சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Anti-terror law passed by the French Senate attacks democratic rights

பிரெஞ்சு செனட்டால் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கிறது

By Anthony Torres
28 October 2014

Use this version to printSend feedback

சோசலிஸ்ட் கட்சியால் (PS) முன்மொழியப்பட்டு செனட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பிரான்சிலிருந்து சுதந்திரமாக வெளியே செல்லும் உரிமையை மக்களிடமிருந்து பறிக்கின்றது. அரசு போலீஸ் சாதனத்தை வலிமைப்படுத்தும் இந்த சட்டம் ஜனநாயக உரிமைகள் மீதான படுபயங்கரமான தாக்குதலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இந்த சட்ட வரைவு எழுத்து வடிவம் அக்டோபர் 29 அன்று தேசிய சட்டமன்றத்திலும் பின்னர் நவம்பர் 4 அன்று செனட்டிலும் இறுதி வாசிப்பைப் பொருளாகக்கொள்ளும்.

இந்த சட்டம், பிரெஞ்சுக் குடிமக்கள் “பயங்கரவாத நடவடிக்கைகளில், போர்க்குற்றங்களில் அல்லது மனிதசமுதாயத்திற்கு எதிரான குற்றங்களில்” பங்கெடுக்கும் நோக்கத்தோடு வெளிநாடு செல்வதாக “நம்பக்கூடிய சரியான காரணங்கள்” இருந்தால் அல்லது அவர்கள் பிரான்சிற்குத் திரும்பிவரும்போது பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பதற்கு அவர்களை உள்ளாக்கும் சூழ்நிலைமைகளின் கீழ் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளின் அரங்கிற்கு அவர்கள் செல்லுவதாக அதிகாரப் பொறுப்புக்களில் உள்ளவர்களால் சந்தேகிக்கப்பட்டால் பிரெஞ்சுக் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்வதற்கு இந்த சட்டம் அரசாங்கத்திற்கு வகைசெய்யும்.

ஒருமுறை முடிவு எடுக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட நபரின் கடவைச்சீட்டு பறிமுதல் செய்யப்படும் மற்றும் அவர்கள்  நாட்டைவிட்டு வெளியேற இயலாமற் போகும்.

இந்த சட்டம், அதிகாரப் பொறுப்பில் உள்ளோர் “பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக” குற்றம்சாட்டும் இணையதளப் பகுதிகள், நீதிபதிகளின் முன் சம்மதம் எதுவும் இல்லாமல் அரசால் முடக்கப்படுவதை அனுமதிப்பதற்கும் கூட நோக்கம் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் [Deputies] மற்றும் செனட்டர்கள் “பயங்கரவாதத்தைத் தூண்டுதல்” மற்றும் “பயங்கரவாதத்தை ஆதரித்தல்” குற்றங்களுக்கான தண்டனகளை விளக்குவதில் இன்னும் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். AFP –ன் படி, ஆன் லைனில் குற்றங்கள் இழைக்கப்பட்டால், இந்த சட்டத்தின் தற்போதைய வடிவம் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 75000 யூரோக்கள் அபராதத்தை முன்மொழிவதுடன், இது ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் 100,000 யூரோக்கள் அபராதத்திற்கு உயர்த்தப்படவும் மொழிந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் பேச்சு சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்தை முன்நிறுத்துகின்றன. பயங்கரவாதம் என்ற வார்த்தைப் பதம் மிகவும் தெளிவற்றதாக மற்றும் அரசியல் சூழ்ச்சிக் கையாளலுக்கு உள்ளாகக் கூடியவாறு உள்ளது; இது அரசியல்வெளிப்பாட்டின் அனைத்துவிதமான நடவடிக்கைகள் மற்றும் அனைத்து வடிவங்களுக்கும், அவற்றுள் பல அல்கொய்தா போன்ற பயங்கரவாத வலைப்பின்னல்களின் நடவடிக்கைகளுடன் ஒன்றும் சம்பந்தப்படாது இருப்பினும், முதலாளித்துவ அரசியல்வாதிகளால் பிரயோகிக்கப்படும். அரசானது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தன்னை ஆயதபாணியாக்கிக் கொள்வது மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும், புரட்சிகர மற்றும் எதிர்ப்பு அரசியலை எதிர்த்துப் போராடுவதற்கும் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்கிறது.

உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு பிறருக்குத் தெரியாதவகையில் ஒரு  திருத்தம் கொண்டுவந்தார் என்று Le Monde தெரிவிக்கிறது: “புனித நுழைவு சுதந்திரம் இருப்பினும் கூட, ஒருவர் பொதுப் பாதுப்பாதுகாப்புக்கு “ஒரு அச்சுறுத்தலாக” கருதப்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரான்சுக்குள் நுழைவதைத் தடைசெய்யும் திறனைப் பற்றியதாக இது இருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் தேவை இல்லை – அந்த வார்த்தை பயன்படுத்தப்படக் கூட இல்லை. இந்த உருவாக்கமானது, அமைப்புக்கள் அந்த வார்த்தைப் பதம் சிறப்பாக ஜிப்சிகள் Roma விஷயத்தில் நோக்கங்கொண்டதில்லையா என்று கேட்கின்ற அந்த அளவு பரந்ததாக இருக்கின்றது. அவர்கள் திரும்பி வந்தால் உடனே வந்த இடத்திற்கே அனுப்பப்படுவர். இந்த சட்டத்தால் அவர்கள் நுழைவது தடைசெய்யப்பட முடியும்.”

இந்த திருத்தமானது செங்கென் உடன்பாட்டிற்கு சட்டவிரோதமானது மற்றும் மாறுபாடானது. அது ஜிப்சி [Roma] இனக்குழுவை பிற்போக்கான வகையில் கொடுமைப்படுத்துவதற்கு வழிவகைசெய்யும், இது ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்டின் அரசாங்கத்தின் முக்கியமான நடவடிக்கையாகும், இதன் மூலம் அது சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய தட்டினருக்கு வேண்டுகோள்விடுக்கிறது.

இந்த திருத்தமானது எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயக உரிமைகளின் மீதான குறிப்பிடத்தக்க தாக்குதலாகும். அது ஜிப்சிகளை (Roma) ஒடுக்குவதற்கு மட்டும் வழி திறக்கவில்லை, போலீஸ் அல்லது அரசாங்கத்தால் விரும்பத்தகாதவராகக் கருதப்படும் எந்த வெளிநாட்டவரும் நாட்டிற்குள் நுழையவிடாது தன்னிச்சையாக தடுப்பதற்கும் கூட வழி அமைக்கிறது.

பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிரான நிழல் யுத்தத்தைத் தொடுப்பதற்கு  அல் நுஸ்ரா போன்ற ஜிகாதிஸ்ட் குழுக்களை பாரிஸ் நம்பி இருந்தாலும், சிரியாவில் ஜிகாதிஸ்ட் குழுக்களில் போராடுவதற்கு பிரஞ்சு இளைஞர்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்கு இந்த பிற்போக்கு மற்றும் பாசாங்கு சட்டமானது, அரசாங்கத்தால் அவசரமாக வரையப்பட்டது. இது பிரான்சில் அரசின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் கண்காணித்தல், ஆத்திரமூட்டல் மற்றும் ஒடுக்குதல் கொண்ட ஒரு பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மனித உரிமைகள் கண்காணிப்பு ஆய்வாளரான Izza Leghtas, பிரான்சில் ஒரு போலீஸ் அரசுக்கான தயாரிப்புக்களில் இது முன்னேறிய கட்டம் என்று வலியுறுத்தினார்: “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு பிரெஞ்சு அரசாங்கமானது மிக விரிவான அதிகாரத்தைக் கொண்டுள்ளது.... அநீதியை தடுக்கும்பொருட்டு, பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் புதிய நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.”

