சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Bank of Japan’s shock stimulus further destabilizes global economy

பேங்க் ஆஃப் ஜப்பானின் திடீர் ஊக்கப்பொதி உலகளாவிய பொருளாதாரத்தை மேலும் நிலைகுலைக்கிறது

By Nick Beams
3 November 2014

Use this version to printSend feedback

உலகின் பிரதான மத்திய வங்கிகள் அவற்றின் சொந்த தேசிய பொருளாதாரங்களை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஸ்திரமின்மையை அதிகரிக்கச் செய்யவே பங்களித்துள்ளன என்பது பூகோளமயப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் முறிவுக்கு அறிகுறியாகும்.

வழக்கமான நாணய முறைக்கு (normal monetary regime) இன்னும் கூடுதலாக திரும்புவதை நோக்கிய ஒருபடியாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் சொத்து வாங்கும் அதன் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக கடந்த புதனன்று அறிவித்தது. ஆனால் 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சியின் பிரதான ஆதாரமாக இருந்துள்ள எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபவைகளில் இருந்து, நிலையற்ற நிதியியல் மூலதனத்தை வெளியேற ஊக்குவிப்பதும், இந்த நகர்வின் விளைவுகளில் ஒன்றாகும்.

அதேபோல, பேங்க் ஆஃப் ஜப்பான் அந்நாட்டை அதன் பணச்சுருக்க சுழற்சியிலிருந்து தூக்கி நிறுத்தும் முயற்சியாக, பெடரலுக்கு எதிர் திசையில் நகர்ந்து, அரசு பத்திரங்கள் வாங்குவதை அது அதிகரிக்க இருப்பதாக வெள்ளியன்று அறிவித்த திடீர் முடிவு, ஆசிய பிராந்திய பொருளாதாரங்களின் மீது, அதுவும் குறிப்பாக தென் கொரியா மற்றும் சீனா மீது, எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதுடன், யூரோ மண்டலத்தையும் பாதிக்கக்கூடும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ள யென்னின் மதிப்பை இன்னும் மேலதிகமாக குறைப்பதே, அதிகரிக்கப்பட்ட "பணத்தைப் புழக்கத்தில் விடும்" ஜப்பானிய வடிவத்தின் உடனடி விளைவுகளில் ஒன்றாக இருக்கும். அந்த செலாவணி கடந்த வெள்ளியன்று டாலருக்கு எதிராக ஏழு ஆண்டுகளில் இல்லாதளவிற்கு வீழ்ச்சி அடைந்ததுடன், 2012இன் மத்திய பகுதியிலிருந்து டாலர், யூரோ மற்றும் கொரியாவின் வொன் ஆகியவற்றிற்கு எதிராக 40 சதவீதம் சரிந்தது மற்றும் சீன யுவானுக்கு எதிராக 50 சதவீதம் சரிந்தது.

மோர்கன் ஸ்ரான்லியின் அன்னிய செலாவணி மூலோபாய பொறுப்பாளர் ஹான்ஸ் ரெடிகெர், இலண்டனை மையமாக கொண்ட Telegraphக்கு கூறுகையில், ஜப்பான் அதன் பணச்சுருக்க அழுத்தங்களை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்றார்.

"ஏனைய நாடுகள் இதை சமாளிக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை," என்று தெரிவித்த அவர், “அங்கே கொரியாவில் இலாபங்கள் குறித்து நிறைய எச்சரிக்கைகள் நிலவுகின்றன. அப்பிராந்தியம் ஏற்கனவே மிதமிஞ்சிய மற்றும் தீவிர கடன்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 2005இல் டாலர்-மேலாளுமை கொண்ட கடன் 300 பில்லியன் டாலராக இருந்தது, அது அதிவேகமாக 2.5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, மேலும் கடன்வாங்கும் திறப்பாடு வீழ்ச்சி அடைந்துவருகிறது," என்றார்.

