சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: October 27-November 2

வரலாற்றில் இந்த வாரம்: அக்டோபர் 27-நவம்பர் 2

27 October 2014

 Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்: கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச-விரோத ஆர்ப்பாட்டங்கள் பரவின

http://www.wsws.org/asset/a58c7ab6-b571-4d95-8d28-917f3353786L/twih-25yr.jpg?rendition=image480
லைப்சிக்கில் ஆர்ப்பாட்டம்
அக்டோபர் 30, 1989 கிழக்கு ஜேர்மனியில் (GDR) மூன்று முக்கிய நகரங்களிலும் இலட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 300,000 மக்கள் தெருக்களில் நின்றதால் "நகரங்கள் முழுவதும் நிரம்பியிருந்தன" என லைப்சிக்கில் இருந்து ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு வடக்கு நகரமான சுவேரீனில் சுமார் 80,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஹாலவில், ஆளும் ஜக்கிய சோசலிச கட்சியின் (ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்திய அதிகாரபூர்வ பெயர்) உள்ளூர் தலைமையகத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் ஊர்வலமாக சென்றதாக அறிவிக்கப்பட்டது. போலீசால் தகர்க்கப்பட்ட, அக்டோபர் 7-8ல்  நடந்த முந்தைய ஆர்ப்பாட்டங்கள் போல் அல்லாமல், இந்த எதிர்ப்புக்களில் அரச படைகள் குறுக்கிடவில்லை.

 
24ம் தேதி, ஜீடிஆரின் நீண்டகால தலைவராக இருந்த எரிக் ஹொனேக்கரை அகற்றிய ஸ்ராலினிச ஆளும் கட்சி, அந்த இடத்தில் இகோன் க்ரென்ஸை இருத்தியது. அரசின் புதிய தலைவராக, ஒரு-கட்சி ஆட்சி தொடரும் என க்ரெனஸ் பிரகடனம் செய்தார். புதிய ஆட்சியின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மற்றும் மேற்கு ஜேர்மனிக்கு தப்பிச் சென்றவர்கள் அல்லது அதன்போது பிடிபட்டவர்களுமாக நூறாயிரக்கணக்கான அகதிகளுக்கும் பொதுமன்னிப்பை அறிவிப்பதாக இருந்தது.

 
மேலும் 1961ல் பேர்லின் சுவர் எழுப்பப்பட்டபோது கிழக்கு ஜேர்மனியில் இருந்து தப்பியோடிய அனைவருக்கும் –சுமார் 6,70,000 பேர்- பொதுமன்னிப்பு வழங்குதல் அடங்கும். பல ஆயிரம் பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.


இதற்கிடையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டிக் செனி, மேற்கு பேர்லினுக்கு சென்று, ஜேர்மனிக்கான வாஷிங்டனின் இராணுவக் கடமைக்கு வாக்குறுதி வழங்கினார். அவர் "ஒரு கம்யூனிஸ்ட் உலகத்தின் ஒரு சுதந்திரமான புறக்காவலரண்" என மேற்கு பேர்லினை அழைத்தார். அமெரிக்க இராணுவத்தின் 3வது கவச பிரவு முன் பேசிய அவர், " எங்களுக்கு பனிப்போர் முடிவுக்கு வருகிறது அல்லது சமாதானம் கையில் கிடைத்துவிட்டது என்று அறிவிக்கும் நேரம் இன்னும் வரவில்லை அப்போது "கிட்டத்தட்ட 6,000 அமெரிக்க துருப்புக்கள் மேற்கு பேர்லினில் நிறுத்தப்பட்டிருந்தன.

 
50
ஆண்டுகளுக்கு முன்னர்: பொது வேலைநிறுத்தம் சூடான் அரசாங்கத்தை கீழிறக்கியது

 http://www.wsws.org/asset/a4a5e8dd-6852-4a8f-85f8-98e7273c209I/twih-50yr.jpg?rendition=image240
அக்டோபர் 31, 1964 அன்று, ஜெனரல் இப்ராஹீம் அப்பாவுத், அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு வாரகால பொது வேலைநிறுத்தம் மற்றும் பெருகும் எதிர்ப்புக்களின் பின்னர், சூடான் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் "கலகக்காரர்களுக்கு" எதிராக படைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தி, அதிகாரிகள் இராணுவச் சட்டத்தை அறிவித்தனர். வளர்ச்சிகண்ட வேலை நிறுத்தங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செய்தித்தாள் மற்றும் வானொலி ஊழியர்கள், மற்றும் தொலைத் தொடர்பு தொழிலாளர்களும் அடங்குவர்
.

