சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை ஜனாதிபதி மேலும் மூன்று பெருந்தோட்டத் துறை தலைவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கினார்

By M. Vasanthan
4 November 2014

Use this version to printSend feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மூன்று பெருந்தோட்ட தொழிற்சங்க தலைவர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், மலையக மக்கள் முன்னணித் தலைவர் வி.ராதாகிருஸ்னன் ஆகியோருக்கே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நியமனமானது, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பினை அடக்கி ஒடுக்குவதன் பேரில் அவர்களது சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் ஒரு இலஞ்சமாகும்.

கடந்த செப்டம்பர் மாதம், தேசிய மொழிகள் மற்றும் சமூக இணக்கப்பாடு, தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் செய்தி, தாவரவியல் பூங்கா மற்றும் பொது கேளிக்கைதுறை போன்ற மூன்று பிரதி அமைச்சுப் பதவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

திகாம்பரமும் பிரபா கணேசனும் 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலமையிலான முன்னணியின் சார்பில் போட்டியிட்டார்கள். சிலகாலம் கழித்து, தேர்தல் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு ஒப்படைத்தும், ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் 18வது அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஆளும் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டனர்.

இராஜபக்ஷ தோட்டத் தொழிலாளர்களைநம்புகின்றார்”, அவர்களின் நலனுக்காக உழைக்கின்றார் என பதவியில் நியமிக்கப்பட்ட திகாம்பரம் கூறுகின்றார். அக்டோபர் 25ம் திகதி திகாம்பரம் தலமையிலான தேசிய தொழிலாளர் சங்க பிரிதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார்கள். ஜனதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் மற்றும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை உயர்த்தும் என தேசிய தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் புகழந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதா? என, சூரியகாந்தி தமிழ் பத்திரிகை ராதாகிருஷ்ணனிடம் வினவியபோது, “இதில் தவறொன்றுமில்லையே, அரசாங்கம் ஊவா மாகாணசபைத் தேர்தலின் ஊடாக சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது. இப் பதவி தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டிருப்பின் நாம் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க முடியும்,” என உற்சாகமாகப் பதிலளித்தார்.

இத்தகைய கூற்றுக்கள், இந்த தலைவர்களதும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) போன்ற ஏனைய தோட்ட தொழிற்சங்களின் இழிவான பண்பினை எடுத்தக் காட்டுகின்றன. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூடி வேலைசெய்த இவர்கள், ஜனநாயக விரோத அரசியலமைப்பு சட்ட திருத்த்துக்கு முண்டு கொடுப்பதற்கு பக்கம் மாறியுள்ளார்கள். கடந்த நான்கு வருடங்களாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளைச் செயற்படுத்துவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான சகல தாக்குல்களுக்கும் இவர்கள் கைகொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு 18 சதவீத வாக்கு வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக இராஜபக்ஷ விழிப்படைந்தார். அங்கு கணிசமான தோட்ட தொழிலாளர்கள் வாழும் தோட்டங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பான்மையினர், அரசியல் கட்சிகளாக தொழிற்படும் இதொக, ..மு, ஜமகா மற்றும் மனோ கணேசன் தலமையிலான ஜனநாய மக்கள் முன்னணி போன்ற தொழிற்சங்கங்கள் உட்பட ஆளும் கட்சிக்கும் எதிராக வாக்களித்துள்ளனர் என்பது தெளிவானது.

தொழிலாளர் மற்றும் ஏழை மக்கள் மத்தியில் தனது அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடு மேலும் வளர்ச்சியுறும் என்று பீதியடைந்துள்ள ராஜபக்ஷ, குறித்த காலத்துக்கு முன்னரே ஏதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால், 2022ம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்து வாழ்க்கைத் தரங்களின் மீது கொடூரமான தாக்குதல்களை ஈவிரக்கமின்றி நடத்தலாம், என ராஜபக்ஷ கணிப்பிடுகின்றார். ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் இத்தகைய குழுக்கள், அவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக அவருக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன. இத்தகைய மூன்று தலைவர்கள் மட்டுமல்ல, இதொக தலைவர் ஆறுமகம் தொண்டாமான் விடுத்த அறிக்கையொன்றில், தனது தொழிற்சங்கம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்ஷவுக்கே ஆதரவு கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

அவர்களது கவலைகள், தொழிலாளர்களது ஜனநாயக உரிமைகள் அல்லது வாழ்க்கைத் தரங்கள் பற்றியவை அல்ல. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வெடித்தெழும் சீற்றம் தமது தலைக்கு மேல் சென்றுவிட்டதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். இத்தகைய சமூக் குமுறல்களை அடக்கி வைக்கவே அவர்கள் விரும்புகின்றார்கள். கடந்த இரு தசாப்தங்களாக, தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டாகவும் மற்றும் தனியாகவும், தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காகப் போராடிய போதெல்லாம், அவற்றினை ஒடுக்கியும், நசுக்கியும், அரசாங்கத்தினதும் மற்றும் கம்பனிகளதும் வறிய சம்பள திட்டத்துக்கு இடமளித்து வந்துள்ளன. சம்பளக் கொடுக்கல் வாங்கல்களை தொழிலாளர்கள் எதிர்க்கின்ற போது, திகாம்பரம், ராதாகிருஸ்ணன், மனோகணேசன் ஆகியோர், எதிர்ப்பினை நசுக்குவதற்காக இதொகா வை மையப்படுத்தி தங்களின் விமர்சனங்களை முன்வைப்பார்கள். பின்னர், அற்ப சம்பள உயர்வுத் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கம்பனிகளுக்கு ஆதரவளிப்பார்கள்.

