback

PLOS Biology-யில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு சமீபத்திய ஆய்வு, அதிகபட்ச கிரீன்ஹவுஸ் வாயு (greenhouse gas) வெளியேற்றத்தின் விளைவாக, பூமியின் சமுத்திரங்களில் ஏற்பட்டிருக்கும் இரசாயன மாற்றங்களை பகுத்தாய்வு செய்திருக்கிறது. அது தற்போதைய சமுத்திர வெப்பமயமாதல் மற்றும் அமிலமாக்கல் போக்குகள் தொடர்ந்தால், ஏற்படவுள்ள நிகழ்வுகளின் அடுக்குகளை தீர்மானித்துள்ளது: அவையாவன; கடலில் வாழ்விடங்களின் அழிவு, கடல் இனங்கள் இல்லாமல் போதல் மற்றும் இறுதியாக வாழ்க்கைக்காக சமுத்திரத்தை சார்ந்திருக்கும், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களின் (உண்மையான எண்ணிக்கை 470 முதல் 870 மில்லியன்கள்) வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுதல் ஆகியவைகளாகும்.

காலநிலை மாதிரியாளர்கள், உயிரியல் பூகோள வேதியியலாளர்கள், கடலியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் உள்ளிட்ட சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் குழுவால் இவ்வறிக்கை மேம்படுத்தப்பட்டது. மாற்றங்களுக்கு சாத்தியமான பாதிப்புகளை அணுகுவதற்காக அவர்கள் 32 கடலிலுள்ள வாழ்விடங்களின் உலகளாவியளவில் பரந்திருக்கும் விநியோக வரைபடங்கள் மற்றும் பல்லுயிர்வெப்பபகுதிகளைஉருவாக்கினார்கள். மேலும், கடல் சார்ந்த உணவுகள் மற்றும் சேவைகள் மீதான மனிதனின் சார்புநிலை குறித்துக் கிடைக்கும் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியதுடன், புவியின் கடற்கரையின் இரசாயன வேலைப்பாடுகளில் திட்டமிடப்பட்ட மாற்றங்களுக்கு கடற்கரை பகுதி மக்களின் பாதிப்புத்தன்மையை மதிப்பிடுவதற்காக சமூக ஒத்துப்போகும் (social adaptability) தன்மையையும் உள்ளடக்கினர்.

கடற்பாறைகள், கடல் புல் மற்றும் மேலோட்டமான மென்மையான-அடிப்பகுதியை உடைய கடலடி படுக்கைகள் ஆகிய கடல் வாழ்விடங்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த வாழ்விடங்கள் கடல் வேதியியலில் பெரும் மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு முதலில் பாதிக்கப்படும். உபரியான கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (greenhouse gases ) கசிவதற்கு நீண்ட நேரமெடுக்கும் ஆழ்கடல் வாழ்விடங்கள் கிட்டத்தட்ட குறைந்த மாற்றங்களை சந்திக்கும். ஆயினும், தற்போதைய போக்கின் கீழ், 2100 ஆண்டு வாக்கில் பாதிக்கப்படாத கடல் பகுதி என்று எதுவும் இருக்காது என்பதை அறிக்கை தெளிவாக்குகிறது.

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (greenhouse gases) வெளியேறுவது என்பது உலக அளவிலான ஒரு நிகழ்வு என்ற காரணத்தால், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதே நேரத்திய பாதிப்புகளுடன் சமுத்திரம் அமிலமயமாவது அதிகரிப்பதும் உலக அளவிலான நிகழ்வுதான் என்று Mānoa விலுள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆசிரியரான கமிலோ மோரா குறிப்பிட்டார். ”உயிரினங்களின் உயிர்வாழ்க்கை முதல், மிகையாக இருத்தல், மட்டுப்படுத்தப்பட்ட அளவு, உடல் அளவு, உயிரினங்களின் செழுமை, சமுத்திரத்தின் உயிர், பூகோள, வேதியியலின் மாற்றத்தால் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவது வரையிலான - உடன்-நிகழும் மாற்றங்களின் பின்விளைவுகள் மோசமானவைஎன்று செய்தியாளர்களுடனான ஒரு சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் (IPCC AR5) ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்காக தங்களது திட்டங்களை காண்பிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட காலநிலை மாற்ற மாதிரிகளை இவ்வறிக்கை பயன்படுத்தியது. கடல் வெப்பநிலை, அமிலமயமாக்கல் மற்றும் ஆக்ஸிஜன் அளவில் உலக அளவிலான மாற்றங்கள் மீதான தகவல்களை பயன்படுத்தி, அவர்கள் இரு சூழல்களை மேம்படுத்தினர்; முதலாவதில், கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றங்கள் (CO2) சோதிக்கப்படாமல் விடப்படுவதுடன் 2100 ஆண்டு வாக்கில், சுற்றுப்புறத்தில் 900 ppm (மில்லியனுக்கு 900 கூறுகள் செறிவு900 parts per million) அளவு செறிவினை அடையும்; இரண்டாவது சூழலில், CO2  வெளியேற்றத்தை நிறுத்துவதற்கு நிலையான முயற்சி செலுத்தப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், CO2 மட்டங்கள் 550 ppm - மட்டுமே அடைகிறது. 1961-ல் 312 ppm லிருந்து 2013 அக்டோபர் வரை உலக CO2 செறிவூட்டல்கள் 394 ppm –ற்கு வந்துள்ளன.

