சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Peter Schwarz: The European Union and the United Socialist States of Europe

பீட்டர் சுவார்ட்ஸ்: ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளும்

By Peter Schwarz
7 May 2014

Use this version to printSend feedback

மே 4 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச இணையவழி மே தின கூட்டத்துக்கு அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் வழங்கிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

ஒலி இணைப்பை கேட்க இங்கே அழுத்தவும்

அன்பின் தோழர்களே,

இன்னும் மூன்று வாரங்களில், 28 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 மில்லியன் வாக்காளர்கள் ஒரு புதிய ஐரோப்பிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வாக்களிக்க அழைக்கப்படுவார்கள். வாக்களிக்கத் தகுதியுடையோரில் ஒரு பகுதியினர் மட்டுமே உண்மையில் தேர்தலில் வாக்களிக்கப் போவார்கள். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிக்கின்ற அரசியல் கட்சிகள் முன்காணாத முடிவுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதானமாக இவை ஒரு அதி-வலது-சாரி இயல்புடைய, ஒரு தேசியவாதக் கண்ணோட்டத்தில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் மற்றும் பேரினவாதத்தை முன்னிலைப்படுத்தும் கட்சிகளாகும். கிரேக்கத்தில் சிரிசா (SYRIZA) மற்றும் ஜேர்மனியில் டீ லிங்க (Die Linke) போன்ற இடதுசாரி வகைகளாக கூறப்படுபவை உட்பட, ஒவ்வொரு ஏனைய முதலாளித்துவக் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்தினை பாதுகாக்கின்றன என்ற உண்மையில் இருந்து இவை ஆதாயமடைகின்றன.

தேசிய மோதல்கள், போர், சர்வாதிகாரம் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை வட்டமிட்ட அத்தனை பயங்கரங்களும் திரும்பிவருவதற்கு எதிரான பாதுகாப்பை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதாக அந்தக் கட்சிகள் கூறிக் கொள்கின்றன.

என்ன ஒரு மோசடி!

சமூகப் பிரிவினைகளை தூண்டுவதற்கும், தேசிய குரோதங்களை வளர்த்தெடுப்பதற்கும் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை அபிவிருத்தி செய்வதற்குமான பிரதான கருவியாக ஐரோப்பிய ஒன்றியமே இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வரலாறும் 1917ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் கூறப்பட்ட மார்க்சிச கண்ணோட்டத்தையே ஊர்ஜிதம் செய்திருக்கிறது.முதலாளித்துவ அரசாங்கங்களின் உடன்பாட்டின் மூலமாக, ஐரோப்பாவின் பாதி நிறைவான மற்றும் ஸ்திரமான பொருளாதார ஒன்றியம் ஒன்று மேலிருந்து உருவாவதென்பது வெறும் கற்பனாவாதமேஎன்று அவர் கூறினார்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும், பொதுவாக ஒட்டுமொத்த கலாச்சார அபிவிருத்திக்கும் பிரம்மாண்டமான அனுகூலங்களை வழங்கக் கூடிய ஐரோப்பாவின் பொருளாதார ரீதியான ஒன்றியம் என்பது, ஏகாதிபத்திய சுயகாப்புவாதம் மற்றும் அதன் கருவியான இராணுவவாதத்துக்கும் எதிரான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில், அதன் புரட்சிகர கடமையாக ஆகின்றதுஎன்று அவர் மேலும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மக்களின் ஐக்கியத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக ஐரோப்பா மீதான மிகச் சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் நிதி நலன்களின் சர்வாதிகாரத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஐரோப்பிய சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தங்களது தாக்குதலை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும், தங்களுக்கிடையிலான மோதல்களை நடத்துவதற்கும், தமது போர்களை திட்டமிடுவதற்குமான ஒரு கட்டமைப்பையே இது உருவாக்கித் தருகிறது.

