சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

ISIS gains provide further pretext for US ground troops in Iraq and Syria

ISISஇன் வெற்றிகள் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க தரைப்படை துருப்புகளுக்காக கூடுதல் போலிக்காரணத்தை வழங்குகின்றன

By Mike Head
7 October 2014

Use this version to printSend feedback

அமெரிக்க-தலைமையில் சுமார் 350க்கு நெருக்கமான கடந்த மூன்று வாரகால விமான தாக்குதல்களால் கூட ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) போராளிகள் குழுக்கள் முன்னேறி வருவதைத் தடுக்க முடியவில்லை என்ற செய்திகளுக்கு இடையே, அங்கே அப்பிராந்தியத்தில் அமெரிக்க தரைப்படைகளின் பிரசன்னத்தைத் தீவிரப்படுத்துவதற்கான நியாயப்பாடுகள் தயாரிக்கப்பட்டு, திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளன.

ஈராக்கில் உள்ள ISIS நிலைப்பாடுகள் மீதான தாக்குதல்களில், தாழ்வாக பறக்கும் அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இணைந்துள்ளன. இது இராணுவ தலையீட்டில் ஒரு பிரதான மாற்றத்தைக் குறிப்பதுடன், முழு அளவில் அம்மண்ணில் துருப்புகளை ஈடுபடுத்துவதற்கான" சாத்தியப்பாடுகளை நெருக்கமாக கொண்டு வருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவிற்குள் "போரிடும் துருப்புகளை" அனுப்ப எந்த நோக்கமும் இல்லை என்ற ஜனாதிபதி ஒபாமாவின் அனைத்து மறுப்புரைகளைப் பொறுத்தவரையில், ISIS, அதுவே ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் முந்தைய அமெரிக்க தலையீடுகளின் உருவாக்கமாக இருக்கின்ற நிலையில், சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை வெளியேற்ற அமெரிக்க தலைமையிலான ஒரு புதுப்பிக்கப்பட்ட தலையீட்டுக்கு ஒரு போலிக்காரணத்தை வழங்கியுள்ளது என்ற உண்மையையே சமீபத்திய அபிவிருத்திகள் அடிகோடிடுகின்றன.

வடக்கு சிரியாவிலிருந்து வரும் ஊடக செய்திகள், துருக்கியின் எல்லையோர நகரமான அன் அல்-அராப் என்றறியப்படும் கோபானியை ISIS கட்டுப்பாட்டில் எடுக்க நெருங்கிவிட்டதாக குறிப்பிட்டன, அந்நகரம் கடந்த மூன்று வாரங்களாக ISISஆல் முற்றுகையிடப்பட்டுள்ளது. குர்திஷ் போராளிகள் குழுக்களுடன் வீதிக்குவீதி சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது, இதனால் மொத்த பொதுமக்களும் வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் விமான தாக்குதல்கள் ISIS முன்னேறி வருவதைத் தடுப்பதில் தோல்வியடைந்துவிட்டது. ISIS அந்நகரை மூன்று தரப்பிலிருந்தும் முற்றுகை இட்டிருப்பதுடன், கனரக படைத்தளவாடங்களுடன் அதை கடுமையாக தாக்கியது. ISIS கோபானியைச் சுற்றிய பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது, இதனால் சுமார் 186,000 அகதிகள் அருகிலுள்ள துருக்கிக்குள் துரத்தப்பட்டனர்.

ISIS கோபானியைக் கைப்பற்றினால், அது வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் மோசூல் மற்றும் திக்ரிட் நகரங்கள் உட்பட கணிசமான பகுதிகளுடன் சேர்ந்து, ரக்கா மற்றும் டெர் அல்-ஜோர்க்கு கீழே 300 கிலோமீட்டருக்கு, துருக்கிய-சிரிய எல்லையோரத்தில் ஒரு நீண்ட நிலப்பரப்பின் கட்டுப்பாட்டைப் பெறும்.

