சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Global economy falls deeper into slump

பூகோளமயப்பட்ட பொருளாதாரம் ஆழமாக மந்தநிலைமைக்குள் வீழ்கிறது

Nick Beams
20 November 2014

Use this version to printSend feedback

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஜப்பான், 2008க்கு பின்னர் அதன் நான்காவது பின்னடைவுக்குள் உத்தியோகபூர்வமாக மூழ்கிவருகின்ற நிலையில், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் சுருங்கியமை குறித்த திங்கட்கிழமை அறிவிப்பானது, உலக பொருளாதாரம் ஒரு மீட்சியை அனுபவித்து வருகிறது என்பதிலிருந்து விலகி, அது கீழ்நோக்கி சுழன்று வருவதற்கான மற்றொரு அறிகுறியாக உள்ளது. அதற்கு முந்தைய நாள், G20 உச்சிமாநாடு, அடுத்த ஐந்தாண்டுகளில் 2 சதவீத உலகளாவிய வளர்ச்சியை ஊக்குவிக்க சூளுரைத்து வெளியிட்ட அறிக்கை உயிரற்று போனதையே அது அர்த்தப்படுத்தியது.

அமெரிக்காவை விட மிகப்பெரிய ஒருங்கிணைந்த பொருளாதாரமான, 18 உறுப்புநாடுகளின் ஐரோப்பிய மண்டலத்தின் நிரந்த அம்சங்களாக மந்தநிலைமையும் மற்றும் முற்றுமுதலான பின்னடைவும் உள்ளன என்பதைக் காட்டும் புள்ளிவிபரங்கள் வந்துள்ள நிலையில், ஜப்பானிலிருந்து அச்செய்தி வந்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் யூரோ மண்டலம் வெறும் 0.6 சதவீத ஆண்டு விகிதத்தில் விரிவடைந்தது, அது சுமார் 2 சதவீதம் இருந்த 2008க்கு முந்தைய வளர்ச்சி விகிதத்தை விட மிக மிக குறைவாகும். பின்னடைவுக்குள் சரிவு என்பது விளிம்பில் உள்ள நாடுகள் என்றழைக்கப்படுபவைகளில் அல்ல மாறாக அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் ஒருங்குவிந்திருந்தது என்பதைக் காட்டுவதே அந்த புள்ளிவிபரங்களில் இருந்த மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஒரு காலத்தில் யூரோ மண்டலத்தின் ஆற்றல்களமாக விளங்கிய ஜேர்மனி, உத்தியோகபூர்வமாக பின்னடைவுக்குள் சரிவதிலிருந்து வெறும் மயிரிழையில் தப்பியது, அதன் பொருளாதாரம் முந்தைய காலாண்டின் 0.1 சதவீத சுருக்கத்தைத் தொடர்ந்து, வெறும் 0.1 சதவிகிதம் மட்டுமே உயர்வை பதிவு செய்தது. 2009-ல் நிதியியல் நெருக்கடியின் ஆரம்ப தாக்கத்திற்குப் பின்னர், இரண்டாவது காலாண்டின் வரிசையில் ஜேர்மன் பொருளாதாரம் முதல்முறையாக யூரோ மண்டலத்தின் மீதப் பகுதிகளுக்குப் பின்னால் பின்தங்கியது.

2008க்கு பின்னர் இத்தாலி அதன் மூன்றாவது பின்னடைவுக்குள் நுழைந்துள்ளது, அதன் வளர்ச்சி முந்தைய மூன்று மாதங்களில் 0.2 சதவீதம் சுருங்கிய பின்னர், இந்த காலாண்டில் 0.1 சதவீதம் சுருங்கியது. பிரெஞ்சு பொருளாதாரம் 0.3 சதவீத அளவுக்கு விரிவடைந்தது, ஆனால், முதல் காலாண்டில் வளர்ச்சி இருக்கவில்லை என்பதுடன் இரண்டாவது காலாண்டின் ஒரு சுருக்கத்திற்கு பின்னர், அது அரிதாகவே நல்ல செய்தியாக இருந்தது.

அடுத்தடுத்து செலவினக் குறைப்புகள் மற்றும் 25 சதவிகித வேலைவாய்ப்பின்மை அளவு ஆகியவற்றால் தரைமட்டமாக்கப்பட்ட கிரேக்க பொருளாதாரம், காலாண்டுக்கு காலாண்டு 0.7 சதவீத விரிவாக்கத்துடன் சிறந்த ஐரோப்பிய விளைவாக திரும்பி இருந்தது என்ற உண்மை ஆழமடைந்துவரும் குறைபாட்டின் ஒரு அடையாளமே ஆகும்.

