சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thailand’s military coup

தாய்லாந்தின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி

Peter Symonds
21 May 2014

Use this version to printSend feedback

தாய்லாந்தின் இராணுவம் நேற்று ஆட்சி கவிழ்ப்பாக பெயரிடப்பட்ட ஒன்றை நடத்தியது. அதிகாலை வேளையில் பாங்காங் முழுவதிலும் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், இராணுவத் தலைமை தளபதி பிரயுத் சான்-ஓச்சா நாடு முழுவதிலும் இராணுவ சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்ததோடு, பொலிஸ் உட்பட அந்நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தின் மீதும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்.

அதன் நடவடிக்கைகள் "ஒரு ஆட்சி கவிழ்ப்பு இல்லை" என்றும் பாங்காங்கில் ஆறு மாத காலமாக கூர்மையான அரசியல் நெருக்கடி நிலவியதால் "சட்டம் ஒழுங்கைக் காப்பதற்காக" மட்டுமே அந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் இராணுவம் அபத்தமாக அறிவித்தது. இராணுவத் தலைவர்கள் அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமல், அதன் உயர்மட்ட பாதுகாப்பு குழுவைக் கலைத்துவிட்டு, தொலைக்காட்சி நிலையங்களை கைப்பற்றியதோடு, தணிக்கை, கைது நடவடிக்கை, சோதனை, மற்றும் பொதுவிடத்தில் ஒன்றுகூடுவதற்கு தடை என முக்கிய அதிகாரங்களைக் கையிலெடுத்துக் கொண்டார்கள்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் குறித்து வினவிய போது, தளபதி பிரயுத் செய்தியாளர்களிடம் அரசாங்கம் எங்கே இருக்கிறது?” என்று கேலியாக உரைத்தார். நீதிமன்றங்கள், அரசு அதிகாரத்துவம் மற்றும் முடியாட்சி போன்ற இராணுவ உயர்மட்ட அதிகாரிகளின் முக்கிய பிரிவுகள், மக்கள் ஜனநாயக சீர்திருத்த கமிட்டி (PDRC) மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க-விரோத போராட்டங்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிஹியூ தாய் (Pheu Thai) அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான அவற்றின் கோரிக்கைக்கும் பரிவிரக்கத்தோடு இருந்துள்ளன.

தெளிவாக பிஹியூ தாய் வெற்றி பெற்றிருந்த பெப்ரவரி தேர்தலின் முடிவுகளை நீதிமன்றம் பெப்ரவரியில் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதற்குப் பின்னர், அரசாங்கமே கூட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களோடு காபந்து முறையில் இருந்தது. அதிகார துஷ்பிரயோகம் என்ற ஜோடனை குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரதம மந்திரி இன்ங்லக் ஷினாவத்ரா மற்றும் ஒன்பது கேபினெட் மந்திரிகளை நீக்கி, மே 7 அன்று, அரசியல் சாசன நீதிமன்றம் ஒரு நீதித்துறை ஆட்சி கவிழ்ப்பை நடத்தியது. முன்னதாக இராணுவம் நேரடியாக அதிகாரத்தை ஏற்றிருக்கவில்லை என்றால், அந்த அரசாங்கம் செனட் மற்றும் நீதிமன்றங்களிடமிருந்து மேலதிகமான சவால்களை முகங்கொடுத்து வருவதால், அவையே அதை பதவியிலிருந்து இறக்கி விட்டிருக்கக்கூடும்.

ஒபாமா நிர்வாகம் இன்ங்லக்கின் நீக்கத்தை மவுனமாக ஆதரித்ததைப் போலவே, இந்த ஆட்சி கவிழ்ப்பையும் ஆதரித்து வருகிறது. அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் பிசாக்கி கூறுகையில், இராணுவத்தின் நடவடிக்கைகள் ஓர் ஆட்சி கவிழ்ப்பு சதி அல்ல, “தாய் அரசியலமைப்பில் இராணுவ சட்டம் அனுமதிக்கப்படுகிறது" என்று வலிறுத்தினார். உண்மையில், தளபதி பிரயுத் இராணுவத்தால் வரையப்பட்ட 2007 அரசியலமைப்பின் அடித்தளத்தில் அவரது நடவடிக்கைகளை நியாயப்படுத்தவில்லை, மாறாக தாய்லாந்தின் முழு முடியாட்சி காலத்திய ஒரு தெளிவற்ற நூற்றாண்டு பழமையான சட்டத்தை மேற்கோளிட்டு காட்டி இருந்தார்.

