சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India strengthens strategic ties with Vietnam

வியட்நாமுடன் மூலோபாய உறவுகளை இந்தியா பலப்படுத்துகிறது

By John Roberts
26 September 2014

Use this version to printSend feedback

செப்டம்பர் 17 அன்று ஒரு நான்கு நாள் வியட்நாம் பயணத்தை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிறைவு செய்தார். அது இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளுக்கு குறிப்பாக சீனாவுக்கு எதிராக மேடை அமைக்கிறது. செப்டம்பர் 18 அன்று சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக அந்த பயணம் அமைந்திருந்தது.  

இந்திய ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் மற்றும் வியட்நாம் எண்ணைய் மற்றும் எரிவாயு குழுவிற்கு இடையில் வியட்நாம் கடற்கரையில் இரண்டு கூடுதல் தொகுதிகள் எண்ணெய்த் துரப்பண ஆய்வுக்காக ஒரு விருப்ப கடிதம் உள்பட பயணத்தின் போது ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தென் சீன கடலில் போட்டி கடல் பகுதியில் முந்தைய இந்திய வியட்நாமிய கூட்டு செயல்பாடுகள் சீனாவுடன் கூர்மையான பதட்டங்களுக்கு வழிவகுத்தது.  

தெற்கு சீனக் கடலில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேவை குறித்து வியட்நாம் ஜனாதிபதி ரௌங்க் டான் சாங்க் உடன் இணைந்து முகர்ஜி ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார். அது சீனாவிற்கு எதிராக என்பது தெளிவாக இருந்தது. அந்த கடல் பகுதிக்கான வியட்நாமிய வார்த்தையான கிழக்கு கடல் என்பதையும் அது குறிப்பாக சேர்த்திருந்தது. மேலும் அந்த அறிக்கை "கப்பல் நடமாட்ட சுதந்திரத்திற்கு" இடையூறு செய்யக்கூடாது மற்றும் அனைத்து தரப்பினரும் "கட்டுப்பாட்டைச் செயற்படுத்தல்வேண்டும், அச்சுறுத்தல் அல்லது படைகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என ஒப்புக்கொண்டது. வாக்கியத்தில் உள்ள அனைத்து முக்கிய சொற்றொடர்களும் சீன "விரிவாக்கம்" குறித்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் குற்றச்சாட்டுக்களுடன் இயைந்ததாக உள்ளன

தென் சீனக் கடலில் உள்ள பிரச்சனைகள், மூன்றாம் தரப்பினர் தலையிடாமல், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியா அல்லது அமெரிக்கா இதில் ஈடுபடாமல் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறி பீஜிங் விடையிறுத்தது.

"வியட்நாமிற்கு (முகர்ஜியின்) வருகையை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.... நன்ஷா தீவுகள் மற்றும் அதைச் சார்ந்த கடல் பகுதிகள் மீது சீனா சர்ச்சைக்கு இடமில்லாத இறையாண்மையைக் கொண்டிருக்கிறது. எந்த எண்ணெய் துரப்பண ஒப்பந்தமும் சீனாவால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தை உள்ளடக்கி இருந்தால் சீனா அதை எதிர்க்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லெய் எச்சரித்திருக்கிறார்.

போருக்கான தயாரிப்பாய் இராணுவரீதியாக அதை சூழ்ந்து கொள்ளவும் பிராந்தியம் முழுவதும் இராஜாங்க ரீதியாக வலுவிழக்கச் செய்யவும் நோக்கங் கொண்டு ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பின்னணியில் முகர்ஜியின் விஜயம் இடம் பெற்றிருக்கிறது. அதை, கடல் வழியாக "நடமாடும் சுதந்திரத்தை" உறுதி செய்வதில் அது ஒரு "தேசிய அக்கறை" கொண்டிருக்கிறது என்று வலியுறுத்துவதன் மூலம் தென் சீன கடலில் பிராந்திய சச்சரவுகளில் வாஷிங்டன் நேரடியாக தலையிட்டிருக்கிறது. அத்துடன் தென் கிழக்கு ஆசிய நாடுகளை தீவிரமாக தங்கள் உரிமைகளை வலியுறுத்த ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறது.

முகர்ஜியின் பயணம் வியட்நாமுடன் நெருக்கமான அரசியல் மற்றும் மூலோபாய உறவுகளுக்கு மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. வியட்நாமிய அதிபருடன், பிரதம மந்திரி என்குயன் டான் டங், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் Nguyen Phu Trong மற்றும் ஹோ சி மின் நகர கட்சி தலைவர் லீ தான்க் ஹாய் (Le Thanh Hai) ஆகியோரையும் அவர் சந்தித்தார். அக்டோபர் மாதம் அவருடைய சரிநிகர் பொறுப்பில் உள்ள இந்திய தலைவரை சந்திக்க பிரதம மந்திரி டங்கிற்கு முகர்ஜி அழைப்பு விடுத்தார்.  