2008 நிதிப் பொறிவின் பின்னர், புரூசெல்ஸ், ஜேர்மனியின் தூண்டுதலின் பேரில் கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் அயர்லாந்தின் மீது கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியிருக்கிறது. இது மில்லியன் கணக்கான மக்களை வேலைவாய்ப்பின்மையிலும் வறுமையிலும் தள்ளியிருக்கிறது; கல்வி, சுகாதாரம் மற்றும் முதுமைக் கால உதவிகளை அழித்திருக்கிறது; இளம் தலைமுறையை அவர்களது எதிர்காலத்திற்கான வாய்ப்பற்ற நிலையில் விட்டிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சர்வதேச பெருநிறுவனங்களுக்கான மலிவு உழைப்புக் களங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்நாடுகளில் எண்ணிலடங்காத தனியார்மயமாக்கங்களும் சமூக சேவை வெட்டுகளும் மேற்கொள்ளப்பட்டு ஒட்டுமொத்த பொது உட்கட்டமைப்புமே சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.

சமூக எதிர்ப்புரட்சி பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவை பிரான்சும் இத்தாலியுமாகும். ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும், நிதி ஊடகங்களும் மற்றும் சர்வதேச நிதிப் பிரபுத்துவத்தின் ஏனைய சகல ஊதுகுழல்களும், போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கடினமாகப் போராடிப் பெற்ற சமூக தேட்டங்களில் எஞ்சியிருக்கும் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஐரோப்பாவில் வலிமையான பொருளாதாரமாகக் கருதப்படுகின்ற ஜேர்மனியும், தொழிலாளர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு விதிவிலக்கானது அல்ல. அங்கு இப்போதே, மூன்றில் ஒருவர் நிச்சயமற்ற நிலைமைகளில் வேலை செய்கின்றார், நான்கில் ஒருவருக்கு முழு-நேர தொழில் கிடையாது, ஆறில் ஒருவர் வறுமைக்குள் விழும் அபாயத்தில் இருக்கிறார்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுஎழுச்சியும் உக்ரேனிலான போர் முனைப்பும் இந்த பெருகும் முரண்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கின்றன.

வளர்ச்சிகண்டுவரும் சமூக எதிர்ப்பு, ஆழமடைகின்ற ஒரு பொருளாதார நெருக்கடி, யூரோ நிலைகுலைகின்ற ஒரு ஆபத்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சிதறிப் போகும் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கின்ற ஜேர்மன் ஏகாதிபத்தியமானது, இரண்டாம்  உலகப் போரில் அதன் குற்றங்களின் காரணமாக அதன் மீது சுமத்தப்பட்ட இராணுவக் கட்டுப்பாடுகளை மீறிவருகின்றது. 1914 மற்றும் 1930களில் போலவே, தீர்க்கவியலாத பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில் அது இராணுவவாதத்தையும் போரையும் நாடுகின்றது.

கடந்த காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் மேலாதிக்க பாத்திரம் பிரதானமாக அதன் பொருளாதார வலிமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. எதிர்காலத்தில் அது தன் தலைமைப் பாத்திரத்தை தக்கவைத்துக்கொள்ள தனது இராணுவ வலிமையை பயன்படுத்தும்.

இராணுவவாதத்தின் வளர்ச்சியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான இயல்பை இன்னும் பகிரங்கமாக அம்பலமாக்கும். முன்னதாக மூலதனம், பொருட்களின் தடையில்லா நகர்வு மற்றும் பொதுவான நாணயமதிப்பு போன்ற பொருளாதார விடயங்களிலேயே அது பிரதானமாக வரையறுக்கப்பட்டது. வருங்காலத்தில், பொருளாதாரத்துக்கு மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்முக ஒருங்கிணைவுக்கான அடிப்படையாக ஒரு பொது விரோதிக்கு எதிரான போராட்டமே பிரதியீடு செய்யப்படவுள்ளது.

இராணுவத்தை மீள்வலிமைபடுத்துவதற்கான பெரும் செலவுகளையும் மற்றும் பாரிய வெகுஜன எதிர்ப்பையும் எடுத்துக்கொண்டால், இராணுவவாதத்தை நோக்கிய திருப்பமானது தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான மேலதிகத் தாக்குதல்களையும் முன்கொணரும்.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் பொலிஸ் அரச கட்டமைப்பை ஊக்குவிப்பதில் ஒரு முன்னிலை பாகத்தை வகிக்கின்றது.

ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை வேவு பார்ப்பதில் பிரிட்டன், ஜேர்மனி, மற்றும் பிரான்சின் உளவுத் துறையினர் தமது அமெரிக்க சகாக்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியுள்ளார்.

யூரோபோல் மற்றும் ஐரோப்பிய போலிஸ் முகவரமைப்புக்கள், மில்லியன்கணக்கான ஐரோப்பிய குடிமக்களின் இருப்பிடங்களையும் தனிமனித விபரங்களையும் உள்ளடக்கிய மிகப் பிரம்மாண்டமான தரவுத் தளங்களை ஸ்தாபித்துள்ளன.

அத்துடன், ஐரோப்பிய எல்லைகள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கும் ஒரு கோட்டையாக உருமாற்றப்பட்டுள்ளன.

ஆண்டுக்கணக்கில் நீளும் சிக்கன நடவடிக்கைகளும் இராணுவவாதத்தின் எழுச்சியும், ஒருகாலத்தில் ஐரோப்பியதொழிலாளர் இயக்கம்என தவறாக அழைக்கப்பட்டவற்றின் -சமூக ஜனநாயகக் கட்சிகள், பிழையாக பெயர்சூட்டப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின்முற்றிலும் பிற்போக்குத்தனமான இயல்பை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாம் அகிலத்தின் முன்னணிக் கட்சிகள் தமது போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தைக் காட்டிக் கொடுத்து முதலாம் உலகப் போரில் தத்தமது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவளித்தன. இன்று சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு காட்டிக் கொடுப்பதற்கு எதுவுமில்லை. வேலைதிட்ட ரீதியிலும் செயலளவிலும் அவை நிபந்தனையின்றி இராணுவவாதத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கும் வாக்குறுதியளிக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஜனநாயக உறுப்பினரான ஜேர்மன் சான்சலர் ஹெகார்ட் ஷ்ரோடர் தனது2010 திட்டநிரல்மூலமாக தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதலுக்கு ஒரு ஐரோப்பிய நிர்ணயத்தரத்தை அமைத்தார். இப்போது சமூக ஜனநாயக கட்சியின் வெளியுறவுத்துறை அமைச்சரான பிராங்-வால்டர் ஸ்ரைன்மையர் ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுஎழுச்சிக்கான பிரச்சாரத்தில் முன்னிலையில் நிற்கிறார்.

இத்தாலியில், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரிசுகள், பல தசாப்த காலமாக இத்தாலியத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சமூக ஈட்டங்கள் அத்தனையையும் மாற்றியமைக்க வாக்குறுதியளித்துள்ளனர். பிரதமர் மத்தேயோ ரென்சி பெருநிறுவனத் தலைவர்கள், நிதிச் சுருட்டல் பேர்வழிகள் மற்றும் வங்கிகளின் பிரியத்திற்குரியவராக திகழ்கின்றார்

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட், சமீபத்திய தேர்தல்களிலான தோல்விக்குப் பதிலிறுப்பாக, தனது கட்சியில் இருக்கும் மிக வலது-சாரி நபரை பிரதமராக சிபாரிசு செய்துள்ளார். தொழிலாள வர்க்கத்தின் மீதான யுத்தத்தை தீவிரப்படுத்துவதும் பேரினவாத வேண்டுகோள்களை விடுப்பதும் மானுவேல் வால்ஸின் நடவடிக்கை பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இது தவிர்க்க முடியாமல் நவ-பாசிச தேசிய முன்னணியைப் பலப்படுத்தும். இது ஒரு விரும்பத்தகாத பக்க விளைவு அல்ல,  மாறாக, நனவுடன் பின்பற்றப்படுகின்ற ஒரு அரசியல் இலக்காகும். தொழிலாள வர்க்கத்தின் குவிந்துவரும் எதிர்ப்பிற்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை விட, ஹாலண்ட் ஒரு தேசிய முன்னணி அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வார்.

வால்ஸ் தயார் செய்துள்ள தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை ஜனநயாக வழியில் முன்னெடுக்க முடியாது. வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாசிஸ்டுகளை அழைப்பதென்ற யோசனைக்கு ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது பிரான்சிற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. ஐரோப்பிய ஒன்றியம் கியேவில் ஒரு பாசிச தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தமை, இந்த விடயத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் குறிக்கின்றது.