ஆழமடைந்து வரும் மந்தநிலைமை, கடந்த வாரம் இங்கிலாந்து வங்கி ஆளுநர் மார்க் கார்னேயிடமிருந்து ஓர் ஒளிவுமறைவற்ற எச்சரிக்கையைக் கொண்டு வந்தது. பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவிகிதத்திற்கும் கீழாக இருக்கும் என்று அறிவித்து, மத்திய வங்கி அதன் நவம்பர் மாத பணவீக்க அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான வளர்ச்சி குறித்த முன்மதிப்பீடுகளைக் குறைக்கிறது.

"முன்னேறிய மற்றும் எழுச்சிபெற்றுவரும் உலகின் பெரும்பகுதிகளின் குறியீடுகள் பிரயோசனமற்று உள்ளன,” என்று தெரிவித்த அவர், "ஒரு பூதம் ஐரோப்பாவை துரத்திக் கொண்டிருக்கிறது -- அதாவது, வளர்ச்சி மீண்டும் ஏமாற்றமளிப்பதுடன் சேர்ந்து, நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், பொருளாதார தேக்கநிலை என்பதே அந்த பூதம்,” என்றார்.

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனிடமிருந்து வந்த கருத்துரை, திங்களன்று Guardian இல் பிரசுரமானது. “உலகத்தை அதன் காலடிகளுக்கு கொண்டு வந்த, பொருளாதார நெருக்கடி ஆரம்பித்து ஆறாண்டுகள் ஆகி விட்டன, உலகளாவிய பொருளாதாரத்தின் முகப்பின் மீது மீண்டும் ஒருமுறை சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் ஒளிர ஆரம்பித்துள்ளன" என்று அவர் எழுதினார்.

2008 செப்டம்பர் வோல் ஸ்ட்ரீட் பொறிவைத் தொடர்ந்து வந்த ஆரம்ப காலத்திலிருந்ததை விடவும் உலகளாவிய பொருளாதார நிலை மோசமாக உள்ளது. இது ஏனென்றால் கடந்த ஆறு ஆண்டுகளில் 80 சதவீத உலகளாவிய விரிவாக்கத்தை வழங்கிய எழுச்சிபெற்றுவரும் பொருளாதாரங்கள் என்றழைக்கப்படுபவை, இப்போது வேகமாக மெதுவாகி வருகின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சில வாரங்களில், சீன பொருளாதாரம் அப்போதும் 10 சதவிகிதத்திற்கு நெருக்கமான ஒரு விகிதத்தில் விரிவடைந்து கொண்டிருந்தது, இதற்காக $500 பில்லியன் ஊக்கப்பொதிக்கும், அத்துடன் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டத்திற்கு நிதியளிக்க ஒரு மிகப்பெரிய கடன் தொகை அதிகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட நிர்வாகங்களின் முடிவுக்கும் தான் நன்றி கூற வேண்டும். அந்த நாட்களும் முடிந்து விட்டன.

சீன வளர்ச்சி அதிகாரபூர்வ இலக்கான 7.5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிறது மற்றும், அந்நாடு ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கக் கூடும் என்ற பயத்திற்கு நடுவே நிதியியல் அதிகாரிகள் கடன் விஸ்தரிப்பை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