தலையீட்டுக்கு தயாரிப்பாக, துருக்கி திங்களன்று கோபானி பகுதிக்கருகில் அதன் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து, அதன் சாலைகளை அடைத்ததோடு, அந்த எல்லையைக் கண்காணிக்கும் வகையில் ஒரு மலையின் மீது நீண்டவரிசையில் டாங்கிகளை நிலைநிறுத்தியது. ISISக்கு எதிரான சண்டையில் இணைய அனுமதிக்க கோரிய குர்திஷ் போராட்டக்காரர்களையும் துருக்கிய துருப்புகள் ஒடுக்கின, கண்ணீர் புகைகள் மற்றும் நீர்பீச்சிகளைச் சரமாரியாக பயன்படுத்தி எந்தவித கூட்டம் கூடுவதையும் கலைத்தது.

பாக்தாத்திலிருந்து வெறும் சுமார் 40 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அபு க்ஹ்ராப் ISISஇன் கைகளில் இருப்பதாகவும், அது தலைநகரை, குறிப்பாக அதன் சர்வதேச விமானநிலையத்தை, ISISஇன் பீரங்கிப்படை வீச்செல்லைக்குள் கொண்டு வருவதாகவும் அறிவித்து, ஏனைய ஊடக நிறுவனங்கள் அமெரிக்க தரைப்படை தலையீட்டுக்கு அழைப்புவிடுப்பதை எரியூட்டின. ISIS சனியன்று ஈராக்கின் மேற்கத்திய அன்பார் மாகாண தலைநகருக்கு அருகிலிருந்த மற்றொரு நகரமான குபைசாவை முற்றுகையிட்டதுடன், அம்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் தொடர்ந்து முன்னேறியது.

மத்திய கிழக்கின் அமெரிக்க படைகளுக்கு பொறுப்பேற்றிருக்கும் அமெரிக்க மத்திய படைப்பிரிவு நேற்று அறிவிக்கையில், அது முதல்முறையாக ISISக்கு எதிராக அப்பாச்சி ஹெலிகாப்டர்களைப் பறக்கவிட்டு வருவதாகவும், அவ்விதத்தில் தரைப்படை தாக்குதலின் பெரும் அபாயத்திற்கு அமெரிக்க துருப்புகள் உட்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. ஒரு செய்தி தொடர்பாளரின் கருத்துப்படி, அந்த ஹெலிகாப்டர்கள் ஃபல்லூஜாஹ்விற்கு அருகில் உள்ள சிறுபீரங்கி படைப்பிரிவுகளையும் மற்றும் ஏனைய படைப்பிரிவுகளையும் தாக்கியது.

யுத்த ஆய்வு பயிலகம் (Institute for the Study of War) எனும் சிந்தனைகூடத்தில் தற்போது ஒரு பகுப்பாய்வாளராக இருக்கும் கடற்படைச் சேர்ந்த ஒரு முன்னாள் விமானி கிறிஸ்டோபர் ஹார்மர் ராய்டருக்குக் கூறுகையில், அமெரிக்க துருப்புகள் ஈடுபட்டுவரும் அபாய மட்டங்களில் இதுவொரு குறிப்பிடத்தக்க தீவிரப்பாடாகும் என்றார். “நீங்கள் தரைமட்டத்திற்கு மேலே 150 அடியில் (50 மீட்டர்) ஒரு ஹெலிகாப்டரைப் பறக்கவிடும் போது, அதை ஒரு ராக்கெட் குண்டுவீச்சு மூலமாகவோ அல்லது ஒரு கனரக எந்திர துப்பாக்கியைக் கொண்டோ சுட்டு வீழ்த்த முடியும்," என ஹார்மர் குறிப்பிட்டார்.

அதுபோன்ற எந்தவித இழப்புகளும், மற்றும் குறிப்பாக ஹெலிகாப்டர் ஓட்டும் உறுப்பினர்கள் ISISஇன் கரங்களில் சிக்கினால், அது அமெரிக்க தரைப்படைகளை நிலைநிறுத்த மேற்கொண்டும் முறையீடுகளைத் தூண்டிவிடும்.

