சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Preemptive state of emergency in Missouri

முன்னெச்சரிக்கையாக மிசோரியில் அவசரகால நிலை

Joseph Kishore
19 November 2014

Use this version to printSend feedback

மிசோரியின் தேசிய பாதுகாப்புப் படையை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன் இணைந்து, அம்மாநில ஆளுநர் ஜே நிக்சனின் அவசரகால நெருக்கடி பிரகடனத்துடன், அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது ஒரு புதிய உச்சத்திற்கு வந்துள்ளது. ஜனநாயக அமைப்புகளின் கிழிந்துதொங்கும் மாயத்தோற்றங்கள் அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, ஆளும் வர்க்கம் முன்பில்லாத அளவில் மிகவும் நேரடியாக பட்டவர்த்தனமாக படை வலிமை மீது சார்ந்துள்ளது.

மிசோரியின் ஃபேர்குஷன் நகர பொலிஸ் அதிகாரி டார்ரென் வில்சன் மீது குற்றப்பதிவு செய்வதா வேண்டாமா என்பதன் மீதான ஒரு பெரும் நீதிவிசாரணையின் ஓர் உடனடி தீர்ப்பின் போது "பரந்த கிளர்ச்சி ஏற்படக்கூடும்" என்று கூறி, நிக்சன் அவரது முடிவை நியாயப்படுத்தினார். பொலிஸ் அதிகாரி டார்ரென் வில்சன், கடந்த ஆகஸ்டில் ஒரு நிராயுதபாணியான ஆபிரிக்க-அமெரிக்க இளைஞரான மைக்கேல் பிரௌனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவராவார். பெரும் நீதிவிசாரணையின் எந்தவொரு தீர்ப்பு அறிவிப்புக்கும் முன்னரே" தேசிய பாதுகாப்புப்படை நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும், இது நிக்சன் அறிவித்தது.

இப்போது அங்கே ஃபேர்குஷனில், கொள்ளையடித்தலோ அல்லது வன்முறையோ ஒருபுறம் இருக்கட்டும், எந்தவொரு வெகுஜன போராட்டங்களோ கூட இல்லை. அங்கே "பொதுமக்கள் பாதுகாப்புக்கு" எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பிரௌன் கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த ஆரம்ப ஆர்ப்பாட்டங்களும் மிகப் பெருமளவில் அமைதியாகவே நடந்தது. அங்கே ஏற்பட்டிருந்த வன்முறை ஃபேர்குஷன் மக்களிடமிருந்து ஏற்படவில்லை, மாறாக பொலிஸால் ஏற்பட்டிருந்தது—முதலில் பிரௌன் பொறுப்பின்றி படுகொலை செய்யப்பட்டார், பின்னர் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் தோட்டாக்கள், ஆயுதமேந்திய வாகனங்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை ஏந்திய துணை இராணுவப்படை பிரிவுகள் பிரயோகிப்பட்டது, பின் போராட்டக்காரர்களும் அதேபோல இதழாளர்களும் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டார்கள்.

இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு சாத்தியமிருக்கிறது என்பதால், இராணுவத்தின் ஒத்துழைப்புடன், ஃபேர்குஷனில் மற்றும் செயிண்ட் லூயிஸ் பகுதி முழுவதிலும் அவசரகால அதிகாரங்களை பொலிஸ் எடுத்துக்கொள்ள போதிய அடித்தளங்கள் அறிவிக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உட்பட ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் சர்வசாதாரணமாக அழிக்கப்படுகின்றன, இதற்காக அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்தோ அல்லது பெருநிறுவன-கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களில் இருந்தோ அங்கே எந்த எதிர்ப்பும் வருவதில்லை.

அந்த கோடைகாலத்தில் ஆரம்ப பொலிஸ் ஒன்றுதிரட்டலைப் போலவே, மிசோரியின் அவசரகால நிலை வெறுமனே ஃபேர்குஷன் சம்பந்தப்பட்டதல்ல. ஆளும் வர்க்கம் அமெரிக்க எல்லைகளுக்குள் ஒரு முன்மாதிரியை, பொலிஸ்-இராணுவ நடவடிக்கைகளின் ஒரு புதிய நெறிமுறையை உருவாக்க முனைந்து வருகிறது.

அமெரிக்காவின் எந்தவொரு நகரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய, நிக்சனின் வாதங்கள், ஏப்ரல் 2013இல் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் பாஸ்டன் நகரம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட முன்மாதிரியை விரிவாக்குகின்றன. அந்த சமயத்தில் மக்கள் "ஓரிடத்தில் கூடுமாறு" உத்தரவிடப்பட்டு, கனரக-ஆயுதமேந்திய SWAT குழுக்கள் வீடுவீடாக உத்தரவாணையின்றி தேடுதலை நடத்தினர். அந்நடவடிக்கைகள், மூன்று பேர் உயிரிழந்த பாஸ்டன் தொடர்ஓட்ட போட்டி குண்டுவெடிப்புக்கு விடையிறுப்பு என்ற சாக்கில் நடத்தப்பட்டன. இப்போதோ, வெறுமனே வன்முறை போராட்டங்களுக்கு சாத்தியக்கூறு இருக்கிறது என்ற அடித்தளத்தில் தேசிய பாதுகாப்பு படை ஒன்று திரட்டப்பட்டுள்ளது.

