சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Hong Kong protests ebb

ஹாங்காங் போராட்டங்கள் வேகம் குறைகின்றன

By Peter Symonds
4 October 2014

Use this version to printSend feedback

போராட்ட தலைவர்கள் தலைமை நிர்வாகி லீயுங் சுன்-யிங்கின் இராஜினாமா கோரிக்கையைக் கிடப்பில் போட்டு, தலைமை செயலர் கேரி லாமுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அழைப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், வெளிப்படையான தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்து வந்த ஹாங்காங்கின் போராட்டங்கள் நேற்று நலிந்து போயின. பத்து ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்து வந்த ஒருவாரகால ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், போராட்ட இடங்களில் இருந்த கூட்டம் நூற்றுக் கணக்கில் அல்லது அதற்கு குறைவாக குறைந்து போனது.

எண்ணிக்கை குறைந்து போன நிலையில், அப்போராட்டங்கள் அரசாங்க-சார்பு குண்டர்களது தாக்குதலின் கீழ் வந்தது, அவர்கள் வியாபாரங்கள், வேலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்டிருந்த தொந்தரவுகளின் மீது உழைக்கும் மக்களிடையே அதிகரித்துவந்த வெறுப்பை ஆதாயமாக்கிக் கொண்டனர். பெரிய மோதல்கள் ஓர் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்-வர்க்க மாவட்டமும், அதன் இழிபெயர்பெற்ற நிழலுலக கும்பல்களுக்காக அறியப்படும் மோங் கொக் பகுதியில் நடந்தன.

முகமூடி அணிந்த குண்டர்கள் மீண்டும் மீண்டும் மாலை முழுவதும் பொலிஸ் எல்லைக்கோடுகளை உடைக்க முயன்று, அப்பகுதியின் போராட்டக்காரர்களை வெளியேற நிர்பந்தித்தனர். குறைந்தபட்சம் 19 பேர் கைது செய்யப்பட்டார்கள், “நிழலுலக பின்புலங்களைக்" கொண்டவர்களாக பொலிஸால் கூறப்படும் எட்டு பேரும் அதில் உள்ளடங்குவர். அந்த தாக்குதல்களுடன் எந்த தொடர்பும் இல்லையென பொலிஸ் மற்றும் அதிகாரிகள் மறுத்து வருகின்ற போதினும், அரசாங்கம் மற்றும் வியாபாரங்கள் கீழ்தரமான வேலைகளைச் செய்ய அந்த நிழலுலக கும்பல்களை பயன்படுத்தப்படுவது குறித்து ஹாங்காங் நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது.

அதேநேரத்தில், அந்த குண்டர்களால் அவ்வாறு நடந்து கொள்ள முடிந்ததென்றால் அதற்கு வெறுமனே போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தது மட்டுமே காரணமல்ல. கடந்த வார போராட்டங்களில் மேலாதிக்கம் செலுத்திய எந்தவொரு அமைப்பும்—மத்திய ஆக்கிரமிப்பு அமைப்பு, ஹாங்காங் மாணவர்கள் மற்றும் மேதமையின் கூட்டமைப்பு—தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துவரும் அடிப்படை சமூக பிரச்சினைகளை—அதாவது வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்துவரும் கூலிகள் மற்றும் ஒரு நீடித்த அத்தியாவசிய சேவைகள் இல்லாமை போன்றதைதீர்க்க எந்தவொரு அரசியல் முன்னோக்கும் கொண்டிருக்கவில்லை.

2017 தலைமை நிர்வாகி தேர்தலுக்கான அதன் திட்டங்களை பெய்ஜிங் திரும்ப பெற வேண்டும் என்ற முறையீட்டின் மீதே போராட்ட தலைவர்கள் குறுகிய விதத்தில் ஒருமுகப்பட்டிருந்தார்கள். முதல்முறையாக அனைவருக்கும் வாக்குரிமைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த போதினும், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் ஆகஸ்ட் மாத இறுதியில் வேட்பாளர் தேர்வு குழுவுக்கு விதிமுறைகளை வகுத்திருந்தது, அது நடைமுறையில் பெய்ஜிங்-ஆதரவு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிட அனுமதிப்பதை உறுதிப்படுத்தியது.