இரண்டு சூழல்களிலும், பெரும்பாலான உலகின் சமுத்திர பரப்பு பாதிக்கப்படும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவ்வறிக்கை பின்வருமாறு தெரிவிக்கிறது:

2100 ஆண்டு வாக்கில், சமுத்திரத்தின் மேல்மட்ட அடுக்குகளுக்கான பூகோள சராசரிகள் 1.2 முதல் 2.6° C வரையிலான வெப்பநிலை அதிகரிப்பை சந்திக்கும், தற்போதைய மதிப்புகளில் ~2 % முதல் 4 % வரை கரைந்த ஆக்ஸிஜன் செறிவூட்டல் குறைப்பு, pH 0.15 முதல் 0.31 வரை குறைவது, மற்றும் தற்போதைய மதிப்பிலிருந்து ~4 % முதல் 10 % வரையிலான குறைந்த மிதவை தாவர உயிரிகளின் உற்பத்தி (phytoplankton production) ஆகியவை. கடல் மட்ட வெப்பநிலை மற்றும் pH-யில் சிறிதளவு மாற்றங்கள் மற்றும் கரைந்த ஆக்ஸிஜனில் அதே மாதிரியான குறைவுகளையும் சந்திக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது,

முக்கியமாக, புவியில் உயிர்களின் ஆதாரமான கடல் உணவுச் சங்கிலி, முழுமையான உடைவினை எதிர்கொள்கிறது.

இது தற்போதைய தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் அதிக அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு (CO2) வெளியேற்றத்திலிருந்து ஆரம்பிக்கிறது. CO2 சுற்றுப்புறத்திலிருந்து தள்ளப்படுகிறது என்றாலும், கிட்டத்தட்ட அதில் பாதி கடைசியாக சமுத்திரங்களால் ஈர்க்கப்படுகிறது. இப்போது வரை, இது அடிப்படையில் சிறிது உயர்ந்த கடல் வெப்பநிலைக்கு காரணம் என்பதுடன், கடந்த நூற்றாண்டில் கடல் மட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு அடி வரை அடுத்தடுத்து அதிகரிப்பதற்கும் காரணமாக இருந்துள்ளது. ஆயினும், இன்னும் அதிக அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு (CO2)  கடலில் செலுத்தப்படும்போது, அது கடைசியாக ஒருங்கிணைந்த கார்போனிக் அமிலத்தை (compound carbonic acid) உருவாக்குகிறது, இது கடலின் மேல்பரப்பினை சராசரியாக 30 சதவீதம் அதிக அமிலம் கொண்டதாக ஆக்குகிறது.   

சமுத்திரத்தின் அமில அளவில் இது போன்ற அதிக அளவிளான மாற்றம் சிப்பி- சார்ந்த கடல் உயிரியலில் தீவிர பாதிப்பினைக் கொண்டுள்ளது. கடல் நீரில் கரைந்த கால்சியம் கார்பொனேட்டிலிருந்து நண்டு, சிப்பிகள், மெல்லுடலிகள் மற்றும் மிதவை நுண்ணுயிரிகள் (plankton) தங்களது ஓடுகளை அல்லது எலும்புக்கூடுகளை உருவாக்குவதுடன் கால்ஸைட் மற்றும் அரகோனைட் (calcite and aragonite) என்ற இரு கனிமங்களையும் உருவாக்குகிறது. பவள திட்டுகள் இதே செயல்பாட்டினை பயன்படுத்துகின்றன. ஆயினும் இரண்டு கார்போனிக் அமிலங்களும் சிப்பிக்கள் உருவாக்கப்படும் செயல்பாட்டினை தடை செய்வதுடன் ஏற்கெனவே இருக்கும் சிப்பிக்களை கரைக்கிறது. அது குறிப்பாக இந்த உயிரிகளைக் கொல்கிறது என்பதுடன் மிதவை நுண்ணுயிரிகளைப் பொறுத்தவரையில், பல உணவு சங்கிலிகளின் அடிப்படையில் இருக்கிறது.  

