சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The struggle against war and the tasks of the PSG

யுத்தத்திற்கு எதிரான போராட்டமும், PSG இன் பணிகளும்

By the Partei für Soziale Gleichheit (PSG)
14 November 2014

Use this version to printSend feedback

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit, PSG) அக்டோபர் 1 மற்றும் நவம்பர் 2க்கு இடையே பேர்லினில் அதன் வழக்கமான கட்சி மாநாட்டை நடத்தியது. அதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர், PSGஇன் ஒரு சிறப்பு மாநாடு "ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புதலும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்" என்ற ஒரு விரிவான தீர்மானத்தை ஏற்றிருந்தது. வழக்கமான அந்த மாநாடு இந்த தீர்மானத்தையும் மற்றும் கூடுதலாக ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது, இடைப்பட்ட வாரங்களில் நிகழ்ந்திருந்த அபிவிருத்திகளில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளையும் தொகுத்து, இங்கே அதை நாம் பிரசுரிக்கிறோம்.

1. உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோல்விக்கு, ஜேர்மன் ஆளும் வர்க்கம் இராணுவவாதத்திற்கு திரும்புவதன் மூலமாக விடையிறுப்புக் காட்டி வருகிறது. செப்டம்பர் 13-14, 2014இல் சோசலிச சமத்துவக் கட்சியின் சிறப்புக் கூட்டம், இந்த அபிவிருத்தியை பகுத்தாராய்ந்ததோடு, யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை கட்சியின் இதயதானத்தில் கொண்டு வரவும் தீர்மானித்தது. “வரலாறு ஒரு பழிவாங்கும் வெறியோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறது," என அத்தீர்மானம் குறிப்பிடுகிறது. “நாஜிக்களின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலக போரில் அதன் தோல்வி ஆகியவற்றிற்கு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை கெய்சர் சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலை ஏற்று வருகிறது.

2. ஜேர்மனியின் இராணுவமயமாக்கல் அப்போதிருந்து தொடரப்பட்டு உள்ளது என்பது மட்டுமல்ல, தீவிரப்படுத்தப்பட்டும் உள்ளது. அரசாங்கத்தின் மிக உயர் மட்டங்கள், அனைத்து அரசியல் கட்சிகள்CDU/CSU, SPD, பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சிஊடகங்கள் மற்றும் முன்னணி கல்வியாளர்கள் அனைவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிவிடுதல், இராணுவப் படைகளைப் (Bundeswehr) பாரியளவில் மேம்படுத்துவதற்கு அழைப்பு விடுப்பது மற்றும் மத்தியக்கிழக்கில் ஒரு பிரதான இராணுவத் தலையீட்டுக்கு முறையீடு செய்வது என ஊடகங்களில் இவை இல்லாமல் ஒரு நாள் கூட நகர்வதில்லை. பொதுமக்களை மிரட்டுவதும் மற்றும் அனைத்து யுத்த எதிர்ப்பையும் மவுனமாக்குவதுமே அவர்களது பிரச்சாரத்தின் நோக்கமாக உள்ளது.

3. சான்றாக, அக்டோபர் 27 அன்று Spiegel Online இல், பேர்லின் சுதந்திர பல்கலைக்கழகத்தின் ஓர் அரசியல் விஞ்ஞானி கிளவுஸ் சிக்பேர்ஸ் குறிப்பிடுகையில், ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதற்கு ஜேர்மனி இதுவரையில் "பிரதானமாக பேச்சுகளுடனும்" மற்றும் "தயக்கத்தோடு, தாமதமாக, அரை-மனதோடு கொண்டு வந்த தடைகளுடனும்" விடையிறுப்புக் காட்டியிருந்ததாக சாடியிருந்தார். “ஒரு அடிப்படை அச்சுறுத்தலுக்கு விடையிறுப்புகளைத் தேர்வு செய்வதில் நமது மனோபாவம் இனியும் கட்டுப்பட்டு இருக்கக்கூடாதுதேவையானால், தற்காப்புக்காக வன்முறையையும் எடுக்க வேண்டும்," என்று எழுதினார், அத்துடன் அவர் "ஜனநாயகதன்மையற்றரீதியில் அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராகதீர்க்கமாகவும், எச்சரிக்கை விடுக்காமலும் மற்றும் நிரந்தரமாகவும், உரிய இடத்தில்" படைகளைப் பயன்படுத்துவதற்கும் அழைப்புவிடுத்தார்.