மற்றொரு அச்சுறுத்தும் அபிவிருத்தியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் இவ்வாறு அறிவித்தார்: சிரிய மோதலில் துருக்கி ஈடுபட்டால், அமெரிக்க-செல்வாக்கில் இருக்கும் அவ்அமைப்பு துருக்கிக்கு உதவ தயாராக இருக்கிறது என்றார். “சிரியாவில் நாம் வன்முறையின் விளைவுகளைப் பார்த்து வருகின்ற நிலையில், அங்கே துருக்கியின் மீது ஏதேனும் தெறிந்து பரவினாலும் சரி அல்லது தாக்குதல்கள் இருந்தாலும் சரி, நேட்டோ அங்கே அதற்காக இருக்கிறது என்பது துருக்கியர்களுக்குத் தெரியும்," என்றார்.

ஸ்டொல்டென்பேர்க் போலாந்திலிருந்து பேசுகையில், அனைத்து நேச நாடுகளையும் பாதுகாப்பதே நேட்டோவின் பிரதான பொறுப்புறுதியாகும், இந்த காரணத்திற்காக இந்த இராணுவ கூட்டணி துருக்கியில் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுவியுள்ளது என்றார். ISIS மற்றும் ரஷ்யாவை அக்கூட்டணிக்கு "அச்சுறுத்தலாக" காட்டும் வகையில், நேட்டோ அதன் தெற்கு எல்லையிலும் மற்றும் அதன் கிழக்கு பக்கவாட்டிலும், "சவால்களை" முகங்கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அசாத்தை பதவியிலிருந்து இறக்கும் ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் பாகமாக அது (துருக்கி) உள்ளே கொண்டு வரப்பட்டால், அவரது நாடு சிரியாவிற்குள் துருப்புகளை அனுப்ப விருப்பப்படுவதாக துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவுடோக் அறிவித்த போது, இந்த சம்பவங்களின் உள்நோக்கம் இன்னும் தெளிவாக வெளிப்பட்டது. “ISISக்குப் பின்னர், எங்கள் எல்லை பாதுகாக்கப்படுமென எங்களுக்கு உறுதியளிக்கும் ஒரு தெளிவான மூலோபாயம் இருந்தால், நாங்கள் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம்," அவர் திங்களன்று ஒளிபரப்பான ஒரு நேர்காணலில் CNNஇன் கிறிஸ்டியான் அமன்பௌருக்குத் தெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளில், தற்போதைய ஜனாதிபதி ரெசிப் தாயெப் எர்டோகனின் தலைமையில் துருக்கிய அரசாங்கம், அசாத்திற்கு எதிரான உள்நாட்டு போரைத் தொடங்கிய, ISIS உட்பட இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு நிதியுதவி செய்வதில் மற்றும் ஆயுத உதவிகள் செய்வதில், வாஷிங்டனுடன் சேர்ந்து, பலமாக ஈடுபட்டு வந்துள்ளது. சிரியா மீது குண்டுவீசும் திட்டங்களை ஒத்தி வைத்ததற்காக அது கடந்த ஆண்டு அமெரிக்காவை விமர்சித்திருந்தது.

சிரியாவில் வெற்றிக்கு போதுமானளவுக்கு அமெரிக்க விமான தாக்குதல்கள் அவசியப்படுவதாக அமன்மௌருக்குத் தெரிவித்த தாவுடோக், அசாத் நீக்கப்படும் வரையில் எதையுமே தீர்க்க முடியாது என்று வலியுறுத்தினார். “ISIS போனால், அடுத்து மற்றொரு தீவிர அமைப்பு வரக்கூடும்," அவர் தெரிவித்தார். “ஆகவே எதிர்காலத்தில் அனைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் இல்லாதொழிக்க, மற்றும் ஆட்சிகளால் நடத்தப்படும் மனிதநேயத்திற்கு எதிரான எல்லா காட்டுமிராண்டித்தனமான குற்றங்களையும் இல்லாதொழிக்க ... நமது அணுகுமுறை பரந்த, உள்ளார்ந்த, மூலோபாரீதியில் மற்றும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்," என்றார்.

