சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political lessons of the Ferguson whitewash

ஃபேர்குஷன் கண்துடைப்பினது அரசியல் படிப்பினைகள்

Joseph Kishore
26 November 2014

Use this version to printSend feedback

பொலிஸ் அதிகாரி டார்ரென் வில்சன் மீது குற்றப்பதிவு செய்ய வேண்டியதில்லை என செயிண்ட் லூயிஸ் கவுன்டி நீதியரசர் ரோபர்ட் மெக்குல்லோச்சிடமிருந்து திங்களன்று இரவு வெளியான அறிவிப்பு, அந்நாடு முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் நீதித்துறையின் ஒரு கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே, இறுதி தீர்ப்பை நோக்கிய அந்த வழிமுறை, ஒரு நோக்கத்திற்காக, ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே தில்லு முல்லு செய்யப்பட்டு வந்தது: அதாவது, நிராயுதபாணியான 18 வயது மைக்கேல் பிரௌனைப் படுகொலை செய்த அந்த பொலிஸ் அதிகாரியை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக.

ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைத் தீர்மானிக்கும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல், இரகசியமாக, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த விசாரணையைக் கொண்டு ஒரு பொது விசாரணையை பிரதியீடு செய்து, அம்மாநிலம் ஒரு பெருநடுவர் மன்றத்தை (grand jury) கூட்டியிருந்தது, அதில் சாட்சிகளோ, பொலிஸூடன் நெருக்கமாக தொடர்பு கொண்ட ஒருவரது தலைமையில் இருந்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களுக்குக் கோரிக்கை விடுக்கவோ அல்லது வாதிடவோ போவதில்லையென அரசு தரப்பில் பெரிதும் வழக்கத்தில் இல்லாத முடிவு எடுக்கப்பட்டது.

நேரில் பார்த்தவர்களது சாட்சியம் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் செல்லுபடி ஆகாமல் செய்ய தங்களைத்தாங்களே அர்பணித்துக் கொண்டிருந்த நிலையில், அவசியமான வாதங்களுக்கு இணக்கமாக அங்கே எதுவும் இல்லை என்பதையே பெரு நடுவர் மன்ற விசாரணைகளின் எழுத்துப்பிரதிகள் தெளிவாகவும் மற்றும் வெளிப்படையான பாரபட்சத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு முரண்பட்ட விதத்தில், நான்கு மணிநேரங்களில் வில்சன் அவரது சொந்த-கணக்கை முன்வைத்திருந்த நிலையில், அவர் சவாலுக்கிடமின்றி விடப்பட்டிருந்தார். அந்த விசாரணை முழுவதிலும், அரசுதரப்பு வழக்கறிஞர் அலுவலகம் டார்ரென் வில்சனை அல்ல, மைக்கேல் பிரௌனை வழக்கில் நிறுத்த முனைந்திருந்தது.

பெரும்பாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கோரும் குற்றச்சாட்டுக்களையே பெரு நடுவர் மன்றங்கள் பதிவு செய்யும், இந்த வழக்கும் அதிலிருந்து வேறுபட்டில்லை. ஒரு குற்றம் நடத்தப்பட்டிருந்தது என்பதற்கு பெருமளவில் ஆதாரம் இருந்தபோதினும் கூட, பெருநடுவர் மன்றம் குற்றப்பதிவு செய்யவில்லை ஏனெனில் அரசுதரப்பு ஒரு குற்றப்பத்திரிக்கையை விரும்பவில்லை.

எவ்வாறிருந்த போதினும், வில்சன் குற்றங்களினது கண்துடைப்பு வெறுமனே மெக்குல்லோச்சின் பிழைகளின் விளைவு என்று விளக்கிவிட முடியாது. மெக்குல்லோச்சே கூட வலியுறுத்த முடியாத நிலையில், ஒபாமா நிர்வாகம் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்த ஒரு பெரும் அரசியல் திட்டத்தின் கையசைப்பின் பாகமாக அரசுதரப்பு நடவடிக்கைகள் இருந்தன.