4. அவரது ஐரோப்பா தோல்வியுறுமா? என்ற சமீபத்திய நூலில், பசுமைக் கட்சியின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஸ்கா பிஷ்ஷெசர் ரஷ்யாவுடன் ஒரு கூர்மையான மோதலுக்கு வலியுறுத்துகிறார், அதில் அவர் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் பால்கன்களிலும் அது விரிவாக்கம் செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டுகிறார். பிஷ்ஷெசர் எழுதுகிறார், “மேலும் ஐரோப்பியர்கள் எப்போதும் போல பிளவுபட்டு நிற்கிறார்கள், இராணுவரீதியில் பலவீனமாக மற்றும் ஆர்வமற்றும் இருக்கிறார்கள், ஐரோப்பிய-ரஷ்ய கூட்டுறவு, ரஷ்ய பணம் மற்றும் வணிகத்தின் ஆசிர்வாதம் குறித்து அவர்களிடையே உள்நாட்டில் வளர்க்கப்பட்ட பிரமைகளோடு, அவர்கள் அவர்களது அமைதியான, யதார்த்தமற்ற நிலையில் ஆண்டாண்டாக தூங்கித்தூங்கி மந்தமாகிவிட்டார்கள்."

5. இந்த இராணுவமயப்பட்ட பிரச்சாரத்தில், இடது கட்சியும் அதன் அணிகளில் உள்ள போலி-இடது குழுக்களும் குறிப்பிடத்தக்க விதத்தில் அழிவுண்டாக்கும் பாத்திரத்தை வகிக்கின்றன. அவை அரசாங்கத்தின் யுத்த கொள்கைக்கு மக்களின் பரந்த அடுக்குகளில் நிலவும் இராணுவவாத-எதிர்ப்புணர்வைப் பலவீனப்படுத்தவும் மற்றும் ஆதரவைத் திரட்டவும் அனைத்தையும் செய்து வருகின்றன. இடது கட்சியின் பதினான்கு முன்னணி கட்சி உறுப்பினர்கள், ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவ தாக்குதலைப் புதுப்பிப்பதற்காக, ஏகாதிபத்திய இராணுவ தலையீட்டை ஜேர்மன் பங்களிப்புடன் சட்டபூர்வமாக்க, ஐக்கிய நாடுகள் சபையில் ஓர் தீர்மானம் நிறைவேற்றுமாறு பெடரல் அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக விடையிறுத்தனர். இடது கட்சிக்குள் இருக்கும் போலி-இடதுகள் அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கைகளை பயனற்றவையாக நிராகரித்து, அதற்கு மாறாககுர்திஷ் போராளிகள் குழுக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவரை ஆயுதமேந்த செய்வதன் மூலமாகஅம்மண்ணில் ஒரு பினாமி போருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

6. மிகத் துல்லியமாக, ஜேர்மனியில் இராணுவவாதத்தை எதிர்க்கும் ஒரே அரசியல் அமைப்பு PSG மட்டுமே ஆகும். செப்டம்பரின் சிறப்பு காங்கிரஸூக்குப் பின்னர் உடனடியாக, PSG, “ஜேர்மன் மேற்தட்டுக்கள் மீண்டுமொருமுறை ஏன் யுத்தத்தை விரும்புகின்றன?" என்ற தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி, இராணுவவாதத்திற்கு எதிராக ஓர் எதிர்தாக்குதலை தொடங்கியது. யுத்தத்திற்கான சித்தாந்த தயாரிப்பின் மையமாக அபிவிருத்தி அடைந்துள்ள பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், IYSSEஆல் மிக முக்கிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

7. அந்நிகழ்வை அரசியல்ரீதியாக தணிக்கை செய்வதற்காக இருந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் முயற்சிகளை IYSSE வெற்றிகரமாக மறுத்தளித்தது. பல்கலைக்கழக நிர்வாகம் கலந்துரையாடலுக்கான ஓர் அறையை வழங்க, "கூட்டத்திற்கு முன்னரும், கூட்டத்தின் போதும் மற்றும் கூட்டத்திற்குப் பின்னரும், பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்களை மீண்டுமொருமுறை பழிக்கக்கூடாது, சான்றாக, இராணுவவாதிகள் என்றும், யுத்தவெறியர்கள் என்றும் துண்டறிக்கைகளிலோ, சுவரொட்டிகளிலோ, இணையத்திலோ, அல்லது வேறுவழிகளிலோ சாடக்கூடாதென்பதற்கு உடன்படுமாறு நிபந்தனை விதித்தது. இது, இராணுவவாதத்தின் சித்தாந்தரீதியிலான தாக்குதலில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் பேராசிரியர்கள் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஹெர்ஃப்ரெட் முன்ங்க்லெர் மீதான விமர்சனங்களைக் குறித்த குறிப்பாகும்.

8. IYSSE இந்த நிபந்தனையை ஏற்க மறுத்ததுடன், தணிக்கை முயற்சியின் விபரங்களையும் பிரசுரித்தது. “ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவர் அமைப்பு என்ற அடிப்படையில், அதுபோன்ற கண்ணோட்டங்களை எதிர்ப்பதும், கண்டிப்பதும் எங்களின் உரிமை மட்டுமல்ல, மாறாக எங்களின் கடமையும் கூட. உங்கள் கடிதம் குறிப்பிடுவதைப் போல, இது எந்தவிதத்திலும் 'சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை முற்றிலும் ஒரு விஞ்ஞானபூர்வ அடித்தளத்தில்' விவாதிப்பதற்கு முரண்பாடானதல்ல. அதற்கு நேர்மாறாக, அது அதன் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது," என்று அறிவித்தது. முடிவில், பல்கலைக்கழக நிர்வாகம் பின்வாங்கியது.

