சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

PSG holds successful final election meeting

PSG இறுதி தேர்தல் கூட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது

By our correspondents
27 May 2014

Use this version to printSend feedback

ஜேர்மனியின் சோசலிச சமத்துவ கட்சி (Partei für Soziale Gleichheit) சனியன்று பேர்லின் டெம்பெல்ஹொஃப் (Tempelhof) என்ற இடத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தோடு அதன் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டது.

ஒரு PSG வேட்பாளரும், கட்சியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவருமான எலிசபெத் சிம்மர்மான் அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். ஐரோப்பிய தேர்தல்கள் எந்த மாதிரியான அசாதாரணமான நிலைமைகளின் கீழ் நடந்து வருகிறது என்பதை அவர் குறிப்பிட்டு காட்டியதோடு, “ஜேர்மனும், அமெரிக்காவும் மீண்டுமொரு முறை யுத்தத்திற்குத் தயாரிப்பு செய்து வருகின்றன,” என்றார். இதை முன்னிட்டு தான் PSG அதன் பிரச்சாரத்தின் இதயதானத்தில் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்தி இருந்தது.

முதல் பேச்சாளராக பேசிய நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாத்திரம் குறித்து உரையாற்றினார். தேர்தல்களில் 60 சதவீத வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பார்கள் என்றும், ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பாளர்கள் பலமாக ஆதாயமடைவார்கள் என்றும் முன்கணிப்புகள் அனுமானித்ததாக குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், “ரோம் உடன்படிக்கைக்கு அரை நூற்றாண்டிற்குப் பின்னர் மற்றும் மாஸ்ட்ரிச் உடன்படிக்கையில் இருந்து 22 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு பேரழிவுகரமான தீர்ப்பை வழங்குகின்றன,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆதாரவாளர்களின் கூற்றுகளுக்கு முரண்பட்ட வகையில், அது நல்வாழ்வு, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அமைதிக்காக இருக்கவில்லை என்று சுவார்ட்ஸ் தெரிவித்தார். ஜனங்களின் பெரும் பெரும்பான்மையினருக்கு அது, ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளை வீழ்த்துவது, வேலைகளை வேகப்படுத்துவது மற்றும் கடுமையான வறுமையை ஊக்குவிப்பதாக இருந்தது. கிரீஸில் ஐரோப்பிய ஒன்றிய முக்கூட்டால் திணிக்கப்பட்ட சமூக பேரழிவு ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்குமே ஒரு முன்னுதாரணமாக சேவை செய்தது. “ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன வேலைத்திட்டங்களின் ஒரு விளைவாக, ஐரோப்பிய குடியானவர்களின் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 145 மில்லியன் மக்கள், விரைவிலேயே வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையில் வாழ இருக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த சமூக எதிர்-புரட்சி ஜனநாயகத்தோடு பொருந்தக் கூடியதல்ல என்பதை சுவார்ட்ஸ் குறிப்பிட்டார். இதனால் தான் கடந்த பத்து ஆண்டுகளாக, NSAஐ கொண்டு அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் கூட, ஒரு பாரிய உளவுவேலை எந்திரம் கட்டப்பட்டு வந்தது.

புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் கதியைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மிக தெளிவாக அதன் ஐனநாயக விரோத குணாம்சத்தைக் காட்டியது என்று சுவார்ட்ஸ் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தடுப்புகளைக் கொண்ட ஒரு கோட்டையாக உள்ளது. சுருள் சுருளான கம்பி வேலிகளை அல்லது கடல் பாதையை ஒருவரால் கடந்து வர முடிந்தாலும் கூட அவர் இங்கே குற்றவாளியைப் போல சிறையில் அடைக்கப்படுவார் அல்லது மீண்டும் எங்கிருந்து வந்தாரோ அதே இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார். 1990இல் இருந்து மத்திய தரைக்கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 25,000 மக்கள் உயிரிழந்துள்ளனர்,” என்றார்.

