சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Hindu chauvinist BJP sweeps to power in India

இந்து பேரினவாத பாரதீய ஜனதா கட்சி இந்தியாவின் அதிகாரத்தை கைப்பற்றுகின்றது

By Keith Jones
17 May 2014

Use this version to printSend feedback

அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலையுயர்வுகள் மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை மீதான மக்களின் கோபத்தினால் ஊக்குவிக்கப்பட்டும் மற்றும் இந்திய பெரு வணிக மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவினால், இந்து வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சியும் (பிஜேபி), அதன் தேசிய ஜனநாயக கூட்டணியும் (என்டிஎ) இந்தியாவின் பொது தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.

எதிர்வரவிருக்கும் மக்களவையில் பிஜேபி 282 இடங்களைக் கொண்டிருக்கும். இதன்மூலம் 545 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் கீழ் சபையில், கடந்த மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக தனிக்கட்சி ஒன்று பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. BJP இன் கூட்டான NDA வென்ற 54 இடங்கள் எந்தவொரு எதிர்கட்சிகளும் வென்ற மொத்த இடங்களை விட அதிகமாகும். இது குறைந்தபட்சம் 336 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை அந்த அரசாங்கம் பெற்றிருக்கும் என்பதை இது குறிக்கிறது.

பிஜேபி வேலைகள் மற்றும் வளர்ச்சியை வழங்கும் என்ற அதன் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகள் மீது இந்திய தொழிலாளர்களும், ஏழைகளும் என்ன நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அது விரைவிலேயே அழிக்கப்படும்.

பெரு வணிகம் பிஜேபி மற்றும் அதன் பிரதம மந்திரி வேட்பாளரான சுய-பாணியிலான இந்து இரும்புமனிதரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியின் பாதுகாவலனாக உள்ளது. அது இதன்மூலம் தான் பாரிய மக்கள் எதிர்ப்பினூடாக சமூகரீதியில் எரியூட்டக்கூடிய "சந்தை-சார்" சீர்திருத்தங்களைத் திணிக்க உள்ளது.

2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டிவிட்டதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக மோடி இழிபெயர் பெற்றவராவார். ஆனால் அவர் நிலம் மற்றும் வரி விட்டுகொடுப்புகளை வாரி வழங்கியும், வேலை நிறுத்தங்களைச் சட்டவிரோதமாக ஆக்கியும் அல்லது அவற்றை விலைக்கு வாங்கியும் இந்தியாவின் பெருநிறுவன மேற்தட்டை மற்றும் கோல்ட்மான் ஸாக்ஸ் போன்றவற்றைக் கவர்ந்திழுத்துள்ளார். அந்நிறுவனம் சமீபத்தில் "மாற்றத்திற்கான ஒரு முகவராக" சேவை செய்ய மோடிக்கு இருக்கும் சாத்தியக்கூறுகள் மீது ஒரு கனிவான அறிக்கையைப் பிரசுரித்தது.

மோசமான-வகுப்புவாத கும்பலின் தலைவனான மோடிக்கு இந்திய முதலாளித்துவம் காட்டும் உத்வேகம், உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை மலிவு-உழைப்பு உற்பத்தியின் ஒரு மையமாக மாற்றுவதற்கான அதன் அபிலாஷைகளை நிறைவேற்ற அது பிற்போக்குத்தனமான மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்குத் திரும்பி வருவதையே அடிக்கோடிடுகிறது.

இலண்டனை மையமாக கொண்ட எகானோமிஸ்ட் இதழின் நேற்றைய ஒரு தலையங்கம், “[காங்கரஸ் கட்சி தலைமையிலான] கடந்த அரசாங்கம் குழம்பி போய் இருந்தது, அது இந்தியாவின் நலன்புரி அரசை தாங்கி பிடிப்பதில் முன்-ஈடுபாடு காட்டியது. இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் மேலதிகமாக மூலோபாயரீதியாகவும் மற்றும் இரக்கமற்ற விதத்தில் இருக்க வேண்டும்”, என்று எழுதியது.

