சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP anti-war campaign receives support among workers

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் போர் எதிர்ப்பு பிரச்சாரம் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு பெறுகிறது

By our reporters
11 October 2014

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவ கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பினதும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கம்பஹா மற்றும் ஹட்டனில் கட்சி ஏற்பாடு செய்துள்ள போர் எதிர்ப்பு கூட்டங்களுக்காக கடந்த பல நாட்களாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்,” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்மானமானத்தினதும், மற்றும் அக்டோபர் 12 ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு விடுத்த அழைப்பினதும் ஆயிரக்கணக்கான பிரதிகளை பிரச்சாரக் குழுவினர் விநியோகித்தனர்.

ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியானது அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் போர் உந்துதலைத் தூண்டிவிட்டுள்ளது என்று பிரச்சாரக் குழுவினர் விளக்கியபோது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் கவனமாக செவிமடுத்தனர். பலர், தாம் முதல் முறையாக ஒரு புதிய உலக யுத்த ஆபத்தை பற்றி கேள்விப்படுவதாகக் கூறினர். உலக நிலைமை நாட்டைப் பாதிக்காது என்று கூறி, இலங்கை அரசியல் மற்றும் செய்தி ஊடகங்கள் மக்களை இருட்டுக்குள் வைத்திருக்கின்றன.

உலக பொருளாதார தேக்கம் இலங்கையில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். பிரதான உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் சேர்ந்து, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் வேலைகள், ஊதியங்கள், விலை மானியங்கள் மற்றும் அடிப்படை சமூக சேவைகள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹட்டன்

தீவின் மத்திய மலையக பிரதேசமான ஹட்டன், தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் தமிழ் பேசும் தொழிலாளர்கள். அவர்கள் மோசமான சுரண்டும் வேலை நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

ஹட்டனுக்கு வெளியே உள்ள பன்மூர் தோட்டத்தில் பிரச்சாரம்

பன்மூர் தோட்டத்தைச் சேர்ந்த மேனகா கூறியதாவது: “இந்த நிலைமை ஒரு உலக யுத்தத்தை நோக்கி அபிவிருத்தியடைவது பற்றி நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். இப்போது நாம் மிகவும் கடினமான நிலையில் வாழ்கின்றோம். அத்தகைய ஒரு போரை எதிர்க்க வேண்டும்”. இலங்கையில் பலர் யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர்!” என அவர் மேலும் கூறினார். ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த நீண்டகால இனவாத யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

மேனகா, முந்தைய போராட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் வென்ற அடிப்படை உரிமைகள் தோட்ட நிறுவனங்களால் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் கம்பனிகள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் இலாபத்தில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும் சுட்டிக் காட்டினார். முன்னதாக, கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவமனைக்கு போக அல்லது தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட லீவு கொடுக்கப்பட்டது, ஆனால் இப்போது அவை நிறுத்தப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை விளக்கிய மேனகா, ”நான் மலையக மக்கள் முன்னணியின் (மமமு) உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் இந்த தொழிற்சங்கங்கள் பயனற்றவை. அவர்கள் இப்போது எங்கள் உரிமைகளுக்காக போராடுவதில்லை”, என்றார்.

ஹட்டனுக்கு அருகில் கினிகத்தேனையை சேர்ந்த பாரூக், ஒரு கடையில் தொழிலாளியாக உள்ளார். ”நீங்கள் ஒரு உலக போர் அச்சுறுத்தல் பற்றி கூறுவது சரி. ஆனால் அமெரிக்கா சம்பந்தப்பட்ட இந்த யுத்தத்தை எப்படி நிறுத்துவது? அது மிகவும் சக்திவாய்ந்த நாடு. அவர்கள் முன்னேறிய தொழில்நுட்பம் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொண்டுள்ளனர்,” என்றார்.