சமூக ஜனநாயகக் கட்சியினருக்கு தொழிற்சங்கங்களின் முழு ஆதரவு இருக்கின்றது. அவை இனியும் தொழிலாளர்களது அமைப்புகளாக இல்லை, மாறாக சிறப்புச் சலுகை பெற்ற அதிகாரத்துவ எந்திரங்களாகும். தொழிலாளர்களை அடகு வைப்பதற்கு அவற்றின் நிர்வாகிகள் கணிசமான ஊதியத்தைப் பெறுகின்றனர். இன்று ஒவ்வொரு வேலை நீக்கமும், ஊதிய வெட்டும், மற்றும் ஆலை மூடலும் அவர்களது கையொப்பத்தைக் கொண்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முழுமையாகத் தடுக்க அவர்களால் இயலாத சமயத்தில், அவை கைமீறிச் சென்று விடாத வண்ணம் அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர்.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு வெறுப்புக்குரிய பாத்திரத்தை ஜேர்மனியின் இடது கட்சி (Die Linke), பிரான்சின் இடது முன்னணி (Front de Gauche) மற்றும் கிரீஸில் சிரிசா (SYRIZA) போன்ற கட்சிகள் ஆற்றுகின்றன. அவை தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. தொழிலாள வர்க்கம் தனது சொந்த, சுயாதீனமான புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதை தடுக்க அவை தங்களால் ஆன அனைத்தையும் செய்கின்றன. தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போதுஇடதுவார்த்தை ஜாலங்களை அவை பயன்படுத்துகின்றன. உண்மையில், அவை நிபந்தனையின்றி முதலாளித்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாதுகாக்கின்றன.

எமது இயக்கம் இத்தகைய சக்திகளை முற்றிலும் எதிர்ப்பதோடு ஒவ்வொரு வழியிலும் அவற்றில் இருந்து வேறுபடுகின்றது.

நாம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட அதன் அனைத்து ஜனநாயகமற்ற ஸ்தாபனங்களையும் நிராகரிக்கிறோம். ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியமே ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எங்களது பதிலாகும். இது வெறுமனே ஒரு சுலோகம் அல்ல, மாறாக, ஒரு புரட்சிகர, சோசலிச வேலைத்திட்டத்திற்கான அடிப்படை ஆகும்

ஐரோப்பாவெங்கிலும் உழைக்கும் மக்கள் அவர்களது வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் போர் அபாயத்திற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்காக நாம் போராடுகிறோம்.

ஸ்காட்லாந்து, கட்டலோனியா, வடக்கு இத்தாலி மற்றும் பெல்ஜியத்திலும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிப்பது உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரினவாதம், இனவாதம், தேசியவாதம் மற்றும் அவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கும் எதிரானவர்களாக நாங்கள் நிற்கிறோம். ஒரு பொது விரோதிக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் அத்தியாவசியமாக இருக்கும் ஒரு சமயத்தில், இவை தொழிலாளர்கள் மத்தியில் மேலும் பிரிவினைகளையே விதைக்கின்றன.

நாம் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் அரசாங்கங்கள் உருவாக்கப்படுவதையும் ஐரோப்பா சோசலிச அடிப்படையில் ஒன்றிணைக்கப்படுவதையும் பரிந்துரைக்கின்றோம்.

ஐரோப்பா தேசியவாதத்திற்குள்ளும் போருக்குள்ளும் விழுந்து விடாமல் தடுப்பதற்கும், ஐரோப்பாவின் பரந்த ஆதாரவளங்களையும் உற்பத்திச் சக்திகளையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தவும் அபிவிருத்தி செய்யவதற்குமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் ஒரே வழி இது மட்டுமேயாகும்.

இந்த வேலைத் திட்டத்திற்காக போராடவும் ஐரோப்பாவெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளைக் கட்டியெழுப்பவும் பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சியும் (Partei für Soziale Gleichheit -PSG) ஐரோப்பிய தேர்தலில் நிற்கின்றன.