சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Merkel’s “Hun Speech” against Russia

ரஷ்யாவிற்கு எதிரான மேர்க்கெலின் ஹன் உரை

By Johannes Stern 
19 November 2014

Use this version to printSend feedback

1900 ஜூலை 27 அன்று, பிரேமெர்ஹாவனில் கைசர் வில்ஹெல்ம் II தனது இழிபுகழ் பெற்றஹன் உரையை (Hunnenrede) ஆற்றினார். பாக்ஸர் எழுச்சியை மூர்க்கமாக ஒடுக்குவதற்காக சீனாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த, ஜேர்மனியின் கிழக்காசிய பயணக் குழுக்களை குறிப்பிட்டு பேசுகையில், முப்பது வருடகால நம்பிக்கை, அமைதியான தொழிலாளர்கள் ஆகியவற்றை கொண்டு ஜேர்மன் இராணுவம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார்.

சர்வதேச சட்டத்தை சீர்குலைத்ததற்காகவும் உலக வரலாற்றிலேயே இதுவரை கேள்விப்படாத அளவுக்கு விருந்தோம்பலின் கடமைகளை, ”தூதரின் புனித்ததன்மையை அவமதித்திருக்கிறது என்றும் இவர் சீனாவைக் குற்றம் சாட்டினார்.

இறுதியாக, அவர் தனது பின்வரும் இழிபுகழ் கொண்ட அச்சுறுத்தலை வெளியிட்டார்: ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அரசர் அட்டிலாவின் கீழ், ஹன்ஸ் தங்களுக்கான பெயரை உருவாக்கியது, இன்றுகூட வரலாற்றிலும் புராணத்திலும் அவர்களை பலசாலிகளாகக் காட்டுகிறது, ஆகவே சீனாவில் இத்தகைய ஒரு வழியில் உங்களால் நிலைத்த ஜேர்மன் என்ற பெயர், ஜேர்மனியை ஓரக்கண்ணால் பார்ப்பதற்கு கூட மீண்டும் ஒருபோதும் துணியாது.

ஆஸ்திரேலியாவின் ஜி-20 மாநாட்டினை அடுத்து அங்கேலா மேர்க்கெல், ரஷ்யாவை வெளிப்படையாக தாக்கியிருப்பது இந்த வகையிலான ஜேர்மனிய பெரும் சக்தி அரசியலை ஞாபகப்படுத்துகிறது. இரண்டாம் வில்ஹெல்ம் போலவே, மேர்க்கெல் அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக தனது தனது சொந்த ஆக்கிரமிப்பு நடத்தையை வெளிக்காட்ட முயற்சிப்பதுடன், தன்னை ஒரு எதிரியாகவும் முத்திரை குத்திக்கொள்கிறார், இந்த விஷயத்தில், ஆக்கிரமிப்பாளர் ரஷ்யா.

சிட்னியில் ஆஸ்திரேலியாவின் நான்காவது பணக்காரரும் பல பில்லியன்களுக்கு அதிபதியுமான ஃப்ராங்க் லோவியின் சிந்தனையாளர்கள் குழுவால் நடத்தப்படுகின்ற லோவி சர்வதேச கொள்கைகளுக்கான நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மேர்க்கெல் – சர்வதேச சட்டத்தை மிதித்தல், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பிற்கு இடையிலான முரண்பாடுகளை தீர்க்க மறுப்பது, வலிமையானவர்களின் உரிமையாக கருதப்படுவதை சார்ந்திருப்பது மற்றும் இரு உலக யுத்தம் மற்றும் பனிப்போரின் பயங்கரங்களை பின்தொடர்வது ஆகியவற்றுக்காக... ஒட்டுமொத்த ஐரோப்பிய அமைதி ஒழுங்கினை கேள்விக்கு உட்படுத்துவதாக,  ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினை குற்றம் சாட்டினார்.

இவ்வருட ஆரம்பத்தில், கிரிமியாவை சட்டத்திற்கு புறம்பாக ரஷ்யா கைப்பற்றிய விஷயத்திலும் மிகச்சரியாக இதுதான் நடந்தது என்று சான்சிலர் தெரிவித்தார். இப்போது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் கிழக்கு உக்ரேனை ஸ்திரமற்றதாக்கும் ரஷ்யாவின் முயற்சிகளில் இதன் அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்கின்றன. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் உக்ரேன் மாகாண இறையாண்மையை ரஷ்யா மீறிவிட்டது என்பதுடன் ஆதிக்கப்பகுதி என்ற அடிப்படையிலும் நினைக்கிறது.

