சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US blocks Australian participation in China-backed bank

சீனா-ஆதரவு வங்கியில் ஆஸ்திரேலிய பங்கேற்பை அமெரிக்கா தடுக்கிறது

By Nick Beams
4 November 2014

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் சீனா உடனான ஆஸ்திரேலிய உறவுகளில் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட வகையில், அந்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் ஒரு முக்கிய மோதல் வெடித்துள்ளது.

சீனா-ஆதரவில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) அது பங்கேற்கப் போவதில்லை என்ற ஆஸ்திரேலியாவின் தீர்மானமே உடனடிப் பிரச்சினையாகும். அவ்வங்கி அப்பிராந்தியத்தில் சுமார் 20 நாடுகளின் ஆதரவுடன் அக்டோபர் 24இல் பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டது.

சீனாவுக்கு எதிராக அதிகளவில் தூதரகரீதியிலான மற்றும் இராணுவரீதியிலான அழுத்தத்தை உள்ளடக்கிய ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெப்புக்குள்" ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைவு எந்தளவுக்கு உலகின் அந்த இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்துடனான மற்றும் அதன் முதன்மை ஏற்றுமதி சந்தையுடனான முக்கிய பொருளாதார உறவுகளின் அபிவிருத்தியை வெட்டப் போகிறது என்ற கேள்வி வரைக்கும், நீண்டகால பிரச்சினைகள் நீளுகின்றன.

அபோட்டினது தாராளவாத அரசாங்கத்தின் நிதித்துறை மந்திரி ஜோய் ஹாக்கி, வர்த்தகத்துறை மந்திரி ஆண்ட்ரூ ரோப்பின் ஆதரவுடன், சீன முதலீட்டு வங்கிக்கு வெறுமனே ஆதரவைத் தான் சுட்டிக் காட்டியிருந்தார் என ஆரம்ப செய்திகள் குறிப்பிட்டன. ஆனால், திங்களன்று Australian Financial Reviewஇன் செய்தியின்படி, ஆஸ்திரேலியா அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினரானால், அவ்வங்கியை நடத்துவதில் அதற்கு ஒரு முக்கிய பாத்திரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது மற்றும் மந்திரிசபையும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கி இருந்தது.

ஆனால் பின்னர் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட, அமெரிக்காவிடமிருந்து பலமான தலையீடு வந்த பின்னர், கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலியா பின்வாங்கியது. ஆஸ்திரேலியா அதில் இணையக்கூடாதென்ற அவர்களின் வலியுறுத்தலை, வெளியுறவுத்துறை மந்திரி ஜூலியா பிஷாப் பின்தொடர்ந்தார். தேசிய பாதுகாப்புக்கான மந்திரிசபை மூலமாக வேலை செய்து, அப்பெண்மணி பங்கெடுக்கும் முந்தைய முடிவு மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் பங்கேற்பிற்கு தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தி இருந்த ஜப்பானும், மற்றும் அமெரிக்காவும் அளித்த உத்தியோகபூர்வ காரணம் என்னவென்றால் AIIBஇன் நடைமுறை விதிமுறைகள் சர்வதேச தரத்திற்கு இல்லை என்பதாகும்.

நிஜமான காரணங்களோ இரட்டிப்பானதாக உள்ளன. அமெரிக்காவின் மேலாளுமையில் உள்ள உலக வங்கி, மற்றும் கணிசமான அளவுக்கு ஜப்பான் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை வகிக்கும் பாத்திரத்தை அவ்வங்கி [AIIB] பலவீனப்படுத்த சாத்தியக்கூறு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கும் அதிகமாக, புதிய வங்கியால் நிதியுதவி வழங்கப்படும் உள்கட்டமைப்பு திட்டங்கள், குறிப்பாக துறைமுகங்களுக்கான திட்டங்கள் அப்பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ தகைமைகளை விஸ்தரிக்குமென அமெரிக்காவும் ஜப்பானும் கருதுகின்றன.