இது அனைத்து வகையிலான மீன்கள் மற்றும் பிற கடல் உயிரிகள் மீதும் தாக்கத்தினைக் கொண்டிருக்கிறது. அதிகரித்துவரும் அமிலமயமாக்கல், அஸிடோஸிஸ் என்றழைக்கப்படுகின்ற உடல் திரவங்களில் ஒரு வளர்ச்சியினை விளைவிக்கலாம். இது வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் சுவாச அமைப்புகளில் பிரச்சனைகளை விளைவிக்கிறது. அதிக மீன்பிடிப்பு, ஆறுகள் மற்றும் சமுத்திரத்தில் பெட்ரோலியப் பொருட்களைக் கலப்பது, மற்றும் குப்பைகள் ஆகியவற்றால் கடல் உயிரினங்கள் இடம்பெயர்ந்து சென்று, இல்லாமல் போதல் என்கிற அதிகரித்துவரும் அபாயமும் இருக்கிறது.

பூச்சி கொல்லிகளையும் கழிவு நீரையும் கடலுக்குள் புகுத்துவது, கடல் உயிர்களுக்கு இன்னொரு அபாயம், இது பாசிகள் (algae) வளர்ச்சியில் அழிவு ஏற்பட காரணமாகிறது. அதிகபட்ச பாசிகளின் இருப்பது நீரில் ஆக்ஸிஜன் அளவினைக் குறைக்கிறது, அதற்கு பதிலாக, மீன் மற்றும் பிற கடல் உயிரிகள், இனப்பெருக்கம் மட்டுமல்லாத உயிர்வாழவே முடியாத ஒருமரண பிரதேசத்தைஉருவாக்கியிருக்கிறது.

பூமியின் துருவப் பகுதிகள் சிறிது வேறுபட்ட பிரச்சனைகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு குறைந்த அமிலமயமாக்கல் காணப்படுகிறது, ஆனால், தாழ்ந்த அட்சரேகைகளிலிருந்து, அதாவது அதிகரித்துவரும் வாழமுடியாத பகுதிகளிலிருந்து தப்பிப்பதற்காக, திடீரென சில உயிரினங்கள் ஊடுருவுவதை இந்த பூமியின் துருவ சூழலியல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது அந்த பகுதி உயிரினங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களை அச்சுறுத்தும்.

அதிகம் அறிய முடியாதது போல் இருப்பது என்னவென்றால், புவியின் பெரும்பாலான நிலப்பரப்பினை சூழ்ந்திருக்கும் ஆழ் கடல் மட்டத்தின் சுற்றுச்சூழலில் என்ன நடக்கும் என்பதுதான். அவை, கடல் மட்ட படிவுகளில் கார்பன் கடத்தல் (carbon sequestration), கடலின் அமிலத்தன்மையை இடையகப்படுத்துதல், மற்றும் பல்லுயிர்களுக்கான எண்ணற்ற நீர்த்தேக்கங்களை வழங்குதல் போன்ற பல்வேறு தெரிந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளை வழங்குகின்றன. ஆயினும், அந்த பகுதிகளில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து மிகக்குறைவான ஆராய்ச்சிகளே செய்யப்பட்டுள்ளன. நிலப்பரப்பு போன்றே ஆனால் மிக மெதுவான கால அளவில்தான் இதன் பின்விளைவுகள் இருக்கும் என்று பொதுவாக கருதப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் அனைத்தையும் இழக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்பது வரவிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவைக் கடந்து வருவதற்காக மனித இனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சமூக வளங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தெளிவான காரணமாகும். எனினும், முதலாளித்துவ அமைப்பிற்குள்ளும், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மற்றும் தடையில்லாத தனிப்பட்ட இலாபம் சார்ந்த தேடலின் கீழும், அவ்வாறு செய்ய முடியாது. சமூகத் தேவை குறித்து பகுத்தறிவின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமூகத்தின் கீழ் மட்டுமே உலக சமுத்திரங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியும்.