ஜப்பான் பணச்சுருக்கத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக அதன் பணச்சுருக்க பொறியிலிருந்து வெளியேற முனைந்து வருவதால், செலாவணி போர்களின் ஆபத்து குறித்து இதர பகுப்பாய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வெள்ளியன்று, பேங்க் ஆஃப் ஜப்பானின் பொதுக்குழு 5க்கு 4 என்ற சிறிய வாக்கு வித்தியாசத்தில் முடிவெடுத்த பின்னர், அவ்வங்கியின் ஆளுநர் ஹருஹிகோ குரோடா, மத்திய வங்கி அதன் நாணய அடித்தளத்தை விரிவாக்க, 60 மற்றும் 70 ட்ரில்லியன் யென்னுக்கு ($539-$629 பில்லியன்) இடையிலான தற்போதைய மட்டத்திலிருந்து ஆண்டுக்கு 80 ட்ரில்லியன், $721 பில்லியனுக்கு சமமாக, போதிய சொத்துக்களை, குறிப்பாக அரசு பத்திரங்களை, வாங்கும் என்று அறிவித்தார்.

அந்த முடிவு திடீரென வந்திருந்தது, ஏனென்றால் முன்னதாக "அபேனோமிக்ஸின்" பாகமாக ஏப்ரல் 2013இல் தொடங்கப்பட்ட சொத்து வாங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குரோடா அறிவித்திருந்தார். ஆனால் ஆரம்பத்தில் ஒரு ஊக்குவிப்பை வழங்கிய பின்னர், அந்த சொத்து வாங்கும் திட்டம் பணச்சுருக்க சுழற்சியை முறிக்கவில்லை என்பதை ஜப்பானிய பொருளாதார புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

ஜப்பானின் முக்கிய வாடிக்கையாளர் பணவீக்க விகிதம், ஏப்ரலில் 1.5 சதவீதமாக உயர்ந்த பின்னர், செப்டம்பரில் வெறும் 1 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்ததால், அடுத்த ஏப்ரல் வாக்கில் 2 சதவீத பணவீக்கத்தை எட்ட வேண்டுமென்ற பேங்க் ஆஃப் ஜப்பானின் இலக்கின் மீது அது சந்தேகத்தை உருவாக்கியது. அப்பொருளாதாரம் சிறிய வளர்ச்சியை அல்லது வளர்ச்சியின்மையை அனுபவித்து வருகிறது என்பதுடன், இரண்டாம் காலாண்டில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக சுருங்கியது, இது பெரிதும் ஏப்ரலில் அந்நாட்டின் நுகர்வு வரி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டதன் ஒரு விளைவாகும். இந்த உயர்வு இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 6 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சி விகிதத்தை முற்றிலுமாக இல்லாமல் செய்திருந்தது.

வளர்ச்சி மீண்டும் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதினும், மூன்றாம் காலாண்டில் மீளுயர்வு முன்னதாக அனுமானிக்கப்பட்டதையும் விட குறைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது, இத்துடன் பேங்க் ஆஃப் ஜப்பானின் பொருளாதார நிபுணர்கள் 2014 நிதியியல் ஆண்டுக்கான அவர்களின் சொந்த வளர்ச்சி முன்மதிப்பீடுகளை பாதியளவுக்குக் குறைத்து வெறும் 0.5 சதவீதமாக்கி உள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்டிற்கான பலவீனமான உற்பத்தி மற்றும் சில்லரை விலை புள்ளிவிபரங்கள் வளர்ச்சிக் குறைவின் அச்சங்களை தீவிரப்படுத்தி உள்ளன. பிரதம மந்திரி அபேக்கு நெருக்கமான ஒரு ஆதாரநபர் பைனான்சியல் டைம்ஸிற்கு தெரிவிக்கையில், “பொருளாதார குறியீடுகள் அனைத்தும் தெற்கை நோக்கி போய் கொண்டிருப்பதாக," தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முடிவை அறிவித்து குரோடா கூறுகையில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான ஜப்பான், பணச்சுருக்க பிடியிலிருந்து விடுபடும் அதன் போராட்டத்தில் ஒரு "முக்கிய கட்டத்தை" எட்டியுள்ளது என்றார். “சீரான முன்னேற்றம் இருப்பதற்கு இடையிலும் அங்கே ஒரு அபாயம் இருக்கிறது, மக்களின் பணச்சுருக்க மனோபாவத்தை களைந்தெறிவதில் நாம் ஒரு காலத்தாமதத்தை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும்," என்றார்.