மிசோரியின் அவசரகால நிலை ஏனைய இடங்களிலும் இராணுவ அணிதிரட்டலை ஸ்தாபிக்க நோக்கங்கொண்டது என்பது உள்ளாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களுக்கும் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பால் உறுதி செய்யப்படுகிறது. அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் அப்பிராந்தியத்திற்கு கடந்த வாரம் விஜயம் செய்துவந்த பின்னர், FBI அந்நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் முகமைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. வில்சன் மீது குற்றவிசாரணை கொண்டு வரத் தவறினால் அது "அனேகமாக" வன்முறைக்கும், "சட்ட அமுலாக்க மற்றும் முக்கிய கட்டமைப்புகள்" மீது தாக்குதல்களுக்கும் இட்டுச் செல்லுமென ஆதாரமற்ற வாதத்தை அக்கடிதம் வெளியிட்டது. அதற்கேற்ப பொலிஸ் தயாராக இருக்க வேண்டுமென FBI அறிவித்தது.

ஃபேர்குஷனில் நிலவும் உண்மையான நிலைமைக்கு எந்தளவுக்கு பாரபட்சமான விடையிறுப்புக் காட்டப்படுகிறது என்றால், அங்கே ஆழ்ந்த மற்றும் மிகவும் அடிப்படையான நிகழ்முறைகளின் மீது வேலை செய்யப்பட்டு வருகிறது என்ற தீர்மானத்தை தவிர்க்கவே முடியாத அளவுக்கு உள்ளது. பொலிஸ்-இராணுவ ஆக்கிரமிப்புக்கான காரணம் வன்முறை போராட்டங்கள் ஏற்படக்கூடுமென்பது அல்ல, அதுவொரு போலிக்காரணமாகும்.

அமெரிக்காவில் சமூக மோதலின் சாத்தியக்கூறு குறித்து, அது ஃபேர்குஷன் சம்பவங்களால் தூண்டிவிடப்பட்டதாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் தூண்டிவிடப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அவற்றைக் குறித்து ஆளும் வர்க்கம் மிகவும் கூர்மையாக உள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற பெயரில் எடுக்கப்படும் உள்நாட்டு நடவடிக்கைகளின் அடிப்படை இலக்கு அல் கொய்தா அல்ல, மாறாக ஆளும் வர்க்கம் மிகவும் பீதி கொண்டுள்ள மற்றும் வெறுக்கும் எதிரியான அமெரிக்க தொழிலாள வர்க்கமாகும் என்பதை ஆரம்பத்திலிருந்தே, உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது.

செப்டம்பர் 19, 2001இல் பிரசுரித்த ஓர் அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் புஷ் நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைமைகளுக்கும் அதற்கு ஓராண்டுக்கு முன்னர் 2000ஆம் ஆண்டு தேர்தல்கள் களவாடப்பட்டமைக்கும் இடையில் இருந்த தொடர்பை வரைந்து காட்டியது. அது எழுதியது: “முன்பில்லாத அளவில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்கும் உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மைக்கும் இடையே பிளந்துவரும் இடைவெளி ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு கட்டமைப்புடன் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்கள் பெரிதும் பொருத்தமின்றி மாறுகிறது; மாறி உள்ளது."

அந்த பகுப்பாய்வு, கடந்த 15 ஆண்டுகளாக, புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கம் மிக பலமான ஜனநாயக-விரோத நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தி உள்ளது: உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஸ்தாபிக்கப்பட்டது; அரசின் உளவுபார்ப்பு அதிகாரங்களை விரிவாக்க தேசிய பாதுகாப்புச் சட்டம் (PATRIOT Act) அமுலாக்கப்பட்டது; அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை மேற்பார்வையிட பெண்டகனின் வடக்கு கட்டளைப்பிரிவு உருவாக்கப்பட்டது; கைது செய்ய, சித்தரவதை செய்ய, இராணுவ தீர்ப்பாயத்திற்கு உட்படுத்த, அமெரிக்க பிரஜை உட்பட யாரொருவரையும் விசாரணையின்றி படுகொலை செய்வதற்கு ஜனாதிபதிக்கு உரிமை உள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்க உளவுத்துறை முகமைகள் எந்தவித சட்டபூர்வ தடைகளும் இல்லாமல், அமெரிக்க குடிமக்கள் உட்பட தோற்றப்பாட்டளவில் பூமியில் ஒவ்வொருவரின் தவகல் தொடர்புகளையும் கண்காணித்து வருகிறது. மத்திய அரசாங்கமோ உள்ளூர் பொலிஸ் படைகளுடன் முன்பில்லாத விதத்தில் மிக நெருக்கமாக அதன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து வேலை செய்கிறது, இந்த பொலிஸ் படைகள் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான இராணுவ உபகரணங்களால் ஆயுதபாணியாக்கப்பட்டுள்ளன. பெண்டகன், அதனுடன் இணைந்த சிந்தனை கூடங்களுடன் சேர்ந்து, "மிகப்பரந்த, எதிர்பாராத மக்கள் கொந்தளிப்புகளை அடக்க" (மே 2013 இராணுவ உத்தரவில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகளின்படி) இராணுவ நடவடிக்கைகளுக்கான விளக்கமான திட்டங்களை ஏற்கனவே வரைந்து வைத்துள்ளது.