 
அரபு அல்லாத தெற்கு சூடான் பகுதியில் ஒரு பிரிவினைவாத இயக்கத்தை அரசாங்கம் கொடூரமாக அடக்கியதால், ஆரம்பத்தில் கார்டூமில் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. 1958 சதியில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ஆளும் இராணுவக் குழு தூக்கியெறியப்பட வேண்டுமென தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களும் கோரிய நிலையில், வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் விரைவாகப் பரவின. வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களும் விரிவான நிலையில் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட அதேவேளை, கார்டூம் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அணிதிரட்ட கட்டளையிட்டதன் மூலம் அரசாங்கம் பதிலிறுத்தது. இதில் பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக் கணக்கானவர்களை காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு "துரோக அரசாங்கம் ஒழிக" என கோஷமிட்டதுடன், அமெரிக்கத் தூதரகத்தை எரிக்க முயன்றனர்.

 
ஆளும் ஆயுதப்படைகளின் உயர் குழுவை கலைப்பதோடு சிவிலியன் அரசாங்கத்துக்கு திரும்புவதாக அப்பாவுத் வாக்குறுதி அளித்த போதும் வளர்ந்து வந்த அமைதியின்மை நிற்கவில்லை. அரபு உலகின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான சூடானிய கம்யூனிஸ்ட் கட்சி (எஸ்சிபீ) உட்பட சூடானின் தடைசெய்யப்பட்ட எதிர்க்கட்சிகளும் அடங்கிய தேசிய ஜனநாயக முன்னணி, விரைவில் கூட்டப்பட உள்ள மத்திய சட்டமன்றதை -அப்பாவுத்தின் கைப்பாவை பாராளுமன்றத்தை- ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்தது.

இராணுவ ஆட்சியாளருக்கு பதிலாக முதலாளித்துவ எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி அல்-கஹாடிம் அல்-கலீபா இருத்தப்பட்டார். புதிய முதலாளித்துவ ஆட்சியை எஸ்சிபீ ஆதரித்தது.

 

75 ஆண்டுகளுக்கு முன்னர்: சோவியத் ஒன்றியம் போலந்தில் முதலாளித்துவ சொத்தை பறிமுதல் செய்தது

http://www.wsws.org/asset/58d8e88c-a184-4f46-8331-444e713c9e9A/twih-75yr.jpg?rendition=image240
Poland's WWII partition

 
1939
அக்டோபர் 28, ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தின் பின்னர் செம்படையால் இணைக்கப்பட்ட கிழக்கு போலாந்து பிராந்தியத்தில் முதலாளித்துவ சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை ஸ்ராலினிச சோவியத் அதிகாரத்துவம் அறிவித்தது.


பெரிய போலாந்து வங்கி நிறுவனங்கள், சுரண்டல் தொழில்துறைகள் மற்றும் தொழிற்சாலைகளும், அதிகாரத்துவ முறையில் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிராந்திய முதலாளித்துவ அரசாங்க கட்டமைப்புகள் முன்னாள் கிழக்கு போலாந்து பிரதேசத்தினுள் கரைக்கப்பட்டன. இந்த மாற்றம்மக்களின் சுதந்திரமான விருப்பம்என ஸ்ராலின் வஞ்சகமாக அறிவித்த போதிலும், போலந்து தொழிலாளர்கள் எந்த பாகமும் வகிக்கவில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சி இன்றி, சோவியத் அதிகாரத்துவம் உற்பத்திச் சாதன தேசியமயமாக்கலை மேற்கொண்டமை, அதன் மூலத் தோற்றங்கள் அதிகாரத்துவ முறையில் உருக்குலைக்கப்பட்ட ஒரு அரசை விளைவித்தது.


ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்படுவது தமக்கு விடுதலையைக் கொண்டுவரும் என எதிர்பார்த்த சோசலிச-சிந்தனை கொண்ட போலந்து தொழிலாளர்கள் விரைவில் ஸ்ராலினிஸ்டுகளால் குறிவைக்கப்பட்டனர். லியோன் ட்ரொட்ஸ்கியின் நான்காம் அகிலத்தில் பொதிந்துள்ள மார்க்சிசம், சோவியத் ஒன்றியத்தில் ஒட்டுண்ணி அதிகாரத்துவத்தால் மூர்க்கத்தனமாக நசுக்கப்பட்டதைப் போல் வேறு எங்கும் இடம்பெறவில்லை. ஸ்ராலின் மற்றும் அவரது அடி ஆட்களும், மெக்ஸிக்கோவில் நாடுகடத்தப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கியைத் தவிர, அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்களை துடைத்துக் கட்டினர்.