ஜப்பானிய பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிடுகையில், அந்த மத்திய வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் அமெரிக்க பெடரலின் சொத்து-வாங்கும் திட்டத்தையும் விட மிகப்பெரியதாக உள்ளன. பேங்க் ஆஃப் ஜப்பான் ஆண்டுக்கு 15 சதவீதத்திற்கு சமமாக இப்போது அதன் இருப்புக்கணக்கு அறிக்கையை அதிகரிக்கும். இது பெடரலின் பணத்தைப் புழக்கத்தில்விடும் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

அரசு அதன் நிதிய கடனுக்கு நிதியளிப்பதற்காக வினியோகித்த புதிய பத்திரங்களை விட, இரண்டு மடங்கிற்கு அதிகமான அளவுக்கு சமமாக, பேங்க் ஆஃப் ஜப்பான், அதன் பரந்த சந்தை தலையீட்டின் கீழ், இப்போது பத்திரங்களை வாங்க உள்ளது.

இது பொது நிதிகளின் ஸ்திரப்பாடு குறித்த கவலைகளை உயர்த்தி உள்ளது. அவற்றை சாந்தப்படுத்துவதற்காக, குரோடாவின் உதவியோடு, அரசாங்கம் நிலுவையில் இருக்கும் இரண்டாவது நுகர்வு வரி உயர்வை, அதாவது 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதை, அடுத்த அக்டோபரில் முன்னெடுக்குமென தெரிகிறது. அந்த உயர்வு இரத்து செய்யப்பட்டால், அல்லது இன்னும் தாமதப்படுத்தப்பட்டால், ஜப்பானின் அரச கடனுக்கு நிதியளிப்பதன் மீது கேள்விகள் எழும்பத் தொடங்கும். 11 ட்ரில்லியன் டாலர் அல்லது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 240 சதவீதமாக இருக்கும் அரசு கடன், உலகிலேயே எந்த நாட்டையும் விட மிக அதிகமாகும்.

ஆனால், நுகர்வு வரியில் மேற்படி உயர்வு என்பது ஜப்பானின் பொருளாதார நடவடிக்கையை கீழறுக்கும் என்பதோடு, மத்திய வங்கி அதன் சொத்து-வாங்கும் திட்டத்தை அதிகரித்திருப்பதன் மூலமாக, எதற்கு எதிராக எதிர்நடவடிக்கை எடுக்கிறதோ, அந்த பணச்சுருக்க அழுத்தங்களில் இன்னும் மேலதிகமாக அழுத்தம் சேர்த்துவிடும்.

இதுவரையில் அரசு கடனுக்கு உள்நாட்டு ஆதாரவளங்களைக் கொண்டு நிதியளிக்கப்பட்டுள்ளது, இதில் அந்நாட்டின் பாரிய காப்பீட்டு நிதிகளும் உள்ளடங்கும், ஆனால் ஒரு நெருக்கடியை உண்டாக்காமல் இந்த நிகழ்வுபோக்கு எவ்வளவு தூரம் போக முடியுமென்பதற்கு அங்கே வரம்பிருக்கிறது என பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

முந்தைய தீர்மானங்களின் போது குரோடா பெரும் பெரும்பான்மையை பெற்றிருந்தார் ஆனால் அதற்கு முரண்பட்ட விதத்தில், வங்கி பொதுக்குழுவின் இப்போதைய வாக்கெடுப்பில் இருக்கும் சிறிய வித்தியாசமே, அத்தகைய கவலைகள் பேங்க் ஆஃப் ஜப்பான் வரையில் நீண்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. வங்கி அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆய்வாளர்கள், அவ்வங்கியின் வரலாற்றிலேயே இதுபோன்று சிறிய வித்தியாசத்தில் வாக்கு கிடைத்ததை அவர்களால் நினைவு கூர முடியவில்லையென தெரிவித்தனர்.

பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் மேலோங்கியுள்ள பித்துநிலையைக் குறித்து கூற வேண்டியதே இல்லை என்றிருக்கையில், அதிகரித்துவரும் பகுத்தறிவின்மையின் மற்றொரு பிரதிபலிப்பாக, பேங்க் ஆஃப் ஜப்பான் நகர்வு பெருகும் பிரச்சினைகளையே சுட்டிக் காட்டுவதாக நடைமுறையில் எல்லா பகுப்பாய்வாளர்களும் குறிப்பிட்டு வருகின்றனர், அதேவேளையில் நிதியியல் சந்தைகளோ கொண்டாட்டமான களியாட்டத்தில் மூழ்கி கிடக்கின்றன.

