சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Tamil Nadu chief minister jailed over graft case

இந்தியா; தமிழ்நாடு முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்

By Arun Kumar 
16 October 2014

Use this version to printSend feedback

ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயராம் ஜெயலலிதா, பல கோடி டாலர் ஊழல் வழக்கில் ஒரு சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்காவால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டார். இதனால் ஜெயலலிதா அவருடைய பதவியை இழந்தது மட்டுமல்லாமல் மாநில சட்டமன்ற நாற்காலியையும் இழந்தார், ஒரு பில்லியன் ரூபாய் (16 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் நான்கு வருட கால சிறை தண்டனையும் எதிர்கொண்டுள்ளார். அவரது விடுதலைக்கு பின்னர்  ஆறு வருடங்களுக்கு பதவி வகிப்பதில் இருந்தும் தடைசெய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மூன்று நெருக்கமான கூட்டாளிகள், சசிகலா நடராஜன், வி.என் சுதாகரன் மற்றும் இளவரசிக்கும் செப்டம்பர் 27ல் அதே தண்டனை வழங்கப்பட்டது. இந்த நான்கு பேரும் அருகாமையிலுள்ள இந்திய மாநிலமான கர்நாடகத்திலுள்ள அக்ரகாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 7ல் கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயல்லிதாவின் பெயில் மனுவை தள்ளுபடி செய்த பின்னர் அவரின் வக்கீல்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்,

வழக்கு தொடுத்தவர், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானத்திற்கு அதிகமான சொத்தை சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார். 1991 லிருந்து 1996 வரை தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பதவி வகித்த காலத்தில் ஜெயலலிதா வைத்திருந்த செல்வத்தை சட்டரீதியான வளங்களின் மூலமாக பெற்றிருக்க முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது சம்பளம் வெறும் ஒரு ரூபாய் தான், ஆனால் அவர் பதவிக்காலத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக 12,000 புடவைகள், 30 கிலோ கிராம் தங்கம் 2000 ஏக்கர் நிலம் உட்பட 660 மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளார் என்று வழக்கு தொடுத்தவர் குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவின் மற்றொரு கூட்டாளி ஒ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) தமிழகம் முழுவதும் அவருடைய தண்டனைகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர், கர்நாடகாவிலிருந்து வந்த பஸ்கள் மற்றும் வாகனங்களை தாக்குதலுக்குள்ளாக்கினர்.

இந்த வழக்கு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டது. 1996ல் இந்த வழக்கு முதலில் சுப்ரமணியன் சுவாமியால் பதிவு செய்யப்பட்டது. இவர் அப்பொழுது ஜனதா கட்சி தலைவர் ஆவார், தற்போது, புதுதில்லியில் நடப்பு ஆளும் கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியில் (பிஜேபி) ஒரு முக்கியமான நபரும் ஆவார். மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகியிருப்பதனால் நீதிமன்றங்களில் செல்வாக்கை பயன்படுத்துவார் என்று அதிமுகவின் விரோதக்கட்சி திராவிட முன்னேற்ற கழகம் (திமுக)  2003ல் செய்த முறையீட்டிற்கு பின்னர் இந்த வழக்கு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது.

அதிமுக மற்றும் திமுக இரண்டும் தமிழ் வகுப்புவாதத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவக் கட்சிகள். ஒரு நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த ஜெயலலிதா தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக நசுக்குவதில் இழிபுகழ் பெற்றவர். ஜூலை 2003ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 200,000 பொதுத்துறை ஊழியர்களை அவருடைய அரசாங்கம் வேலையை விட்டு நீக்கியது. அந்த முடிவை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் தூக்கிப் பிடித்தது, அந்த நேரத்தில் புதுதில்லியில் ஆட்சி செய்த பாரதிய ஜனதா தலைமையிலான அரசாங்கம் வேலைநீக்கம் செய்ததை ஆதரித்தது, இதுவே நாடு முழுவதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தாக்குதலுக்கான அடிப்படையாக மாறியது.

