சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Russian strategic bombers to patrol off US coastlines

ரஷ்ய மூலோபாய குண்டுவீச்சு போர்விமானங்கள் அமெரிக்க கடலெல்லைக்கு வெளியே ரோந்து சுற்ற உள்ளன

By Alex Lantier
14 November 2014

Use this version to printSend feedback

கியேவில் உள்ள நேட்டோ-ஆதரவிலான ஆட்சிக்கும் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே சண்டை கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், ரஷ்யா அதன் அணுஆயுதமேந்தும் மூலோபாய குண்டுவீச்சு போர்விமானங்களைக் கொண்டு அமெரிக்க கடலெல்லைக்கு வெளியே சர்வதேச வான்வெளியில் வழக்கமான அதன் ரோந்து நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக புதனன்று அறிவித்தது. ரஷ்யா அமெரிக்காவின் கடலெல்லையை ஒட்டி வழக்கமான ரோந்து நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுகிறது என்பது பனிப்போர் முடிந்த பின்னர் இதுவே முதல் முறையாகும்.

இது, ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் நடத்தி வருகின்ற மோதல், உலக யுத்தம் மற்றும் ஓர் அணுஆயுத மோதலின் அபாயத்தை முன்னிறுத்துகிறது என்பதற்கு அதுவொரு கூர்மையான எச்சரிக்கையாகும்—அந்த மோதல் உக்ரேனில் அமெரிக்க ஆதரவிலான வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் பெரிதும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

ரஷ்யாவின் தேசிய இராணுவ கவுன்சில் கூட்டத்தில் அம்முடிவை அறிவித்து, பாதுகாப்புத்துறை செயலர் செர்ஜி சோய்கு கூறுகையில், “தற்போதைய சூழலில், நாங்கள் மேற்கு அட்லாண்டிக் மற்றும் கிழக்கு பசிபிக்கில், அத்துடன் கரிபீயன் மற்றும் மெக்சிகோ வளைகுடாவிலும் இராணுவ பிரசன்னத்தை வைத்திருக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக, ஒத்திகைகளின் பாகமாக, ரஷ்யாவினது நீண்டதூர குண்டுவீச்சு போர்விமானங்கள் ரஷ்ய எல்லைகளை ஒட்டியும் மற்றும் ஆர்ட்டிக் பெருங்கடல் மீதும் பறந்து நடவடிக்கை மேற்கொள்ளும்," என்றார்.

இந்த அபிவிருத்தி உக்ரேனிய நெருக்கடியில் நேட்டோ அச்சுறுத்தல்களுக்கு ஒரு விடையிறுப்பாக உள்ளது என்பதை சோய்கு தெளிவுபடுத்தினார். “நேட்டோவின் பாகத்திலிருந்து ரஷ்ய-விரோத மனோபாவத்திற்கு ஊக்கங்கொடுப்பது மற்றும் எங்களது எல்லையை அடுத்து அன்னிய இராணுவ பிரசன்னத்தை மேலதிகமாக வலுப்படுத்துவது ஆகியவற்றுடன் சேர்ந்து, பல அம்சங்களில் இது உக்ரேனிய நிலைமையோடு தொடர்புபடுவதாக" அவர் விளக்கினார்.

கிரெம்ளின் உலகெங்கிலுமான நாடுகளுடன், அதாவது மத்தியத்தரைக்கடல் பகுதியில் அல்ஜீரியா மற்றும் சைப்ரஸ்; இலத்தீன் அமெரிக்காவில் நிக்கரகுவா, வெனிசூலா மற்றும் கியூபா; இந்திய பெருங்கடலில் செசெல்ஸ்; மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் மற்றும் சிங்கப்பூருடன், கடற்பகுதியை அல்லது வான்எல்லையை மீள்பகிர்வு செய்து கொள்வதற்கான உடன்பாடுகளுக்காக பேரம்பேசி வருவதாக கருதப்படுகிறது.