சீன வங்கிகளின் வாராக்கடன்கள் 2008இல் இருந்து அவற்றின் அதிகபட்ச அளவிற்கு அதிகரித்துள்ளன, கடந்த காலத்தில் வளர்ச்சி வீதங்களைத் தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றிய அந்நாட்டின் சொத்து வளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. திங்களன்று தேசிய புள்ளிவிவர ஆணையம் அது கண்காணித்து வரும் 70 நகரங்களில் 67இல், புதிய-வீட்டினது விலைகள் ஓராண்டுக்கு முந்தைய அவற்றின் உண்மையான விலையிலிருந்து வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்தது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், 2013இல் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, வீட்டு விற்பனைகள் 10 சதவீதம் குறைந்துள்ளன.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 2015இன் உத்தியோகபூர்வ வளர்ச்சி இலக்கை குறைக்க திட்டமிட்டு வருவதாக என்று ப்ளூம்பேர்க் வெளியிட்ட அறிக்கையுடன், சீன பொருளாதாரம் 1990க்கு பிந்தைய மிக குறைந்த வளர்ச்சியாக, இவ்வாண்டு 7.4 சதவீதம் அளவுக்கே விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பெரிய "எழுச்சிபெற்றுவரும் பொருளாதாரங்களிலும்" காட்சிகள் இதே மாதிரியாக உள்ளன அல்லது மோசமாக உள்ளன. பிரேசில் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒரு பின்னடைவை அனுபவித்தது, அத்துடன் இரண்டாம் பாதியில் தோற்றப்பாட்டளவில் வளர்ச்சி இருக்காதென எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் ஒன்பதாவது பெரிய பொருளாதாரமான ரஷ்ய பொருளாதாரம், எண்ணைய் விலையில் வேகமான வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா, ஐரோப்பாவினால் சுமத்தப்பட்ட தடைகள் ஆகியவற்றின் விளைவாக மந்தநிலையின் விளிம்பில் உள்ளது, அவை நிதியியல் அமைப்புமுறையில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்த அச்சுறுத்துகின்றன.

ஐரோப்பா மற்றும் ஜப்பானில், அத்துடன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஆளும் வட்டத்திலிருந்து வரும் உச்சரிப்புகளும் ஒரேமாதிரியாக உள்ளன: அதாவது, கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே ஆகும். இது பொருளாதார விரிவாக்கத்திற்கான ஒரு பாதை அல்ல, ஆனால் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் சமூக சூழ்நிலைகளின் மீது தாக்குதல்களை ஆழப்படுத்துவதற்கான குறியீட்டுச்சொற்களாகும்.

இந்த சொற்றொடர்கள் அமெரிக்காவில் அதிகமாக கேட்கவில்லை, ஏனென்றால் 2009இல் ஒபாமா நிர்வாகத்தின் வாகன தொழில்துறை சீரமைப்பதிலிருந்து ஆரம்பித்து புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை பாதியாக குறைப்பது வரையில், பெரும்பாலும் அது தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை ஏற்கனவே அந்த பொருளாதாரம் எங்கிலும் அமைத்துள்ளது, அதன் விளைவாக அமெரிக்கா மலிவு கூலி உற்பத்தி மையமாக எழுந்துள்ளது.

ஆழமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார உடைவின் மற்றுமொரு தீர்க்கமான விளைவும் அங்கே இருக்கிறது.

நிதியியல் ஸ்தம்பிப்பை ஒட்டி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட G20 உச்சி மாநாட்டில், ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார விரோதிகளை இரண்டாம் உலக போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற 1930களின் படிப்பினைகளிலிருந்து பாடங்களைப் பெறுவதன் அவசியம் குறித்த சூளுரைகள் நிரம்பி இருந்தன.

அத்தகைய வாக்குறுதிகள் ஒதுக்கித்தள்ளப்பட்டு நீண்ட காலமாகி விட்டன, மேலும் இந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த G20 உச்சிமாநாடு ரஷ்யாவை நோக்கிய விரோத மனோபாவத்துடன், அமெரிக்காவின் மிக பகிரங்கமான அச்சுறுத்தல்களால் குறிக்கப்பட்டிருந்தது. ஆசிய-பசிபிக்கில் அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க அது "இரத்தத்தையும் செல்வத்தையும்" செலவிட்டுள்ள அமெரிக்கா, தேவைப்பட்டால் போரின் மூலமாக சீனாவிற்கு எதிராக அதன் பொருளாதார மற்றும் இராணுவ தலைமையைத் தக்கவைக்க தீர்மானகரமாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கத்தினரிடம் இலாப நோக்கு அமைப்புமுறையின் நெருக்கடிக்கு எவ்வித பொருளாதார தீர்வும் இல்லை, ஒரு சமூக எதிர்புரட்சி வேலைத்திட்டமும் மற்றும் மனித நாகரிகத்தினது அழிவையே அச்சுறுத்தி வருகின்ற உலகப் போரும் மட்டுமே அதனிடம் தீர்வாக உள்ளது.

சிதைந்துவரும் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறியவும், மற்றும் மனிதயினத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக பொருளாதாரத்தை மறுநிர்மாணம் செய்யும் குறிக்கோளுடன் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதன் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிட்டு, விவகாரங்களை அதன் சொந்த கைகளில் எடுக்க வேண்டும்.