சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Twenty-five years since the fall of the Berlin Wall

பேர்லின் சுவர் வீழ்ச்சியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள்

Peter Schwarz
11 November 2014

Use this version to printSend feedback

வரலாற்று நினைவுதினங்கள், கடந்த காலத்தைத் திரும்பி பார்த்து எதிர்கால படிப்பினைகளை வரைவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளன. பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு நினைவுதினத்தைக் குறித்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜேர்மன் தலைநகரில் நடத்தப்பட்ட உத்தியோகப்பூர்வ கொண்டாட்டங்களில் அம்மாதிரியான எதுவும் இடம் பெறவில்லை. அந்த கொண்டாட்டங்கள், முகத்திற்கு முன்னால் இருக்கும் யதார்த்தத்தைப் பார்க்கவோ அல்லது விடயங்களுக்கு அவற்றின் நிஜமான பெயரிட்டு அழைக்கவோ நடுங்கும் ஓர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வரலாற்றைப் பொய்மைப்படுத்தவும் மற்றும் தற்போதைய சமூக-அரசியல் யதார்த்தத்தை எடுத்துக்காட்டாமல் தவிர்க்கவும், பேச்சாளர்கள் வீராவேச வார்த்தைகளையும், வெற்றுரைகளையும் பயன்படுத்தினர்—"சுதந்திரம்" என்ற சொல் மனதை மரத்துப்போகச் செய்யும் அளவுக்கு அடிக்கடி உச்சரிக்கப்பட்டது.

"மீண்டும் சுதந்திரத்தைப் பெறுவதே இப்போதைய பிரச்சினையாகும். அது ஒருவர் மனிதராக விரும்புவதற்குரிய சுதந்திரம் குறித்ததாகும்," இது பேர்லின் சுவர் பற்றிய ஒரு கண்காட்சியைத் திறந்து வைத்து ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அறிவித்தது. ஆனால் எந்த சுதந்திரத்தைப் பற்றி அவர் பேசுகிறார்?

அரசு உளவுபார்ப்பு மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரமா?

கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் தலைமை கொடுத்துள்ள அரசாங்கம், ஜனநாயக உரிமைகளைத் தடுத்தும் மற்றும் உளவுத்துறை முகமைகளின் உளவுபார்ப்பு அதிகாரங்களை விரிவாக்கியும் ஒன்றுக்கு பின் ஒன்றாக சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மேர்க்கேல் எதை அவரது சுதந்திரத்தின் தாயகமாக குறிப்பிட்டாரோ, அந்த கிழக்கு ஐரோப்பாவில், போலாந்தில் ஜோஸப் பில்சுட்ஸ்கி, ஹங்கேரியில் மிக்குளுஸ் ஹோர்தி மற்றும் உக்ரேனில் நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேரா போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்களின் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொருட்களின் தேவைகளிலிருந்து சுதந்திரமா?

ஜேர்மன் ஐக்கியத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், கிழக்கு ஜேர்மனியின் குடிமக்களில், ஐந்தில் ஒருவர் மாதத்திற்கு 870 யூரோக்கள் என்ற உத்தியோகபூர்வ வறுமை வரம்புக்கு கீழே வாழ்கின்றனர். அண்டைநாடான போலாந்து மற்றும் செக் குடியரசில், சராசரி மணித்தியால ஊதியம் ஜேர்மனியில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை, அடுத்து பல்கேரியா மற்றும் ரோமானியாவில், அது ஆறில் ஒரு பங்கை விட குறைவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் நிலவும் பொருளாதார நெருக்கடி அதிவேகமாக தீவிரமடைந்துள்ளது.

அச்சம் மற்றும் யுத்தத்திலிருந்து விடுதலையா?

