சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

G-20 summit intensifies threat of war against Russia

G-20 உச்சிமாநாடு ரஷ்யாவுக்கு எதிரான யுத்த அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்துகிறது

Peter Schwarz
18 November 2014

Use this version to printSend feedback

ஆஸ்திரேலியாவில் நடந்த G-20 உச்சிமாநாடு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இரண்டுக்கும் எதிராக, அமெரிக்கா தலைமையிலான முன்னெடுப்போடு, ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை மேலும் தீவிரப்படுத்துவதைக் குறித்தது, இது ஒட்டுமொத்த பூமியையும் ஒரு அணுஆயுத உலக யுத்தத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தி வருகிறது.

யுரேஷிய கண்டம் மற்றும் மத்திய கிழக்கின் மீது மேலாதிக்கத்தை ஸ்தாபித்து வைப்பதற்கு அதன் பிரதான தடைகளாக கருதப்படும் அவ்விரு நாடுகளையும் தனிமைப்படுத்த மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்க, வாஷிங்டன் இறுதி எச்சரிக்கைகள் மற்றும் நவீன திட்டங்களை வெளியிட்ட போது, தூதரகரீதியிலான நெறிமுறைகள் கைவிடப்பட்டிருந்தன.

ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகள் அவர்கள் இஷ்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை ஒரு தீண்டத்தகாத குஷ்டரோகியைப் போல கையாளும் அளவுக்குச் சென்றனர். அந்த உச்சிமாநாட்டை நடத்தி வந்த ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அப்போட், அம்மாநாட்டிற்கு முன்னதாக, புட்டினின் "சட்டையைப் பிடித்து உலுக்கப் போவதாக" அறிவித்திருந்தார். அந்த கூட்டத்தில், கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் புட்டினுடன் விருப்பமின்றி கைக்குலுக்கிய அதேவேளையில் "நீங்கள் உக்ரேனில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்," என்று கூறுகிறார்.

Frankfurter Allgemeine Zeitung இதழ் வெறுப்போடு குறிப்பிட்டது, “இந்த நாட்களின் மோதலில், அனாதையாக நிற்கும் புட்டினிடமிருந்து தன்னைத்தானே தூர விலக்கிக் கொள்வதை விட, ஒவ்வொரு நாட்டிற்கும் வேறெது சிறப்பாக உதவக்கூடும்."

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சர்வதேச சட்டத்தை மீறுவதாக புட்டினைக் குற்றஞ்சாட்டினார். “மற்ற நாடுகளுக்குள் நீங்கள் தலையிடக் கூடாது," என ஒபாமா அறிவித்தார். கடந்த 25 ஆண்டுகளில் டஜனுக்கும் மேலான நாடுகளின் மீது படையெடுத்துள்ள அல்லது குண்டுவீசியுள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி இதைக் கூறுகிறார்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஒரு நாளுக்குப் பின்னர் சிட்னியில் ஓர் உரையாற்ற சென்றிருந்த போது, புட்டினை நேருக்குநேராக தாக்குவதற்காக மட்டுமே அவருடன் நான்கு மணிநேர இரகசிய உரையாடலை நடத்துவதற்காக அவரைச் சந்தித்தார். செல்வாக்கெல்லை வரையறைகளைச் சிந்திப்பதற்காகவும் மற்றும் சர்வதேச சட்டத்தை மதியாமல் அடியெடுத்து வைப்பதற்காகவும் அவரைக் குற்றஞ்சாட்டினார். “இரண்டு உலக போர்கள் மற்றும் பனிப்போரின் கொடுமைகளுக்குப் பின்னரும், அவர் சமாதானத்திற்கான ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒழுங்குமுறையைக் கேள்விக்குட்படுத்துவதாக" அவர் தெரிவித்தார்.