எவ்வாறிருந்த போதினும், ஆஸ்திரேலியா வெறுமனே அமெரிக்க காலடியைப் பின்பற்றி நடந்தால், சீனாவுடனான நெருக்கமான பொருளாதார ஈடுபாடுகளிலிருந்து வரும் மதிப்பார்ந்த வாய்ப்புகளை இழக்க வேண்டியதிருக்குமே என்பதில் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் கவலைகள் நிலவுகின்றன. இந்த குழப்பநிலைமை சில காலமாக தனிப்பட்ட விவாதங்களின் விடயமாக இருந்து வருகிறது.

கடந்த வியாழனன்று Australian Financial Review (AFR), முன்னாள் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி பிரதம மந்திரி போல் கீட்டிங் உடனான ஒரு பேட்டியை அதன் முதல் பக்கத்தில் வெளியிட்ட போது, கடந்த வாரம் அந்த சர்ச்சை பொது அரங்கத்திற்குள் வெடித்தது. அப்பேட்டியில் அவர் AIIB உடன் கையெழுத்திடுவதில்லை என்ற தீர்மானத்தைக் கடுமையாக சாடியிருந்தார்.

கீட்டிங் AFRக்கு கூறுகையில், அந்த அரசாங்கம் செப்டம்பர் 2013இல் பதவியேற்ற பின்னர் எடுத்த முடிவுகளிலேயே இது தான் "மிகமிக மோசமான கொள்கை முடிவு" என்றார். “சீனா அப்பிராந்தியத்தில் அதிக பொறுப்புறுதிகளை ஏற்க தயாராகும் அச்சமயத்தில், சீனாவுடன் புவிசார்-பொருளாதாரரீதியில் எவ்விதத்திலும் தொடர்புபடாமல் இருக்க முடிவெடுத்தமை நீண்டகால தாக்கங்கள் மற்றும் விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதால் அது படுமோசமான முடிவாகும்," என்றார்.

ஒரேயொரு அமைப்பு ஆசியாவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது, மேலும் அவ்வங்கியை விரிவாக்க அவசியமான மூலதனம் ஜப்பானிடம் இல்லை என்று கூறி, ஆசிய அபிவிருத்தி வங்கியே பிரதான கடன் வழங்குனராக இருக்க வேண்டுமென்ற அமெரிக்க வாதத்தை கீட்டிங் உதறித் தள்ளினார்.

ஆஸ்திரேலிய பங்கேற்புக்கு எதிராக வெளியுறவுத்துறை செயலர் கெர்ரி தீவிரமாக ஆதரவு திரட்டியதை மேற்கோளிட்டுக் காட்டி கீட்டிங் தெரிவித்தார்: “தென் அமெரிக்காவில் அவர்களின் வர்த்தக கொள்கைகள் குறித்து அவர்களுக்கு நாம் அறிவுரை கூறினால் அமெரிக்கர்கள் என்ன கூறுவார்கள்? சிறிய அளவிலாவது என்ன மாதிரியான நன்றிக்கடனை நமக்கு காட்டுவார்கள்?"

AFR நேர்காணலைத் தொடர்ந்து, அரசாங்கம் அது பதிலடி கொடுக்க முடிவெடுத்தது. அதற்கடுத்த நாள் Australian பத்திரிகையின் முன்னணி இதழாளர் பௌல் கெல்லியால் எழுதப்பட்டு முதல் பக்கத்தில் வெளியான தலையங்க கட்டுரை, ஆஸ்திரேலியா அதில் பங்கேற்காதது தேசிய பாதுகாப்பு கமிட்டி எடுத்த முடிவின் விளைவாகும் என்று குறிப்பிட்டது.