ரஷ்யாவுக்கு எதிரான இடைவிடாத யுத்தவெறிப்பொழிவு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் "இராணுவ தடைகள் முடிவுக்கு வருவதாக" ஜேர்மன் அரசாங்கத்தினது அறிவிப்பைப் பின்தொடர்ந்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களிலும் விடயம் இவ்வாறு தான் இருந்தது என்றிருக்கையில், ஜேர்மன் இராணுவவாதம் மீண்டுமொருமுறை கிழக்கைநோக்கி திரும்பி உள்ளது. “துரதிருஷ்டவசமாக வரவிருக்கும் ஆண்டுகளில் நெருக்கடிகள் வாழ்வின் ஓர் உண்மையாக இருக்கும் என்ற நிஜத்திற்கு நம்மைநாமே தயார் செய்து கொள்ள வேண்டும்," இது சமீபத்தில் ஜேர்மன் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் Die Zeit இல் எழுதியது.

முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் "வரலாறு முடிந்துவிட்டதாக" அறிவித்தார்கள், ஆனால் வரலாறோ பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் திரும்பி வந்துள்ளது. பேர்லின் சுவரின் வீழ்ச்சியும், ஜேர்மன் ஐக்கியமும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்தத்திற்கு முன்னறிவிப்பு வழங்கவில்லை. மாறாக, அவை இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச் சென்ற தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் மேலே கொண்டு வந்துள்ளன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இந்த அபிவிருத்தியை எதிர்நோக்கியதோடு, அதற்கு எதிராகவும் எச்சரித்தது. நவம்பர் 1991இல், பேர்லினில் ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் காலனித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களின் உலக மாநாட்டில் ஒரு தீர்மானத்தை ICFI நிறைவேற்றியது, அத்தீர்மானம் குறிப்பிடுவதாவது:

ஸ்ராலினிசத்தைத் தூக்கி எறிந்து அதன் முழு மதிப்பும் தொழிலாளர்களுக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டும், ஆனால் மற்றவர்கள் அந்த கனிகளைப் பறித்துக் கொண்டனர். ஒட்டுண்ணிகளின் ஒரு புதிய அடுக்கு தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்துள்ளதோடு, ஸ்ராலினிசம் மீதான தொழிலாள வர்க்கத்தின் நியாயமான வெறுப்பை அதன் சொந்த நோக்கங்களுக்காக சுரண்டிக் கொண்டு விட்டன. யெல்ஸ்டீன்கள், வேல்சாஸ்கள் மற்றும் ஹாவெல்ஸ்கள் சர்வதேச மூலதனத்துடன், ஒரு தரகு முதலாளிமார்களின் பாத்திரத்தை ஏற்று, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரத்தைப் பிரதியீடு செய்துள்ளனர்.

"தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆர்வத்தில், ஸ்ராலினிச அதிகாரத்துவமானது உற்பத்தி கருவிகளின் தேசியமயமாக்கல் போன்ற அக்டோபர் புரட்சியின் மிக முக்கியமான ஆதாயங்களைப் பேணிக் காக்க நிர்பந்திக்கப்பட்டு இருந்தது, அதேவேளையில் எழுச்சி அடைந்துவந்த முதலாளித்துவமோ தேசியவாத தொழில்துறையில் என்னவெல்லாம் எஞ்சியுள்ளதோ அவற்றை தகர்க்கவும் மற்றும் தொழிலாளர்களை உரிமைகளின்றி பட்டினியால் தவிக்கும் அனாதைகளாக்கவும் இப்போது கடுமையாக பாடுபட்டு வருகிறது.”

ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மன் ஆளும் கட்சியின் (சோசலிச ஐக்கிய கட்சி - SED) வழிவந்த அமைப்புகளான இடது கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி ஆகியவை முதலாளித்துவத்தின் மறுஅறிமுகத்தை சிறிதும் தயக்கமின்றி ஆதரித்தன. அவை எச்சசொச்சங்களைப் பங்குபோடுவதில் இருந்த குறைபாடுகளை மட்டுமே குறை கூறி வந்தன.

எவ்வாறிருந்த போதினும், ICFI இவ்வாறு அறிவித்தது: “இப்போதைய பேரழிவுக்கு ஸ்ராலினிசமே பிரதான பொறுப்பாகும்."