புட்டின் மீதான வார்த்தையளவிலான தாக்குதல்கள் ரஷ்யா மீது அதிகரிக்கப்பட்ட இராணுவ அழுத்தத்துடன் இணைந்துள்ளனன. செக்கோஸ்லோவாகியா "வெல்வெட் புரட்சியின்" நினைவுதினத்தைக் குறித்த பிரடிஸ்லாவாவில் நடந்த நிகழ்வில், உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ முழு அளவிலான போருடன் ரஷ்யாவை எச்சரித்தார். “ரஷ்ய துருப்புகளுடன் போர் புரிவதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை, அதுபோன்ற முழு அளவிலான யுத்த சூழலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்," அவர் ஜேர்மன் சிற்றிதழ் Bildக்குத் தெரிவித்தார்.

மின்ஸ்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை, நேட்டோ ஒத்துழைப்புடன் இராணுவத்தைக் கட்டமைப்பதற்கு பயன்படுத்தி இருந்ததாக பொறோஷென்கோ ஒப்புக் கொண்டார். “எங்களது இராணுவம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும் இப்போது சிறந்த நிலையில் உள்ளது, உலகெங்கிலும் இருந்தும் எங்களுக்கு ஆதரவுள்ளது," என்றார்.

பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசாங்க முகமைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நிதியுதவியை நிறுத்துவது உட்பட, கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாதிகளின் மேலாளுமையில் உள்ள பகுதிகளுக்கு பொது நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்துமாறு சனியன்று பொறோஷென்கோ உத்தரவிட்டார். உக்ரேனில் ஒற்றுமையைப் பேணுவது என அவரால் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கை முன்னெடுப்பதில் இருந்து வெகுதூரம் விலகி, பொறோஷென்கோவின் நடவடிக்கைகள் பிரிந்துசென்ற பகுதிகளை இன்னும் நெருக்கமாக ரஷ்யாவுடன் இணைய நிர்பந்திக்கும். அது தான் வெளிப்படையான உள்நோக்கமுமே கூட, மாஸ்கோவிற்கு எதிரான யுத்தவெறியூட்டலை தூண்டிவிடுவதற்கு அதையொரு போலிக்காரணமாக பெறுவதே நோக்கமாகும்.

மேற்கத்திய ஊடகங்களோ பனிப்போரின் போது உச்சக்கட்டத்தில் செய்ததைப் போல, ஒடுக்கும் ஒரு கொள்கைக்குத் திரும்ப வெளிப்படையாக பரிந்துரைத்து வருகின்றன. Süddeutsche Zeitungஇல் ஸ்டீபன் கோர்னிலியஸ் எழுதுகையில், “ஒடுக்கும் பழைய விதிமுறைகளைச்" செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, “கொடூரத்தின் சமநிலை எட்டப்பட்டால்" மட்டும் தான், புட்டினின் "சித்தாந்தரீதியில் விட்டுக்கொடுப்பற்ற பண்பை" எதிர்கொள்ள முடியும் என்று எழுதினார்.

அதே செய்தியிதழில், எஸ்தோனிய பாதுகாப்பு மந்திரி ஸ்வென் மிக்செர், ஒடுக்குதல் மீது மேலதிகமாக கவனத்தைக் குவிக்க நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தார். “புட்டினது ஆட்சி போன்றவொன்றை நீங்கள் கையாளும் போது, பலத்தை விட பலவீனமே மிகவும் ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது," என்றவர் எழுதினார். அவர் எஸ்தோனிய மண்ணில் இன்னும் பெரியளவில் நேட்டோ பிரசன்னத்தை வலியுறுத்தினார்: “நம்முடைய மண்ணில் இருக்கும் ஒவ்வொரு கூட்டாளியின் பிரசன்னமும், அது எண்ணிக்கையைச் சார்ந்திருந்தாலும் சரி அல்லது சார்ந்தில்லாமல் ஈடுபட்டிருந்தாலும் சரி, ஒரு பின்வாங்கச் செய்யும் விளைவைக் கொண்டுள்ளது. இத்தகைய ஒடுக்கும் முயற்சிகளின் பாகமாக ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) வருவதும் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்."

ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ நகர்வுகளின் அபாயம் பகிரங்கமான யுத்தமுறைக்குள் வெடித்து வருவது, அன்றாடம் வளர்ந்து வருகிறது. சனியன்று, இஸ்ரேலிய வரலாற்றாளர் மற்றும் இராணுவ வல்லுனர் மார்டின் வான் க்ரெவெல்ட் அளித்த பங்களிப்பை Die Welt பிரசுரித்தது, “'டொனெட்ஸ்கின் மக்கள் குடியரசு' என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டதற்கும் மற்றும் கியேவ் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு யுத்தம் பெரிதும் சாத்தியமாக கூடுமென" அவர் கருதுவதாக தெரிவித்தார்.

'டொனெட்ஸ்கின் மக்கள் குடியரசினது' பிரிவினையைத் தடுக்க மற்றும் ரஷ்யாவுடன் அது இணைவதைத் தடுக்க, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இருக்கும் ஒரே சாத்தியக்கூறு நேரடியான இராணுவ தலையீடு மட்டுமே ஆகும்," என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். தீவிரப்படுத்தல் "ஒரு வெடி உலையை உருவாக்கி உள்ளதாக" தெரிவித்த அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஓர் உள்நாட்டு தளபதியின் அங்கீகாரமற்ற நடவடிக்கையோ, அல்லது ஒரு சிறிய தவறான புரிதலோ, எந்நேரமும் ஒரு வெடிப்புக்கு இட்டுச் செல்லக்கூடும்," என்றார்.

இது வெறுமனே பழைய வழக்கத்திலான போராக இருக்காது, மாறாக ஓர் அணுஆயுத யுத்தமாக இருக்கும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டுமே கடந்த சில மாதங்களில் அணுஆயுதங்கள் சம்பந்தப்பட்ட இராணுவ ஒத்திகைகளை பெரிதும் அதிகரித்துள்ளன என்பதோடு, அவற்றின் அணுஆயுத தளவாடங்களை நவீனமாக்கும் நிகழ்முறையிலும் உள்ளன. சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் பயிலகத்தின் (SWP) “உக்ரேனிய நெருக்கடியின் அணுஆயுத பரிணாமம்" என்றவொரு ஆய்வின்படி, ரஷ்யா அதை பகிரங்கமாக செய்து வருகின்ற அதேவேளையில், நேட்டோவுக்குள் "ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதன் மீது பெரிதும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதம் நடந்து வருகிறது."

அந்த ஆய்வு பல சம்பவங்களை மேற்கோளிடுகிறதுB-2 மற்றும் B-52 குண்டுவீசிகளை பிரிட்டனுக்கு அனுப்புவது, மற்றும் போலாந்தில் F-16 போர்விமான குண்டுவீசிகளை நிலைநிறுத்துவது உட்படஅச்சம்பவங்களில் வாஷிங்டன் அதன் அணுஆயுத தளவாடங்களை நடவடிக்கைகளுக்குள் கொண்டு வந்துள்ளது. வெள்ளியன்று, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெல் அறிவிக்கையில், அணுஆயுத தளவாடங்கள் உட்பட அமெரிக்காவின் ஆயுத படைகள் பரவலாக நவீனமயமாக்கப்படும் என்றார்.

SWP ஆய்வு ஒரு கட்டுப்பாட்டை இழந்து செல்லும் யுத்த வெடிப்பின் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறது: “குறுகிய காலத்தில் இருக்கும் மிகப்பெரிய அபாயம், ரஷ்யாவால் தூண்டிவிடப்படும் ஓர் அணுஆயுத தீவிரப்படுத்தல் அல்ல, ஆனால் அதற்குமாறாக மற்ற தரப்பினது உள்நோக்கங்களைக் குறித்த ஒரு சாத்தியமான தவறான பொருள்விளக்கமே பெரும் ஆபத்தாக உள்ளது. பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கே நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே துல்லியமான நெருக்கடிகால விடையிறுப்பு அணுகுமுறைகள் எதுவும் இல்லை," என்கிறது.