பெரிதும் மத்திதட்டு வர்க்க போராட்டக்காரர்கள் பலமாக இழுக்கப்பட்டிருந்த நிலையில், ஹாங்காங் அதிகாரிகள் நேற்று மாலை வன்முறை தாக்குதல்களுக்கு களம் அமைக்க, ஏற்பட்டிருந்த தொந்தரவுகளால் மக்கள் பொறுமையிழந்து போயிருந்ததைப் பயன்படுத்திக் கொண்டனர். பெய்ஜிங்-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு குழு, சீனாவின் அரசு ஊடகங்களில் தொடர்ந்து தம்பட்டமடிக்கப்படுவதையே பின்பற்றி, நேற்றி மதியம் ஒரு அறிக்கை வெளியிட்டது. "நகரத்தின் எதிர்காலம் குறித்து மாணவர்கள் கவலை கொண்டிருப்பதை நாங்கள் அறிகிறோம்... ஆனால் நிலைமை இப்போது தீவிரமாக இருக்கிறது, மேலும் குடிமக்களின் அன்றாட வாழ்க்கை, சமூக செயல்பாடுகள் மற்றும் அதன் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று அது அறிவித்தது.

நேற்றிரவின் குழப்பான காட்சிகளுக்கு இடையே, அரசியல் குழப்பங்களும், வெறுப்பும் வெளிப்படையாக இருந்தன. விக்டர் மா, ஓர் ஆசிரியர், ராய்டருக்குத் தெரிவித்தார்: “எங்களுக்கு அலுத்து போய்விட்டது, எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஹாங்காங் மக்களை பிணையாளிகளாக பிடித்து வைத்திருக்க முடியாது, ஏனென்றால் அது வேலைக்காகாது. அதனால் தான் இங்கிருக்கும் [மோங் கொக்] கூட்டம் மிகவும் கோபமாக இருக்கிறது." ஒரு டாக்சி ஓட்டுனர் சோ ஹூவோ ஜே Bloomberg Newsக்கு கூறுகையில், “இந்த இயக்கத்தில் நான் மாணவர்களின் சித்தாந்தத்தை ஆதரித்தேன் ஆனால் அவர்களின் அச்சுறுத்தும் தந்திரோபாயங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அந்த மாணவர்கள் அதிகமாக முறையிடுவதாக தெரிகிறது," என்றார்.

ஒரு உணவக உரிமையாளரான கிட் லியு ராய்டர்ஸிற்குக் கூறுகையில், அப்பெண்மணி அவர்களின் பொருளாதார பாதிப்புகளுக்கு இடையிலும் அந்த போராட்டங்களை ஆதரித்ததாக தெரிவித்தார்: “ஆம், அந்த சில நாட்களில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இந்த முறை நாம் பேசவில்லையானால் நிலைமை மோசமாக இன்னும் மோசமாக போகும். அது மாதிரியான ஒரு எதிர்காலத்தை பார்க்க நாங்கள் விரும்பவில்லை," என்று கூறியதுடன், “வெளிப்படையாக கூறுவதானால், இந்த புரட்சி எங்கே போகுமென்றே எனக்கு தெரியாது," என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

மோங் கொக், மற்றும் அதைவிட சற்றே அளவில் குறைந்திருந்த மற்றொரு இடமான காஸ்வே பேயின் வன்முறைக்கு, போராட்ட தலைவர்கள் காட்டிய விடையிறுப்பில் தெளிவான நோக்கங்கள் இல்லாதிருந்த நிலைமை பிரதிபலித்தது. “நிழலுலக குண்டர்களின் வன்முறை நடவடிக்கைக்கு" அரசாங்கமும் பொலிஸூம் கண்மூடி இருந்ததாக குற்றஞ்சாட்டி ஹாங்காங் மாணவர்கள் கூட்டமைப்பு நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியிட்டதுடன், தலைமை செயலர் லாமுடன் பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்தது.

எவ்வாறிருந்த போதினும் மாணவர் தலைவர்கள், பேச்சுவார்த்தைக்கு உடன்பட நாடுதழுவிய-ஜனநாயகவாதிகள் என்று அறியப்படும் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சி குழுக்களின் அழுத்தத்தின் கீழ் உள்ளன. தொழிற்கட்சி சட்டவல்லுனர் லீ செக்-யான் Bloomberg Newsக்கு, லாமுடன் பேச்சுவார்த்தை நடக்குமென அவர் நம்பியதாக தெரிவித்தார். “அங்கே பெரிய மத்தியஸ்த தளம் இருப்பதாக தெரியவில்லை என்பதால் அவர்களின் நிலைப்பாடு மிகவும் விலகி இருக்கிறது," என்றார். “ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது, ஏனென்றால் பேச்சுவார்த்தைகள் பதட்டங்களைத் தணிக்கும்."

பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கில் உள்ள அதன் பிரதிநிதிகளைப் போலவே, நாடுதழுவிய-ஜனநாயகவாதிகளும், போராட்டங்கள் நீண்டகாலத்திற்குத் தொடர்ந்தால், அவை கட்டுப்பாட்டை மீறிவிடக்கூடிய பெரிய ஆபத்திருப்பதாக அஞ்சுகிறார்கள். அவர்கள் ஹாங்காங் பெருநிறுவன மேற்தட்டின் அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், அவை அப்பிராந்தியத்தின் அரசியல் விவகாரங்களில் பெய்ஜிங்கின் அத்துமீறல், சீனாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் முதலீடுகளுக்கான ஒரு நிதியியல் மையமாக மற்றும் பிரதான நுழைவுவாயிலாக இருக்கும் ஹாங்காங்கினது நிலைமைக்குக் குழிபறிக்குமென அஞ்சுகிறார்கள். தொடக்கத்திலிருந்தே, நாடுதழுவிய-ஜனநாயகவாதிகள் அவர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அனுமதிக்கும் வகையில், 2017 தேர்தல் மீது பெய்ஜிங்குடன் ஒரு சமரசத்திற்கு வர முனைந்திருந்தனர்.

நாடுதழுவிய-ஜனநாயகவாதிகள் பலரின் மேற்கு-சார்பு நிலைநோக்கு மற்றும் உறவுகள் பெய்ஜிங்கிற்கு, அமெரிக்கா அதன் செல்வாக்கை ஹாங்காங்கில் அதிகரிக்க அந்த தேர்தலை சுரண்டுமோ அல்லது பிரதான சீன நிலப்பகுதியில் அரசியல் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட பயன்படுத்துமோ என, கவலையை உண்டாக்கி உள்ளது. மெதுவாகிவரும் பொருளாதார நிலைமைகளின் கீழ், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையில் அதிகரித்து வரும் சமூக துருவமுனைப்பாட்டால் எரியூட்டப்பட்டு, அதிகரிக்கும் சமூக பதட்டங்கள் குறித்து சீன அரசாங்கம் முற்றிலும் விழிப்புடன் இருக்கிறது.

ஹாங்காங் சம்பவங்களை ஒபாமா நிர்வாகம் மிகத் தெளிவாக உன்னிப்பாக கவனித்து வருகின்ற போதினும், அது அந்த போராட்டங்களுக்கு ஆதரவாக எந்த தலையீடும் செய்யவில்லை. நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் அமெரிக்க தூதரக ஜெனரல் ஃக்ளிப்போர்டு ஹார்ட், “தற்போதைய முட்டுச்சந்திலிருந்து வெளியேறுவதற்கு சிறந்த வழிவகையாக எனது அரசாங்கம் பேச்சுவார்த்தைகளையே பலமாக ஆதரிக்கிறது," என்று குறிப்பிட்டார். ஒபாமா அடுத்த மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவிருப்பதுடன், ஒரு மூத்த ஒபாமா நிர்வாக அதிகாரி நியூ யோர்க் டைம்ஸிற்கு நேற்று தெரிவிக்கையில், “நாங்கள் இதன் மத்தியில் அமெரிக்காவைத் திணிக்க பார்த்து வரவில்லை," என்றார்.

ஹாங்காங்கில் மோதல் தொடர்கிறது. ஆனால் கடந்த வார போராட்டங்களின் வேகத்திற்கு இல்லை, மாணவர் தலைவர்கள் எழுச்சியை லீயுங் நிர்வாகத்திடம் மற்றும் எதிர்கட்சியான நாடுதழுவிய-ஜனநாயகவாதிகளிடம் ஒப்படைத்து விட்டனர், அவர்களோ சந்தேகத்திற்கு இடமின்றி வரவிருக்கின்ற நாட்களில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர முனைவார்கள் மற்றும் 2017 தேர்தல் மீது ஓர் உடன்பாட்டை எட்ட முயல்வார்கள்.