சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Chris Marsden: Ukraine crisis—A turning point in world history

கிறிஸ் மார்ஸ்டன்: உக்ரேன் நெருக்கடிஉலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை

By Chris Marsden
8 May 2014

Use this version to printSend feedback

மே 4 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச இணையவழி மே தின கூட்டத்துக்கு ஐக்கிய இராச்சியத்தின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

தோழர்களே, நண்பர்களே,

கியேவ் அரசாங்கத்தின் பாசிச ஆதரவாளர்களால் ஒடேஸாவில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு சில நாட்களின் பின்னரும் மற்றும் ஸ்லேவ்யன்ஸ்க், கிரமடோர்ஸ்க் மற்றும் ஏனைய நகரங்கள் மீது இடம்பெறும் இராணுவத் தாக்குதலின் மத்தியிலுமே இந்த மே தினக் கூட்டம் நடைபெறுகின்றது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இவை கொடூரமான குற்றங்களாகும். தீப்பற்றி எரிந்துகொண்டிக்கும் தொழிற்சங்க கட்டிடத்தில் இருந்து மக்கள் குதிப்பதையும், அவர்களை வலது பிரிவு (Right Sector) நாஜிக்கள் அடிப்பதையும் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளை உங்களில் அநேகமானவர்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுத் தள்ளப்படும் செய்திகளை வாசித்திருப்பீர்கள்.

இவை அனைத்துக்கும் ஒபாமா நிர்வாகமும் அதன் பங்காளிகளுமே நேரடி பொறுப்பாளிகள். இப்பிராந்தியத்திலும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராகவும் இராணுவத் தலையீட்டுக்கான ஒரு சாக்குப் போக்கினை வழங்கும் பொருட்டு ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான நிலைமைகளை அவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிவிட்டுள்ளனர். கியேவில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் காட்டிய குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு மீது ஜனாதிபதி ஒபாமா காட்டிய ஓர்வெல்லிய பாராட்டின் பின்னணி இதுதான்.

அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபைக்கான ஐக்கிய இராச்சியத்தின் தூதராகிய திரு Lyall Grant, உக்ரேனின் பொருத்தமான தகுந்த நடவடிக்கைள் மீது ரஷ்யாவின் செயற்கையான ஆத்திரம் குறித்த தனது வெறுப்புமிழும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இரட்டிப்பாக்கப்பட்டுள்ள மாஸ்கோவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுடன், உக்ரேனின் எல்லைகளில் நேட்டோ படைகள் குவிக்கப்படும் செய்திகள் அன்றாடம் வந்துகொண்டிருக்கின்றன.

கருங்கடலில் மூன்று நேட்டோ போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, நேட்டோவிற்கு உதவும் அமெரிக்க தரைப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், லித்துவேனியாவிற்கும் போலாந்துக்கும் மேலதிகமாக ஜெட் விமானங்களை அனுப்பவும் ஜனாதிபதி பராக் ஒபாமா பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். 173வது ஏயார்போன் பிரிகேட் கொம்பாட் டீமில் (Airborne Brigade Combat Team) இருந்து சுமார் 600 தரைப்படை துருப்புகள் போலந்திலும், மற்றும் எஸ்த்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய மூன்று பால்டிக் அரசுகளிலும் நிறுத்தப்படவுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, “வெற்றிகொள்ளக்கூடியஅனுவாயுதப் போர் என்ற றீகன்-சகாப்த நோக்கத்தை வாஷிங்டன் முழுமையாக புதுப்பிதாக இது தோன்றக் கூடும்.

ரஷ்யாவின் சொந்த அணுசக்தி திறன்களை ஒன்றுமில்லாததாக ஆக்குவதற்கென வடிவமைக்கப்படுகின்ற ஒரு ஏவுகணைப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதற்கான செலவு, பில்லியன் டாலர் கணக்கில் விரிவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் 2015ல் ருமேனியாவிலும் 2018ல் போலாந்திலும் இயங்கக்கூடிய தளங்களை அமைப்பதும் அடங்கும்.

இவை அனைத்தினதும் எதிரில், உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் கியேவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு புறம் இருக்க, தற்போதைய நிலைமையானது ரஷ்யாவுடன் கிரிமியா இணைத்துக் கொள்ளப்பட்டதற்கு மேற்கத்திய சக்திகளின் ஒரு மேம்பட்ட பதிலிறுப்பே என்று எவரும் இனிமேல் குறிப்பிட முடியாது.

