சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: About 200 killed in landslide

இலங்கை: நிலச்சரிவில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்

By Suranga Siriwardana and R.M. Dayananda
31 October 2014

Use this version to printSend feedback

2004 சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் நடந்த மிகப்பெரிய இயற்கை பேரழிவான, கொழும்பில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கொஸ்லந்த, மீரியபெத்த தோட்டத்தில் புதின் கிழமை நடந்த பெரும் நிலச்சரிவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டனர். டஜன் கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் பெருந்தொகையானோர் சேற்றிலும் நிலத்திலும் புதைந்து காணாமல் போயுள்ளனர்.

சுமார் 150 தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வந்த தேயிலை தோட்டத்தில் கிட்டத்தட்ட 7:45 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சுமார் ஒரு கிலோமீட்டர் அகலமுடைய நிலப்பகுதி சரிந்து போனது. 20 சிறிய வீடுகளாக அல்லது "லயன் அறைகளாக" பிரிக்கப்பட்டுள்ள ஏழு "நீண்ட வரிசைக் கட்டிடங்கள் தரைமட்டமாகின. ஒரு இந்து கோவிலும் இரண்டு பால் சேகரிக்கும் நிலையங்களும் புதையுண்டுள்ளன.

அடைமழை பொழிவு நிலச்சரிவுக்கு ஒரு உடனடிக் காரணமாகும். முழு தீவும் வெள்ள ஆபத்துடன் கடும் பருவ மழையை எதிர்கொண்டுள்ளது.


நிலச்சரிவின் ஒரு பகுதி

நிலச்சரிவு நேரத்தில், பெரும்பாலான பிள்ளைகள் பாடசாலை சென்றிருந்தனர் மற்றும் ஏனைய சிலர் வேலைக்கு சென்றிருந்தனர். இல்லையெனில் இன்னும் பல நூறு பேர் உயிரிழந்திருப்பர். சிறுவர்கள் பாடசாலையில் இருந்து திரும்பிய போது, தமது வீடுகள் அங்கு இல்லாததையும் தமது உறவினர்கள் காணாமல் அல்லது இறந்து போயிருப்பதையுமே கண்டனர். சிறுவர்கள் பூணாகலை, கொஸ்லந்த அரச தமிழ் வித்யாசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

பேரழிவைக் நேரில் கண்ட இந்திரகுமாரி விளக்கியதாவது: "நாங்கள் இந்த பகுதியில் வசிக்கவில்லை. ஆனால் மண் சரிவுக்குள் அகப்பட்ட எனது அத்தை ஒருவரின் லயன் வீட்டுக்கு அவரை பார்க்க நான் காலையில் போனேன். நான் அவர் வீட்டை நோக்கி நடந்துபோது, ஒரு பெரும் சத்தம் கேட்டதுடன் ஒரு மஞ்சள் தூசியிலான மேகத்தைப் பார்த்தேன். அதே நேரம் நிலம் சரிந்துகொண்டிருப்பதையும் கண்டேன். நான் என் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடினேன். அதன் பின்னர், அங்கு வீடுகளை காணக் கிடைக்கவில்லை."

மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 500 படையினர் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசாங்கம் அறிவித்தது. எனினும், 12 உடல்கள் மட்டுமே புதன்கிழமை மாலை வரை மீட்கப்பட்டிருந்தன. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, மோசமான வானிலை காரணமாக புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது.

சிப்பாய்களும் பொலிசாரும் வசதி குறைந்த இரு அகழ்வு இயந்திரங்களுடன் சிரமப்பட்டுக்கொண்டிருப்பதை எமது நிருபர்கள் கண்டனர். வியாழக்கிழமை உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எவ்வாறெனினும், மக்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய செய்திக்காக மழையையும் சகித்துக்கொண்டு பேரழிவு நடந்த இடத்தில் காத்திருந்தனர். பலரும் கண்ணீர் வடித்தனர். சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதிய அளவு இல்லை. மழை தொடர்வதோடு நோய் பரவும் அச்சுறுத்தலும் உள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே பழியை இன்னொருவருக்கு மாற்ற முயற்சித்து வருகின்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அப்பகுதியில் மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு எச்சரித்ததாகக் கூறினார். தமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது பற்றி தெரியாது என்று சிலர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினர். மற்றவர்கள், மாற்று தங்குமிடங்கள் இல்லாததால் தம்மால் இடம்பெயர முடியவில்லை என்று கூறினார்.

பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, 2011ல் நிலச்சரிவு எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும் அவை அலட்சியம் செய்யப்பட்டுள்ளன எனக் கூறி தோட்ட நிர்வாகத்தின் பக்கம் விரல் நீட்டினார். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, நிரந்தரமாக காலிசெய்யுமாறு 75 குடும்பங்களுக்கு 2005ல் இருந்து அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதோடு மீள்குடியேற்ற இடத் தேர்வுகளும் இனங்காணப்பட்டன. ஆனால் தோட்ட உரிமையாளர்கள் இணங்கவில்லை.

ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இந்தப் பிரதேசம் பேரழிவு ஏற்படக்கூடிய பகுதியாக அறியப்பட்டுள்ள அதே வேளை, அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான எச்சரிக்க விடுக்க, அல்லது தொழிலாளர்களை இடம்மாற்றுமாறு தோட்ட உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தோட்டத் தொழிலாளர்கள், நினைத்த நேரத்தில் இடம்மாறும் நிலையில் இல்லை. அவர்கள் தங்கள் தோட்டங்களோடு கட்டிப்போடப்பட்டு உரிமையாளர்களால் வழங்கப்பட்ட லயன் அறைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சமீபத்திய துன்பியலுக்கு முன்னதாக, இதே போன்ற பேரழிவுகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டின் மத்திய மலையக மாவட்டங்களில் நடந்துள்ளன. ஹல்தமுல்ல, கொஸ்லந்த மற்றும் பேரகல போன்ற பிரதேசங்கள் குறிப்பாக நிலச்சரிவு வாய்ப்புகள் உள்ள பகுதிகளாகும். எந்த மாற்றீடும் இல்லாததால் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இந்த அபாயங்களுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இந்த அழிவு பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி மாதம் ஒரு தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளதால், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது அனுதாபத்தைக் காட்டும் முயற்சியில் அப்பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, ஒரு புதிய வீடமைப்பு திட்டத்தில் உயிர்தப்பியவர்களை குடியமர்த்த அவர் வாக்குறுதி அளித்தார்.


அருகில் உள்ள பாடசாலையில் அடைக்கலம் புகுந்துள்ள தப்பிப்பிழைத்தோர்

இதேபோல் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, "கட்சி மற்றும் பிற பேதங்களுக்கு" அப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறி, ஒரு அறிக்கையை வெளியிட்டார். எனினும், ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் அத்தகைய கருத்துக்கள், விரைவில் மறக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் விதிப்படி வாழத் தள்ளப்படுவார்கள்.

நிலச்சரிவால் இடம்பெயர்ந்த குமார் நமது நிருபர்களிடம் கூறியதாவது: "உண்மையில் இத்தகைய தீவிர ஆபத்து பற்றி எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எமக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாம் எங்கே போவது?

"அரசாங்கம் கொழும்பு போன்ற நகரங்களை அழகுப்படுத்தவும், அதிவேகப் பாதைகளை கட்டியெழுப்பவும் பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. நாங்கள் இத்தகைய பேரழிவுக்கு ஆளாக உள்ளோம் என்று நன்றாகத் தெரிந்திருந்தும், அது பணக்காரர்களுக்கு பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்துள்ளதோடு எங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இப்போது ஜனாதிபதி எம்மைப் பார்க்க வந்து, ஒரு புதிய கிராமம் வழங்கவும் வாக்குறுதியளித்தார். இவை தேர்தல் சூழ்ச்சிகள் என்று எமக்குத் தெரியும்.


தொழிலாளர்கள் துன்பியலை விளக்குகிறார்கள்

அரசாங்க அதிகாரிகள் மக்களை இடம்பெயருமாறு அறிவுறுத்தியதாக குமார் கூறினார். அவர்கள் செல்லக் கூடிய ஒரே இடம் அவர்களது உறவினர்கள் வீடுகளே. அவர்களும் தோட்டத் தொழிலாளர்களே. "எங்கள் லயன் அறைகள் அடங்கிய முழு பிரதேசமும் 150 சதுர அடிதான். அத்தகைய ஒரு வீட்டில் சுமார் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வாழ்கின்றனர். அதில் எப்படி மற்றொரு குடும்பம் வாழ முடியும்?"

ஜனாதிபதி இராஜபக்ஷ, உயிர்தப்பியவர்களை பார்க்க பேரழிவு நடந்த இடத்திற்கு செல்லுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு உத்தரவிட்டார்.

ஒரு அரசியல் கட்சியான .தொ.கா. தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்தியில் ஒரு தொழிற்சங்கமாகவும் செயல்படுகின்றது. அது அரசாங்கம் மற்றும் தோட்ட நிறுவனங்களின் நலன்களுக்கு சேவையாற்றுவதாலும், நல்ல சம்பளம் மற்றும் நிலைமைகளைக் கோரி தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை நசுக்குவதாலும் பரவலான வெறுப்புக்குள்ளாகி வந்துள்ளது.

அங்கு மீண்டும் பேரழிவுகள் நடந்தும் .தொ.கா. எதுவும் செய்யாத காரணத்தால் தாம் அந்தப் பகுதிக்கு தொண்டமானை அனுமதிக்கப் போவதில்லை என்று உலக சோசலிச வலைத் தளத்துக்கு தொழிலாளர்கள் கூறினர். "தொண்டமான் எங்களைப் பார்த்துக்கொள்வார் என்பது மிகப் பெரிய நகைச்சுவை," என்று ஒருவர் கூறினார்.