சக்தி வாய்ந்த அமெரிக்க தொழிலாள வர்க்கம் உட்பட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே யுத்தம் நிறுத்தப்பட முடியும் என்று சோசக பிரச்சாரகர்கள் விளக்கினார். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள், ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாகவே போரை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் உலக சோசலிச புரட்சிக்காகப் போராட வேண்டும். பாரூக் அமெரிக்காவில் சோசக பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்.

ஹட்டன் அருகே உள்ள ஒரு பாடசாலை தமிழ் ஆசிரியர், நாட்டில் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க ஒரு போர் முயற்சியில் உள்ளது என்று தான் நம்புவதாகக் கூறினார். “அது எண்ணெய் வளங்களை தக்கவைத்துக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும் பிற நாடுகளில் உள்ள முக்கியமான வளங்களை பெறவும் இராணுவ பலத்தை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறது. முன்னதாக, அமெரிக்காவே [ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு] ஐஎஸ்ஐஎஸ் என்ற குழுக்களுக்கு ஆயுதங்களை கொடுத்தது. இப்போது சிரியாவில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு போருக்கான சாக்காகப் பயன்படுத்த அந்த அமைப்பு மீது பயங்கரவாத முத்திரை குத்துகின்றது.

அமெரிக்கா புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுத்தது. இப்போது அது இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்தி வருகின்றது. அமெரிக்க மக்களின் மனித உரிமைகள் பற்றி அக்கறை காட்டவில்லை. அமெரிக்க அரசாங்கம் சீனாவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்கு சார்பாக இந்த நாடுகளைக் கொண்டு வர முயற்சிக்கின்றது என்று நான் நினைக்கிறேன். இலங்கை இந்திய பெருங்கடலில் உள்ள ஒரு முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. சீனாவின் எண்ணெய் விநியோகம் இந்த கடல் வழியாகவே செல்கிறது. இந்த முரண்பாடுகளில் எதுவேண்டுமென்றாலும் ஒரு உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என்பது உண்மையே.”

அந்த ஆசிரியர் கூறியதாவது: ”முதலாளித்துவ முறையின் கீழ் வாழ்வது மேலும் மேலும் முடியாததாக உள்ளது. அரசாங்கம் கல்விக்கு மிகக் குறைவாகவே செலவிடுகின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒரு [எதிர்க்கட்சி] யூஎன்பீ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் கூட, அதே கொள்கைகள்தான் செயல்படுத்தப்படும். ஒரு உலகப் போர் அபாயத்துக்கு எதிராக போராட தொழிலாளர்களுக்கு ஒரு வேலைத் திட்டம் வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

கம்பஹா

கொழும்பு அருகே கம்பஹாவில், சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் பியகம சுதந்திர வர்த்தக வலையத்தில் பிரச்சாரம் செய்தது.


SEP
ஆதரவாளர்கள் பியகம இளம் தொழிலாளர்களுடன் பேசுகின்றனர்

ஒரு பெண் விளக்கியதாவது: ”நான் வேலைக்காக கொழும்புக்கு செல்ல வேண்டும். அது ஒரு சுரண்டல் நிலையம். பன்னிரண்டு பெண்கள் நெருக்கடியான அறையில் வேலை செய்கின்றனர். நாம் 7 மணிக்கு தொடங்கி மதிய உணவுக்கான அரை மணி நேரம் தவிர, மாலை 5.30 மணி வரை வேலை செய்வோம். எங்களுக்கு ஒரு பனிஸ்சும் தேனீரும் மட்டுமே மதியம் வழங்கப்படும், மதிய உணவு கிடையாது.

எங்களுக்கு தொலைக்காட்சி பார்க்க நேரம் இல்லை. நீங்கள் [ஒரு உலக போர் ஆபத்து பற்றி] இங்கே விளக்கியது மிகவும் முக்கியமானது. அது உலகத்தை வெல்ல விரும்பும் முதலாளித்துவத்தின் முயற்சி.