சரியாகச் சொன்னால், மைதான் சதுக்க (Maidan) ஆர்ப்பாட்டங்களே கூட வாஷிங்டன், பேர்லின் மற்றும் தன்னல குழுக்களதும், அமெரிக்கா 5 பில்லியன் டாலர் வரை நிதியுதவி செய்த பாசிஸ்டுகளதும் ஒரு கூட்டணியினாலும் திட்டமிட்டு இயக்கப்பட்ட ஒரு அரசியல் நடவடிக்கையாகவே இருந்தன.

நேட்டோ விரிவாக்கத்தை ரஷ்யாவின் எல்லைகள் வரை தள்ளும் முன்தீர்மானிக்கப்பட்ட கொள்கைக்கு அவசியமாக இருக்கின்ற காரணத்தை வழங்கும் பொருட்டு, மாஸ்கோவை பிரதிபலிக்கச் செய்யத் தூண்டுவதே இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் நோக்கமாகும்.

அமெரிக்காவின் சவால் செய்ய முடியாத பூகோள மேலாதிக்கத்துக்கு எதிரான ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத தடையாக காணப்படும், ரஷ்ய மற்றும் சீன முதலாளித்துவ வர்க்கங்கள் இப்போது அனுபவிக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தைக் கூட வாஷிங்டனின் ஆளும் வர்க்கம் இனிமேலும் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

மேலும், ரஷ்யா மற்றும் சீனாவில் தொடங்கி உலகளாவிய சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள் மறுபங்கீடு செய்யப்படுவதில் இருந்து தாங்கள் விலக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் காரணமாக, அனைத்து ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவின் வழிநடத்தலை பின்பற்றிச் செல்லவே விருப்பத்துடன் இருக்கின்றன.

ரஷ்யாவை பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் சுற்றி வளைத்து, தனிமைப்படுத்தி, புட்டின் அரசை ஸ்திரமற்றதாக்கி மற்றும் எல்லா வகையிலும் கியேவில் திணிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு அரசை நுழைப்பதே பொதுவான நோக்கமாகும்.

இந்த சூழ்ச்சிகளுக்கு மிகவும் துன்பகரமாக விலை கொடுத்துக்கொண்டிருப்பதும் விலை கொடுக்கப் போவதும் உக்ரேனிலும் ரஷ்யாவிலும் உள்ள தொழிலாள வர்க்கமே ஆகும். தொழிலாளர்கள் தங்களது சொந்த அரசியல் பிரதிபலிப்பை சூத்திரப்படுத்துவதிலேயே இப்போது அனைத்தும் தங்கியிருக்கின்றன.

அதன் அர்த்தம், இரு பகுதி மக்களதும் வரலாற்றை வடிவமைத்த மற்றும் 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சியின் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கத்தில் வெளிப்பாட்டைக் கண்ட, ஆழமான புரட்சிகர பாரம்பரியங்களுடன் மீண்டும் இணைந்துகொள்வதாகும்.

இப்போது, கீயேவ் அரசு மீது நிலவும் எதிர்ப்பானது பிராந்திய அடிப்படையிலானதாக மற்றும் பிராந்திய சுயாட்சி அல்லது கிரிமியா விடயத்தில் போல் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவானதாக காணப்படுகின்றது. ஆனால், கியேவ்வின் மேற்கத்தைய ஆதரவாளர்கள் ஒரு புறம் இருக்க, கியேவ் ஆட்சியை எதிர்க்கின்ற கடமையைக் கூட புட்டின் பிரதிநிதித்துவம் செய்கின்ற ரஷ்ய தன்னலக் குழுக்களையோ அல்லது அவர்களது உள்ளூர் ஆதரவாளர்களையோ நம்பி ஒப்படைக்க முடியாது.

அடிப்படையில், சோவியத் ஒன்றியம் தகர்க்கப்பட்டதன் துன்பகரமான விளைவுகளை நாம் உக்ரேனில் காண்கிறோம்.

1989 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அரசுகளும் மற்றும் சோவியத் ஒன்றியமே கலைக்கப்பட்டமை, அக்டோபர் புரட்சியின் அடித்தளமாக இருந்த உலக சோசலிசப் புரட்சி என்ற சர்வதேசியவாத முன்நோக்கை ஸ்ராலினிச அதிகாரத்துவம் வரலாற்று ரீதியில் காட்டிக்கொடுத்ததன் உச்சகட்ட விளைவே ஆகும்.

