சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wealth of richest 400 Americans surges to $2.29 trillion

மிகப்பெரிய 400 அமெரிக்க பணக்காரர்களின் செல்வவளம் 2.29 ட்ரில்லியன் டாலராக உயர்கிறது

By Andre Damon
6 October 2014

Use this version to printSend feedback

பங்குச்சந்தை உயர்வு மற்றும் சாதனையளவிற்கான பெருநிறுவன இலாபங்களினூடாக, அமெரிக்காவின் மிகப்பெரிய 400 செல்வந்தர்கள் அவர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பில் பதிமூன்று சதவீத உயர்வுடன் இந்த ஆண்டு 2.29 ட்ரில்லியன் டாலரைக் கொண்டிருக்கின்றனர். இந்த புள்ளிவிபரங்கள், American business magazine இனால் 1982இல் இருந்து அதே தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தொகுத்தளிக்கப்படும், மிகப்பெரிய அமெரிக்க செல்வந்தர்களின் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் இருந்து வருகிறது.  

கடந்த வாரம் ஃபோர்ப்ஸ் (Forbes) குறிப்பிட்டதைப் போல, இந்த 400 தனிநபர்களின் நிகர மதிப்பு, “200 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான பிரேசிலின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாழ அதேயளவுக்கு" இருக்கிறது. ஃபோர்ப்ஸ் 400 பட்டியலின் சராசரி நிகர மதிப்பு கடந்த ஆண்டு 700 மில்லியன் டாலர் உயர்ந்து, $5.7 பில்லியனை எட்டியது.    

அமெரிக்காவில் செல்வவளம் குறித்த இந்த புதிய புள்ளிவிபரங்கள், ஊடகங்களில் பொதுவாக இருட்டடிப்பு செய்யப்பட்டன. நியூ யோர்க் டைம்ஸோ அல்லது வோல் ஸ்ட்ரீட் ஜெர்னலோ ஒரு கட்டுரையும் பிரசுரிக்கவில்லை. அல்லது இடைத்தேர்தல்களுக்கு ஒரு மாதமே இருக்கின்ற நிலையில், அது அரசியல் பிரச்சாரத்திலும் ஒரு முக்கிய விடயமாக இருக்கவில்லை. பெருவியாபார கட்சிகளோ, அடிப்படை சமூக சேவைகளுக்கு அங்கே பணமில்லை என்ற ஓயாத வாதங்களோடு, அமெரிக்காவின் அசாதாரண இந்த சமூக சமத்துவமின்மையின் மட்டங்களைக் கவனிக்குமாறு அழைப்புவிடுக்க ஆர்வமின்றி உள்ளன.   

2008இன் அவசரகால பொருளாதார ஸ்திரப்படுத்தல் சட்டம் கையெழுத்தான ஆறாவது ஆண்டுதினத்தைக் கடந்தவாரம் குறித்தது, அச்சட்டம் 700 பில்லியன் டாலர் மதிப்பில் பிரச்சினைக்குரிய சொத்துக்களுக்கான நிவாரண திட்டத்தை (Troubled Asset Relief Program - TARP) ஸ்தாபித்தது. இது வங்கி பிணையெடுப்பு என நன்கு அறியப்பட்டதாகும். அப்போதிருந்து, சமூகத்தின் மிகப்பணக்கார பிரிவுகளின் செல்வவளம் பிரமாண்டமாக உயர்ந்துள்ளது, அதேவேளையில் சாதாரண குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஐந்து சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.  

2009இல் இருந்து, ஃபோர்ப்ஸ் 400இன் ஒட்டுமொத்த நிகர மதிப்பு, 1.27 ட்ரில்லியன் டாலரில் இருந்து இரண்டு மடங்குக்கு அண்மித்தளவில் இரட்டிப்பாகி உள்ளது. சமூக சமத்துவமின்மையின் வெடிப்பார்ந்த அதிகரிப்பானது, 2008 நிதியியல் கரைவுக்குப் பின்னர் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளின் ஒரு நேரடி மற்றும் திட்டமிட்ட விளைபொருளாகும். ஊதியங்கள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலுடன் சேர்ந்து, அவை வட்டிகுறைந்த பணத்தை நிதியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்சி இருந்தன.