 
NKVD
இரகசியப் பொலிஸ், போலாந்து கம்யூனிஸ்டுகளின் சகல நடவடிக்கைகளையும் நசுக்கியதோடு தொழிலாளர்கள் சுயாதீனமான அரசியல் நடவடிக்கைகளையும் ஈவிரக்கமின்றி நசுக்கியது. பொருளாதாரத்தின் மீதான "தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை" ஸ்தபிப்பதற்காக எனக் கூறிக்கொண்டு அமைக்கப்பட்டவேலைத்தள குழுக்களில்NKVD முகவர்கள் நுழைந்துகொண்டிருந்தனர்.


100 ஆண்டுகளுக்கு முன்னர்: ட்ரொட்ஸ்கி போரும் அகிலமும்  என்ற நூலை எழுதினார்

http://www.wsws.org/asset/3e376bad-e36a-49ba-9784-a8403dc119cG/twih-100y.jpg?rendition=image240

இந்த வாரம் 1914 அக்டோபரில், ரஷ் மார்க்சிச தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி, பாரிசில் வெளிவந்த கோலோஸ் சோசலிச தினசரி செய்தித்தாளில் அடுத்த மாதம் தொடராக பிரசுரிக்கப்படுவதற்காக, போரும் அகிலமும்  என்ற படைப்பை எழுதி முடித்தார். ட்ரொட்ஸ்கி, ஆஸ்திரிய-ஹங்கேரிய அதிகாரிகளின் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக வியன்னாவில் இருந்து தப்பி ஓடி, சுவிட்சர்லாந்து சூரிச்சில் புலம்பெயர்ந்தவராக வாழ்ந்த இரண்டு மாதங்களிலேயே இந்த படைப்பின்
உள்ளடக்கங்கள் எழுதப்பட்டன.

 
அக்டோபர் 31, அவர், ஆகஸ்ட்டில் வெடித்த உலகப் போரானது ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்துக்கும் உலகம் பகைமை தேசிய அரசுகளாக பிரிக்கப்பட்டிருப்பதற்கும் இடையேயான முரண்பாட்டின் விளைவே என்ற தன்னுடைய பிரதான ஆய்வை விளக்கி அந்த படைப்புக்கு ஒரு முன்னுரையை எழுதினார்
.

 
முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உற்பத்தி சக்திகள், தேசம் மற்றும் அரசு என்ற வரம்புகளை கடந்து விட்டன. தற்போதைய அரசியல் வடிவமான தேசிய அரசு, இந்த உற்பத்தி சக்திகளை சுரண்டுவதற்கு மிக குறுகியதாக உள்ளது. எனவே நமது பொருளாதார முறையின் இயற்கையான போக்கு, அரச எல்லைகளைத் தகர்க்க முயற்சிக்கின்றது, என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். "யுத்தமானது அடித்தளத்தில் தேசம் மற்றும் அரசுகளின் அரசியல் வடிவத்திற்கு எதிரான உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சியாகும். ஒரு சுதந்திரமான பொருளாதார அலகு என்ற நிலையில் இருந்து தேசிய அரசு சரிந்து விட்டதையே இது அர்த்தப்படுத்துகின்றது" என்று அவர் கூறினார்.

 
தனது "சொந்த" அரசாங்கங்களின் போர் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் ஏகாதிபத்திய இராணுவவாதத்துக்கு அடிபணிந்து விட்ட, இரண்டாம் அகிலத்தினதும் அதன் பெரிய கட்சியான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினதும் (SPD) காட்டிக் கொடுப்பை இந்தப் பிரசுரம் ண்டனம் செய்தது. தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்ரீதியாக கல்வியூட்டுவதற்கு இரண்டாம் அகிலத்தின் பிரிவுகள் ஆற்றிய மகத்தான பங்கை அங்கீகரிக்கும் அதேவேளை, அவர்களது காட்டிக் கொடுப்பானது அவர்கள் "தேசிய அரசுகளில் காலூன்றியிருந்து" தேசிய கட்சிகளாக செயல்பட்டனர் என்ற உண்மையில் இருந்தே பெருக்கெடுத்தது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

 
ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர எழுச்சிகளை முன் கணித்ததோடு,  அவற்றுக்கு புரட்சிகர தலைமைத்துவத்தை வழங்க ஒரு புதிய சர்வதேச கட்சியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.போரானது முதலாளித்துவம் அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில், தனது தீர்க்கப்படாத முரண்பாடுகளை தீர்ப்பதற்கு முயலும் வழிமுறையாகும். இதை பாட்டாளி வர்க்கம் அதன் சொந்த முறையால், சோசலிசப் புரட்சி வழிமுறையால் எதிர்த்தாக வேண்டும்," என்று அவர் அறிவித்தார்.