கடந்த வெள்ளியன்று, அமெரிக்க பங்கு விலைகள் உயர்ந்தன, குறைந்தபட்சம் பகுதியாகவேனும், பேங்க் ஆஃப் ஜப்பானின் தீர்மானத்தால், டோவ் ஜோன்ஸ் மற்றும் எஸ்&பி 500 இரண்டுமே சாதனை அளவில் நிறைவுபெற்றன. அதற்கு முந்தைய நாள், ஜப்பானின் நிக்கி குறியீடு 7 ஆண்டுகளில் அதன் அதிகபட்ச மட்டத்தை எட்ட சுமார் 5 சதவீத அளவில் உயர்ந்திருந்தது. பங்குச்சந்தைகள் உலகளாவிய சூதாட்டக்களமாக மாறியுள்ளன என்பதையே இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன, அதில் பிரதான மத்திய வங்கிகளின் வடிவத்தில் இருக்கும் "சூதாட்ட மையம்" நிதியியல் ஊகவணிகத்திற்காக முடிவில்லாமல் மலிவு பணத்தை வினியோகிக்கின்றது. எவ்வாறிருந்த போதினும், இத்தகைய நடவடிக்கைகள் தாமே ஒரு நிதியியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும் சாத்தியத்திறனைக் கொண்டுள்ளன.

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜோன் ஆதெர்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “பங்கு விலைகளின் விடையிறுப்பு காட்டுவதைப் போல, சந்தைகள் QE (Quantitative Easing) விரும்புகின்றன. ஆனால் பரந்த முன்னோக்கோ எச்சரிக்கையூட்டுவதாக உள்ளது. செலாவணிகளில் கூர்மையான மாற்றங்கள், அதுவும் குறிப்பாக பல்வேறு நாடுகள் ஒரே நேரத்தில் ஒரேமாதிரியான உத்தியைக் கையாள முனையும் போது, அபாயகரமாக இருக்கும்."

ஜப்பானிய நகர்வின் தாக்கம் நிச்சயமாக வியாழனன்று நடக்கவுள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பதோடு, அங்கே ஆளுநர் மரியோ திராஹி அவரது சொந்த பணத்தைப் புழக்கத்தில்விடும் வடிவத்தை அதிகரிப்பதற்கு நிதியியல் சந்தைகளிடமிருந்து வரும் அதிகரித்த அழுத்தத்தின் கீழ் இருப்பார்.

திங்களன்று வாஷிங்டன் போஸ்ட் பொருளாதார கருத்துரையாளர் ரோபர்ட் சாமுவேல்சன் ஒரு கேள்வியோடு ஒரு கருத்தை பதிவு செய்தார்: “மரியோ திராஹியால் ஐரோப்பாவைக் காப்பாற்ற முடியுமா?" அவர் எழுதினார், அந்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்ற உண்மையே கூட, ஒருசமயத்தில் தீர்க்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய நெருக்கடி, "தீர்க்கப்படவில்லை என்பதன் ஒரு நினைவூட்டல்" என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஐரோப்பா சில நேரத்தில் முன்னேறும், சிலநேரத்தில் மோசமடையும், ஒரு நாட்பட்ட நோயாளியின் நிலைமையை ஒத்திருக்கிறது, அந்த நோயாளியின் "நோய் நீடித்திருக்கிறது என்பதோடு, அது கடுமையான, அனேகமாக பேரழிவுகரமான நெருக்கடியை உருவாக்க நிரந்தரமாக அச்சுறுத்தி வருகிறது."

ஐரோப்பிய பொருளாதாரம் 2008இல் இருந்து இரண்டு பின்னடைவுகளை அனுபவித்துள்ளது, அத்துடன் மூன்றாவதொன்றின் விளிம்பில் இருப்பதாக கருதப்படுகிறது. யூரோ மண்டலத்தின் வெளியீடு இன்னமும் 2008இல் அது என்னவாக இருந்ததோ அதேயளவுக்கு 2 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது மற்றும் முதலீடு 15 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த பிரச்சினைகள் எல்லாம் ஜப்பானிய மத்திய வங்கியின் கடந்த வார முடிவுகளால் இன்னும் மோசமடைய மட்டுமே செய்யும்.