பிஜேபி வெற்றியை அனுமானித்து சமீபத்திய வாரங்களில் இந்திய பணச் சந்தைகளுக்குள் பில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ந்துள்ளன, மற்றும் வெள்ளியன்று, இந்தியாவின் பங்கு சந்தைகள் சாதனையளவிலான உயரத்தை எட்டின. ஆனால் கடந்த கோடையில் ரூபாய் நெருக்கடி எடுத்துக்காட்டியதைப் போல, இந்திய பொருளாதாரம் பாரியளவில் அன்னிய முதலீட்டின் உள்-வரவைச் சார்ந்துள்ளதோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தால் ஏறத்தாழ ஒரேயிரவில் அதிர்ந்து போகக்கூடும். புதிய அரசாங்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் "நிதியியல் முன்னெச்சரிக்கை" நடவடிக்கைகள்அதாவது, பாரிய சமூக செலவின வெட்டுக்கள்மற்றும் "கட்டமைப்புரீதியிலான சீர்திருத்தத்திற்கு" பொறுப்பேற்கவில்லை என்றால், ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ் இந்தியாவின் கடன் பெறும் தரமதிப்பீட்டில் அதற்கு வெற்று அந்தஸ்து (junk status) நிலைக்கு கீழே இறக்கும் என நேற்று வலியுறுத்தியது.

காங்கிரஸ் கட்சியின் ஒரு வரலாற்றுரீதியிலான தோல்வி

வெள்ளிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள், சுதந்திரத்திற்குப் பிந்தைய 67 ஆண்டுகளில் மொத்தம் 13 முறை இந்திய தேசிய அரசாங்கத்திற்கு தலைமை எடுத்திருந்த ஒரு கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வரலாற்று தோல்வியை வழங்கின.

காங்கிரஸ் கடந்த தேர்தலில் அது பெற்ற மொத்த இடங்களில் ஐந்தில் ஒரு பங்கை விட சற்று அதிகமாக மற்றும் இந்திய நாடாளுமன்ற விதிகளின் கீழ் உத்தியோகபூர்வ எதிர்கட்சி அங்கீகாரத்தைப் பெற தேவையான அளவிற்கு கூட இல்லாமல் வெறும் 44 இடங்களை வென்றுள்ளது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் அது இணைந்திருந்ததாலும், சுதந்திரத்திற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்குரியதாக அல்லாத சீர்திருத்தங்களால் அது அபிவிருத்தி செய்யப்பட்டிருந்ததாலும், இந்திய முதலாளித்துவ அரசியலில் காங்கிரஸின் மத்திய பாத்திரம், பரந்துபட்ட பலவித இன மற்றும் பல்வேறு-வகுப்பு மக்களோடு பிணைந்துள்ளது.

ஏற்கனவே 1960களின் இறுதியில், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சி உடைந்திருந்த நிலைமைகளின் கீழ், காங்கிரஸ் தொழிலாளர் வர்க்கத்துடன் வன்முறையான மோதலுக்கு வந்திருந்தது. ஆனால் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் உதவியோடு, அந்த போராட்டங்களைத் நிலைகுலைய செய்ததோடு, நேரு-காந்தி குடும்பத்தைச் சுற்றி சுழன்ற ஒரு பரம்பரை கட்சி நிகழ்வுபோக்காக மாறியிருந்தது.

காங்கிரஸ் கடைசியாக 1984இல் ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றிருந்தது, இருந்தபோதினும் அது இப்போது வரையில் முதலாளித்துவத்தின் பிரதான அரசியல் கருவியாக இருந்து வந்துள்ளதோடு, “காங்கிரஸ் சோசலிசத்தை" உதறித் தள்ள பெருமுயற்சி செய்துள்ளது. காங்கிரஸ் சோசலிசம்தான் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் நான்கு தசாப்தங்களில் முதலாளித்துவம் பின்பற்றிய அரசு-தலைமையிலான "தேசிய அபிவிருத்தி" ஆகும்.

நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தான், 1991 மற்றும் 1996க்கு இடையே, நவ-தாராளவாத கொள்கைகளுக்கான முதலாளித்துவ திருப்பத்தைத் தொடங்கி வைத்து, மலிவு-உழைப்பு, ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுக்கும் வளர்ச்சி மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தியது. ஒரு காங்கிரஸ் அரசாங்கம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு "மூலோபாய கூட்டுறவுக்குள்" இந்தியாவை அடைத்தது, அத்தோடு அணுஆயுதம் கொண்டு வான்வழி-தரைவழி-கடல்வழி தாக்கும் திறனின் அபிவிருத்தி மற்றும் ஒரு நீலக்கடல் கப்பற்படை கட்டியமைத்தமை ஆகியவற்றை முன்னெடுக்க அழுத்தம் அளித்து, இந்தியாவின் வேகமான இராணுவ விரிவாக்கத்திற்குத் தலைமை தாங்கி இருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்திய முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்கு எரியூட்டிய "சீர்திருத்தம்", மேற்கின் முடிவில்லா பிரகாசமான அறிக்கைகளின் விடயமாக இருந்துள்ளது. ஆனால் இந்திய பொருளாதார வளர்ச்சியின் விளைபயன்கள், மக்கள்தொகையில் மூன்று கால் பங்கினருக்கும் அதிகமானவர்களை நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைவான தொகையில் வாழ விட்டு, மொத்த இந்திய குழந்தைகளில் பாதியை ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளாக மாற்றி, ஒரு சிறிய முதலாளித்துவ மேற்தட்டு மற்றும் மத்திய வர்க்கத்தின் மிகவும் தனிச்சலுகை படைத்த பிரிவுகளால் ஒட்டுமொத்தமாக தனதாக்கி கொள்ளப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்த பின்னர் 2004இல் அதிகாரத்திற்குத் திரும்பிய காங்கிரஸ், அது இரக்கத்தோடு சீர்திருத்தங்களை" நடைமுறைப்படுத்தும் என்று வாதிட்டது. இது "காங்கிரஸ் சோசலிசத்தைக்" கட்டியெழுப்புவது என்ற அதன் முந்தைய வாதங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு வெட்ககேடாக இருந்தது.

இந்தியாவின் வேகமான பொருளாதார விரிவாக்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட அதிகப்படியான வருவாயில், பசியோடு இருந்தவர்களுக்கு வேலை மற்றும் உணவு வழங்க ஒரு சிறிய பகுதி ஒதுக்கப்பட்டது. கல்வி மற்றும் சுகாதரம் இரண்டுக்கும் சேர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் குறைவாக செலவிட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம், அதேவேளையில் பத்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பொது சொத்துக்களை இந்திய பெரு வணிகங்களுக்கு அடிமட்ட விலைக்கு விற்பனை செய்தது அல்லது முற்றிலும் அன்பளிப்பாக வழங்கியது.

2008 உலக நிதியியல் நெருக்கடி மற்றும் 2010க்கு பின்னர் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பாதியாக ஆனது என இரட்டை அதிர்வுகள், UPAஇன் முதல் பதவி காலத்தில் கொண்டு வரப்பட்ட பரிகாசத்திற்குரிய சமூக உதவிகளைக் கூட நீடிக்க செய்வதை காங்கிரஸிற்கு சாத்தியமில்லாது செய்தது. அதேவேளையில் வேலையின்மை அதிகரிப்பு மற்றும் இரட்டை-இலக்க விகிதங்களில் விலைகளின் உயர்வு ஆகியவற்றிற்கு இடையே, அக்கட்சி சமூக செலவினங்களை வெட்டியது. பிரதம மந்திரி மன்மோகன் சிங் வான் அலைகளில், அன்னிய முதலீடுகளை ஈர்க்க இந்தியர்கள் "அவர்களின் வயிற்றை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமென" கோரினார்.

இதற்கிடையில், பெரு வணிகம் மேலதிக முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களுக்கான அதன் தொடர்ச்சியான வாக்குறுதிகளை போதியளவிற்கு வேகப்படுத்த தவறுவதாக அரசாங்கத்தின் மீது சீறியது.

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் உடந்தை

இந்திய அரசியலை இன்னும் மேலதிகமாக வலதிற்கு தள்ள, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான பாரிய கோபத்தை இந்திய முதலாளித்துவத்தால் தனக்கு சார்பாக சுரண்ட முடிந்தது என்ற உண்மை மீதான பொறுப்பு, முதலும் முக்கியமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளின் மீது தங்கி உள்ளது.