ஐரோப்பாவை மேலே இருந்து, முதலாளித்துவ அரசாங்கங்களால் ஐக்கியப்படுத்த முடியாது என்ற மார்க்சிச பார்வையை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வரலாறும் உறுதிப்படுத்துகிறது. 1917இல் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, இது ஏகாதிபத்திய பாதுகாப்புவாதம் மற்றும் அதன் கருவிகள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான அதன் போராட்டம் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் பணியாகும்.”

ஐரோப்பா ஒரு சமூக வெடிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று விவரித்த சுவார்ட்ஸ், “மேல் பாகத்திற்கு அடியில், ஒரு பெரிய பூகம்பம் குமுறிக் கொண்டிருக்கிறது. அதற்காக தான் நாங்கள் தயாரிப்பு செய்து வருகிறோம்,” என்றார்.

உத்தியோகபூர்வ அரசியல், ஸ்தாபக வலதுசாரி கட்சிகள் மற்றும் அதிதீவிர வலதால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது என்றாலும் கூட, ஐரோப்பாவில் "யுத்தம், வறுமை மற்றும் அவலத்தை ஏற்க தயாரில்லாத பல மில்லியன் கணக்கான மக்கள் அங்கே இருக்கிறார்கள்.”

சுவார்ட்ஸ் கூறுகையில், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுவதற்கு இடது கட்சி மற்றும் அதன் போலி-இடது துணை அமைப்புகளுக்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டம் அவசியமாகும். இந்த சக்திகள் லிபியா மற்றும் சிரியாவின் யுத்தங்களுக்கும் மற்றும் கியேவில் பாசிச ஆதரவிலான ஆட்சி கவிழ்ப்பு சதிக்கும் ஆதரவு அளித்தன. அவை "குழப்பமான இடதுகள் அல்ல, மாறாக வலதுசாரிகள்,” என்றார்.

WSWS ஆசிரியர் குழு அங்கத்தவரான ஜோஹான்னஸ் ஸ்டேர்ன், உக்ரேனிய சம்பவங்கள் குறித்தும், அவற்றோடு சம்பந்தப்பட்டுள்ள யுத்த அபாயங்கள் குறித்தும் பேசினார். “இந்த தேர்தலை யுத்தத்திற்கு எதிரான ஒரு வாக்கெடுப்பாக பயன்படுத்துமாறு நாங்கள் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தோம்,” என்றார்.

ஜேர்மன் அதிபர் மேர்க்கெல், வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்களின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார இலக்குகளுக்காக ஒரு உலக யுத்த அபாயத்தை ஏற்க தயாராகி விட்டனர். உக்ரேனிய நெருக்கடி அவர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதாகும்: “மேற்கத்திய சக்திகள் ஒரு பாசிச ஆட்சி கவிழ்ப்பை ஒழுங்கமைத்து, கியேவின் அதிகாரத்தில் இருந்த ஒரு ஆட்சியைப் பதவியிலிருந்து இறக்கியது. அந்த ஆட்சி அவர்களின் இசைக்கு நடனமாடி கொண்டு, நாட்டை ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் உந்தி வருவதோடு, ரஷ்யா உடனான மோதலை ஊக்குவித்திருக்கிறது,” என்று ஸ்டேர்ன் குறிப்பிட்டார்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்பு எவ்வாறு திட்டமிட்டு அரசியல்ரீதியாக தயாரிக்கப்பட்டு இருந்தது என்பதை ஸ்டேர்ன் குறிப்பிட்டுக் காட்டினார். கடந்த இலையுதிர் காலத்தில், “புதிய சக்தி, புதிய பொறுப்பு: மாறி வரும் உலகிற்கான ஒரு ஜேர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உட்கூறுகள்" என்ற தலைப்பில் ஒரு மூலோபாய அறிக்கை பிரசுரிக்கப்பட்டது. “இந்த அறிக்கைக்கு, 'உலக ஆதிக்கம் 3.0ஐ நோக்கிய உந்துதல்' என்று தலைப்பிடப்பட்டு இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையை ஆதரித்தன. இது சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினருக்கு மட்டுமல்ல, மாறாக இடது கட்சிக்கும் பொருந்தும். இடது கட்சியின் முன்னணி வெளியுறவு கொள்கை பிரதிநிதி ஸ்ரெபான் லீபிக் அந்த மூலோபாய ஆய்வறிக்கையை வரைவதில் ஒத்துழைத்திருந்தார், அதுமட்டுமின்றி ஏப்ரலில், இடது கட்சி பிரதிநிதிகள் முதல் முறையாக ஜேர்மன் ஒரு அன்னிய தலையீட்டில் ஈடுபட வாக்களித்திருந்தார்கள்.