ஒரு உலகக் கட்சி, உலக அளவில் அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்த வேலை செய்வதைக் கேள்விப்படும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்க அணு குண்டுகள் வீசியது பற்றி எமக்கு நினைவுபடுத்தினீர்கள். அனைத்து உழைக்கும் மக்களும் போருக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.”

அவரது கணவர், குணதாச, பியகம ஒரு இரப்பர் தொழிற்சாலை தொழிலாளி ஆவார். அவர், ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியது உட்பட, இரண்டாம் உலகப் போரின் போதான அபிவிருத்திகளை நினைவு கூர்ந்தார். அவர் விளக்கியதாவது: “நாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை எங்கள் தந்தையர் மற்றும் தாத்தாமார் எதிர்கொண்ட நிலைமை அல்ல. அவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஒரு தொகை உரிமைகள் வென்றனர். அவர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இழப்பீடு மற்றும் ஊதிய உயர்வும் பெற்றனர். இப்போது ஊதிய உயர்வு உற்பத்தி திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது.”

கண்டியில் இருந்து வந்த லீலா, அவரது கணவருடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கின்றார். அவரது பிள்ளைகள் கண்டியில் வாழ்கின்றனர். 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டும். ஆயினும் மாதம் 20,000 ரூபாய் (அமெரிக்க டொலர் 153) மட்டுமே சம்பாதிக்கிறார். லீலா தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு சாப்பிட உகந்தது அல்ல, தொழில்துறை விபத்துக்களுக்கு தொழிற்சாலைகள் காப்பீடு வழங்குவதில்லை, என்று அவர் கூறினார்.

போருக்கு எதிரான சோசக/ஐவைஎஸ்எஸ்இ பிரச்சாரத்தை பாராட்டிய லீலா, “தொழிலாள வர்க்கம் போர் மற்றும் சுரண்டலுக்கு எதிராக சர்வதேச அளவில் போராட வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்”, என்றார்.

ஒரு ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியான பத்மா சுரஞ்சனி கூறுகையில்: ”நாம் சோசலிசத்திற்காகப் போராட வேண்டும் என்பதை உணர்கிறேன், போரை நிறுத்த அது மட்டுமே ஒரே வழி. நாம் ஒரு குடும்பத்தை ஆரம்பிக்கவும் நம் குழந்தைகளை வளர்க்கவுமே இந்தளவு உழைக்கின்றோம். நீங்கள் பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் தேவை என்பதை நான் உணர்கிறேன்,” என்றார்.

அவருக்கு துணையாக இருந்த பாத்திமா கூறியதாவது: ”நீங்கள் கூறுவது உணர்வைத் தூண்டுகிறது. நான் எமது இளைஞர்களின் எதிர்காலம் குறித்து பயப்படுகிறேன். இது நாம் அனைவரும் உணரும் விடயமாகும். அவர்கள் இந்த அமைப்பு முறையின் கீழ் எம்மை விட மோசமாக உழைக்க வேண்டும்.”

ரிஸ்வான் ஒரு இளைஞன். அவர் கூறியதாவது: ”அமெரிக்க சிரியாவில் ஜனாதிபதி அசாத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்திற்காக போராடுவதாக கூறுகிறது. ஆனால் அமெரிக்கா, சவூதி அரேபியாவில் மிகவும் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்றது. அவர்கள் இப்போது ஐஎஸ்ஐஎஸ்சை தாக்குவதாகக் கூறி, கண்மூடித்தனமாக குண்டு வீசுகின்றனர். செல்வந்தர்களின் நலன்களுக்காக அமெரிக்க மக்களின் பிள்ளைகள் அர்ப்பணிக்கப்படுவதை விரும்பும் அவர்கள், இவை அனைத்தும் அமெரிக்க மக்களை ஏமாற்றவே கூறுகின்றனர். இது [ஒபாமா அரசாங்கத்தின்] போர் உந்துதலுக்கு, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரந்த எதிர்ப்பு உள்ளது என்பதை கேள்விப்போடும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது.”