இராணுவம் மிகத் தெளிவாக வாஷிங்டனுடன் கலந்தாலோசித்து அதன் திட்டங்களை அமைத்திருந்தது. அந்நாட்டின் அரசியல் நெருக்கடி குறித்து "பல தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களை" சந்திக்க கிழக்கு ஆசியாவிற்கான அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் டானியல் ரஸ்செல் கடந்த மாதம் பாங்காங் வந்திருந்தார். ஒபாமா நிர்வாகம், சீனாவை அடிபணிய வைக்கும் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட அதன் "ஆசிய முன்னெடுப்பின்" ஒரு முக்கிய உட்கூறாக தாய்லாந்தை, குறிப்பாக அந்நாட்டின் இராணுவத்தை, கருதுகிறது. பெண்டகன் தாய் இராணுவத்துடன் அதன் ஒத்துழைப்பை அதிகரித்து வருவதோடு அது தாய் விமானத்தளங்களை அணுகுவதற்கும் முயன்று வருகிறது, அவை 1960களில் வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்காவின் தரப்பிலிருந்து குண்டு வீச முழுமையாக பயன்படுத்தப்பட்டன.

இன்ங்லக்கின் சகோதரர் யாட்சின் ஷினாவத்ரா 2006இல் பிரதம மந்திரியாக இருந்த போது அவரை பதவியிலிருந்து தூக்கியெறிந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதியிலிருந்து தொடங்கிய அரசியல் ஸ்திரமின்மையின் எட்டு ஆண்டுகளைப் பின்தொடர்ந்து நேற்றைய ஆட்சி கவிழ்ப்பு சதி நடந்துள்ளது. ஆளும் மேற்தட்டுகளுக்குள் நிலவும் கடுமையான கன்னை மோதல்கள் 1997-98 ஆசிய நிதிய நெருக்கடியில் அதன் வேர்களைக் கொண்டுள்ளன, அந்த நெருக்கடி தாய் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடும் மறுசீரமைப்பு கோரிக்கைகளை எதிர்கொள்ள தொலைத்தொடர்பு பில்லியனர் தாக்சினை ஆரம்பத்தில் ஆதரித்த, முடியாட்சியை மையமாக கொண்டிருந்த, அந்நாட்டின் பாரம்பரிய மேற்தட்டுக்கள் அவரது பொருளாதார முறைமைகள் அவர்களின் வியாபார நலன்கள் மற்றும் ஆதரவு வலையமைப்புகளை வெட்ட தொடங்கிய போது அவருக்கு எதிராக திரும்பின. அவை குறிப்பாக நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கான அவரது மட்டுப்படுத்தப்பட்ட வெகுஜன கையளிப்புகளுக்கு விரோதமாக இருந்தன.

இராணுவ சட்ட உத்தரவின் முதன்மை இலக்கில் இருப்பது, பெரிதும் தாக்சின்-ஆதரவு காபந்து அரசாங்கம் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கமும், கிராமப்புற மக்களும் ஆவர். ஆசியா முழுவதிலும் தீவிரமடைந்து வரும் ஒரு பொருளாதார மந்தநிலைமை மற்றும் தாய்லாந்தின் எதிர்மறை வளர்ச்சி இவற்றிற்கு இடையே, அரசாங்கமும் சரி எதிர்கட்சியும் சரி தாக்சினின் மட்டுப்படுத்தப்பட்ட சமூக விட்டுகொடுப்புகளை திரும்ப பெறுவது உட்பட சிக்கன முறைமைகளைத் திணிக்க பொறுப்பேற்றுள்ளன. அதே நேரத்தில், ஆளும் மேற்தட்டின் அனைத்து பிரிவுகளும் உயர்மட்டத்தில் நடக்கும் அரசியல் சண்டை அடிமட்டத்தில் ஒரு சமூக மேலெழுச்சிக்கு பாதை அமைக்குமென்ற ஆழ்ந்த அச்சத்தில் உள்ளன.

2010இல் இராணுவ-ஆதரவிலான ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிராக நீடித்திருந்த சிவப்பு சட்டை" போராளிகளின் போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளி செல்ல அச்சுறுத்திய நிலையில், தாக்சின்-ஆதரவிலான மற்றும் தாக்சின்-விரோதமான முதலாளித்துவத்தின் இரண்டு கன்னைகளுமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தன. அதேவேளையில் தாக்சின்-ஆதரவிலான சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்தின் ஐக்கிய முன்னணி (UDD) அமைப்பின் பெயரளவிலான தலைமையின் கீழ், அந்த போராட்டங்களின் முதுகெலும்பாக இருந்த கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகள் அவர்களின் சொந்த வர்க்க முறையீடுகளை உயர்த்த தொடங்கினார்கள். ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையோடு இராணுவம் அதற்கு விடையிறுப்பு காட்டியது, அதில் குறைந்தபட்சம் 90 நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டார்கள் மற்றும் 1,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள்.