பிரௌன் கொல்லப்பட்டதன் மீது பெரும் மக்கள் கோபம் உள்ள நிலையில், மற்றும் ஒரு வழக்கிற்கான தெளிவான சட்ட அடித்தளம் இருந்த போதினும், பெரு நடுவர் மன்றம் ஏன் குறைந்தபட்சம் மனிதபடுகொலைக்கான ஒரு குறைந்த தண்டனை குற்றமாக கூட ஒரு குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்யவில்லை என ஒருவர் கேட்கலாம். அல்லது ஏன் ஒரு குற்றப்பத்திரிக்கை வழங்கப்படவில்லை மற்றும் ஒரு வழக்கு நடத்தப்படவில்லை—அரசுதரப்பின் அனுதாபங்களுக்கு இடையே, அவ்வாறான ஒரு வழக்கு அனேகமாக இதேபோன்ற ஒரு தீர்ப்பைத் தான் கொண்டு வந்திருக்கும்: அதாவது வில்சனை மன்னித்துவிடுதல். மைக்கேல் பிரௌன் கொல்லப்பட்டதற்கும், குற்றப்பத்திரிக்கை வேண்டாமென்ற இறுதி முடிவுக்கும் இடையில் கடந்திருந்த மூன்று மாதங்களில், இத்தகைய வெவ்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து திரைக்குப் பின்னால் அங்கே விவாதம் இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த தீர்மானத்தை எட்டுவதில், அதைச் செய்திருந்த, ஆளும் வர்க்கத்தின் யோசனையை இரண்டு காரணிகள் விவரிக்கின்றன. முதலாவதாக, அங்கே ஆத்திரமூட்டும் அம்சம் உள்ளது. ஆளும் வர்க்கம் ஃபேர்குஷன் சம்பவங்களை அமெரிக்காவில் ஒடுக்குமுறைக்கான புதிய முன்மாதிரிகளை அமைக்க ஒரு வாய்ப்பாக பற்றியுள்ளது. உண்மையில், பெரு நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நேரம், அதாவது இரவு நேரம், பொலிஸ் வன்முறைக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்க திட்டமிட்டு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆகஸ்டில் போராட்டங்களுக்கு விடையிறுப்பதை தீவிரப்படுத்துவதில், தானியங்கி ஆயுதங்கள் தரித்த கலக ஒடுப்பு பொலிஸ், கவச வாகனங்களுடன், பீன் பைகளை வீசியும் மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், திங்களன்று இரவு வீதிகளில் ரோந்து வந்தது. ஆயுதமேந்திய படைகளின் ஒரு பிரிவான தேசிய பாதுகாப்புப்படையின் 2,200 உறுப்பினர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என செவ்வாயன்று, மிசோரி ஆளுநர் ஜே நிக்சன் அறிவித்தார் — பெரு நடுவர் மன்ற தீர்ப்பிற்கு ஒருவாரத்திற்கு முன்னதாக அவர் முன்கூட்டிய அவசரகால நெருக்கடியை அறிவித்திருந்தார். ஒரு அமெரிக்க நகரம் துல்லியமாக முற்றுகையிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, அந்த முடிவு ஆயுத வண்டிகளால் சுற்றி பாதுக்காப்பைப் பெற்றுள்ள ஆளும் வர்க்கத்தின் குணாம்சத்தைக் கொண்டுள்ளது. என்னவெல்லாம் வெவ்வேறு தந்திரோபாய சாத்தியக்கூறுகள் இருந்தனவோ அவை விவாதிக்கப்பட்டன, இறுதியில் அதிகரித்துவரும் சமூக கிளர்ச்சிக்கு முன்னதாக, அங்கே எந்த விட்டுக்கொடுப்புகளும் இருக்ககூடாது, எந்தவொரு விட்டுக்கொடுப்பும் பலவீனத்தின் ஒரு அறிகுறியாக பார்க்கப்படும் என்பதோடு அவை இன்னும் எதிர்ப்பைத் தைரியப்படுத்த மட்டுமே செய்யுமென ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

இருந்தபோதினும் ஆளும் வர்க்கம் அதன் வன்முறை ஆட்சியைப் பாதுகாப்பதில், அது ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் மேற்கொண்டும் அதன் மதிப்பை அதுவே கெடுத்து வருகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கிறோம் என்ற அடித்தளத்தின் மீது நியாயப்பாட்டை வைத்து, உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் போர்களை ஒழுங்கமைத்த ஒரு அரசு, அதன் எல்லைகளுக்குள்ளிருந்து வரும் எதிர்ப்புக்கு எதிராகவும் மிகவும் கொடூரமான ஒடுக்குமுறை வடிவங்களைப் பயன்படுத்துகிறது.

அங்கே இத்தகைய நடவடிக்கைகளின் அரசியல் விளைவுகள் மீது ஊடகப் பிரிவுகளிடையே ஒரு குறிப்பிட்ட பதட்டம் உள்ளது. சான்றாக, வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் தனா மில்பேங்க், மெக்குல்லோச்சின் "டார்ரென் வில்சன் மீதான அனுதாப விசாரணை" “ஆபிரிக்க அமெரிக்கள் மத்தியிலும், ஏனைய பலரிடையேயும், நீதித்துறை மோசமடைந்துவிட்டது என்ற உணர்வை" மீண்டும் பலப்படுத்தி உள்ளதாக அவரது கவலையை வெளியிட்டார்.

ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளுக்கு சாதகமாக பேசிவரும் நியூ யோர்க் டைம்ஸ், செவ்வாயன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் இவ்வாறு கவலையை வெளியிடுகிறது: “செயிண்ட் லூயிஸின் பீதியடைந்த வீதிகளில்—மற்றும் நாடெங்கிலும் தொடர்ந்து எதிரொலிக்கும் ஆத்திரம்...சட்ட அமுலாக்கத்தின் மீதான அவநம்பிக்கை அமெரிக்காவின் பொது கட்டமைப்புக்கு ஒரு மரணகதியிலான அபாயத்தை முன்னிறுத்துவதையே மீண்டுமொருமுறை காட்டுகிறது.” வில்சன் மீது குற்றப்பத்திரிகை இல்லை என்ற முடிவால் இந்த "மரணகதியிலான அபாயம்" மேலும் எரியூட்டப்படுகிறது என்று டைம்ஸ் எழுதுகிறது.

இத்தகைய கருத்துரைகள் பொதுவாக இனவாத அர்த்தத்தில் கொண்டு வரப்படுகின்றன என்றபோதினும், அதற்கடியில் இருப்பது வர்க்கப் பிரச்சினையாகும். ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்தி வரும் கொள்கைகள் —அதாவது அன்னிய நாடுகளில் முடிவில்லா யுத்தம் மற்றும் உள்நாட்டில் சமூக எதிர்புரட்சியானது— ஆழமாக மக்களிடையே செல்வாக்கிழந்துள்ளன என்பதை ஆளும் வர்க்கம் நன்கு அறிந்துள்ளது. “பொதுக் கட்டமைப்புக்கு மரணகதியிலான அபாயம்" என்பதன் மூலமாக டைம்ஸ், கட்டுப்படுத்தவியலாத சமூக கிளர்ச்சியை, புரட்சியையே கூட அர்த்தப்படுத்துகிறது.

சீறிவரும் சமூக அதிருப்தி குறித்து அறிந்துள்ள போதினும், ஆளும் வர்க்கத்திடம் அளிப்பதற்கு வேறொன்றுமில்லை. டைம்ஸே கூட, ஃபேர்குஷன் விளைவுக்கோ அல்லது அமெரிக்க ஆளும் வர்க்கம் முகங்கொடுக்கும் பரந்த அரசியல் நெருக்கடிக்கோ இரண்டுக்குமே ஒபாமாவினது நிர்வாகம் மையத்தில் இல்லை என்பதைப் போல, அவரது பாத்திரத்தைப் பாராட்டும் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு பெரு நடுவர் மன்றத்தின் மீது அதன் விமர்சனங்களை வைக்கிறது.

பெரு நடுவர் மன்ற முடிவுக்கு ஒபாமாவினது சொந்த விடையிறுப்பு வெளிப்பட்டு வருகிறது. அந்த ஜனாதிபதி உடனடியாக, அந்த முடிவுகள் மதிக்கப்பட வேண்டியவை மற்றும் சட்டத்திற்குட்பட்டவை என்று அறிவித்து, தேசிய தொலைக்காட்சியில் ஒரு அறிக்கையை அளிக்க விரைந்தார். “நமது நாடு சட்டத்தின் ஆட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது," “ஆகவே இந்த முடிவு பெரு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு என்பதை நாம் ஏற்க வேண்டும்," என்றவர் அறிவித்தார். இது நீதித்துறைசார்ந்த மற்றும் சட்டரீதியிலான மோசடிக்கு ஒப்புதல் வழங்குவதை விட வேறொன்றுமில்லை. கொல்வதற்கு பொலிஸிற்கு உரிமை வழங்கும் ஒரு முடிவுடன் அவரே இணைந்திருக்கின்ற நிலையில், போராட்டக்காரர்களைக் குறிப்பிட்டுக் காட்டி, அவர் தெரிவிக்கையில், அங்கே "ஒருபோதும் வன்முறைக்கு இடமளிக்க முடியாது," என்றார்.

ஒபாமா நிர்வாகத்தின் ஆறு ஆண்டுகள் கவனிக்கப்படாமல் போய்விடவில்லை. அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும், தற்போது நிலவும் சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறைக்குள் அவர்களின் கவலைகளை தீர்க்கவோ அல்லது அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவோ எந்த இயங்குமுறையும் இல்லை என்ற தீர்மானித்திற்கு வரத் தொடங்கிவிட்டனர். இந்த புரிதல் டார்ரென் வில்சனை மன்னித்துவிடுவித்ததன் மூலமாக வெறுமனே மேற்கொண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர்க்கவியலாமல் அழிவை நோக்கி முன்னேறிவரும் ஒரு அமைப்புமுறைக்குரிய தனித்தன்மைகள் அங்கே நிலவுகின்றன.