இவரது குறிப்புகளில், சான்சிலர் நெருக்கடிக்கு எதிரான இராணுவ தீர்வு ஒன்றிற்கு எதிராக பேசினார். ஆயினும், ரஷ்யாவிற்கெதிரான இவரது குற்றச்சாட்டில் எந்த வித அடிப்படையும் இல்லை என்பது மட்டுமல்ல, மேற்சொன்ன சர்வதேச சட்டம் மற்றும் அமைதி மீறல் இராணுவப்பிரச்சனைக்கு மாஸ்கோ காரணமாயிற்று என்பதை இவரது குற்றச்சாட்டின் தர்க்கம் மறைமுகமாக சுட்டிக்காட்டியது. இவரது தீவிரமான பேச்சு - ரஷ்ய இராணுவத்தை சுற்றிவளைப்பது மற்றும் அதனை ஒரு மூலையில் தள்ளுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கான அரசியல் சூழ்நிலையில் மேலும் விஷத்தை ஊற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது. 

ஜி-20 மாநாட்டில் ரஷ்யா உடனான முரண்பாட்டின் தீவிரமே ஆதிக்கம் செலுத்தியது. ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கத்தின் தலைவர்கள் புட்டினுக்கு எதிரான அணிகளை மூடியதுடன் அவரது முன்கூட்டிய புறப்பாட்டிற்கும் தூண்டினர். மேர்க்கெல் தனது பேச்சில், எடுத்துக்காட்டாக, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேன் அரசாங்கத்திற்கு பின்புலமாக நின்றதுடன் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.

இந்த ஆதரவுடன், அதே நாளில் உக்ரேன் குடியரசுத் தலைவர் பெட்ரோ பொறொஷென்கோ ஒட்டுமொத்த போருடன் ரஷ்யாவை அச்சுறுத்தினார். ப்ரேடிஸ்லாவாவில், ஒரு நினைவு தினத்தின் முடிவில் பேசுகையில், ரஷ்ய படைகளுடனான போர் குறித்து எனக்கு பயமில்லை மேலும் ஒட்டுமொத்த போர் என்ற சூழ்நிலைக்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். ஐந்து மாதங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது எங்கள் இராணுவம் மிக நல்ல நிலைமையில் இருக்கிறது, உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. என்றார்.

மாஸ்கோவிற்கெதிரான தீவிர செயல்பாடுகளில் ஜேர்மன் அரசாங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது. பிப்ரவரி மாதம், அமெரிக்க அரசங்கம் மற்றும் பாசிச படைகளுடனான நெருங்கிய கூட்டுழைப்புடன், ஐரோப்பிய யூனியன் உடனான நிறுவன ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட மறுத்ததை அடுத்து, முன்னாள் – உக்ரேன் குடியரசுத் தலைவர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பினை ஒருங்கமைத்தது. அது முதல், பொறொஷென்கோ ஆட்சியுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதுடன், ரஷ்யாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

உக்ரேன் பிரச்சனையில் மாஸ்கோவிற்கு தெளிவான சமிக்ஞையை அனுப்பும் நோக்கத்திற்காக, நேட்டோ நிர்மாணித்துக் கொண்டிருக்கும் ஒரு அதிரடிப்படை படையை Bundeswehr (ஜேர்மன் இராணுவம்) தீவிரமாக வழிநடத்திச்செல்லும் என்று சென்ற வாரக்கடைசியில் Die Welt எழுதியது. செப்டம்பரில், பால்டிக் அரசுகளின் மீதான வான்வழி ரோந்துகளில் ஜேர்மனி முன்னணியில் நின்றதுடன், போலந்தின் Szczecin-ன் பன்னாட்டு வட-கிழக்கு படைப் பிரிவில் அது சார்ந்திருக்கும் தன்மையை இரட்டிப்பாக்கியிருக்கிறது. கடந்த வாரம், ஜேர்மனியின் நேட்டோ தலைவர் ஹன்ஸ்-லோதர் டொம்ரோஸ், ரஷ்ய எல்லையில் முக்கிய நேட்டோ திட்டங்களின் அச்சுறுத்தலை பற்றி பேசினார்.