ஊடகங்கள் உரக்க கூறுவது போல் ஜெயலலிதா  குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதனால் இந்திய நீதித்துறை பாரபட்சமற்றது மற்றும் ‘’நீதி’’யை உயர்த்திப்பிடிக்கிறது என்று கூறுவதற்கு எதுவுமில்லை. ‘’நீதிக்கான நீண்ட சாலை’’ என தலைப்பிடப்பட்டஇந்து வில் வெளியான ஒரு ஆசிரியர் குழு கட்டுரை கூறுவதாவது; ‘’இந்த வழக்குடன் தொடர்புடைய குற்றம் சாட்டும் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் அழுத்தங்களுக்கு தாக்குப் பிடித்து நீதி மற்றும் நியாய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பது பாராட்டுக்குரியது.’’

அதன் 18 வருட காலத்தில் இந்த வழக்கானது புது தில்லியிலுள்ள மத்திய அரசாங்கங்கள் அதே போல் ஜெயலலிதா அரசாங்கத்தின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழ்ச்சி திட்டங்களினால் கையாளப்பட்டது. மற்றும் இந்த தண்டனைக்கு புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தினால் பச்சைக்கொடி காட்டப்பட்டது, அவரது சொந்த அரசியல் தேவைகளுக்காக அந்த தீர்ப்பை அவர் பயன்படுத்திகிறார் என்பது தான் உண்மை.

 1999ல் ஆட்சிக்கு வந்த பிஜேபி தேசிய அரசாங்கத்திற்கு அதிமுக ஆதரவளித்தது, அதற்கு பரிசாக, ஜெயலலிதா வழக்கை பல வருடம் தள்ளிப்போட பிஜேபி உதவியது. கடந்த இரண்டு தசாப்தங்களில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் தமிழ்நாட்டு கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக உதவி புதுதில்லியில் அரசாங்கம் அமைக்க தேவைப்பட்டது. இந்தவருட தேசிய தேர்தலில் அதிமுக 37 தொகுதிகள் வெற்றிபெற்றது ஆனாலும் பிஜேபிக்கு ஜெயல்லிதாவின் ஆதரவும் உதவியும் தேவைப்படவில்லை, ஏனென்றால் ஏற்கனவே கணிசமான பாராளுமன்ற பெரும்பான்மை பெற்றதால்ஆகும்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கலந்துகொண்டதை காரணம் காட்டி ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் மோடியை அவமதித்தார். அவரது இந்த நாடகம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொழும்பு அரசாங்கம் முன்னெடுத்த துஷ்பிரயோகங்கள் காராணமாக தமிழ் நாட்டில் வளர்ந்துவரும் பரந்தளவிலான விரோதபோக்கை சுரண்டிக்கொள்ளும் முயற்சியாகும். உண்மையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொடூரமான வகுப்புவாத போரை இராஜபக்ஷ நடத்துவதற்கு ஜெயலலிதா ஆதரவு அளித்துள்ளார்., 2009ல் எல்டிடிஈ  தோல்வியுற்ற பின்னர்தான் இலங்கை தமிழர்கள் தாக்குதலுக்குள்ளானது தொடர்பாக கண்டனங்களை எழுப்ப ஆரம்பித்தார்.

சில சம்பவங்களில், மோடி, இலங்கை தமிழர்கள் துயரங்கள் தொடர்பாக போலி அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார். எவ்வாறாயினும் மோடி இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை முன்னெடுக்கவே முயற்சிக்கிறார் அது கொழும்பில் இந்திய பிராந்திய எதிராளி சீனாவின் வளரும் செல்வாக்கை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். இலங்கை பிரச்சனையில் அஇஅதிமுக பிரச்சாரம் தனது திட்டத்திற்கு தடையாக இருப்பதாக மோடி பார்க்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஜெயலலிதாவின் தண்டனையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பிஜேபி தனது அரசியல் செல்வாக்கை விரிவாக்க முயற்சிக்கிறது. பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் பேட்டி ஒன்றில் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில்; ’’நீண்டகாலமாக தமிழ்நாட்டை இரண்டு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றனதிமுக மற்றும் அஇஅதிமுக. தற்பொழுது ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளார் 2ஜி அலைக்கற்றில் திமுக செல்வாக்கிழந்துள்ளது, தேசிய கட்சி இந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற தெளிவான தேவை இருக்கிறது.‘’ அவர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பிஜேபிக்கு நல்ல தருணம் உள்ளது என்றும் 2016ல் மாநில சட்டமன்ற தேர்தல்களில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய ஊடகங்கள் ஜெயலலிதாவின் ஊழல் நடவடிக்கை பற்றியும் ஆடம்பரமான வாழ்க்கை பற்றியும் முழுமையான கதைகளை கூறுகின்றன. மிக அதிகமான விவரங்களுடன் சேனல்களில் சட்டவிரோதமாக இரகசிய கணக்குகளில் பணம் வைத்திருப்பது, 12,000 புடவைகள், 750 ஜோடி காலணிகள், அதிகளவிலான நகைகள், தத்து பிள்ளை திருமணத்திற்கு 150,000 விருந்தினர்கள் மற்றும் அதிகளவிலான நில கையிருப்புகள் பற்றி கூறுகின்றன.