மொத்தத்தில் ஆளும் வர்க்கம் ஒரு சமூக வெடிப்பை தவிர்க்க தீவிரமாக முனைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில், அரசாங்கமும் UDD தலைவர்களும் திட்டமிட்டு அவர்களின் சிவப்பு சட்டை ஆதரவாளர்களை சிதறடித்தனர். பாங்காங்கைச் சுற்றி உள்ள பெரும் ஆலைகளில் கூடிய தொழில்துறை தொழிலாள வர்க்கம் அந்த சச்சரவில் நுழைய தொடங்கி விடுமோ என்று அவர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார்கள்.

நேற்றைய இராணுவ சட்ட உத்தரவிற்கு கண்டனம் தெரிவிப்பதில் இருந்து விலகி இருந்து, தற்காலிக நீதித்துறை மந்திரி சைகசெம் நிடிசிரி (Chaikasem Nitisiri) ஊடகங்களிடம் கூறுகையில், “நாட்டின் பாதுகாப்பை இராணுவம் கவனித்து வருவது நல்லது தான்,” என்றார். UDD தலைவர் ஜடுபோர்ன் ப்ரோம்பன் (Jatuporn Prompan) அறிவிக்கையில், இராணுவ சட்டம் "நல்லது தான்" என்று அறிவித்தோடு, துருப்புகளோடு ஒத்துழைக்குமாறு அவரது ஆதரவாளர்களைக் கேட்டு கொண்டார்.

இந்த கோழைத்தனமான அடிபணிவானது, சனங்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது நீண்டகால தாக்குதலைத் தொடங்கி வைத்து, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் இரக்கமின்றி ஒடுக்குவதற்குமான ஒரு இராணுவ-ஆதரவிலான சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் நிகழ்முறையைச் செய்து முடிக்க அரசாங்க-விரோத சக்திகளை மட்டுமே ஊக்குவிக்கும்.

தாய் இராணுவத்தின் நாடாளுமன்ற ஜனநாயக கலைப்பிற்கு வாஷிங்டனின் ஆதரவு அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கூர்மையான எச்சரிக்கை ஆகும். சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ கட்டமைப்பு மற்றும் தயாரிப்பில், வாஷிங்டனுடன் நிபந்தனையற்ற முறையில் அணி சேரும் வலதுசாரி, ஏதேச்சதிகார அரசாங்கங்களுக்கு ஆதரவு வழங்க அல்லது அவற்றை நிறுவ அமெரிக்கா சற்றும் தயங்காது என்பதோடு அது இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு நிகழ்ச்சி நிரலைத் திணிக்க பொலிஸ்-அரசு முறைமைகளில் தங்கியிருக்க விரும்புகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி எடுத்துக்காட்டுவதைப் போல, காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவம், உழைக்கும் மக்களின் சமூக தேவைகள் மற்றும் ஜனநாயக அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முற்றிலும் இலாயக்கற்று உள்ளது. அப்பிராந்தியம் முழுவதிலும், தாய்லாந்து, தென்கொரியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் ஜனநாயகத்தின் இற்றுபோன முகப்பு தோரணம் வேகமாக கிழிக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரங்களைப் பாதுகாக்கும் ஒரு போராட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளுக்குத் தலைமை கொடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். அதுபோன்ற ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த, தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளிடம் இருந்து தாய்லாந்தில் அரசகுடும்ப முகாம் அத்துடன் தாக்சின், பிஹியு தாய் மற்றும் UDD ஆகியவற்றிடம் இருந்துஅவர்களின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க வேண்டி உள்ளது. இந்த போராட்டம் அதன் சுபாவத்தில் சர்வதேச தன்மையில் உள்ளது. அந்த பிராந்தியம் முழுவதிலுமான மற்றும் பிரதான முதலாளித்துவ மையங்களில் உள்ள, முக்கியமாக அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தரப்பில் திரும்புவதன் மூலமாக மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் ஏகாதிபத்திய மேலாதிக்கம், சதி மற்றும் தலையீடுகளுக்கு எதிராக போராட முடியும்.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்கு இருபதாம் நூற்றாண்டின் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்க போராட்டங்களின் படிப்பினைகள் அடிப்படையில், ஒரு புதிய புரட்சிகர தலைமை தேவைப்படுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் கட்டியமைக்கப்பட வேண்டும்.