சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Vote SEP and PSG in the European elections!

ஐரோப்பிய தேர்தல்களில் SEP மற்றும் PSGக்கு வாக்களியுங்கள்!

Ulrich Rippert
22 May 2014

Use this version to printSend feedback

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் இன்று தொடங்கி ஞாயிறன்று முடிவடையும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல், உழைக்கும் மக்களுக்கு அவர்களின் வாக்குகளைக் கொண்டு ஒரு அரசியல் சமிக்ஞையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இங்கிலாந்தின் சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஜேர்மனியின் சோசலிச சமத்துவ கட்சி (Partei für Soziale Gleichheit) இன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு நாம் அனைத்து வாசகர்களையும் கோருகிறோம். யுத்தம், இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக வாக்களியுங்கள்! ஒரு சோசலிச முன்னோக்கிற்கு உங்களின் ஆதரவை வழங்க மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்ப உங்களின் வாக்குகளைப் பயன்படுத்துங்கள்!

நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமரசமற்ற எதிர்ப்பாளர்கள் ஆவோம், அது ஐரோப்பாவின் ஐக்கியத்திற்கானது அல்ல, மாறாக பெரும் சக்தி வாய்ந்த ஐரோப்பிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சர்வாதிகாரத்திற்கானது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புநிலை குறிப்பு பேரழிவுகரமாக உள்ளது. சிக்கன நடவடிக்கைகள், சமூக சேவைகளில் வெட்டுக்கள், பாரிய உளவுவேலைகள் மற்றும் பரந்த பெரும்பான்மையினரை விலையாக கொடுத்து ஒரு சிறிய சிறுபான்மையினரைச் செழிக்க செய்தமை ஆகியவற்றிற்கு அது பொறுப்பாகின்றது. சண்டே டைம்ஸ் வெளியிட்ட சமீபத்திய பணக்காரர்களின் பட்டியல் எடுத்துக்காட்டுவதைப் போல இங்கிலாந்தில் வாழும் ஆயிரம் மிக பெரிய செல்வந்தர்கள் 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் அவர்களின் சொத்துக்களை இரட்டிப்பாக்கி உள்ளார்கள் என்பதும், தற்போது அவர்களிடம் மொத்தம் 519 பில்லியன் பவுண்டுகள் உள்ளது என்பதும் ஒட்டுமொத்த ஐரோப்பாவையுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஸ்தாபக கட்சிகள் அதன் காரியாளர்களை இழந்து வருவதோடு, அவை இன்னும் மேலதிகமாக வலதிற்கு நெருக்கமாக நகர்ந்து வருகின்ற அதேவேளையில், ஒரு சமூக புயல் அடித்தளத்தில் குமுறிக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு அரசியல் நிலைநோக்கை வழங்குவதன் மூலமாக இந்த புயலுக்கான தயாரிப்பை செய்து வருகிறோம்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவளிப்பது அல்லது தேசிய அரசை பலப்படுத்துவது என்ற இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் தவறான வாய்ப்பை நாம் நிராகரிக்கிறோம். நாம் அனைத்து எல்லைகளையும் கடந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக அடிமட்டத்திலிருந்து ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த போராடுகிறோம். இது ஐரோப்பாவில் என்ன நடந்து வருகிறதோ அதை தீர்மானிக்கும் பெரு வணிக மற்றும் நிதியியல் நலன்களுக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.

PSG மற்றும் SEPஇன் கூட்டு தேர்தல் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு சோசலிச அடித்தளத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதும், ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவதும் மட்டுமே தேசியவாதம் மற்றும் யுத்தத்திற்குள் ஐரோப்பா வீழ்வதைத் தடுக்கும். இது மட்டுமே அதன் வளம்மிக்க மூலவளங்கள் மற்றும் உற்பத்தி சக்திகளை ஒட்டுமொத்தமாக சமூகத்தின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கான மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கும்.”

ஊடகங்களோ, இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கான ஒரு மாதிரியாக பெரியளவில் சித்தரித்துக்கொண்டிருக்கின்றன. அது அந்த வகையான ஒன்றல்ல. மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் நாடாளுமன்றத்திற்கு விரோதமாக உள்ளனர் அல்லது அவற்றை புறக்கணிக்கின்றனர். ஏறக்குறைய 60 சதவீத வாக்காளர்கள் அதிருப்தியை காட்டி கலந்துகொள்ளாது அல்லது தேர்தல்களை புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்கணிப்புகளின்படி, கிடைக்கும் வாக்குகளில் 30 சதவீதம் வரையிலான வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கு போய் சேரும். இவை முக்கியமாக வலதுசாரி, வெளிநாட்டவரை எதிர்ப்பவர்கள் அல்லது பகிரங்கமாக பாசிச கட்சிகளாக இருக்கின்றன. பிரான்சின் தேசிய முன்னணி, இங்கிலாந்தின் UKIP அல்லது நெதர்லாந்தில் கீர்ட் வில்டர்ஸ் தலைமையிலான சுதந்திர கட்சி போன்ற அவற்றில் சில கட்சிகள் முறையே அவற்றின் நாடுகளில் முதலிடத்தில் கூட வரக்கூடும்.