முன்பினும் மிக பகிரங்கமாக, ஆரம்பத்தில் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ற சாக்கில் திருப்பிவிடப்பட்ட வார்த்தைகளும் மற்றும் அணுகுமுறைகளும், அமெரிக்க மக்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு வருகின்றன. ஃபேர்குஷன் சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளதைப் போல, ஒடுக்குமுறை எந்திரம் உள்நாட்டுக்குள்ளேயே சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. அது ஃபேர்குஷன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அமெரிக்காவில் வேலைகள், கூலிகள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான இரக்கமற்ற தாக்குதலுக்கும் மற்றும் முடிவில்லாத அன்னிய நாட்டு யுத்தங்களுக்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்புகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

அமெரிக்க ஜனநாயகத்தின் பொறிவு என்பது ஒரு திவாலான சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் அரசியல் வெளிப்பாடாகும். வெளி நாடுகளில், இந்த ஆளும் வர்க்கம் வன்முறை மற்றும் சூறையாடல் மீது ஒரு பிரச்சாரத்தை விரிவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டில், பெருமந்தநிலைக்கு முந்தைய ஆண்டுகளுக்குப் பின்னர் பார்த்திராத சமூக சமத்துவமின்மை மட்டங்களைக் கொண்டுவரும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. உலக பொருளாதாரம் மற்றொரு நிதியியல் பொறிவுக்கு போய் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன, அதன் விளைவுகள் 2008இல் வெடித்த நெருக்கடியை விட பெரிதினும் பெரிதாக இருக்கும்.

ஆழ்ந்த சமூக பதட்டங்கள் கட்டமைந்து வருகின்றன, மற்றும் அவற்றை நெறிப்படுத்த ஆளும் வர்த்தால் பயன்படுத்தப்படும் இயங்குமுறைகள் உடைந்து போயுள்ளன. ஒபாமா நிர்வாகத்தின் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், அரசாங்கமும் மற்றும் இரண்டு பிரதான கட்சிகளுமே மில்லியன் கணக்கான மக்களின் பார்வையில் முன்பில்லாத அளவில் மிகவும் ஆழமாக மதிப்பிழந்து உள்ளன. சமீபத்திய இடைக்கால தேர்தல்களில் இருந்த மிக மிகக் குறைந்த வாக்குப்பதிவு, அதிகரித்துவரும் கோபம் மற்றும் வெறுப்பின் ஓர் ஆரம்ப வெளிப்பாடு மட்டுமே ஆகும். உத்தியோகபூர்வ அரசியல் வழிகளுக்குள் எந்தவொரு தீர்வுகளையும் காணவியலாமல், பெருந்திரளான மக்கள் ஏனைய வழிவகைகளைத் தேடுவார்கள்.

ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை ஆளும் வர்க்கம் புகலிடமாக ஏற்பதென்பது பலத்தின் ஒரு வெளிப்பாடோ அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடோ அல்ல, மாறாக பலவீனம் மற்றும் அச்சத்தின் வெளிப்பாடாகும். அதன் கொள்கைகளது விளைவுகள் புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது என்பதால், பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம், மிகவும் சரியாக, பயந்து போயுள்ளது.

முதலாளித்துவத்தின் தவிர்க்கவியலாத விளைபொருள்களான சமூக சமத்துவமின்மை மற்றும் யுத்தம் என்பது, ஜனநாயகத்துடன் பொருத்தமற்று உள்ளன. இதுவோ அல்லது அதுவோ —முதலாளித்துவம் அல்லது ஜனநாயகம்—வெளியேறியே ஆக வேண்டும்.

ஆளும் வர்க்கம் அதன் நலன்களை வலிந்துபெற சக்திவாய்ந்த அமைப்புகளைக் கொண்டுள்ளது, அவற்றைப் பயன்படுத்தவும் அது தயாராக உள்ளது என்பதை ஃபேர்குஷன் சம்பவங்கள் தெளிவாக்கி உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சக்தி அதையும் விட பலமானது. ஆனால் இந்த பலம், அதன் நோக்கங்களில் நனவுபூர்வமாக இருக்கும் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியான ஒரு சுயாதீனமான சக்தியாக, ஒட்டுமொத்த வர்க்கமும் அரசியல் அமைப்பாக ஒன்றுதிரள்வதைச் சார்ந்துள்ளது.