பல வருடங்களாக, நேட்டோ அதன் எல்லைகளை கிழக்குநோக்கி நீட்டித்து வருவதுடன் ரஷ்யாவிற்கெதிரான போருக்காக வெளிப்படையான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சிட்னியில், படிப்படியாக அதன் ஆதிக்க பகுதிகளை ரஷ்யா நீட்டித்துக்கொண்டே செல்வதாக மேர்க்கெல் குற்றம் சாட்டினார். இது உக்ரேன் பற்றியது மட்டுமல்ல; இது மோல்டாவியா பற்றியது, இது ஜோர்ஜியா பற்றியது. இது தொடர்ந்தால், "ஒரு கேட்கலாம்: அதில் சேர்பியாவையும் சேர்க்க வேண்டுமா? மேற்கத்திய பால்கன் மாகாணங்களை சேர்க்க வேண்டுமா? என்று; இது எந்த விஷயத்திலும் நமது மதிப்புகளுடன் ஏற்றதாக இல்லை." என்றார் அவர்.

மிகவும் அமைதியாக இருப்பதற்காக தண்டனை அனுபவிக்க முடியாது, என்ன சொல்லப்படுகிறது என்பதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அக்கறையுடன் கவனிக்க வேண்டும் என்பதையும் நாம் வரலாற்றிலிருந்து அறிகிறோம் என்றார் மேர்க்கெல்.

ரஷ்யா குறித்து ஜேர்மனி “மிகவும் அமைதியாக இருக்கக் கூடாது என்று வரலாறு கற்றுத்தருவதாக ஜேர்மன் அரசாங்க தலைவி கூறியபோது, எவருக்கும் இரத்தம் உறையத் தொடங்கும். 75 வருடங்களுக்கு முன்பு, ஜேர்மனி சோவியத் யூனியனுக்கு எதிராக நிர்மூலமாக்கும் ஒரு போரை நடத்தி,  27 மில்லியன் சோவியத் குடிமக்களை கொன்று அழித்து மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை அழித்து, மனித வரலாற்றிலேயே மிகக்கொடூரமான குற்றச் செயல்களை செய்தது.

உக்ரேன் மீதான பிரச்சனையை இராணுவரீதியாக தீர்க்க முடியாது என்ற மேர்க்கெல், இன்னொரு பக்கம், நாம் பிரச்சனையை இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது என்பதால் நம்மால் இது அனைத்தையும் தீர்க்கவே முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என அச்சுறுத்தும்வகையில் கூறினார்.

தனது வரலாற்று குற்றங்கள் குறித்து ஜேர்மனியின் ஆளும் மேல்தட்டுக்கு நன்றாகவே தெரியும். சிட்னியில், 75 வருடங்களுக்கு முன்னால் இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தையும் Shoah வில் பொதிந்திருந்த நாகரிகத்தின் உருக்குலைவினையும், மற்றும் மிக முக்கியமாக, நூறு வருடங்களுக்கு முந்தைய முதல் உலகப்போர் ஆகியவறை மேர்க்கெல் நினைவு கூர்ந்தார்.

ஆனால், அனுமானிக்கப்படும் வகையில் கடந்த நூற்றாண்டின் போர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட இவரது “இராஜதந்திரமிக்க மற்றும் “இராணுவமல்லாத தீர்வுகள் அனைத்தும் அடிப்படையில் பிரச்சாரமேயாகும். மேலும் கைசர் வில்ஹெல்மின் கீழ், அமைதியின் அரசியல் என்பது போன்ற கொடூரமான போர் கொள்கை ஒன்றை சித்தரித்து ஜேர்மனி, இராணுவவாதம் மற்றும் வலுவான அரசியலுக்கு திரும்புகிறது என்பதை மறைப்பதே இதன் நோக்கம்.

20-ஆம் நூற்றாண்டின் அடிப்படையான பேரழிவின் மேற்கோளுடன், சீமாட்டிகளே சீமான்களே, ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு மக்களுக்கும் நாடுகளுக்கும் இடையில் இவ்வளவு தூரத்திற்கு விஷயங்கள் எப்படி நடந்திருக்க முடியும்? என்று மேர்க்கெல் கேட்டார்.

மேர்க்கெல் அறிந்திருக்க வேண்டும். முன்பு போலவே இன்றும், இரக்கமற்ற மற்றும் ஆக்கிரோஷமான பெரும் சக்திகளின் ஏகாதிபத்தியக் கொள்கைகள் மனிதகுலத்தை படுகுழிக்குள் தள்ள அச்சுறுத்தி வருகின்றன. உக்ரேனில் மேற்கால் இயக்கப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு, ரஷ்யா மற்றும் சீனாவை இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் மத்திய கிழக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் ஆகியவை உலகை எந்த நேரமும் வெடிக்கக் கூடிய வெடிமருந்து கிடங்காக  மாற்றியுள்ளன. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்ததைப் போலவே, தற்போதும் ஜேர்மனி குறிப்பாக ஒரு தீவிரமான பங்கு வகிக்கின்றது.