அமெரிக்காவின் மிகப்பெரிய-பணக்காரர்களின் செல்வசெழிப்பை, ஃபோர்ப்ஸ் 400இன் தனிப்பட்ட உறுப்பினரது புள்ளிவிபரங்களே நிரூபிக்கிறது.  

* மைக்ரோசாப்ட்டின் இணை-ஸ்தாபகரும் 21 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவரும் அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ், ஒரே ஆண்டில் அவரது செல்வவளத்தில் 9 பில்லியன் டாலர் உயர்வுடன், 81 பில்லியன் டாலரைக் கொண்டிருக்கிறார். கேட்ஸின் செல்வவளமை கடந்த ஐந்து ஆண்டுகளில் மலைப்பூட்டும் அளவுக்கு 31 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையை சரியான கணக்கெடுப்பில் முன்வைத்தால், 2009இல் இருந்து கேட்ஸினது செல்வவளமை, தற்போது திவாலாகி நிற்கும் டெட்ராய்டு நகர ஆண்டு வரவுசெலவு கணக்கை விட சுமார் 30 மடங்கு அதிகரித்துள்ளது.     

* அந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள முதலீட்டாளர் வாரன் பஃபே, ஓர் ஆண்டில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்து, 68.2 பில்லியன் டாலர் செல்வவளத்தைக் கொண்டிருக்கிறார். பஃபேயின் செல்வவளம் 2009இல் இருந்து சுமார் 30 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

* அந்த பட்டியலில் மூன்றாவதாக இருக்கும் ஓரக்கெலின் தலைமை செயலதிகாரி லாரி எல்லிசன், 2009இல் 27 பில்லியன் டாலராக இருந்ததிலிருந்து இந்த ஆண்டு 48.7 பில்லியன் டாலராக இரண்டு மடங்கிற்கு அண்மித்தளவில் அவரது செல்வவள உயர்வைக் கண்டார்.

* தற்போது 34.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கும் பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க், 2009இல் இருந்து அவரது செல்வவளத்தில் பதினேழு மடங்கு அதிகரிப்பைக் கொண்டிருந்தார். மேலும் கடந்த ஆண்டில் 15 பில்லியன் டாலர் அளவுக்கு அவரது செல்வவளம் அதிகரித்திருந்தது

ஃபோர்ப்ஸ் 400 பட்டிலியலில் இருந்த உறுப்பினர்கள் சிலர் 2009இல் பில்லியனராக இருக்கவில்லை. இப்போது, பட்டியலில் நுழைவுவதற்கான சொத்தினளவு 1.55 பில்லியன் டாலராகும், மேலும் அமெரிக்காவில் இருந்த 113 பில்லியனர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் நிதியியல் துறையே மேலாதிக்கம் செலுத்துகிறது. வாஷிங்டன் போஸ்ட் தகவலின்படி, 1982இல் முதன்முதலாக ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் நிதி மற்றும் நிலம்-கட்டிடம் விற்பனைத்துறை 4.4 சதவீதமாக இருந்தது, இந்த துறை இப்போதோ 21 சதவீதமாக உள்ளது. தனியார் முதலீட்டு நிதியங்களிலிருந்து (hedge funds) தங்கள் செல்வத்தை சேர்த்த தனிநபர்கள் இப்பட்டியலில் 7.8 சதவீதமும், தனியார் பங்கு வியாபாரத்தைச் (private equity) சேர்ந்தவர்கள் 6.3 சதவீதமும், பண நிர்வாகத்தைச் (money management) சேர்ந்தவர்கள் 5.3 சதவீதமும் இதில் இடம் பிடித்துள்ளனர்