ஆளும் மேற்தட்டும், அவர்களின் போலி-இடது ஆதரவாளர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் இராணுவவாதம் மற்றும் வல்லரசு அரசியலுக்குத் திரும்ப விரும்புவதோடு, எந்த விதத்திலாவது மக்கள் மீது அவர்களின் குற்றத்தனமான கொள்கைகளைத் திணிக்க தயாராகி உள்ளனர்,” என்று கூறிய ஸ்டேர்ன், “ஆனால் தொழிலாளர் வர்க்கம் ஒரு மூன்றாவது உலக யுத்தத்தை அனுமதிக்காது; அனுமதிக்கவும் முடியாது. 'இனியும் யுத்தம் வேண்டாம்' என்ற முழக்கத்தின் கீழ் பிரிட்டனின் SEP உடனான PSGஇன் கூட்டு ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரம், யுத்தம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தைக் குறித்த முன்கணிப்பாகும்,” என்று கூறி உரையை முடித்தார்.


மார்க் டொவ்சன்

ஐரோப்பிய தேர்தல் வேட்பாளர் மார்க் டொவ்சன் பிரிட்டனின் சோசலிச சமத்துவ கட்சியிலிருந்து வாழ்த்துக்களைக் கொணர்ந்திருந்தார். PSGஇன் அந்த சகோதரத்துவ கட்சி வடமேற்கு இங்கிலாந்தில் எட்டு வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. மான்செஸ்டர் மற்றும் லிவர்பூல் ஆகிய இரண்டு மிகப் பெரிய நகரங்கள் இந்த பகுதியில் உள்ளன, அத்தோடு ஏனைய பல தொழில்துறை மையங்களும் அல்லது டொவ்சன் கூறியதைப் போல "மிக துல்லியமாக கூறுவதானால், முன்னாள் தொழில்துறை மையங்கள்,” இங்கே உள்ளன.

1845இல் மான்செஸ்டரில், பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்தில் தொழிலாள வர்க்க நிலைமை என்ற அவரது பிரபல படைப்பை எழுதினார் என்று குறிப்பிட்ட டொவ்சன் அதிலிருந்து சில வரிகளை மேற்கோளிட்டார், “எங்கெங்கிலும் நாகரீகமற்ற அலட்சியம், ஒருபுறம் கடுமையான தன்முனைப்புவாதம் (egotism), மறுபுறம் பெயரிட முடியாத அவலம், எங்கெங்கிலும் சமூக யுத்தம், ஒவ்வொரு மனிதரின் வீடும் முற்றுகை இடப்பட்ட ஒரு நிலையில் உள்ளது, சட்ட பாதுகாப்பின் கீழ் எங்கெங்கும் தலைகீழாக சூறையாடப்பட்டிருக்கின்றன, அனைத்தும் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது, நமது சமூக நிலையின் விளைவுகள் இங்கே ஒளிவு மறைவின்றி வெளிக்காட்டப்பட்டிருப்பதற்கு முன்னால் ஒருவர் நிச்சயமாக பகிரங்கமாக தலை குனிய வேண்டியதிருக்கிறது, ஆனால் ஒட்டுமொத்த பைத்தியக்காரத்தனமான அலங்காரங்கள் இன்னமும் முழுவதும் தொங்கி கொண்டிருப்பதைப் பார்த்து மட்டும் தான் ஆச்சரியப்பட வேண்டி உள்ளது.”

