சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Toyota in India intensifies repression against workers

டொயோட்டா இந்தியாவில் தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துகிறது

By Arun Kumar and W.A. Sunil
17 May 2014

Use this version to printSend feedback

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) ஆலையில், ஏப்ரல் 22இல் வேலைத் திரும்ப தொழிற்சங்கம் TKMWU (டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தொழிலாளர் சங்கம்) தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டதில் இருந்து, ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக அதன் விரோதமான மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஆலை, தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு (பெங்களூர்) இல் இருந்து 50 கிலோமீட்டரில் பிடதியில் அமைந்துள்ள ஜப்பானிய-இந்திய கூட்டு நிறுவனமாகும்.

ஒரு அற்ப ஆண்டு ஊதிய உயர்வாக, 2014ஆம் ஆண்டில் மாதந்தோறும் 4000 ($65) ரூபாயும் மற்றும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகளையும் கோரிய தொழிலாளர்களின் கோரிக்கையைக் கைவிடச் செய்வதில் அவர்களை மிரட்டுவதற்காக, TKM நிர்வாகம் மார்ச் 16இல் தொடங்கி தொழிலாளர்களுக்கு ஒரு சட்ட விரோத கதவடைப்பை அறிவித்திருந்தது. (பார்க்கவும்: இந்தியாவில் வாகனத்துறை தொழிலாளர்களுக்கு டொயோட்டா கதவடைப்பை அறிவிக்கிறது)

ஆரம்பத்தில் இருந்தே இந்த தொழில்துறை பகுதியில் இருந்த ஏனைய தொழிலாளர்களின் ஆதரவிற்கு முறையிடுவதற்கு மாறாக TKMWU தலைமை, இழிபெயரெடுத்த வணிக-சார்பு மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திடம் தலையீடு செய்யுமாறு முறையிடும் ஒரு மூலோபாயத்தைக் கொண்டிருந்தது.

நாட்டின் தொழில்துறை பிரச்சினை சட்டத்தை மீறிய விதத்தில் TKM நிர்வாகம் ஏதேச்சதிகாரமாக அதன் ஆலைகளின் கதவுகளை மூடிய போது, அதன் பங்கிற்கு, கர்நாடகா மாநில அரசாங்கம் அலட்சியமாக இருந்தது. ஆரம்பத்தில், அந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர மாநில அரசாங்கம் ஏப்ரல் 6இல் கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது பொலிஸ் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. (பார்க்கவும்: "இந்தியாவில் கதவடைப்பு செய்யப்பட்ட டொயோட்டோ தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்துகிறது)

அது தோல்வி அடைந்தபோது, மாநில அரசாங்கம் ஏப்ரல் 17இல் தேசிய நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஒரு தந்திரோபாய மாற்றத்தை எடுத்தது. தொழிலாளர்கள் "நிபந்தனையின்றி" ஆலையில் மீண்டும் வேலைக்கு திரும்புவதற்கு பிரதியீடாக, நன்னடத்தை உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லாமல் கதவடைப்பை நீக்குமாறு TKM நிர்வாகத்தைக் கேட்டு கொண்டதன் மூலம், அது ஏப்ரல் 21இல் தலையீடு செய்தது.

முன்னதாக ஆலையைத் திறக்க ஒரு முன்நிபந்தனையாக நிர்வாகம் வலியுறுத்தி இருந்த ஒரு "நன்னடத்தைப் பத்திரம்" மீதான அதன் கோரிக்கையைக் கைவிட ஆலை நிர்வாகத்தை அரசாங்கம் சமாதானப்படுத்தியதற்கு பிரதியீடாக, காங்கிரஸ் கட்சி அரசாங்கம் ஆலையில் "நிபந்தனையின்றி சகஜமான நிலைமையைக்" கொண்டு வர தொழிற்சங்க தலைமைக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் தொழிற்சங்க தலைமையின் குறிப்பிடத்தக்க குறுகிய-கண்ணோட்ட முன்னோக்கை வெளிப்படுத்தும் விதமாக, TKMWU பொது செயலாளர் சதீஷ், அதன் சரணடைவுக்கு இட்டுச் சென்ற தொழிற்சங்கத்தின் முட்டுச்சந்து தந்திரோபாயங்களை நியாயப்படுத்தினார். WSWSக்கு அளித்த கருத்துக்களில் அவர் இவ்வாறு கூறினார்: “மீண்டும் வேலைக்குத் திரும்புவது சரியான முடிவென்று நாங்கள் கருதுகிறோம். அரசாங்கம் கதவடைப்புக்கு தடைவிதித்த பின்னர், எங்களால் வேலை நிறுத்தத்தைத் தொடர முடியாது, ஏனென்றால் அது சட்டவிரோத நடவடிக்கையாக ஆகிவிடும், அத்தோடு நாங்கள் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட விரும்பவில்லை. நாங்கள் சட்டத்தை எங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை,” என்றார்.

