சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: November 3-9

வரலாற்றில் இந்த வாரம்: நவம்பர் 3-9

3 November 2014

Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்: பேர்லின் சுவர் வீழ்ந்தது

http://www.wsws.org/asset/5126d317-015a-43f2-9ab0-44e09fb4c43I/twih-25yr.jpg?rendition=image480

பிரான்டன்பேர்க் கதவு அருகே கிழக்கு, மேற்கு பேர்லின் வாசிகள் எல்லைகள் திறந்தை கொண்டாடுகின்றனர்

1989 நவம்பர் 9 அன்று, இகோன் க்ரென்ஸ் அரசாங்கம் மேற்கு ஜேர்மனிக்கு ஒரு இலவச பயணத்தை அறிவித்த பின்னர், கிழக்கு ஜேர்மனியில் (GDR) இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மேற்கு பேர்லினில் எல்லை கடந்தனர். கிழக்கு ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் இலட்சக் கணக்கானவர்கள் பங்கேற்ற வாரக் கணக்கான பரந்துபட்ட ஸ்ராலினிச-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. நவம்பர் 4, அலெக்சாண்டர் சதுக்கத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தில், அரை மில்லியன் மக்கள் பங்கேற்றனர்.

கிழக்கு ஜேர்மனியின் அரசியல் துறை உறுப்பினர் குந்தர் ஷபோவ்ஸ்கி, கிழக்கு ஜேர்மன் குடிமக்கள் "உடனடியாக" மேற்கு ஜேர்மனிக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் மற்றும் அங்கு அவர்கள் தங்க முடியும் அல்லது திரும்ப முடியும், என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். மறுநாள் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ள விடயம் உட்பட, அன்றைய அரசியல்துறை அமர்வின் நிபந்தனைகள் சபோவ்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக, பேர்லின் சுவர் ஊடாக இருந்த அனைத்து சோதனைச் சாவடிகளிலும் குழப்பம் நிலவியது. மேற்கு பேர்லினுக்குள் நுழைய முயன்ற மக்கள் நிரம்பியிருந்தனர். அறிவித்தல் பெற்றிராத மற்றும் குழம்பிப் போயிருந்த காவலர்கள் மக்களை நகரவிடவில்லை.

மிக முக்கியமான கடவையான சார்லி சோதனைச் சாவடியில், கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கூட்டம் கார் ஹோன்களையும் சங்குகளையும் ஒலிக்கச் செய்து எல்லையின் இருபுறமும் தெருக்களில் நிறைந்திருந்தனர்.

கிழக்கு ஜேர்மனியில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக 1961ல் வால்டர் உல்பிரிக்ட் இன் கீழ் ஸ்ராலினிச ஆட்சியால் எழுப்பப்பட்ட பேர்லின் சுவர், எல்லையின் இருபுறமும் இருந்த மக்களின் வெறுப்புக்கு ஒரு அடையாளமாக இருந்தது. அடுத்த நாள் வரை நீடித்த கொண்டாட்டங்களின் போது, பலர் அது தொடர்ந்தும் அங்கு இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவர் மேல் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அது கட்டியெழுப்பப்பட்டதில் இருந்து, சுமார் 200 பேர், மேற்கு பேர்லினிலுக்குள் செல்ல முயற்சித்து கொல்லப்பட்டனர்.

கொண்டாடியவர்களில் பலர், சம்மட்டிகளை எடுத்து வந்து சுவரை இடித்து, துண்டுகளை நினைவுச் சின்னங்களாக எடுத்து, அதை உடைப்பதை தொடங்கி வைத்தனர்.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்க தேர்தலில் ஜோன்சன் அமோக வெற்றி பெற்றார்

http://www.wsws.org/asset/272a3b36-8b11-4c71-9e12-081aff97ec9D/twih-50yr.jpg?rendition=image240
லிண்டன் ஜோன்சன்

1964 நவம்பர் 3 அன்று, ஜனநாயகக் கட்சியின் லிண்டன் ஜோன்சன், குடியரசுக் கட்சியின் பெரி கோல்வாட்டர் பெற்ற 38 சதவீத வாக்குகளை விட, 61 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வென்று, வெகுஜன வாக்குகள் என்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் அமோக வெற்றி பெற்றார்.

அமெரிக்க தாராளவாதத்தின் தேர்தல் வாய்ப்புகளுக்கு அது ஒரு உயர்ந்த அடையாளமாக இருந்தது. முன்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் பக்கச் சார்பான ஜனரஞ்சக வாக்களிப்பைப் பெற்ற, 1936ல் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்படிக்கை பிரச்சாரத்தின் பின்னர், ஜோன்சன் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சீர்திருத்தவாத-சார்பு பிரச்சாரத்தை நடத்தினார். வாக்கெடுப்பு நெருங்கிய மாதங்களில், ஜோன்சன் அவருடைய 1964 மனித உரிமைகள் சட்டத்தில் கையெழுத்திட்டதோடு சமீபத்தில் வெளியிட்ட சிறந்த சமூகத் திட்டத்துடன் ஒரு புதிய சமூக சீர்திருத்த பிரவாகத்தையும் தொடங்கிவைத்ததுடன் இன வேற்றுமைக்கு முடிவு கட்டவும் மற்றும் வறுமையை நிரந்தரமாக அழிக்கவும் அழைப்பு விடுத்தார்.