அதிகரித்து வரும் இதுபோன்ற வலதுசாரி சக்திகளின் செல்வாக்கிற்கான பொறுப்பு முற்றிலுமாக சமூக ஜனநாயக கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் மீது தங்கி உள்ளது, இவை தான் அவற்றிற்கு அரசியல் மூடுதிரையை வழங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் யுத்த கொள்கைகளை அனைத்து எதிர்ப்புகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்துவதில் சமூக ஜனநாயகம் முதன்மை பாத்திரம் வகித்துள்ளது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பிரிட்டனில் டோனி பிளேயரால் மற்றும் ஜேர்மனியில் ஹெகார்ட் ஷ்ரோடரால் தொடங்கப்பட்ட இந்த கொள்கைகள், இப்போது இத்தாலியில் மத்தேயோ ரென்சி மற்றும் பிரான்சில் பிரான்சுவா ஹாலண்டால் அவற்றின் கடுமையான தன்மையோடு பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்விதத்தில் சமூக ஜனநாயகவாதிகள் அவர்களை சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்ள அனுமதிப்பதன் மூலம் வலதுசாரி வனப்புரைகளுக்கு பாதை அமைத்து தருகிறார்கள்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க ஐரோப்பிய இடது அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு அனைத்தையும் செய்து வருகின்றது. அவர்கள் பேச்சளவில் அது போன்ற கொள்கைகளை விமர்சிக்கின்ற அதேவேளையில், நடைமுறையில் அவற்றை ஆதரிப்பதோடு, அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். ஐரோப்பிய இடதின் முன்னணி வேட்பாளர் அலெக்சிஸ் சிப்ரஸ், அவர் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதாகவும், கிரேக்க கடனைத் திருப்பி செலுத்த உறுதி எடுத்திருப்பதாகவும் சளைக்காமல் வலியுறுத்துகிறார்.

இப்போது, இந்த ஐரோப்பிய தேர்தல்களில் சமூக ஜனநாயகவாதிகளும், ஐரோப்பிய இடதும் தங்களின் வாக்குகளை அதிகரித்துக்கொள்வதற்கான ஒரு வாதமாக வலதிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை பயன்படுத்தி வருகிறார்கள். இது ஏமாற்றுகரமானது மட்டுமில்லை, முற்றிலும் நேர்மையற்றதாகவும் உள்ளது. அவர்களின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும் போது தீவிர-வலதுடன் ஒன்று சேர அவர்கள் தயங்க மாட்டார்கள். எவ்வாறிருந்த போதினும், அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ள சமூக தாக்குதல்களின் புதிய சுற்றை ஜனநாயக முறைகளுக்குள் இருந்து நடைமுறைப்படுத்த முடியாது.

அவர்கள் இதை ஏற்கனவே உக்ரேனில் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள், அங்கே அவர்கள் ஒரு ஆட்சி சதியை நடத்த மற்றும் ஒரு வலதுசாரி, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவிலான ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வர ஸ்வோபோடா மற்றும் வலது பிரிவு (Right Sector) போன்ற பாசிசவாதிகளை நேரடியாக சார்ந்திருந்தார்கள்.

அமெரிக்காவும் ஜேர்மனியும் ஒரு மூன்றாம் உலக யுத்த அபாயமிருந்தும் கூட பின்வாங்குவதாக இல்லை என்பதை உக்ரேனிய நெருக்கடி தெளிவுபடுத்துகிறது. அவை திட்டமிட்டு ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்டிவிட்டு வருகின்றன, அது ஒரு அணுஆயுத பேரழிவுக்கு இட்டு செல்ல அச்சுறுத்துகிறது.

இராணுவவாதத்தின் இந்த புதுப்பிப்புக்கான காரணம், உலக முதலாளித்துவம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர நெருக்கடியாகும். வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களுக்கு சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் மலிவு உழைப்பை வழங்குவது, ஐரோப்பாவின் அதீத சமூகப் பதட்டங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவது, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஆக்ரோஷமான வெளிநாட்டு கொள்கையின் அடித்தளத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவை அதன் நோக்கத்தில் உள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கம் மட்டுமே யுத்தம் மற்றும் பாசிசத்தை தடுத்து நிறுத்த முடியும். ஆகவே ஐரோப்பிய தேர்தல்களை யுத்தவெறியர்கள் மற்றும் ஊடகங்களில் அவர்களுக்கு வக்காலத்துவாங்குபவர்களுக்கு எதிரான ஒரு பொதுக்கருத்தை தெரிவிக்க நாங்கள் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

பிரிட்டனில் மற்றும் ஜேர்மனியில், வாக்காளர்களுக்கு SEP மற்றும் PSG இன் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! என நாங்கள் அழைப்புவிடுகின்றோம். உக்ரேன் மற்றும் ரஷ்யா உட்பட, ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்புவிடுவது என்னவென்றால்: எமது கட்சியில் இணையுங்கள்! நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புங்கள்!

பிரச்சாரம் குறித்த மேற்கொண்டு தகவல்களுக்கு SEP (UK) தேர்தல் வலைத் தளம் மற்றும் PSG தேர்தல் வலைத் தளம் HYPERLINK "http://gleichheit.de/" (ஜேர்மன்HYPERLINK "http://gleichheit.de/" ) ஆகியவற்றைப் பார்க்கவும்.