தொழிலாளர்கள் அவர்களின் ஊதியக் கோரிக்கையையோ அல்லது பாதுகாப்பான வேலையிட நிலைமைகளுக்கான கோரிக்கையையோ வென்றிருக்கவில்லை என்ற நிலையில், வேலைக்குத் திரும்புவதென்ற அந்த முடிவு நிபந்தனையின்றி இருந்தது. மாறாக தொழிற்சங்க தலைமை ஊதிய உயர்வு மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளின் கதியை ஒட்டுமொத்தமாக மாநில தொழிலாளர் கமிஷனர்கள் மற்றும் நீதிமன்றங்களின் கருணைக்காக விட்டுவிட்டது.

தொடக்கத்தில் இருந்தே, TKMWU தலைமை நிறுவன நிர்வாகத்துடனான எந்தவொரு மோதலையும் தவிர்க்க விடாபிடியாக வேலை செய்தது, நிர்வாகமோ தொழிலாளர்கள் முழுமையாக அடிபணியவதைத் தவிர வேறொன்றையும் எதிர்பார்க்கவில்லை. தொழிற்சங்க தலைமை அந்த தொழில்துறை பகுதியில் இருந்த கணிசமான தொழிலாள வர்க்க ஜனத்தொகைக்கு முறையிடுவதையும் தவிர்த்துக் கொண்டது. அதற்கு மாறாக அது தொடக்கத்தில் பொலிஸ் வன்முறை மூலமாக தொழிலாளர் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர முயன்ற அதே மாநில அரசாங்கத்திடம் சென்று முறையிட்டது.

கதவடைப்புக்குப் பின்னர் நிர்வாகத்தின் மீதான தொழிலாளர்களின் கோபம் உணரக் கூடியதாக இருந்ததால், தொழிற்சங்க தலைவர்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போராட்டத்தை நடத்த நிர்பந்திக்கப்பட்டனர். இருப்பினும், அந்த ஆலையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில் பயிற்சி பெறுநர்கள் உட்பட, தொழிலாளர்களின் ஏனைய பிரிவுகளிடமிருந்து ஆதரவை ஆக்கபூர்வமாக ஒன்று திரட்டாததால், அந்த போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டதாக மற்றும் வலுவற்றதாக ஆனது.

தொழிற்சங்கம் கடந்த ஒரு ஆண்டாக நிர்வாகத்துடன் நீண்ட மற்றும் பயனற்ற பேரங்களை நடத்துவதில் ஈடுபட்டதோடு, ஒரு தொழிலாளிக்கு ஒரு மாதத்திற்கு 8500 ரூபாய் ($142) ஊதிய உயர்வு என்ற அதன் கோரிக்கையை மாதத்திற்கு 4000 ரூபாய் ($65) என்று குறைத்து கொண்டது. தொழிற்சங்கத்தின் இதுபோன்ற ஒரு பாரிய பின்வாங்கல் கூட நிர்வாகத்திற்கு போதுமானதாக இல்லை, அது மாதத்திற்கு 3050 ($51) ரூபாய் என்ற அதன் "இறுதி முடிவை" வலியுறுத்தியது.