2013ல் ஏற்கெனவே அரசாங்கமானது இராணுவ கையகப்படுத்தல் சட்டத்திற்கு வாக்களித்திருந்தது, அது அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவாண்மையில் உள்ள தங்களையொத்தவர்களுடன் ஒப்பிடத்தக்க வகையில் பிரெஞ்சு அதிகாரப் பொறுப்பாளர்களுக்கு அடிப்படைரீதியில் அதிகாரங்களை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகவாண்மையால் பரந்த அளவு சட்டவிரோத தனியார்  உரையாடல்களை ஒட்டுக் கேட்டல் மற்றும் மின்னணுவியல் புள்ளிவிவரத் தொகுப்புக்களை திரட்டல் பற்றிய எட்வார்ட் ஸ்நோவ்டனின் அம்பலப்படுத்தல்கள் வெளிவந்தன. பிரான்ஸ் அதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது ஆனால் 2013 சட்டமானது மின்னனுவியல் உளவுபார்ப்புக்கான போலியான சட்ட கட்டமைப்பை ஏற்படுத்தியது மற்றும் பிரெஞ்சு உளவுத்துறை சேவைகளுக்கு அதிகாரங்களை விரிவுபடுத்தியது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பெரும் தாக்குதலாகும். அது பிரான்சில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆழ்ந்த சீரழிவை பிரதிபலிக்கிறது, இது அமெரிக்காவில் பேர்க்குஷன், மிசௌரி ஆகிய இடங்களில் சர்வதேச ரீதியாக எடுத்துக்காட்டப்பட்டது, அங்கு போலீஸ், இராணுவத் தரத்திற்கு ஆயுதபாணியாக்கப்பட்டு நகரத்தையே பணயக்கைதியாக எடுத்தது.

ஹோலண்ட் அரசாங்கமானது மேற்கொண்டு வரும் மோசமான கெடுபிடிக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போர்க்கொள்கைகள் ஜனநாயக உரிமைகளுடன் ஒத்துப்போகக்கூடியதல்ல. எதிர்ப்பினை அச்சுறுத்திப் பணியவைக்கும் பொருட்டு ஜனநாயக உரிமைகள் மீதாக தாக்குவதற்கு இவ்வாறுதான் பேரளவில் முயற்சிக்கப்படுகின்றது, மற்றும் தேவைப்பட்டால் அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்ப்பினை நெரிக்கவும் முயற்சிக்கப்படுகின்றது.

2010ல் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான எண்ணெய் வேலைநிறுத்தத்தின்பொழுது, முந்தைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் எண்ணெய் கிடங்குகளிலும் வேலைநிறுத்த மறியல்களை அகற்றுவதற்கு கலவரம் ஒடுக்கும் போலீசை அனுப்பியது மற்றும் வேலை நிறுத்தத்தை நசுக்கியது. இராணுவ கையகப்படுத்தல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் துணைகொண்டு, உளவுபார்ப்பதற்கும், மற்றும் தேவைப்பட்டால் முழு பிரெஞ்சு மக்களையும் ஒடுக்குவதற்கும் அரசானது தனக்கு மேலும் அதிகாரங்களை அளித்துக் கொள்கிறது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். அது மீண்டும் ஒருமுறை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிற்போக்குத் தன்மையை காட்டுகிறது. அது  ஒடுக்குமுறைக் கொள்கைகளை தயார் செய்வதுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வன்முறைக் குரோதம் கொள்ளும் சமூக சக்திகளை அணிதிரட்டவும் முயற்சிக்கிறது.

இந்த போலீஸ் அரசு நடவடிக்கைகளுக்கான பொறுப்பு போலி இடது கட்சிகளின் மேல் விழுகிறது. 2012ல் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), லுற்த் ஊவ்றியேர் Lutte Ouvrière (LO—Workers Struggle) மற்றும் இடது முன்னணி ஆகிய அனைவரும், PS பிற்போக்குக் கொள்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவித்த அதேவேளை, ஜனாதிபதி தேரதலில் இரண்டாவது சுற்றில் ஹோலண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தன. இக்கட்சிகள் PS இன் போர் ஆதரவுக் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்திருந்தன மற்றும் ஹோலண்டுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு அரசியல் போராட்டத்தை தடுப்பதற்கு தங்கள் சக்திக்கு முடிந்த அளவு எல்லாம் செய்கின்றன.

ஜனநாயக உரிமைகளை இழிவுபடுத்தும் விதமாக, இந்த அமைப்புகள் NSA ஆல் மக்கள் உளவுபார்க்கப்பட்டது குறித்த அம்பலப்படுத்தல்கள் பற்றி அமைதியாக இருக்கின்றன மற்றும் அரசாங்கத்தின் ஜனநாயக எதிர்ப்பு சட்டங்கள் பற்றி இப்போது தொடர்ந்தும் அவ்வாறே செய்கின்றன.