பின்னர் டொவ்சன் கேள்வி எழுப்பினார், “160 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரிட்டனின் சமூக நிலைமை குறித்து இன்று நாம் என்ன கூற முடியும்?”

2008 பூகோள பொருளாதார நெருக்கடியில் இருந்து நடத்தப்பட்டுள்ள சமூக பேரழிவை, ஊதிய மற்றும் வாழ்க்கை தரங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மற்றும் பரந்துபட்ட வறுமையை அவர் சுட்டிக் காட்டினார். அவர் கூறினார்: “சுமார் 13 மில்லியன் மக்கள், இங்கிலாந்து மக்கள்தொகையில் 20 சதவீதத்தினர், வறுமை கோட்டில் வாழ்கின்றனர்.” நூறு ஆயிரக்கணக்கான பெரும்பாலும் இளம் தொழிலாளர்கள் அரசு செயல்படுத்தும் வேலை திட்டங்களிலும், zero-hour ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் கூப்பிடும் போது வேலைக்கு வரும் உடன்படிக்கைகளிலும் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பிந்தையவர்கள் வீட்டில் இருந்து, தேவைப்படும் போது வேலைக்கு கூப்பிடும் வரையில் காத்திருக்க வேண்டும். இதன் விளைவுகளை தற்கொலை முடிவுகளின் எண்ணிக்கையில் காணலாம். கடந்த ஆண்டில் மட்டும், 600,000 மக்கள் இந்த காரணத்திற்காக ஒரு ஆலோசனை அழைப்புக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த அழைப்பு எண்கள் பெரும்பாலும் ஓய்வின்றி இருக்கின்றன.

மறுபுறம், மிகப் பெரிய 1,000 பிரிட்டன் பணக்காரர்கள் மொத்தமாக 519 பில்லியன் பவுண்டுகளைக் (640 பில்லியன் யூரோ) கொண்டிருக்கிறார்கள், இது பிரிட்டிஷ் பொருளாதார வெளியீட்டில் மூன்றில் ஒரு பங்கும், கிரீஸின் பொருளாதார வெளியீட்டை விட மூன்று மடங்கும் ஆகும்.

கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து மற்றும் பொருளாதார ஆற்றல்களமாக அழைக்கப்படும் ஜேர்மனியிலும் கூட இதேபோன்ற நிலைமைகள் நிலவுகின்றன" என்று கூறிய டொவ்சன், லெஹ்மென் பிரதர்ஸின் திவால்நிலையோடு அமெரிக்காவில் எது தொடங்கியதோ அந்த ஒரு பொருளாதார தொற்று நோய் ஒட்டுமொத்த பூகோளத்தையும் பாதித்துள்ளதாக" கூறி முடித்தார்.

PSGஇன் துணை தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரீயர், யுத்தத்திற்கான சித்தாந்த தயாரிப்புகள் குறித்து உரையாற்றினார். 20ஆம் நூற்றாண்டின் வரலாறை மீண்டும் எழுதும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. “ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு மறுவாழ்வு அளிப்பதே அதன் நோக்கமாகும்.” இது முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் பொறுப்புறுதிக்கும், அத்தோடு இரண்டாம் உலக யுத்தத்தில் பேசப்படாத அதன் குற்றங்களுக்கும் பொருந்தும்.

1914இல் வெடித்த முதலாம் உலக யுத்தத்தின் நூறாவது நினைவாண்டில், ஜேர்மனி எந்தவொரு ஏகாதிபத்திய நோக்கமும் இல்லாமல் யுத்தத்திற்குள் இடறி விழுந்ததாக குறிப்பிடும் ஆய்வுகளோடு பல நூல்கள் தோன்றி உள்ளன.