கோல்வாட்டர், வியட்நாமில் அணு ஆயுதங்களை பயன்படுத்த முனையும் ஒரு வலதுசாரி பிரச்சாரத்தை நடத்தியதுடன் தெற்கில் ஜிம் க்ரோவின் பாகுபாட்டுக்கும் ஆதரவு கொடுத்தார். ஸ்றோம் தண்டர் போன்ற இனவெறிகொண்ட தெற்கு அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்ற அவர், அதன் மூலம், கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாள வெகுஜனங்கள் வாக்களிப்பதை தடுக்கும் வாக்களிப்பு கட்டுப்பாடுகள் இருந்த டீப் சௌத் மாநிலங்களில் வாக்குகளைப் பெறுவதில் சமாளித்துக்கொண்டார். லூசியானா, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா, மற்றும் மிசிசிப்பி போன்ற பகுதிகள் இதில் அடங்கும். கோல்வாட்டர் அவரது சொந்த மாநிலமான அரிசோனாவில் அரிதான வெற்றி பெற்றார். இந்த ஆறு மாநிலங்களும் குடியரசுக் கட்சியின் தேர்தல் தொகுதிகளாக கணக்கப்படிருந்தன.

வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களில் 62 சதவீதமானவர்களுடன், கோல்வாட்டரின் இராணுவவாத மற்றும் இனவாத பிரச்சாரத்துக்கு ஒரு கடுமையான கண்டனத்தை அமெரிக்க வாக்காளர்கள் வெளிப்படுத்தியதுடன் சமத்துவமான சமூகத்துக்கான ஜோன்சனின் அழைப்புக்கு ஒப்புதல் அளித்தனர். ஆயினும் நான்கு ஆண்டுகளுக்குள் ஜோன்சனின் நிர்வாகத்தை கவிழ்க்கும் முரண்பாடுகள் வளர்ந்ததோடு, 35 ஆண்டுகளுக்குள் எஃப்டிஆர் உடன் தோற்றம் பெற்ற தாராளவாத சீர்திருத்த சகாப்தம் நொருங்கி முடிவுக்கு வந்தது.

கோல்வாட்டரின் போர்கொள்கை மீதான ஜோன்சனின் விமர்சனம் நேர்மையற்றதாக இருந்தது. உண்மையில், ஜோன்சன் ஏற்கனவே பொய்யானது என்று தெரிந்திருந்த, வடக்கு வியட்நாமியர்களால் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட டொன்கின் வளைகுடா தீர்மானத்தின் அடிப்படையில், வியட்நாமில் அமெரிக்கா தலையிடுவதை அவர் கடுமையாக விரிவாக்கியிருந்தார்.

பொருளாதாரம் வேகமாக தொடர்ந்து வளரந்து கொண்டிருந்தபோது, அந்நிய செலாவனி பற்றாக்குறை அதிகரித்ததுடன் முக்கிய போட்டியாளர்களான ஜப்பான் மற்றும் மேற்கு ஜேர்மனியின் மறு எழுச்சியுடன், உலக விவகாரங்களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒப்புயர்வற்ற நிலை அரிக்கப்பட்டு வந்தது. மற்றும், 1964 நகர்ப்புற எழுச்சிகளின் தொடக்கங்களைக் கண்டது. நியூ ஜெர்சி, ஹார்லெம், சிகாகோ, மற்றும் ரோசெஸ்டர், நியூயார்க் நகரங்களில் பெரும் கலகங்கள் நடந்தன. வடக்கு நகரங்களும், அத்துடன் ஜிம் க்ரோ தென் மாநிலங்களும், ஜோன்சனின் சொந்த ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்தன.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: அடோல்ஃப் ஹிட்லரை படுகொலை செய்யும் முயற்சி தோல்வியடைந்தது

http://www.wsws.org/asset/d8f2c681-602a-4135-a789-e7d3ee96aeeO/twih-75yr.jpg?rendition=image240
ஜோர்ஜ் எல்செர்

1939 நவம்பர் 8 மாலை, மூனிச்சில் ஹிட்லரின் பீர் ஹால் இராணுவ சதியின் 16வது ஆண்டு நினைவாக நடந்த ஒரு நிகழ்வில், நாசி தலைவரை கொலை செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. அவரது உரையின் இறுதியில் குண்டு ஒன்று வெடித்தது. ஆனால் ஹிட்லர் பாதிக்கப்படவில்லை.