9. அக்கூட்டம் ஒரு மகத்தான அரசியல் வெற்றியாகும். அண்ணளவாக 200 பேர், அதுவும் பெரும்பாலும் மாணவர்கள், அதில் பங்கெடுத்தனர், மிக கவனத்துடன் அந்த உரையைப் பின்தொடர்ந்தனர். அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு யுத்தம் மற்றும் இராணுவவாதத்தின் காரணங்களைக் குறித்த புரட்சிகர புரிதல்கள் இல்லை என்றபோதினும், அக்கூட்டம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த யுத்த எதிர்ப்பு உள்ளது என்பதை எடுத்துக்காட்டியது. இராணுவவாதத்திற்கு எதிரான PSGஇன் பிரச்சாரம் இந்த எதிர்ப்பை மேற்பரப்புக்கு கொண்டு வந்திருந்ததுடன், அதற்கு ஒரு நிலைநோக்கை வழங்கி இருந்தது.

10. மார்க்சிச வழிமுறை மற்றும் கட்சி பணிகளின் நிலைப்பாட்டிலிருந்தும், இது பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மார்க்ஸ் அவரது ஃபயர்பாக் மீதான ஆய்வுரையில் (Theses on Feuerbach) இவ்வாறு குறிப்பிட்டார், “இதுவரையில் இருந்த எல்லா ஜடவாதத்தின் தலையாய குறைபாடு என்னவென்றால், பொருள், யதார்த்தம், புலனுணர்ச்சி ஆகியவை புறப்பொருளின் அல்லது சிந்தனையின் வடிவமாக மட்டுமே கருதப்பட்டது, மாறாக புலனுணர்ச்சி கொண்ட மனித நடவடிக்கையாக, பழக்கமாக, அகநிலையாக பார்க்கப்படவில்லை. ஆகவே அது "'புரட்சிகரமான', “நடைமுறை-சிக்கல் கொண்ட' நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உள்ளெடுத்துக் கொள்ளவில்லை. மார்க்ஸ் இவ்வாறு முடித்தார், "நடைமுறையிலிருந்து தனிமைப்பட்டிருக்கும் சிந்தனையின் யதார்த்தம் அல்லது யதார்த்தமற்றதன்மை மீதான பிரச்சினை முற்றிலும் ஒரு மேதமைவாய்ந்த பிரச்சினை தான்."

11. புறநிலை யதார்த்தத்தைத் தீர்மானிப்பது நடைமுறையில் மட்டுமே சாத்தியமாகும். இதைப் பின்தொடர்ந்து தான், பொருளாதார நெருக்கடி, சமூக பதட்டங்கள் மற்றும் இராணுவ மோதல்களின் தற்போதைய காலக்கட்டத்தில், கட்சி அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளைத் திட்டமிட்டு விரிவாக்கி, அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பது வருகிறது.

12. WSWS மூலமாக அரசியல் அபிவிருத்திகளை வெளிப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியான பகுப்பாய்வுகள், தொழிலாள வர்க்கம் மற்றும் மாணவ இளைஞர்களை நோக்கி முறையாக திரும்புவது மற்றும் அனைத்து போலி-இடது போக்குகளிடமிருந்தும் PSG நிரந்தரமாக அரசியல் மற்றும் தத்துவார்த்தரீதியில் அன்னியப்படுவது ஆகியவை யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் மையத்தில் உள்ளன. இத்தகைய முதலாளித்துவ, ஏகாதிபத்திய-சார்பு போக்குகளின் செல்வாக்கு, தொழிலாள வர்க்கத்திற்கு திட்டமிட்டு குழிபறிக்கின்றன.

13. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் ஜூலை 3, 2014இன் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “யுத்தத்திற்கு எதிரான ஒரு போராட்டம் இல்லாமல் அங்கே சோசலிசத்திற்கான ஒரு போராட்டம் இருக்க முடியாது, அதேபோல சோசலிசத்திற்கான ஒரு போராட்டம் இல்லாமல் அங்கே யுத்தத்திற்கான ஒரு போராட்டமும் இருக்க முடியாது." யுத்தத்திற்கு எதிரான போராட்டம், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோருகிறது. ICFIஇன் ஏனைய பகுதிகளுடன், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ளவைகளுடன், நெருக்கமாக ஒத்துழைப்பதும் மற்றும் புதிய பகுதிகளைக் கட்டுவதும் யுத்தத்திற்கு எதிரான PSGஇன் அரசியல் எதிர்தாக்குதலின் மைய அம்சமாகும்.