வரலாற்றாளர்களின் சர்ச்சைகளுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஊடகங்கள் ஏர்ன்ஸ்ட் நோல்ட  இற்கு மறுவாழ்வளிக்க முனைந்துள்ளன, ஹிட்லரின் யுத்த பேரழிவுகள் போல்ஷ்விக் வன்முறைக்கு ஒரு விடையிறுப்பாக மட்டுமே இருந்ததாக அவர் வாதிட்டார், அது 1980களின் இறுதியில் இருந்ததைப் போலவே இப்போதும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கி இருப்பதாக வான்ட்ரீயர் தெரிவித்தார்.

அப்போது இந்த வரலாற்றுப் பொய்க்கு அங்கே கல்விசார் உலகில் பெரும் எதிர்ப்பு இருந்தது,” என்று தெரிவித்த வான்ட்ரீயர், “ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் பேராசிரியர்கள் அதையும் கடந்து நிலைப்பாடுகளை இன்னும் மேலதிகமாக முறைப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு எதிரானவர்கள் அங்கே அரிதாகவே யாரும் காணப்படுகிறார்கள்,” என்றார்.

அவர் பேர்லினை மையமாக கொண்ட வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை (Jörg Baberowski) பெயரிட்டார். “நோல்ட்டவிற்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியில் அவர் சரியாக குறிப்பிட்டிருந்தார்,” என்று கூறியதாக Der Spiegel மேற்கோளிட்டு இருந்தது. நாஜி குற்றங்களைச் சம்பந்தப்படுத்தி இருந்த Scorched Earth எனும் பார்பெரோவ்ஸ்கியின் நூல் லைப்சிக் புத்தக (Leipzig book) விருதைப் பெற்றதோடு, இடது கட்சியின் தரப்பில் சாய்ந்திருந்த ரோசா லூக்சம்பேர்க் அமைப்பால் பாராட்டப்பட்டது.

வரலாற்று திரித்தல்வாதம் மற்றும் பின்-நவீனத்துவ தத்துவங்களுக்கு இடையிலான தொடர்புகளை விவரித்த வான்ட்ரீயர், “பின்-நவீனத்துவவாதிகளைப் பொறுத்த வரையில், அங்கே வரலாற்று பொய்மைபடுத்தல்களோ, பொய்களோ கிடையாது, ஆனால் வெவ்வெறு உண்மைகள் மட்டுமே உள்ளன,” என்றார்.

பொய்கள் எப்போதும் யுத்தத்திற்கு அடித்தளம் அமைக்கின்றன,” என்று கூறிய வான்ட்ரீயர், “ஆனால் அதற்கு நேரெதிராக, யுத்த அபாயத்திற்கு எதிராக போராட விரும்பும் ஒவ்வொருவரும் வரலாற்று உண்மையின் மீது, 20ஆம் நூற்றாண்டு மீதான விஞ்ஞானபூர்வ புரிதலின் மீது ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்,” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக உரையாற்றிய PSGஇன் தலைவரும் கட்சியின் தலைமை வேட்பாளருமான உல்றிச் ரிப்பேர்ட், PSGஇன் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தினார்.


உல்றிச் ரிப்பேர்ட்

நாளை எங்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பது எங்களுக்கு தெரியாது,” என்று கூறிய அவர், ஆனால் தீர்க்கமான கேள்வி அது அல்ல. தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் "ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்பை எதிர்க்கும் ஒரு கட்சி அங்கே இருக்கிறது என்பதை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்,” என்றார்.

ஆக்ரோஷமான ஊடக பிரச்சாரங்களால் பீதியடைந்தோ அல்லது மனிதாபிமான யுத்த நோக்கங்கள் மற்றும் மனித உரிமைகள் என்ற பெயரில் இராணுவ தலையீடுகள் குறித்த இடது கட்சியின் பொய்களால் ஏமாற்றப்பட்டோ" PSG எதையும் கைவிட்டுவிடவில்லை என்று ரிப்பேர்ட் குறிப்பிட்டார். கட்சியின் பலம் முதலாளித்துவத்தின் மீதான அதன் வரலாற்று பகுப்பாய்வில் தங்கி உள்ளது. “யுத்தத்திற்கான பலம் பொருந்திய சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்று திரட்டுவதே எமது வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்,” என்றார்.