முதலாளித்துவ நவ-தாராளவாத நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் அவையும், அவற்றின் இடது முன்னணியும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. இதில் இந்திய முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதார கொள்கையைத்" தொடங்கி வைத்த சிறுபான்மை காங்கிரஸ்-தலைமையிலான அரசாங்கத்தையும், மே 2004இல் இருந்து ஜூன் 2008 வரையில் காங்கிரஸ்-தலைமையிலான UPA இரண்டையும் பதவியில் நீடிக்க செய்ததும் உள்ளடங்கும்.

ஸ்ராலினிஸ்டுகள் அவர்கள் ஆட்சி அமைத்த மாநிலங்களில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையின் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கியும், பெரு வணிகம் விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதற்கு எதிராக எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை பொலிஸ் மற்றும் கூலிப்படை வன்முறை கொண்டு நசுக்கியும், அவர்களால் எது "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகள் என்று அழைக்கப்பட்டதோ அவற்றை அவர்களே நடைமுறைப்படுத்தினார்கள்.

இந்த முடிவில்லா காட்டிக்கொடுப்புகள் தொழிலாள வர்க்கத்திற்குள் ஸ்ராலினிஸ்டுகளுக்கு இருந்த அடித்தள ஆதரவை தகர்த்துள்ளது. 2009 தேர்தல்களில், இடது முன்னணியின் லோக் சபா பிரதிநிதித்துவம் வெறும் 24 என்று வீழ்ச்சி அடைந்து பாதிக்கும் சற்று அதிகமாக இருந்தது. 2014இல், சிபிஐ ஒரேயொரு இடத்தை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது, சிபிஎம் 9 இடங்கள் என்ற அளவிற்கு குறைந்து போனது.

ஒரு நெருக்கடிகால அரசாங்கமும், பிற்போக்குத்தனமும்

ஆளும் மேற்தட்டு தொழிலாள வர்க்கத்தை மிரட்ட முயற்சிக்க மற்றும் அரசு ஒடுக்குமுறையை நியாயப்படுத்த BJP'இன் வலுவான நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தும்.

யதார்த்தத்தில், பிஜேபி இற்கான ஆதரவின் உண்மையான அடித்தளம் மிகவும் குறுகியதாகும். காங்கிரஸ் மீதான பாரிய கோபம் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் உடந்தையாய் இருந்தமை ஆகியவற்றிலிருந்து ஆதாயமடைந்தும், அதன் "வளர்ச்சி" திட்டத்தின் உண்மையான உட்பொருளைக் குறித்து வெட்கமின்றி பொய்யுரைத்தும், 1.2 பில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டில் 171.5 மில்லியன் வாக்குகளை (வாக்களித்தவர்களில் 31 சதவீதத்தினரின் வாக்குகளை) வென்றுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, மோடி-தலைமையிலான அரசாங்கம் ஓர் அதீத நெருக்கடி ஆட்சியாக விளங்கும். பூகோள முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், அது பாரிய பெரும்பான்மைக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வர்க்க-யுத்த நிகழ்ச்சி நிரலை, அதாவது சமூக செலவினங்களை வெட்டுதல்; எரிபொருள், உரம் மற்றும் உணவு பொருட்களின் விலை மானியங்களைக் குறைத்தல் மற்றும் இறுதியாக முற்றிலும் நீக்குதல்; பாரிய வேலை நீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்கள் மீதிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குதல்; தனியார்மயமாக்கம்; இன்னும் மேலதிகமாக வரிச் சுமையை உழைக்கும் மக்கள் மீது மாற்றுதல் என இவற்றைத் திணிப்பதற்காக பணிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியல் இன்னும் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

அதுமட்டுமின்றி, இந்திய மக்கள்தொகையின் பரந்த தட்டுக்கள்அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர் வர்க்கம்—BJPஇன் இழிவார்ந்த இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஆழமான விதத்தில் விரோதமாக உள்ளது.