முதலாளித்துவம் ஓர் உயர்-அபாய, உயர்-பணய விளையாட்டாக உத்தியோகப்பூர்வமாக சித்தரிக்கப்படுவதற்கு இடையில், மிகப்பெரிய பணக்காரர்களின் செல்வம் உயர்ந்து கொண்டே செல்வதை தவிர வேறெங்கும் செல்லவில்லை என்பதை அது குறிப்பிடத்தக்க வகையில் நிரூபித்தது. இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் 400இல் வெறும் முப்பத்தி-ஆறு உறுப்பினர்கள், அதாவது பத்தில் ஒருவருக்கும் குறைவாக, கடந்த ஆண்டை விட பணத்தை இழந்திருந்தனர். நான்கில் மூவர் அவர்களின் செல்வவளத்தில் உயர்வைக் கண்டிருந்தார்கள்

ஒரு சான்றாக, உல்லாசபயணக்கப்பல் நிறுவனம் கார்னிவல் கார்பரேஷனின் முன்னாள் தலைமை செயலதிகாரி, பில்லியனர் மிக்கி அரிசானின் நிகர மதிப்பு உண்மையில் சுருங்கி இருந்தது. ஃபோர்ப்ஸ் தகவலின்படி, அந்நிறுவனத்தின் சமீபத்திய வரலாறு, “ஜனவரி 2012இல் இத்தாலி கடலில் 32 பேர் கொல்லப்பட்ட கொஸ்டா கொன்கோர்டியாவின் மோசமான விபத்து, அதைத் தொடர்ந்து பயணிகள் குடிநீர் பற்றாக்குறையோடு, கழிவறையை அணுக முடியாமல் ஐந்து நாட்கள் விடப்பட்ட, பெப்ரவரி 2013இல் கார்னிவல் டிரம்ப் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து" உட்பட "மக்கள் தொடர்பு பிரச்சினைகளால் நிரம்பி இருந்தது."    

இந்த தொடர்ச்சியான பேரிடர்கள் இருந்தும் கூட, அரிசான் கடந்த ஆண்டின் அவரது செல்வவளத்திலிருந்து வெறும் 2 சதவீதத்தை இழந்து, 6.5 பில்லியன் டாலரை கொண்டிருந்தார்.

ஃபோர்ப்ஸ் 400 வெளியிடப்பட்டதற்குப் பின்னர் உடனடியாக, பொருளாதார கூட்டுறவிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது. அது 1870கள் மற்றும் 1820களுக்குப் பின்னர் மிக உயர்ந்த மட்டத்தை எட்டிய, உலகளாவிய சமூக சமத்துவமின்மை 1920களின் பெருமந்தநிலைமைக்கு முந்தைய மட்டத்தையும் விஞ்சியுள்ளது என்ற முடிவிற்கு வந்தது.   

அந்த அறிக்கை குறிப்பிட்டது, “பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவற்றை பின்தொடரும் நாடுகளில் வருவாய் சமத்துவமின்மை U-வடிவம் எடுத்தது. அது 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 1970கள் வரையிலான காலத்திற்கு இடையே வீழ்ச்சியடைந்தது, பின்னர் உயர்ந்தது. கிழக்கு ஐரோப்பாவில், கம்யூனிசம் வருவாய் சமத்துவமின்மையை பலமாக குறைத்திருந்தது, அதன்பின்னர் 1980களில் அதன் உடைவுக்குப் பின்னர் கூர்மையாக உயர்ந்தது. உலகின் ஏனைய பாகங்களில் (குறிப்பாக சீனாவில்) வருவாய் சமத்துவமின்மை சமீபத்தில் அதிகரித்துள்ளது," என்றது

எவ்வாறிருந்த போதினும், கடந்த பதினான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பாரிய சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பை அந்த ஆய்வு உள்ளடக்கி இருக்கவில்லை. அந்த மாற்றங்களையும் கணக்கில் எடுத்தால், சமீபத்திய உலகளாவிய சமூக சமத்துவமின்மையின் அளவு அனேகமாக நவீன உலக வரலாற்றில் மிக உயர்ந்த அளவினதாக  இருக்கக்கூடும்.