ஆரம்பத்தில் பங்கேற்பதை ஆதரித்து சாய்ந்த அவரது நிலைப்பாட்டிலிருந்து, பிரதம மந்திரி டோனி அப்போட் “மூலோபாய அடித்தளத்தில்" அதை எதிர்க்கும் நிலைப்பாட்டிற்கு மாறியதாக அக்கட்டுரை குறிப்பிட்டது. ஜனாதிபதி ஒபாமா நேரடியாக அப்போடிற்கு தொலைபேசியில் அழைத்து தலையீடு செய்ததாக நிலவிய கருத்துக்களையும் அது உறுதிப்படுத்தியது. “இப்பிரச்சினையில் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலைகளை எடுத்துக்காட்டும் விதத்தில், ஜப்பானுடன் சேர்ந்து ஒரு பலமான தூதரகரீதியிலான அமெரிக்க நடவடிக்கையின் பாகமாக அது அமைந்திருந்தது," என்று அக்கட்டுரை அறிவித்தது.

வெளியுறவு மந்திரி பிஷாப் அந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு கமிட்டிக்குள் எடுத்துச் சென்றார். தெளிவான அரசாங்க ஆதாரங்களைக் கொண்டு சுருக்கமாக விளங்கப்படுத்தி: “முதலீட்டு கடன்கள் வழியாக கிடைத்த நிதியியல் அதிகாரத்தை, ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பலவீனமான நாடுகளில் சீனா எவ்வாறு நேரடி இராணுவ ஆதாயங்களாக மாற்றும் என்பதற்குரிய சூழல்களை திருமதி பிஷாப் விளங்கப்படுத்தினார்." என கெல்லி எழுதினார்.

மந்திரிசபைக்குள் அங்கே பிளவுகள் இருந்தன. அந்த வங்கியை உருவாக்குவதிலிருந்து ஆஸ்திரேலியா விலகி நிற்குமென அமெரிக்காவுக்கு சமிக்ஞை காட்டுவதிலிருந்து பிஷாப் தொலைதூரத்திற்கு விலகி சென்றுவிட்டதாக சில உறுப்பினர்கள் நம்பினார்கள் என்று கெல்லி குறிப்பிட்டார். அக்கட்டுரை ஒபாமா நிர்வாகத்திடமிருந்து வந்த அழுத்தத்தை "ஆழமானதென" குறிப்பிட்டதோடு, தலையீடுகள் ஒபாமா மற்றும் கெர்ரியிடமிருந்து மட்டும் வரவில்லை கருவூலத்துறை செயலர் ஜாக் லெவ்விடமிருந்தும் வந்ததாக குறிப்பிட்டது.

சனியன்று Sydney Morning Heraldஇல் வெளியான ஓர் அறிக்கையின்படி, பிஷாப் வாதிடுகையில் வர்த்தக துறைமுகங்களை ஸ்தாபிக்க உதவும் வகைமுறைகளுக்கு ஆஸ்திரேலியா உடன்படக்கூடாது, சான்றாக பாப்புவா நியூ கினியா, அது சீன கடற்படையை விஸ்தரிக்க பிரயோகிக்கப்படக்கூடும் என்றார்.

பிரதான சாலைகளின் கட்டமைப்பிலிருந்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வரையில், நடைமுறையில் ஒவ்வொரு வர்த்தக உள்கட்டமைப்பு திட்டமும் ஒரு சாத்தியமான இராணுவ பயன்பாட்டைக் கொண்டிருக்கின்ற நிலையில், என்னவெல்லாம் AIIBஇன் உத்தரவாதங்களும் நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டாலும், அதில் ஆஸ்திரேலியா பங்கெடுப்பதற்கு அங்கே சூழ்நிலைகளே இல்லை என்பதை அது உட்கிடக்கையாக கொண்டுள்ளது.