பிஜேபி, அதுவே எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய அரசியல் உருவாக்கமாக உள்ளது. இந்தியா பசியால் வாடுபவர்களைப் பிழைக்க வைக்க பில்லியன்களை "வீணாக்கி கொண்டிருப்பதாக" சீறும் தொழில்துறை தளபதிகளையும், தேசிய-பாதுகாப்பு அமைப்பின் ஜனநாயக விரோத மற்றும் பெரிதும் யுத்தம் நாடும் பிரிவுகளில் இருந்து அணிதிரட்டியவர்களையும், மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) ஆயுதக்குழுவின் மற்றும் இந்து மேலாதிக்கவாத அமைப்புகளோடு இணைந்த தீவிரபிரிவினரையும் இணைத்துக் கொண்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கும், நேற்றைய வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே, ஒரு வாழ்நாள் ஆர்எஸ்எஸ் அங்கத்தவரான மோடியும், ஏனைய மூத்த பிஜேபி தலைவர்களும் பிஜேபி'இன் அடுத்த நடவடிக்கைகளை விவாதிக்க ஆர்எஸ்எஸ் தலைமையோடு பல கூட்டங்களை நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் முதல்முறையாக பெரும்பான்மையை அனுபவித்து வரும் பிஜேபி உடன், இந்து வலதின் பிரிவுகள் கருத்து வேறுபாடின்றி நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் வகுப்புவாதம் ஏற்றப்பட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்ற அதை தூண்டிவிடத் தொடங்கும்அதன் தற்போதைய தேர்தல் அறிக்கையிலும் அவை மீண்டும் கூறப்பட்டிருந்தன, ஜம்மு&காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குதல், இடிக்கப்பட்ட பாபரி மசூதி இடத்தில் இந்து கடவுளான இராமருக்கு ஒரு கோயில் கட்டுவது போன்றவை ஆகும்.

அதற்கும் மேல், பிஜேபி அரசாங்கத்தின் பெரு வணிக சமூக-பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்ப்பு வலுக்கும் போது, அதன் ஆதரவான உறுப்பினர்களையும் மற்றும் பரந்தமக்கள் ஆதரவை அணிதிரட்ட அது கொண்டிருக்கும் ஒரேயொரு கருவியான முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை பலிக்கடாவாக்கும் அடிப்படை வகுப்புவாத அழைப்புகளுடன் தனது விடையிறுப்பு காட்டும்.

பாகிஸ்தான், பங்களதேஷ் மற்றும் சீனா உட்பட இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும், மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தோடு வேலை செய்ய அவை தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் அனைத்தும் வழக்கம் போல உள்ளன என்ற போலித்திரைக்கு பின்னால், அங்கே சந்தேகத்திற்கு இடமின்றி ஆழ்ந்த கவலை உள்ளன. பாகிஸ்தானை "சாந்தப்படுத்துவதற்காக" மற்றும் சீனாவிடம் "மென்மையாக" இருப்பதற்காக UPA அரசாங்கம் மீதான அவரது தாக்குதல்களின் பாகமாக, இரும்புமனிதர் என்ற மோடியின் பிம்பம் கட்டப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மூன்று டஜன் முஸ்லீம்களுக்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்ட அசாம் வகுப்புவாத வன்முறை நடந்ததற்குப் பின்னர், அவர் பங்களதேஷில் இருந்து முஸ்லீம் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததும் உள்ளடங்கும்.

ஒபாமா நிர்வாகம் அதன் சீனாவிற்கு எதிரான "ஆசியாவை நோக்கி திரும்புதலுக்கு" இந்தியாவை இன்னும் இறுக்கமாக கொண்டு வர பேரார்வத்தோடு உள்ளது. இதை அடைவதற்காக, குஜராத் படுகொலையில் அவர் வகித்த பாத்திரத்திற்காக வாஷிங்டன் 2005இல் மோடிக்கு விதித்த விசா தடைகள் மீதான ஆத்திரங்களைக் குறைக்க அது சமீபத்திய மாதங்களில் ஆர்வத்தோடு இருந்துள்ளது. BJPஇன் தேர்தல் வெற்றிக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்க ஒபாமா வெள்ளியன்று மோடியோடு தொலைபேசியில் பேசி இருந்ததோடு, வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யுமாறு அவருக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.