நரேந்திர மோடி தலைமையிலான புதிய வலதுசாரி இந்திய அரசாங்கம் கிழக்கு ஆசியாவில் குறிப்பாக ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கோடு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. கடந்த மாதம் அவருடைய வியட்நாம் பயணத்தின்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா அதன் நீண்ட கால நிலையான "கிழக்கு நோக்கிய பார்வைகொள்கையை "செயல்படும் கிழக்குகொள்கையாக இந்தியா மாற்ற விரும்புகிறது என்று அறிவித்தார்.

வியட்நாமுக்கு அதிநவீன பிரமோஸ் ஏவுகணை விற்பனைக்கான பேச்சுவார்த்தைகள் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு மேம்பட்ட நிலையை அடைந்திருப்பதாக இந்திய பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும் ரஷ்யாவால் கூட்டாக தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையை கையகப்படுத்த வியட்நாம் 2011-க்குப் பின்னர் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறது. அவருடைய பயணத்தின்போது ஹனோய்க்கு 100 மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு ஏற்றுமதி கடனை முகர்ஜி விரிவுபடுத்தினார், அது பிரமோஸ் ஏவுகணை விற்பனையையும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடும்

ஹனோய்க்கு அதிநவீன ஏவுகணையின் கப்பல் எதிர்ப்பு வடிவம் தேவைப்படுகிறது, இது 290 கிலோமீட்டர்கள் சென்று தாக்கும் திறன் கொண்டது. மற்ற கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் போல் இல்லாமல், அதன் இறுதிக் கட்டத்தில் ஒலியை விட 2.9 மடங்கு வேகத்தை அடைந்து இதை இடைமறிப்பதற்கு கடினமாக்கி ஒலியை விட வேகமாக செல்லக்கூடியது. அதன் முகப்பில் இருக்கும் 200 கிலோகிராம் எடையுள்ள ஆயுதத்தால் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்டு. 

தென் சீன கடலில் சீனாவிற்கு சவால்விட வியட்நாம் தன்னுடைய வலிமையை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறது. ரஷ்யாவிலிருந்து six Kilo வகை நீர்மூழ்கி கப்பல்களையும் வாங்குகிறது. நாட்டின் சந்தை ஆதரவு திட்டத்தை வேகப்படுத்தவும் வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் நெருக்கமான பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் "சீனாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியே" வரவும் வியட்நாமிய தலைமையின் ஒரு பிரிவு வற்புறுத்துகிறது.

ஹனோய்க்கு ஆயுதங்கள் விற்பது மீதான தசாப்த கால ஆயுத தடையை விலக்கிக்கொள்ள வாஷிங்டன் ஆயத்தமாக இருக்கலாம் என்று கடந்த மாதம் அமெரிக்க கூட்டு படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சி ஒரு வியட்நாம் பயணத்தின்போது பரிந்துரைத்தார்

மே 2-லிருந்து ஜூலை 16 வரை சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் ஒரு சீன எண்ணெய் கிணற்றை நிறுவுவதில் சீனா மற்றும் வியட்நாமுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இத்தகைய நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன. எண்ணெய் கிணற்றுக்கு அருகே சீன மற்றும் வியட்நாமிய கப்பல் பணியாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். சீனாவிற்கு எதிரான கலவரத்தில் வியட்நாமில் நான்கு சீனர்கள் கொல்லப்பட்டனர், 400 சீன தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன மேலும் 7,000 சீன தொழிலாளர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.    

இந்த சச்சரவு உறவுகளை மோசமாக சீர்குலைத்தது. கடந்த வருடம் அக்டோபரில், சீன பிரதமர் லி கெக்கியாங் ஹனோய்க்கு பயணம் மேற்கொண்டார் அத்துடன் டான்கின் வளைகுடாவின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இயற்கை வளங்களை கூட்டு ஆராய்ச்சி செய்ய பீஜிங்குடன் ஒரு புது வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

வாஷிங்டன் இந்த நிலைமையை தெளிவாக சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. அத்துடன் தென் கிழக்கு ஆசியாவில் ஒரு மூலோபாய பங்காற்ற இந்தியாவை ஊக்கப்படுத்துகிறது. கடந்த வருட ஆரம்பத்தில், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வலிமைமிக்கதாக சந்திக்கிறது, அதற்கு இந்தியா தருவதற்கு நிறைய இருக்கிறது அதேபோல் ஆதாயம் பெறுவதற்கும் நிறைய இருக்கிறது" என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு  ஆலோசகர் தோமஸ் டோனிலன் குறிப்பிட்டார்.

ஒரு அமெரிக்க-இந்திய "உலகளாவிய மூலோபாய கூட்டை" அபிவிருத்தி செய்ய 2012 பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக தொடக்கத்திற்கு புத்துயிரூட்ட, ஆகஸ்டில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹெகலின் ஒரு மூன்று நாள் இந்திய விஜயம் வாய்ப்பளித்தது. இந்திய பிரதம மந்திரி மோடி, இந்த மாதம் அவரின் டோக்கியோ பயணத்தின் போது சீன "விஸ்தரிப்பு கொள்கையின்மீது ஒரு மறைமுக தாக்குதலை வெளியிட்டார். அமெரிக்க மூலோபாய வடிவமைப்பில் வெளிப்படையாக இந்தியா ஒரு விருப்பமுடைய கூட்டாளியாக இருக்கிறது.