ரஷ்யா தற்போது சுற்றிவளைக்கப்படுகின்றமைக்கான அடிப்படைச் சூழ்நிலையை உருவாக்கியது இதுவே ஆகும்.

நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், அச்சமயத்தில் தனது புதிய சிந்தனை பற்றி சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் பெருமைபட்டுக்கொண்டார் ஏகாதிபத்தியம் என்பது லெனினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை, முதலாளித்துவம் மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டால் ரஷ்யாவானது ஜனநாயக தேசங்கள் என்ற உலக குடும்பத்தின் ஒரு பெறுமதிமிக்க உறுப்பினராக வளர்ச்சியடையும் என்ற தனது கூற்றின் அடிப்படையில் அவர் சிந்தித்தார்.

என்னவொரு குருட்டு முட்டாள்தனம்.

ஏனைய எல்லாவற்றிலும் போலவே, உக்ரேனின் மாபெரும் புத்திரனான லியோன் ட்ரொட்ஸ்கி நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டால், ரஷ்யா பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு அரைக்-காலனித்துவமாவதை விளைவாக்கும் என அவர் எச்சரித்தார்.

வாஷிங்டன், பேர்லின், லண்டன் மற்றும் பாரிசின் சூறையாடும் திட்டத்தை தோற்கடிப்பதன் பேரில் ரஷ்யா மற்றும் உக்ரேனின் தொழிலாளர்கள் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை நோக்கியே திரும்ப வேண்டும்.

தனிநாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினின் பிற்போக்கு தேசியவாத வேலைத்திட்டத்துக்கு விரோதமாக ட்ரொட்ஸ்கியின் இடது எதிர்ப்பினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இருந்து பெற வேண்டிய அனைத்து வரலாற்றுப் படிப்பினைகளையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் வேலைத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது. தனிநாட்டில் சோசலிச வேலைத் திட்டத்தின் மூலமே சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தின் நலன்களுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குள் அதன் சிறப்புரிமை நிலைமையை காக்கவும் அடிபணியச் செய்யப்பட்டது.

இலாப அமைப்பை தூக்கி வீசவும் சோசலிச உலகை உருவாக்கவும் போராடுவதற்கு 1938ல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் கறைபடியாத பதாதையை நாம் உயர்த்திப் பிடிக்கின்றோம்.

புட்டின் ஆட்சியானது முதலாளித்துவ மீட்சியின் சீரழிந்த ஒரு இறுதி விளைவாகும். திருட்டு, சூறையாடல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலின் ஊடாக பிரமாண்டமான செல்வந்தர்களாக வளர்ந்துள்ள ஒரு கைக்கூலி தன்னலக்குழு கும்பலை தவிர வேறு எதையும் அது பிரதிந்தித்துவம் செய்யவில்லை.

புட்டினையும் ஒரு ரஷ்ய தேசியவாத திட்டநிரலையும் ஆதரிப்பதென்பது, முன்னாள் யூகோஸ்லாவியாவை சிதறடித்த அதே வகையான இன-மொழிவாத உள்நாட்டுப் போருக்கே பாதை திறந்து விட உதவி செய்யும். மற்றும் அதுவே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் விரும்புகின்ற விளைவாகும்.

அத்தகைய ஒரு அழிவுகரமான பாதைக்கு எதிராக, சோசலிசத்திற்கான போராட்டத்தில் உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

பாசிஸ்டுகள், தன்னல குழுக்கள் மற்றும் ஏகாதிபத்திய கொள்ளைக்கார்களின் அவலட்சணமான கூட்டணிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு கூட்டுத் தாக்குதலுக்காக ஐக்கியத்திற்கான இந்த அழைப்பை நாம் விடுக்கிறோம் இது பலம்வாய்ந்த ஆதரவை பெறும் என நம்புகிறோம்.

ஏனைய இடங்களில் போலவே, உக்ரேனிலான சூழ்நிலையும், இதுவரை அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவிட்டு வருகின்ற தன்னல குழுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை களமிறக்குகின்ற புரட்சிகர சாத்தியங்களால் நிரம்பியிருக்கின்றது.