வாஷிங்டன் அசாத்திற்கு எதிராக நகரத் தவறுவதை, ISIS சாதகமாக்கி கொண்டிருப்பதாக துருக்கிய பிரதம மந்திரி வலியுறுத்தினார். சிரியாவில் மிதமான எதிர்ப்பு என்றழைக்கப்படுவதை "அனைத்து வழிவகையிலும்" துருக்கி ஆதரிக்குமென்று தாவுடோக் அழுத்தந்திருத்தமாய் தெரிவித்தார். ஈரான் மற்றும் ரஷ்யாவால் ஆதரிக்கப்படும் அசாத் அரசாங்கத்தை நீக்க, ஈராக் மற்றும் சிரியா யுத்தத்திற்காக அமெரிக்காவால் சேர்த்துக் கட்டப்பட்ட புதிய "விருப்ப கூட்டணி" என்று கூறப்படுவதன் நிஜமான உந்துகையை, அவரது கருத்துக்கள் அடிக்கோடிடுகின்றன.

சிரியாவில் தீவிரத்தன்மை அதிகரித்து வருவது குறித்து துருக்கி மேற்கை "பல தடவை" எச்சரித்திருந்ததாக தாவுடோக் தெரிவித்தார். அவரது கருத்துக்கள், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோய் பேடன் கடந்த வாரம் ISIS, அல்-நுஸ்ரா மற்றும் ஏனைய அல் கொய்தா-இணைப்பு கொண்ட உட்கூறுகள் போன்ற சிரியாவில் உள்ள ஜிஹாதிஸ்ட் குழுக்களுக்கு துருக்கி நிதியுதவி வழங்குகிறது மற்றும் ஆயுதமளிக்கிறது என குற்றஞ்சாட்டி, அவரால் வழங்கப்பட்ட தர்மசங்கடமான ஒப்புதலை மழுப்புவதை நோக்கியும் திரும்பி இருந்தது.

அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகள், குறிப்பாக துருக்கி, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை, சிரிய அரசாங்கத்தை எதிர்த்து சண்டையிட்டுவரும் ஏனைய போராளிகள் குழுக்களுக்கும் மற்றும் ISISக்கும் மில்லியன் கணக்கான டாலர்களையும் ஆயுதங்களையும் வாரிவழங்கின, பின்னர் ஈராக்கில் அங்கே அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியைக் கவிழ்த்துவிடும் அச்சுறுத்தலுடன் ISISஇன் ஆக்கிரமிப்புகள் பரவியதும் தான் அதற்கு எதிராக திரும்பின, என்பதே உண்மையாகும்.

இப்போதும் கூட, ISIS முன்னேறுவதை அமெரிக்கா தடுக்க முனைகின்ற போதினும், அது அல்-நுஸ்ரா மற்றும் ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுடன் பகிரங்கமாக அணிசேர்ந்துள்ள சிரியாவிற்குள் இருக்கும் "மிதமான" சக்திகளை ஊக்குவித்து வருகிறது மற்றும் ஆயுத உதவிகள் செய்து வருகிறது. இதில் சுதந்திர சிரிய இராணுவம் என்றழைக்கப்படுவதும் உள்ளடங்கும், அது இஸ்லாமிய கன்னைகளுடன் வெளிப்படையான தொடர்புகள் வைத்துள்ளது. ஊடக செய்திகளின்படி, வாஷிங்டன் 5,000 பேர் கொண்ட ஒரு பலமான அசாத்-விரோத இராணுவத்தை உருவாக்க முனைந்துள்ள நிலையில், அது இத்தகைய பினாமி சக்திகளில் எதற்கு பயிற்சி அளிக்க வேண்டும், ஆயுதமேந்த செய்ய வேண்டும் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டுமென இன்னமும் முடிவெடுக்க முயன்று வருகிறது.

"ISISக்கு எதிரான யுத்தத்திற்குப்" பின்னால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இலக்காக இருப்பது சிரியாவினது அரசாங்கமாகும். அதனால் தான் ISISஐ பேணி வளர்த்த அதே துருக்கியும் மற்றும் ஏனைய நாடுகளும் இப்போது ISISக்கு எதிரான யுத்த நடவடிக்கையை ஆதரித்து வருகின்றன. ஒட்டுமொத்த எண்ணெய்-வளம்மிகுந்த மற்றும் புவிசார்-மூலோபாயரீதியில் முக்கியமான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் மீது மேலாதிக்கம் கொள்வதே வாஷிங்டனின் மூலோபாய இலக்காக இருக்கிறது.