முன்னாள் பிரதம மந்திரி பாப் ஹாக்கின் தொழிற் கட்சி அரசாங்கத்தினது ஆசிய உறவுகளுக்கு, ஓர் ஆலோசகராக இருந்துவந்த பொருளாதார பகுப்பாய்வாளர் ரோஸ் கார்னால்ட், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கீட்டிங் காட்டிய எதிர்ப்பை மறைமுகமாக ஆதரித்தார். “உள்கட்டமைப்புக்குள் வருவாய்-ஈட்டும் முதலீடுகளில் மிகபெரிய பரிவர்த்தனைகள் உலகிற்கு தேவைப்படுகின்றன," இது அவர் Australian பத்திரிகைக்கு தெரிவித்தது. “இந்த உள்கட்டமைப்பு வங்கிக்கு சீனாவின் கடமைப்பாட்டை ஆஸ்திரேலியா வரவேற்க வேண்டும்," என்றார்.

சீனாவில் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்த விரும்பும் ANZ வங்கியியல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மைக் ஸ்மித், AFRக்குத் தெரிவித்தார்: “ஆஸ்திரேலியா விலகி கொள்வது ஒரு சிறந்த முடிவாக இருக்காது. ஆஸ்திரேலியா நீண்டகாலத்திற்கு இதில் பாகமாக இருக்குமென நான் நம்புகிறேன், அது இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்."

ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து ஆஸ்திரேலியா உடனான பேச்சுவார்த்தைகளின் போது, அதன் இந்த முடிவுக்கு எதிராக சீன அழுத்தமளிக்கும் ஒரு சாத்தியக்கூறை ஸ்மித் சுட்டிக்காட்டினார். “அங்கே ... சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விதிமுறைகளின் மீது வெளிப்படையான துரிதமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன ... உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், இதுவே கூட அதை கருத்தில் கொண்டு அதன் பாகமாக இருக்கக்கூடும்,” என்றவர் தெரிவித்தார்.

"பெய்ஜிங்கைக் கட்டுப்படுத்துவது பொருளாதாரத்தைத் திருப்புகிறது" என்ற தலைப்பின்கீழ் பிரசுரிக்கப்பட்ட, AFRஇன் ஆசிய பசிபிக் பதிப்பாசிரியர் கிரெக் எர்ல் வெளியிட்ட ஒரு கருத்து, அந்த முடிவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியது. ஆஸ்திரேலிய-அமெரிக்க இராணுவ கூட்டணி நெருக்கமாக இறுக்கப்படுவதை சீனா "மனமின்றி" ஏற்றுக் கொண்டது, ஆனால் "பொருளாதாரரீதியில் கட்டுப்படுத்த" திரும்புவது புதிய அபாயங்களை உள்ளடக்கி உள்ளது என்றவர் தெரிவித்தார். "ஆஸ்திரேலியா பொருளாதாரரீதியில் அதிகமாக சீனாவைச் சார்ந்திருக்கின்ற போதினும், நிறைய உள்கட்டமைப்பு நிதிக்கான பெய்ஜிங்கின் திட்டங்களை ஆஸ்திரேலியா ஒரு தேசிய அச்சுறுத்தலாக பார்க்கின்ற போது, இப்போது மிகத் தெளிவாக" அவர் குறிப்பிட்ட ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு இடையிலான "நட்புறவு சமநிலை" “மாறி விட்டிருக்கிறது."

சீனாவை மையப்படுத்தி வளர்ச்சி மூலோபாயத்தைக் கொண்ட எந்தவொரு வணிகமும், “வெளிநாட்டில் அதன் நிதிகளை முதலீடு செய்ய விரும்பும் ஒரு நாட்டிடமிருந்து புதிய உள்கட்டமைப்பு பணத்தை" ஏன் ஆஸ்திரேலிய அரசாங்கம் "நிராகரித்துள்ளது" என்பது குறித்து நிறைய அறிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறிருந்த போதினும், அந்த கேள்விக்கு பதில் கிடைக்காது, ஏனென்றால் அது சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ முனைவு தீவிரப்படுத்தப்படுவதன் முழு சாத்தியத்திறனையும் அம்பலப்படுத்துவதை உள்ளடக்கி உள்ளது, அதை தான் சீனா-ஆதரவிலான AIIB மீது வாஷிங்டனின் தலையீடு தெளிவாக அர்த்தப்படுத்துகிறது.