உக்ரேனுக்கு அருகில் சண்டை சீற்றமடைந்துள்ள நிலையில், கிரிமியன் தீபகற்பத்திலும் ரஷ்யா அதன் படைகளைப் பலப்படுத்துமென சோய்கு அறிவித்தார். அவர் கூறுகையில், “இத்தகைய நிலைமைகளின் கீழ், கிரிமியன் தீபகற்பத்தின் மீது முழு-அளவிலான மற்றும் சுய-தேவைக்குப் போதுமான படைகளை உருவாக்குவதே ஒரு முன்னுரிமைக்குரிய பணியாக உள்ளது," என்றார். உக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்ய பெருநிலப்பகுதியான ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டமும் மேலதிகமாக பலப்படுத்தப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் அணுஆயுத போர்வெறி அச்சுறுத்தல் முற்றிலும் பிற்போக்குத்தனமானதாகும். இருந்தபோதினும், அணுஆயுத யுத்த அபாயத்திற்கான மத்திய பொறுப்பு ஏகாதிபத்திய சக்திகளின் நேட்டோ கூட்டணியின் மீதே தங்கியுள்ளது.

வாஷிங்டன் மற்றும் பேர்லின் தலைமையில், நேட்டோ சக்திகள், ரஷ்ய-ஆதரவிலான உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சைத் தூக்கியெறிவதில், அவை Right Sector குழு போன்ற வலதுசாரி உக்ரேனிய பாசிசவாத உட்கூறுகளுடனும் மற்றும் செல்வந்த வணிகர் ஜூலியா திமோஷென்கோ உள்பட நேசமான பிற்போக்குவாதிகளுடனும் நேரடியாக வேலை செய்திருந்தன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் கசியவிடப்பட்ட ஒரு தொலைபேசி உரையாடலில், உக்ரேனில் உள்ள ரஷ்ய இனத்தவர்களை நிர்மூலமாக்கவும், ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் படுகொலைக்கும் திமோஷென்கோ அழைப்புவிடுத்தார்.

திமோஷென்கோ இன்னமும் நேட்டோவின் ஆதரவை அனுபவித்து வருகிறார் என்பதுடன், அவரது Fatherland கட்சியின் ஓர் அங்கத்தவரான அர்செனி யாட்சென்யுக் உக்ரேனிய பிரதம மந்திரியாக உள்ளார்.

உக்ரேனில் உள்நாட்டு போர் வெடித்த போது, நேட்டோ—பால்டிக் குடியரசிலிருந்து போலாந்து மற்றும் கருங்கடல் வரையில்—துருப்புகளையும், போர்க்கப்பல்களையும் மற்றும் போர் விமானங்களையும் கிழக்கு ஐரோப்பாவிற்குள் கொண்டுச் சென்றது, தெளிவற்ற சூழல்களின் கீழ் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டுவீழ்த்தப்பட்டது. நேட்டோ சக்திகள் உடனடியாக அந்த பேரழிவுக்கு ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டின. ரஷ்யாவுடன் யுத்தத்திற்கான ஓர் அழைப்பு என்று மட்டுமே விளங்கப்படுத்தக் கூடிய அளவுக்கு, மேற்கத்திய ஊடகங்கள் மிரட்டும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. (பார்க்கவும்: அணுஆயுத யுத்தத்திற்கு நீங்கள் தயாரா?)

பல மாத பதட்டங்களுக்குப் பின்னர், கிழக்கு உக்ரேனில் மீண்டும் சண்டை தீவிரமடைந்துள்ளதுடன், கிரெம்ளின் இந்த போர்நாடும் அச்சுறுத்தல்கள் தீவிரமானவை என்றும், அதற்கு கியேவ் ஆட்சியை மட்டுமே இலக்கில் வைத்த ஒரு ரஷ்ய விடையிறுப்பு அல்ல, மாறாக அதன் சர்வதேச ஆதரவாளர்களையும் இலக்கில் வைக்கும் ஒரு விடையிறுப்பு அவசியமென்ற முடிவுக்கு வெளிப்படையாக வந்துள்ளது.

சோய்குவின் அச்சுறுத்தல் நேரடியாக அமெரிக்காவை நோக்கி உள்ள போதினும், ரஷ்ய யுத்த திட்டங்கள் தவிர்க்கவியலாதவாறு பிரதான அமெரிக்க கூட்டாளிகள் மீதான தாக்குதல்களுக்கும் தயாரிப்பை உள்ளடக்குகிறது: அமெரிக்க தலைமையிலான கூட்டணி மீதான ஒரு யுத்தத்தில், ரஷ்ய மக்களின் சில பகுதியினரின் உயிர்பிழைப்பு என்பது அமெரிக்க மண்ணில் நிலைநிறுத்தப்பட்டவை மட்டுமல்ல, மாறாக பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி மற்றும் ஜப்பானிலும் நிலைநிறுத்தப்பட்ட அணுஆயுதங்களை அழிப்பதை சார்ந்துள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸூம் அவற்றின் சொந்த அணுஆயுதங்களைக் கொண்டுள்ளன.

ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக்கிலும் வான்வழி பதட்டங்கள் வெடித்து வருகின்றன. பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலர் மைக்கேல் ஃபலோன் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவிக்கையில், ரஷ்ய இராணுவ விமானங்கள் ஐரோப்பாவைச் சுற்றிலும் உள்ள சர்வதேச வான்வெளியில் அதன் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன என்றார்.

அவர் கூறினார், “பெரிய உருவாக்கங்களை நாங்கள் பார்க்கிறோம், அவை மேலும் உயர்ந்து வருகின்றன." “அக்டோபர் 31இல், ரஷ்ய விமானம் நோர்வேயைக் கடந்து செல்வதை, டென்மார்க்கைக் கடந்து செல்வதை, இங்கிலாந்தைக் கடந்து செல்வதை, அயர்லாந்தைக் கடந்து செல்வதை, போர்ச்சுக்கலில் மிகத் தாழ்வாக பறந்து செல்வதை நாங்கள் பார்த்தோம்." அந்த விமானங்கள் "மிரட்டுவதாகவும், வெளிப்படையாக அபாயகரமாக இருப்பதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய போர்கப்பல்கள் தற்போது ஆஸ்திரேலியாவை ஒட்டி ஒத்திகைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், கிழக்கு ஆசிய வான்வழியில் ஒரு பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாடு வெடித்துள்ளது. ரஷ்ய இராணுவ விமானங்களைக் கண்காணிப்பதற்காக டோக்கியோ இந்த ஆண்டு செப்டம்பர் முழுவதிலும் அதிக முறை அதன் போர்விமானங்களை பறக்கவிட்டிருந்தது, இது 324 முறையாகும், 2013 இல் அதே காலத்தில் இருந்த 126 முறையை விடவும் அதிகமாகும் என்பதை சமீபத்திய ஜப்பானிய அரசாங்க புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உள்வரும் விமானங்களைக் கண்காணிப்பதற்காக இந்தாண்டு பறக்கவிடப்பட்டிருந்த ஜப்பானிய விமானங்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு வரலாற்று உயர்வாக 533ஆக இருந்தது.

உலக சக்திகளுக்கு இடையே ஒரு பிரதான யுத்த பீதி வெடித்திருப்பது, தேசிய-அரசு அமைப்புமுறையின் பகுத்தறிவற்றத்தன்மையையும் மற்றும் முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியிலான திவால்நிலைமையையும் மெய்பிக்கிறது.

ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராக மற்றும் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தின் மீது சோசலிசத்திற்காக சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதே முன்னால் உள்ள ஒரே வழியாகும். இந்த போராட்டத்தில், மாஸ்கோவிலோ அல்லது பெய்ஜிங்கிலோ உள்ள முதலாளித்துவ ஆட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு எந்த ஆதரவும் அளிக்கவியலாது. முதலாளித்துவத்தின் மீட்சி மற்றும் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்ததிலிருந்து எழுச்சி பெற்றுவந்த பெரும் செல்வந்த தன்னலக்குழுக்களின் ஓர் அடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் அவை, சர்வதேச பாட்டாளிவர்க்கத்திடையே யுத்த-எதிர்ப்பு உணர்வுகளுக்கு ஏதேனும் முறையீடு செய்வதற்குத் தகுதியற்றவை ஆகும்.

ஏகாதிபத்திய சக்திகளைப் பேரம்பேசும் மேசைக்கு வரவழைக்க நிர்பந்தப்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் பிரதான நாடுகடந்த கூட்டு பெருநிறுவனங்களுக்கு எண்ணெய்யோ அல்லது மலிவு உழைப்பையோ வழங்குபவர்களாக அவர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கும் நோக்கத்துடனும், அவற்றின் கொள்கைகள் போர்நாடும் அச்சுறுத்தல்களைச் செய்வதற்கு இடையே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இவ்விதத்தில், ரஷ்யா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஒரு புதிய புலாவா (Bulava) ஏவுகணையைப் பரிசோதித்துள்ளது, சீனாவோ பசிபிக் பெருங்கடலில் இருந்து அமெரிக்க கண்டத்தின் மீது அணுஆயுத தாக்குதல்களை நடத்த தகைமை கொண்ட Jin-ரக நீர்மூழ்கிக்கப்பல் ஏவுகணையைப் பரிசோதித்து வருகிறது.