இராணுவத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை, “சமூக கூட்டுறவுகளில், அல்லது குறைந்த பட்சம், சமூகத்தை உள்ளடக்கி அமைந்திருந்த கடந்த காலத்திய வர்க்க உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டன" என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று தெரிவித்த ரிப்பேர்ட், அது நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்து விட்டது. பாரிய வர்க்க போராட்டங்களின் ஒரு புதிய காலப்பகுதி தவிர்க்க இயலாததாகும் என்றார்.

அவர் தொழிலாள வர்க்கம் மற்றும் முதலாளித்துவ கட்சிகள், குறிப்பாக SPDக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளி குறித்து பேசினார். “முதலாம் உலக யுத்தத்திற்கு SPD வாக்களித்து ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அது ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியாக ஒரு யுத்த கொள்கையை மற்றும் பாரிய சமூக தாக்குதல்களை திணித்து வருகிறது,” என்றார்.



காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூல்களை வாசகர்கள் பார்க்கின்றனர்

ஒரு புரட்சிகர கட்சி வர்க்க போராட்டங்களில் இருந்து தன்னிச்சையாக எழுவதில்லை. அது முன்கூட்டியே கட்டப்பட வேண்டுமென்பதை" வரலாற்று அனுபவங்கள் காட்டி இருந்தன. அது கடந்தகால போராட்டங்களின் அரசியல் படிப்பினைகளை உயிரோட்டத்தோடும், அவற்றை பரவலாக விதைத்தும் வரும் ஒரு காரியாளர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். “அதுவே நமது கட்சியின் முக்கியத்துவம் ஆகும்,” என்றார்.

ரிப்பேர்ட் ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் போராட்டங்களை மீளாய்வு செய்ததோடு, லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களையும் குறிப்பிட்டு காட்டினார். ஸ்ராலினிசமும், சோசலிசமும் ஒன்றே என்ற மிகப் பெரிய நூற்றாண்டு கால பொய்யை அவர் நிராகரித்தார். ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி சிறிதும் பின்வாங்காமல் மார்க்சிச கோட்பாடுகளை, அனைத்திற்கும் மேலாக சர்வதேசியவாதத்தைப் பாதுகாத்தார்.

ரிப்பேர்ட் கூறுகையில், “இன்று ஜேர்மன் அரசாங்கமும், ஆளும் மேற்தட்டும் சான்சலரின் அலுவலகத்தின் ஒரு சில முடிவுகளோடு, ஜேர்மன் ஜனாதிபதியின் ஒரு சில உரைகளோடு, மற்றும் பத்திரிகைகளின் ஒரு சில பிரச்சார கட்டுரைகளோடு அவர்கள் இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்குத் திரும்புவதைத் திணிக்க முடியுமென்று நினைக்கிறார்கள் என்றால், பின் அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதாகும்,” என்றார். “அங்கே ஒரு கட்சி இருக்கிறது அதை மிரட்ட முடியாது, அது வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்துள்ளதோடு, வரவிருக்கும் பிரதான வர்க்க மோதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்து வருகிறது. அதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவாகும்,” என்றார்.

இந்த குறிப்புகளோடும், மிகவும் உற்சாகமான வகையில் PSG கட்சி நிதி திரட்டப்பட்டதோடும் பேர்லினின் அந்த தேர்தல் கூட்டம் முடிவுற்றது.

மேற்கொண்டு தேர்தல் பிரச்சார தகவல்களுக்கு இங்கிலாந்தின் சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் வலைத்தளம் (ஆங்கிலம்) மற்றும் ஜேர்மனியின் சோசலிச சமத்துவ கட்சி தேர்தல் வலைத்தளங்களைப் (ஜேர்மன்) பார்க்கவும்.