எவ்வாறாயினும், ஜெயலலிதா வழக்கு தனிப்பட்ட ஒன்று என்பது அரிதாகத்தான் இருக்கும். ஊழல் அவதூறுகள் அனைத்து கட்சிகளிலும் - தமிழ்நாட்டில் திமுக உட்பட தேசிய கட்சியான  காங்கிரஸ் மற்றும் பிஜேபியிலும் அதிகரித்துள்ளது. மோடி தூய்மையான அரசாங்கத்திற்கு நிற்பதாக காட்டப்படுகிறார். ஆனால் பிபிசி இன் சமீபத்திய அறிக்கையில் ‘’இவர் நியமித்த அமைச்சர்களில்மூன்றில் ஒருவர் குற்ற வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர், அதில் ஒருவர் கொலை முயற்சி வழக்கையும் கூட எதிர்கொண்டுள்ளார். வழக்கு நிலுவையில் இருந்த பொழுதிலும் இப்படியான அமைச்சர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, அவர் சிறந்த தனிநபர்களை தெரிவு செய்யலாம் என்று சாதாரணமாக கூறுகிறது.

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச கட்சிகள் இரண்டுமே, ஜெயலலிதா மற்றும் அதிமுகவுடன் பல்வேறு கூட்டணிகளை வைத்திருந்தனர், அவர்கள் வேறுபட்ட வழிகளில் இந்திய நீதித்துறையின் புனிதத்தன்மை மற்றும் மரியாதை என கூறப்படுவதற்கு ஆதரவு அளித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஜெயலலிதாவை தண்டித்த நீதிபதியை விமர்சித்ததற்கு அஇஅதிமுகவை தாக்கிபேசினார், ‘’எவர் ஒருவரும் நீதிமன்ற தீர்ப்புக்கு உடன்படாமல் போகலாம், ஆனால் யாருமே நீதிபதியை அல்லது, நீதிமன்ற தீர்ப்பை தாக்க முடியாது’’ என்று குறிப்பிட்டார். எதிர்ப்புகளை கண்டனம் செய்து ‘’அவை நீதித்துறையின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு ஒப்பானது’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி. ராஜா ஜெயலலிதாவின் துயரங்களுக்கு மிகவும் அனுதாபத்துடன், அறிவுரை கூறினார் ’’நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய மற்றும் எல்லாவற்றையும் பெற சட்டத்துறையில் உள்ளவற்றை அவர் பயன்படுத்தலாம்’’

நிச்சயமாக இந்திய அரசியல் ஸ்தாபகம், பெருநிறுவன செல்வந்த தட்டு மற்றும் நீதிமன்றம் உட்பட அரசு இயந்திரம் ஊழலுடன் பிணைந்துள்ளது. அரசியல் மற்றும் பண ரீதியான கரிசனைகள் இல்லாமல் யார் மேலும் ஊழல் என்று வழக்கு தொடுக்கப்படுவதோ அல்லது குற்றவாளியாக்கப்படுவதோ கிடையாது. ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு எடுத்துக்காட்டுவது என்னவென்றால் நாட்டிலுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் பெரும்பான்மை ஏழை மக்களின் செலவில் பெரும் செல்வத்தை அபகரிக்கும் ஆளும் வர்க்கம் முழுவதன் தரம் நலிந்த நிலையைத்தான்.