மனிதகுலத்தின் முடிவை அர்த்தப்படுத்தும் அணுஆயுத போர் அபாயத்திற்கான பொறுப்பு, ஏகாதிபத்திய சக்திகளின் மீது, அதுவும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் மீதே சார்ந்துள்ளது. பல ஆண்டுகளாக அவை பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி, நேட்டோவின் பரப்பெல்லையை கிழக்கு நோக்கி மாற்றியுள்ளன. இப்போது அவை உக்ரேனை உள்ளிணைக்கவும், இறுதியாக ரஷ்யாவையே அவற்றின் செல்வாக்கெல்லைக்குள் இணைக்கவும், அதேவேளையில் ரஷ்யாவை ஒரு அரைக்காலனித்துவ அந்தஸ்திற்கு குறைக்கவும் முனைந்து வருகின்றன.

இந்த நிகழ்வுபோக்கின் பின்னால் இருக்கும் உந்துசக்தி உலக முதலாளித்துவ நெருக்கடியாகும். முதலாம் உலக போர் வெடித்த ஒரு நூறு ஆண்டுகாலத்திற்கு முன்னர் இருந்ததைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகள் உலகை துண்டாட சண்டையிடுவதன் மூலமாக மற்றும் மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் மூலோபாய செல்வாக்கின் மீது கட்டுப்பாட்டை பெற போராடுவதன் மூலமாக ஒரு பொருளாதார முட்டுச்சந்திற்கு விடையிறுப்புக் காட்டி வருகின்றன. அப்போது போலவே, இப்போதும், ஆளும் வர்க்கங்கள் உள்நாட்டு முரண்பாடுகளை வெளியிலுள்ள ஓர் எதிரிக்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி திருப்ப முயலுகின்ற நிலையில், ஆழமடைந்துவரும் உள்நாட்டு சமூக நெருக்கடியானது அன்னிய நாட்டின் மீதான யுத்த முனைவைத் தீவிரப்படுத்தி வருகிறது.

வாஷிங்டனும் பேர்லினும் உக்ரேனில் சுய-நிர்ணயம், ஜனநாயகம் மற்றும் ஏனைய "மேற்கத்திய மதிப்புகளை" பாதுகாத்து வருகின்றன என்ற வாதங்கள், முற்றிலும் பிரச்சார வகைப்பட்டதாகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைந்துள்ள அந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், மக்கள் கடுமையாக சுரண்டப்படுகின்ற, அதேவேளையில் ஒரு சர்வாதிகார மற்றும் ஊழல்மிகுந்த மேற்தட்டு செல்வவளத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

உக்ரேனில், ஏகாதிபத்திய சக்திகள் ஜனாதிபதி பொறோஷென்கோ போன்ற செல்வந்தர்களையும், அத்துடன் பாசிசவாதிகள் மற்றும் அதிதீவிர தேசியவாதிகளின் மீதும் தங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உக்ரேனின் கூட்டு உடன்படிக்கையின் மையக்கருவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன ஆணைகளுக்கு அந்நாட்டை அடிபணிய செய்வது தான்.

பொருளாதார தடைகளின் வடிவத்தில் ரஷ்யா மீது சுமத்தப்படும் இராணுவ மற்றும் நிதியியல் அழுத்தம், அந்நாட்டின் ஸ்திரப்பாட்டைக் குலைக்கவும் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு இட்டுச் செல்லவும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் விருப்பத்திற்கு முற்றிலும் அடிபணியும் ஓர் அரசை நிறுவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

புட்டின் ஆட்சி இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியாது. அது சோவியத் ஒன்றிய கலைப்பின் போக்கில் தங்களின் செல்வவளத்தை திரட்டிக் கொண்ட ஒரு தன்னலக்குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது, ரஷ்யாவிலும் சரி அல்லது சர்வதேச அளவிலும் சரி, எந்தவொரு பாரிய சமூக இயக்கத்தைக் குறித்தும் அச்சத்தில் உள்ளது. அது விட்டுக்கொடுப்புகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களின் ஒரு கலவையைக் கொண்டு எதிர்வினை காட்டி வருகிறது, ஆனால் அதுவே திரும்ப யுத்த அபாயத்தை அதிகரிக்கிறது.

யுத்தத்திற்கு காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே, ஓர் அணுஆயுத பேரழிவைத் தடுக்க முடியும்.