அந்த தீர்மானம் தொடர்ந்து குறிப்பிட்டது, ஸ்ராலினிச அதிகாரத்துவம் "1917 [ரஷ்ய புரட்சியின்] புரட்சியாளர்களினது சவங்களின் மீது அதன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டதோடு, போல்ஷ்விக் கட்சியை ஒரு தனிச்சலுகைப்பெற்ற அதிகாரத்துவத்தின் எந்திரமாக மாற்றியதன் மூலமாக அதை நிர்மூலமாக்கியது. அது கம்யூனிஸ்ட் அகிலத்தை அதன் சுய-சேவைக்குரிய வெளியுறவு கொள்கைகளின் ஒரு கருவியாக மாற்றியதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எண்ணிலடங்கா தோல்விகளை ஏற்படுத்தியது, மேலும் சோசலிச புரட்சியாளர்களின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையையே படுகொலை செய்தது.

"[மிக்கைல்] கோர்பசேவின் பெரெஸ்துரோய்கா (புனர்நிர்மாணம் - perestroika) இந்த எதிர்புரட்சிகர பாரம்பரியத்தின் தர்க்கரீதியிலான விளைபொருளாகும். அது 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்பதிலிருந்து முதலாளித்துவ மீட்சிக்கு மாறுவதைக் குறிக்கிறது. அதிகாரத்துவவாதிகள் 1985இல் கோர்பசேவை அவர்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் ஏனென்றால் தொழிலாளர்கள் அரசிற்குள் ஓர் ஒட்டுண்ணியாக அவர்களால் அதற்கு மேலும் அவர்களது தனிச்சலுகைகளைப் பாதுகாக்க முடியவில்லை, அத்துடன் தனியார் சொத்துடைமை வடிவத்தின் ஒரு புதிய சமூக முண்டுகோலைத் தேடும் தேடலில் இருந்தார்கள்."

இந்த அனுபவத்திலிருந்து அதிஅவசியமான படிப்பினைகளை இன்று எடுத்தாக வேண்டும். 1930களுக்குப் பின்னர் முதலாளித்துவ உலக பொருளாதாரம், அதன் ஆழமான நெருக்கடியில் உள்ளது. 2008இல் சர்வதேச நிதியியல் அமைப்புமுறையை பொறிவின் விளிம்புக்கு கொண்டு வந்த எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

ஆளும் வர்க்கம், அது கடந்தகாலத்தில் செய்ததைப் போலவே, இராணுவவாதம், அரசு அதிகாரங்களைக் கட்டியெழுப்புவது, மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் ஆகியவற்றுடன் இந்த நெருக்கடிக்கு விடையிறுப்பு காட்டியுள்ளது, அதேவேளையில் தன்னைத்தானே அளவிடமுடியாத அளவில் செழிப்பாக்கிக் கொண்டுள்ளது. மறுஐக்கியப்பட்ட முதலாளித்துவ ஜேர்மனி குறிப்பாக ஓர் ஆக்ரோஷமான பாத்திரம் வகித்து வருகிறது.

முதலாளித்துவ கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு, இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கு அங்கே வழியே இல்லை. அது மனிதயினத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்துகிறது. உலகெங்கிலும், தொழிலாள வர்க்கம் அதிகளவில் ஆளும் வர்க்கத்துடன் மோதலுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதினும், போராடி வெல்வதற்கு, அதற்கு ஒரு நம்பகமான அரசியல் முன்னோக்கு அவசியமாகும்.

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவது, தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபிப்பது, உலக பொருளாதாரத்தை ஒருசிலரின் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மறுஒழுங்கு செய்வது என்ற சர்வதேச சோசலிசத்தின் வேலைத்திட்டம் மட்டுமே இந்த முட்டுச்சந்திலிருந்து வெளியே வருவதற்குரிய ஒரு வழியை வழங்குகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் உருவடிவமாக உள்ள மார்க்சிச மாற்றீடையும் மற்றும் ஸ்ராலினிசத்தின் எதிர்புரட்சிகர பாத்திரத்தையும் புரிந்துகொள்வதே அதுபோன்றவொரு புரட்சிகர முன்னோக்கிற்கு அடித்தளமாகும்.