மாநில அரசாங்க தலையீட்டுக்குப் பின்னர் தொழிற்சங்கத்தின் சரணடைவால் துணிவு பெற்ற நிர்வாகம், தாக்குதலில் இறங்க துணிந்தது. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியதற்கு பின்னரில் இருந்து நிர்வாகம் எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கைகளை பல தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விவரித்தார்கள்.

ஒரு தொழிலாளி கூறுகையில், “தொழிலாளர்கள் ஒன்றாக கூடுவதைத் தடுப்பதற்காக, தொழிலாளர்கள் அவர்களின் ஓய்வு வேளையில் விளையாட பயன்படுத்தும் கேரம் போர்டை (ஒரு பிரபல விளையாட்டு) நிர்வாகம் நீக்கி உள்ளது. அதேபோல தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதற்காக சுவரில் தொங்க விட்டிருந்த கடவுள்களின் படங்களும் நீக்கப்பட்டு விட்டன.

இப்போது வேலை நேரங்களில் சிறுநீர் கழிக்கவோ அல்லது நீர் அருந்தவோ சென்றால் கூட 'தவறவிட்ட' நேரமாக கருதப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வெறுப்பில் சில தொழிலாளர்கள் தொழிற்கூடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளிலேயே சிறுநீர் கழிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு 10 நிமிடம் மட்டுமே தேனீர் இடைவேளை, வெறும் அரை மணி நேரம் உணவு இடைவேளை அளிக்கப்படுகிறது,” என்றார்.

மற்றொரு தொழிலாளர் கூறுகையில், “செல்பேசி பயன்படுத்தியதற்காக அல்லது கழிவறைகளில் நெடுநேரம் செலவிட்டமைக்காக பல தொழிலாளர்கள் ஒரு அறிவுரை கடிதம்அல்லது சம்பவ குறிப்பறிக்கை பெற்றுள்ளனர். இப்போது தொழிலாளர்கள் தொழிற்கூடம் தொடங்கும் நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே அங்கே இருக்க வேண்டி உள்ளது. இந்த 20-நிமிடத்திற்கு முன்னதாகவே இருக்க வேண்டி இருப்பது கதவடைப்புக்குப் பின்னர் தொழிலாளர்கள் மீது ஏதேச்சதிகாரமாக திணிக்கப்பட்டது. ஆலைக்கு 20இல் இருந்து 25 நிமிடங்களுக்கு முன்னதாகவே வரும் வகையில் நாங்கள் நிறுவன பேருந்துகளால் இப்போது அழைத்து வரப்படுகிறோம்என்றார்.

20 நிமிடங்களுக்கு முன்னதாகவே தொழிலாளர்கள் வர வேண்டுமென்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது: “ஏப்ரல் 22 அன்று ஜிகானி வழித்தடத்தில், நிறுவன பேருந்து இரண்டாவது ஷிப்ட் தொழிலாளரைக் ஏற்றி வர 25 நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்தது, இதனால் 36 தொழிலாளர்கள் தனித்து விடப்பட்டார்கள். மீண்டும் ஏப்ரல் 25இல் தசரதஹல்லி சாலையில் அதே பிரச்சினை ஏற்பட்டது, 14 தொழிலாளர்கள் பேருந்தில் வர முடியவில்லை. இந்த ஏதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கம் போராடவில்லை,” என்றார்.

நிர்வாகம் முதலில் வலியுறுத்தியதைப் போல தொழிலாளர்கள் "நன்னடத்தை" உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்தார்கள் என்ற உண்மையைப் பயன்படுத்தி TKWU தலைமை பலவற்றை நடத்த முயன்று வருகிறது. ஆனால் ஏதேச்சதிகாரரீதியில் ஒரு கதவடைப்பை அறிவித்தும், 30 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தும், நிர்வாகம் தான் தொழிலாளர்களை மிரட்டும் மற்றும் மவுனமாக்கும் ஒரு திட்டமிட்ட நகர்வாக ஒரு "நன்னடத்தை" பத்திரத்தில் தொழிலாளர்கள் தனித்தனியாக கையெழுத்திட வேண்டுமென்ற கோரிக்கையை உயர்த்தியது.

ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்க தலைமை எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு உடனடியாக வேலைநிறுத்தத்தை முடிக்க அதனால் ஆன மட்டும் முயன்றது. ஊதிய உயர்வு மீதான முடிவில்லா பேரம்பேசல்கள் மீது தொழிலாளர்கள் ஆத்திரமடைந்த போது, தொழிற்சங்கம் பெப்ரவரியில் ஒரு-நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது. ஆனால் நிர்வாகம் ஒரு கதவடைப்பை அறிவித்தபோது, தொழிற்சங்க தலைமை தொடக்கத்தில் சலனமற்று இருந்தது. அதன் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து தான், தலைமை ஏப்ரல் 2இல் ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியது, அதுவுமே மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கம் தலையீடு செய்ய அழுத்தம் அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட நகர்வாகும்.

அந்த போராட்டம் தனிமைப்படுத்தப்படும் விதத்தில் நகர்ந்தப்பட்ட நிலையில் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட போது, அரசாங்கத்தின் தலையீட்டுக்குப் பின்னர் அனைத்து போராட்டங்களும் தொழிற்சங்கத்தால் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே கூட, தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை இழந்து வேலைக்குத் திரும்ப தொடங்கினார்கள்.

எவ்வாறிருந்த போதினும், நிபந்தனையின்றி வேலைக்குத் திரும்பும் தொழிற்சங்க தீர்மானத்தை நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்த்தார்கள். TKMWU தலைமை, போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்வதற்கான தொழிற்சங்க தலைவர்களின் திட்டங்களை கீழறுத்துவிடும் என்று அஞ்சி, இந்த எதிர்ப்பு குறித்து எந்த விவாதத்தையும் மறுத்துவிட்டது.

நிபந்தனையின்றி" வேலைக்கு திரும்ப தொழிலாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக, தொழிற்சங்கம் வழக்கறிஞர் அனானடா ராமை தொழிலாளர்களோடு பேச வரவழைத்தது. அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் பின் அவர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்கும் அபாயம் ஏற்படும் என அவர் எச்சரித்தார்.

இந்தியாவில் டொயோட்டா தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு எதிராக வாகனத்துறை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் உலகளாவிய தாக்குதலின் ஒரு உள்ளார்ந்த பாகமாக உள்ளன. அவை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கொடூரமான கூலி-வெட்டுக்கள் மற்றும் ஆலை மூடல்களைக் கொண்டு வீழ்ச்சி அடைந்து வரும் இலாப விகிதங்களைச் சரிகட்ட முயன்று வருகின்றன, அதேவேளையில் ஆலைகளை மலிவு-உழைப்பு நிலவுகின்ற நாடுகளுக்கு மாற்றியும் வருகின்றன.

இந்தியாவில் ஏனைய வாகனத்துறை நிறுவனங்களும், அரசாங்கங்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் உதவியோடு காட்டுமிராண்டித்தனமான தொழிலாளர் நிலைமைகளுக்கு எதிரான இந்திய தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க திட்டமிட்டு முயன்று வருகின்றன. மாருதி-சுஜூகி வாகனத்துறை நிறுவனத்தின் 147 தொழிலாளர்கள் மீதான கொடூர ஒடுக்குமுறை இதற்கான ஒரு சான்றாகும், அவர்கள் ஜூலை 2012இல் கொல்லப்பட்ட ஒரு ஆலை மேலாளரின் படுகொலைக்காக, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். (பார்க்கவும்: "இந்தியா: மாருதி சுஜுகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கு விசாரணை தொடர்கிறது)

இந்த தாக்குதல் சற்றே முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களை அடுத்து தீவிரப்படுத்தப்படும். கொத்தடிமை நிலைமைகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிராக, மற்றும் இறுதியாக மனிதகுலத்தின் அவலங்களுக்கு மூலகாரணமாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்த, டொயோட்டா தொழிலாளர்கள் இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள ஏனைய தொழிலாளர்களோடு அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் ஒரு முன்னோக்கை ஏற்பது அங்கே அவசிய தேவையாக உள்ளது.