அடுத்த நாள், மேஜர் ஆர்.எச். ஸ்டீவன்ஸ் மற்றும் கேப்டன் எஸ். பெய்ன் பெஸ்ட் ஆகிய இரண்டு பிரிட்டிஷ் முகவர்கள், டச்சு எல்லையில் கைது செய்யப்பட்டதோடு பிரிட்டனுக்கு எதிரான நாஜி பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டனர். ஹிட்லரைக் கொல்லும் முயற்சி தோல்வி அடைந்த பின்னர் அதிருப்தியடைந்த பாசிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், பழமைவாதிகள் மற்றும் மத குருமார்கள் உட்பட பல குழுக்களை சந்தேகித்தனர். உண்மையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் யுத்தத்தை தூண்டுவதில் ஹிட்லரின் ஈவிரக்கமற்ற தன்மையை கண்டு அதிர்ச்சியடைந்த ஜேர்மன் இராணுவப் புள்ளிகளின் மத்தியிலும் ஹிட்லரை கொல்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

"உண்மை குறைவாக விளக்கப்பட்டது -ஆனால் அனைத்தும் அதிர்ச்சியூட்டுபவை," என ஹிட்லரின் சரித்திர ஆசிரியரான இயன் கெர்ஷா எழுதினார். "வேறு யாருடைய உதவியும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் செயல்பட்ட, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வந்த, ஒரு சாதாரண ஜேர்மனியரான, ஒரு தனி நபரால் இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தளபதிகள் தயங்கியபோது, அவர் இன்னும் கொடூரமான பேரழிவில் இருந்து ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவைக் காப்பாற்றுவதற்காக ஹிட்லரை சுக்குநூறாக்க முயற்சித்தார். "

அந்த தொழிலாளியின் பெயர் ஜோர்ஜ் எல்செர். தென்மேற்கு ஜேர்மன் மாநிலமான பாடென்வூட்டென்பேர்க் இல் உள்ள கொனிக்ஸ்புரூம் என்னுமிடத்தில் இருந்து வந்த 36 வயதான அவர், நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (KPD) ஆதரவு கொடுத்திருந்தார். பின்னர் அவர் நாஜி ஆட்சியின் கீழ் தமது வாழ்க்கைத் தரம் மற்றும் சம்பளமும் சரிந்து வருகின்றமை தொடர்பாக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் நிலவிய சீற்றத்தை கண்டார். எல்செர் அடிக்கடி தனது சக தொழிலாளர்களிடம் இந்த பிரச்சினைகள் பற்றியும் நாஜி ஆக்கிரமிப்பினால் வரவிருக்கும் போர் அபாயம் பற்றியும் பேசினார்.

1938 இல் செக்கோஸ்லோவாக்கியா மீது ஹிட்லரின் கோரிக்கைக்கு ஐரோப்பிய சக்திகள் அடிபணிந்த பின்னர், ஹிட்லரின் மரணத்தால் மட்டுமே பேரழிவில் இருந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை காப்பாற்ற முடியும் என்று எல்செர் நம்பினார். இந்த வழிமுறைக்கு அரசியல் ரீதியாக தவறாக வழி நடத்தப்பட்ட அதே வேளை, நாஜி தலைவரை எல்செர் இலக்கு வைத்தமை உயர்ந்த நோக்கங்களால் உந்தப்பட்டது: அது தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காகவாகும்.

ஹிட்லரின் உயிர் மீது குறிவைக்கப்பட்ட அன்று இரவு, சட்டவிரோதமாக சுவிச்சர்லாந்துக்கு கடக்க முற்பட்டவேளை ஜேர்மன் எல்லையில் எல்செர் பிடிபட்டார். நவம்பர் 14, அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததோடு தனது நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்கள் பற்றி அதிகாரிகளுக்கு முழு விபரத்தையும் கொடுத்தார். அவர் நாஜிக்களின் கையில் கொடூர சித்திரவதைகளை சந்தித்தார், ஆனால் தோழர்கள் மற்றும் சக தொழிலாளர்களை காட்டிக்கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் நாஜிக்களால் சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமில் காவலில் வைக்கப்பட்ட எல்செர், பிரிட்டிஷ் இரகசிய சேவைகளைக் குற்றஞ்சாட்ட வடிவமைக்கப்பட்ட, நாஜிக்களின் போருக்குப் பிந்தைய போலி விசாரணையில் ஒரு பளிச்சிடும் சாட்சியாக முன்வைக்கபடவிருந்தார். எனினும், கிட்டத்தட்ட 1945ன் தொடக்கத்தில் போரில் தோல்வி ஏற்பட்ட உடன், எல்செர் அமெரிக்கத் துருப்புக்களால் விடுவிக்கப்படுவதற்கு சற்று முன் டஹாவோவுக்கு மாற்றப்பட்டு, அங்கு ஹிட்லரின் தனிப்பட்ட உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
100 ஆண்டுகளுக்கு முன்னர்: பிரிட்டன் சைப்ரஸை இணைத்துக்கொண்டது

http://www.wsws.org/asset/d48f423d-c2dd-4c01-9631-3be93463d66O/twih-100y.jpg?rendition=image480
1914
இல்
சைப்ரஸ்