பூமியை எரித்து சாம்பலாக்கும் ஒரு யுத்தத்தில் அத்தகைய ஆயுதங்கள் ஒரு பிரதான பாத்திரம் வகிக்க முடியும் என்ற நிலையில், அதுபோன்றவொரு யுத்தத்திற்கு சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பை ஒன்றுதிரட்ட அவை ஒன்றும் செய்யவில்லை. உண்மையில், ஒரு யுத்த பிரளயத்தின் அபாயத்தை வெகுஜன ஊடகங்களும் மற்றும் ஆளும் வர்க்கமும் மூடிமறைத்து வருகின்றன என்பதே தொழிலாளர் வர்க்கம் முகங்கொடுத்து வரும் மைய ஆபத்தாகும்.

ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைனிடம் இருந்தே இராத பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள் இருந்ததென குற்றஞ்சாட்டியும் மற்றும் அமெரிக்க பாதுகாப்புக்கு பொறுக்கவியலாத அச்சுறுத்தலாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் இரசாயன ஆயுதக்கிடங்கு இருந்ததாக குற்றஞ்சாட்டியும் பீதியூட்டும் பிரச்சாரங்களைச் செய்த அமெரிக்க ஊடங்கள், நூறு மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை கொல்லக்கூடிய ரஷ்ய குண்டுவீச்சு போர்விமானங்கள் நிலைகொள்வது குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்கு மவுனமான அணுகுமுறையை எடுத்து வருகின்றன.

இவ்விதத்தில், சமீபத்தில் ரஷ்ய-நேட்டோ யுத்த அபாயத்தின் ஓர் அறிக்கையை பிரசுரித்த ஐரோப்பிய தலைமை வலையமைப்பு சிந்தனைக்கூடத்தைச் சேர்ந்த அயன் கீர்ன்ஸ், ரஷ்ய குண்டுவீச்சு போர்விமானங்கள் நிலைகொள்வதிலிருந்து எழும் யுத்த அபாயத்தைக் குறைத்துக் காட்ட முயன்றார். ஆனாலும் அவர் AP செய்தி நிறுவனத்திடம் இதை ஒப்புக் கொண்டார், “நம் முன்னால் நடந்து வரும் நேட்டோ மற்றும் ரஷ்ய படைகளின் நிறைய சம்பவங்கள் நெருக்கமாக ஒன்றுகூடி வருகின்றன, ஏதோவொன்று, ஒருவேளை அது சர்வதேச அளவில் இல்லையென்றாலும், மோசமானது நடக்கவிருப்பதற்கு அங்கே நிறைய வாய்ப்பு இருக்கிறது,” என்றார்.

இருந்தபோதினும், ரஷ்ய குண்டுவீச்சு போர்விமானங்கள் "அவசியமான விதத்தில் ஒரு அச்சுறுத்தலுக்குரிய சூசகமான அறிகுறி இல்லை. .... அவை வெறுமனே ஒரு பொதுவான நடவடிக்கையின் அதிகரித்த பாகமாக உள்ளன," என்று அவர் முடித்தார்.

என்னவொரு சிடுமூஞ்சித்தனமான, தவறாக வழிநடத்தும் மழுப்பல்! அதிகரித்த அந்த "நடவடிக்கை" உலகளாவிய அணுஆயுத யுத்த அச்சுறுத்தலுக்கு சூசகமான அறிகுறியாகும்.

அங்கே மார்ச்சிலிருந்து “மிக அருகில் தவறிய" (near misses) குறைந்தபட்சம் 40 சம்பவங்கள் இருந்துள்ளன, அவற்றில் நேட்டோ படைகளும் மற்றும் ரஷ்ய இராணுவமும் இராணுவ மோதலுக்கு மிக நெருக்கமாக வந்திருந்தன என்பதை இந்த வாரத்தின் தொடக்கத்தில் ELN வெளியிட்ட ஓர் அறிக்கையைப் பின்தொடர்ந்து, ரஷ்யாவின் அந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் விளைவாக, உலகின் புவிசார் அரசியல் சூழ்நிலை முற்றிலும் ஸ்திரமின்றி உள்ளது, இதில் ஓர் இராணுவ குறுக்கீடு என்பது, அது தெரிந்தே நடந்தாலும் சரி தெரியாமல் நடந்தாலும் சரி, விரைவிலேயே கட்டுப்பாட்டை இழந்துவிடக் கூடும்.