நில உடமையாளரான ராதாகிருஸ்ணன், இதொக சார்பில் கடந்த 2010 பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார். பின்னர், அமைச்சர் பதவி பற்றிய பிரச்சினை காரணமாக அதன் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு, கட்சியை விட்டு வெளியேறி, கூட்டரசாங்கத்தில் ஒரு பங்காளியாக இருக்கும் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து அதன் அரசியல் தலைவரானார்.

பெரும் முதலாளியான பி. திகாம்பரம், மமமுவில் இருந்து பிரிந்து 2000ல் தோட்டத் தொழிலாளர் முன்னணியை அமைத்தார். அதன் பின்னர், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்த அவர், தனது செல்வத்தினை பயன்படுத்தி அதன் தலைவரானார். மமமு, தொதேச ஆகிய தொழிற்சங்கங்கள், இதொகாவுக்கு தொழிலாளர் மத்தியில் இருந்துவரும் எதிர்ப்பினைச் சுரண்டிக் கொண்டு, தாங்களே இதற்கு மாற்றீடு எனக் கூறிக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும்.

ஆனால் தற்போது இதொகா, மமமு மற்றும் தொதேச உட்பட சகலரும், ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தினுள் அமர்ந்துள்ளனர். பெரும் முதலாளியான பிரபா கணேசன், 2010ல் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, ஆளும் கூட்டரசாங்கத்தில் இணைந்து கொண்டார்.

தொண்டமான் மற்றும் மனோகணேசன் உட்பட சகல தொழிற்சங்க தலைவர்களும், பெரும் முதலாளிகளாக இருப்பதுடன் அவர்களது அமைப்புக்களும் எந்தவகையிலும் தொழிலாளர்களினது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல. சகல தொழிற்சங்கங்களும் பெரும் முதலாளிகளினது கருவிகளாக மாற்றமடைந்துள்ளன என்பதே உண்மையாகும். அவர்கள், வாழ்க்கை நிலமைகளை முன்னேற்றுவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பேரம்பேசலில் ஈடுபடும், முன்னைய தேசியவழியான வேலைத் திட்டங்களையும் கைவிட்டுள்ளனர். இது ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும்.

சூரியகாந்தி உடனான தனது நேர்காணலில் பி. ராதாகிருஸ்ணன் பின்வருமாறு கூறினார். “இதுவரை மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத் திட்டங்களை மீண்டும் அமுல்படுத்த ஜனாதிபதி இராஜபக்ஷ விரைந்து செயற்படுவார் என நான் நம்புகின்றேன். இது சம்பந்தமாக நான் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பேன்என கூறினார்.

இராஜபக்ஷ உட்பட, நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தொழிற் சங்கங்கள் ஊடாக சிறந்த வீட்டு வசதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல்கள் முடிந்த பின்னர் அவற்றை அலட்சியம் செய்து வந்துள்ளன. ராஜபக்ஷ, கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்ட உரையின்போது, தோட்டத் துறையில் 50,000 வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டுக்குள் வழங்குவதாக அறிவித்தார். தற்போது இந்த ஆண்டில் பத்து மாதங்கள் கடந்த நிலையிலும், இத் திட்டத்துக்காக ஒரு சதமேனும் ஒதுக்கவோ அல்லது ஒரு வீடு தன்னும் கட்டப்படவோ இல்லை.

தோட்டத் தொழிலாளர்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, குறைந்தபட்சம் 2 இலட்சம் வீடுகளையாவது வேண்டி நிற்கின்றார்கள். கூடுதலான தோட்டத் தொழிலாளர்கள், நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, எவ்விதமான அடிப்படை வசதிகளுமற்ற சிறிய லயன் அறைகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடுகள் பாழடைந்த நிலையில் இருப்பதால் ஏற்படும் மின் ஒழுக்கு காரணமாக, ஒவ்வொரு வருடமும், நூற்றுக் கணக்கான லயன் வரிசை வீடுகள் தீப்பிடிக்கின்ற காரணத்தினால் அழிவடைகின்றன. கொல்கந்த, மீரிய பொத்த தோட்டத் தொழிலாளர் அண்மையில் முகம் கொடுத்த துயரமானது, தோட்டத் துறையில் உள்ள இன்னுமோர் அபாயகரமான எச்சரிக்கையாகும்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவின் கீழ் வீடு, குழாய் நீர், சுகாதார மற்றும் இதர வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், அவர்களின் ஒருநாளைக்கு மூன்று வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை. இந் நிலமைகளுக்கு மத்தியில், தொழிற்சங்கத் தலைவர்கள் தமது நலன்களைப் பேணுவதற்காக, அரசாங்கத்தினைப் புகழ்ந்தபடி முதலாளித்துவ அமைப்பினை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளார்கள். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், முதலாளித்துவ முகாமுக்குள் இருக்கும் இந்த தலைவர்களை முற்றாக நிராகரிக்க வேண்டும். சர்வதேச சோசலிசத்தின் பாகமாக, தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காப் போராடிக் கொண்டிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப அவர்கள் முன்வர வேண்டும்.