1914 நவம்பர் 5 அன்று, முன்பு ஒட்டோமான் பேரரசின் பெயரளவிலான செல்வாக்கு வட்டத்துக்குள் இருந்த சைப்ரஸை பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொண்டது. ஆகஸ்ட்டில் உலகப் போர் வெடித்ததுடனும், மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உட்பட இருதரப்பு படைகளுக்கு எதிராக நின்ற, மத்திய அதிகாரங்களான ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி உடன் துருக்கி கூட்டணி ஏற்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒட்டோமான் பேரரசின் வசம் இருந்த சைப்ரஸ், 1878ல் ஒரு பிரிட்டிஷ் காப்பரசாக நியமிக்கப்பட்டது. ஆசியாவில் துருக்கியின் உடைமைகளை ரஷ்யா பறிமுதல் செய்ய முயன்றால் துருக்கிக்கு ஆதரவு கொடுப்பதாக பிரிட்டிஷ் உத்தரவாதம் கொடுத்தமைக்கு ஈடாக, தீவின் கட்டுப்பாட்டை ஒப்படைப்பதற்கு ஒட்டோமான் அதிகாரிகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அடுத்து வந்த தசாப்தங்களில், சைப்ரஸ் அரசியலில் துருக்கி ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய அதே வேளை, பிரிட்டன் உட்பட பெரும் வல்லரசுகள் உடனான அதன் உறவுகள் சீர்குலைந்தன.

 ஓட்டோமன்களுக்கு தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளை ஏற்படுத்திய பின்னரே சைப்ரஸை பிரிட்டிஷ் கைப்பற்றியது. 1911-12ல், அவர்கள் இத்தாலிய-துருக்கிய யுத்தத்தின் போது, நவீன லிபியா முதல் இத்தாலி வரை கட்டுப்பாட்டை இழந்தனர். 1912 கடைப் பகுதியில் இருந்து 1913 முற்பகுதி வரை, பால்கன் நாடுகளின் கூட்டணியால் சூழப்பட்ட துருக்கி, அந்த பிராந்தியத்தில் தமது நீண்டகால ஆதிக்கத்தை இழந்தது. பிரான்ஸ், ரஷ்யா மற்றும் பிரிட்டனும் அந்த மோதலில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்த அதேவேளை, அவர்கள் பால்கனில் ஒட்டோமான் அதிகாரம் அழிக்கப்படுவதற்கு மரைமுக ஆதரவு கொடுத்தனர்.

1914 ஆகஸ்ட் 2ல் மத்திய வல்லரசுகள் ஒட்டோமான் பேரரசுடன் இணைந்துகொண்டு, ஜேர்மனிய அரசாங்கத்துடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அவர்களின் நிலைப்பாட்டின் அடி நிலையில், தசாப்தத்திற்கு முன்னர் கிழக்கு அனடோலியாவில் ரஷ்யாவிடம் இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆசை இருந்தது. கிழக்கு அனடோலியா பிராந்தியம் இன்று ஜோர்ஜியா மற்றும் ஆர்மீனியா பகுதியாக உள்ளது. முதல் பால்கன் போரின்போது ஒட்டோமன்களுக்கு எதிரான சேர்பிய பிரச்சாரத்தை ஆதரிப்பதில் ரஷ்யா குறிப்பாக ஒரு ஆக்கிரோச வகிபாகத்தை எடுத்திருந்த்து.

 சைப்ரஸை பிரிட்டிஷ் இணைத்துக் கொண்டமை, ஒரு பிரிட்டிஷ் காப்பரசு என்ற தீவின் உத்தியோகபூர்வ நிலைக்கும் எஞ்சிய துருக்கிய செல்வாக்குக்கும் இடையில் சமநிலைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட பல உள்ளூர் அதிகாரிகள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கியது. கிரேக்கம் பேசும் உயரடுக்கின் பெரும் பகுதியினர் பிரிட்டனை ஆதரித்ததோடு மற்றும் கிரேக்கத்துடன் போருக்குப் பிந்தைய ஒன்றியத்தை இலக்காகக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட தீவின் மக்கள் தொகையில் கால்வாசிப்பேர் துருக்கிய மொழி பேசுபவர்களாவர்.