அடாவடித்தனமான முதலாளித்துவவாதிகள் மற்றும் பாசிச குண்டர்களின் ஒரு வெறுப்புக்குரிய கூட்டணி தங்களது அரசாங்கமாக அமர்த்தப்பட்டிருக்கிறது என்பதையிட்டு உக்ரேனிய மொழி பேசுகின்ற தொழிலாளர்களிடையே ஒரு ஆழமான கவலையும், தமது சகோதர சகோதரிகள் அத்தகைய கொடூரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாவதைக் கண்டு சீற்றமும் நிலவுகின்றது என்பதில் சந்தேகம் கிடையாது.

மேலும், அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும், ஏற்கனவே தத்தளித்து வாழ்க்கையை நடத்தி வருகின்ற தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அழிக்கக் கூடிய கொள்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவ மீட்சியை தொடர்ந்து வந்த வாட்டி வதைக்கும் கொள்கைகளினால் உலகின் வறிய நாடுகளில் 80வது இடத்தில் இன்று உக்ரேன் இருக்கிறது. இதன் மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர் - 11 மில்லியன் மக்கள்- மாதத்திற்கு 127 டாலர் என்ற உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டு அளவுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

வெறும் 15 பில்லியன் டாலர் மீட்புப் பொதிக்கு நிபந்தனையாக 80 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருக்கும் கடன்களை கட்டி முடிக்குமாறு இப்போது சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் கோரி வருகின்றன. அந்த 15 பில்லியன் டாலரும் சர்வதேச கடன்களைச் செலுத்தியே தீர்ந்துவிடும்.

இது இன்றியமையாத எரிபொருள் மானியங்கள் போன்ற பொதுச் செலவுகளில் பிரமாண்டமன வெட்டுக்களை கோரும். இப்போது உக்ரேனின் பொம்மை பிரதமர் தனது அரசாங்கத்தை ஒரு தற்கொலை அரசாங்கம் என அழைத்துக்கொள்வதில் புதுமை கிடையாது.

அடுத்த காலகட்டத்தில், வக்கப் போராட்டம் வெடிக்கும். அது முதலாளித்துவத்தின் ஏதாவது ஒரு பகுதிக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யும் சகல முயற்சிகளையும் கடந்து செல்லும். இந்தப் போராட்டத்தில், உக்ரேன் மற்றும் ரஷ்யத் தொழிலாளர்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை தமது பங்காளிகளாக பார்க்க வேண்டும்.

அத்தகைய ஒரு திசையமைவு யதார்த்தமாவது என்பது, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஆற்றும் தீர்க்கமான பாத்திரத்திலேயே இன்றியமையாமலும் நிச்சயமாகவும் தங்கியிருக்கின்றது.

நாம், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தினுள் இருக்கும் யுத்த-எதிர்ப்பு உணர்வு என்ற மிகப் பிரமாண்டமான சக்திகொண்ட ஒரு விடயத்தை எமது அடித்தளமாகக் கொண்டிருக்கின்றோம். இந்த உணர்வு, தமது உத்தியோகபூர்வ நிறங்களுக்கு அப்பால் ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக இருக்கின்ற எந்தவொரு கட்சியிலும் நிச்சயமாக அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை.

எல்லா இடங்களிலும், கடுமையான சிக்கன நடவடிக்கை மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதம் என்ற இரட்டை கொள்கைகளுக்கு எதிராகத் திரும்பியுள்ள வெகுஜன சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை காணப்படுகின்றது. இந்த இரண்டுக்கும் எதிரான போராட்டம், இப்போது முதலாளித்துவத்துக்கு நிரந்தரமாக முடிவுகட்ட தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கான அடித்தளமாகியுள்ளது.

நாம் குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்கவும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யக் கட்சியொன்று இல்லாத ஒரே காரணத்தால் தற்போது பலமற்றவர்களாக காணப்படுபவர்களின் சமூக சக்தியை கட்டவிழ்த்துவிடவும் முயற்சிக்கின்றோம்.

உலகம் பூராவும் இருந்து இந்த மே தினக் கூட்டத்தில் பங்கெடுக்கும் நீங்கள், தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள். பல்வேறு தனிப்பட்ட அனுபவங்கள் மூலம், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதன் ஊடான முன்னணிப் பாதையை புரிந்துகொள்ள முன்வந்தவர்கள் நீங்களே.

நீங்கள் அனவருமே இதே போன்ற, யதார்த்தத்தில் உலக வரலாற்று அனுபவங்களைக் கடந்து வந்த ஒரு வர்க்கத்தின் பிரதிநிதிகள். எதிர் வரும் காலத்தில் மேலும் மேலும் பலர் இதே முடிவுக்கு வருவர்.

நன்றி.