சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Supreme Court endorses deportation of asylum seekeres

இலங்கை உச்ச நீதிமன்றம் தஞ்சம் கோருவோர் நாடுகடத்தலை ஏற்றுக்கொள்கின்றது

By W.A. Sunil
8  October 2014

Use this version to printSend feedback

 அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தெளிவான தாக்குதலில், செப்டம்பர் 29 அன்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் தஞ்சம் கோருவோர் கட்டாயமாக நாடுகடத்தப்படுவதை தடுக்கும் முயற்சியை நிராகரித்தது. இவர்கள் நாடு கடத்தப்படுவதை அனுமதித்த முந்தைய மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை கைவிடக்கோரி கோரி ஆறு மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர்களின் வழக்கானது அடைக்கலம் நாடுபவர்களை கைது செய்ய, காவலில் வைக்க மற்றும் வெளியேற்றவும் அரசாங்கத்தை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்பு சட்டவிரோதமானதும் சர்வதேச அகதிகள் சட்டங்களை மீறுவதுமாகும் என விளக்கி இருந்தது. இது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தஞ்சம் கோருபவர்களை நாடுகடத்துவதானது அவர்களது உயிர்களை ஆபத்திற்கு உள்ளாக்கும் என்றும் அது எச்சரித்திருந்தது.
அரசாங்க சட்ட
ஆலோசகர், தஞ்சம் கோருவோரை நாடுகடத்துவதை தடை செய்யும் 1951 அகதிகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டிருக்கவில்லை, மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த மேல்முறையீட்டு செயல்முறையிலும் இலங்கை கையெழுத்திட்டிருந்தாலும், அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவில்லை என்று
வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரிக்க போதிய தரவுகள் இல்லை என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. அகதிகளை "கைமாற்றுதல்" அல்லது அவர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு அவர்களை திருப்பி அனுப்புதல் போன்றவற்றில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கும் அகதிகள் தொடர்பான சர்வதேச மரபுகளை இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அங்கீகரிக்க மறுத்து வந்துள்ளன.

அவர்கள் உத்தியோகபூர்வமாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையத்தில் (UNHCR) பதிவு செய்யப்பட்டு ஒரு மூன்றாம் நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு காத்திருந்தும் கூட, ஜூன் மாதம் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் அகதிகளை குடிவரவு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைக்கத் தொடங்கினர். சுமார் 200 பாகிஸ்தான் தஞ்சம் கோருவோர் கைது செய்யப்பட்டு கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள மிரிஹான தடுப்பு முகாமிலும் தென் இலங்கையில் பூசா தடுப்பு முகாமிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தோடு, சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அகதிகள் சுற்றுலா விசாவிலேயே நாட்டுக்குள் வந்த காரணத்தால் தஞ்சம் கோருவது "சட்டவிரோதமானது" என்று குடியேற்ற அதிகாரிகள் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் ஜெனீவாவில் பேசிய இலங்கையின் ஐ.நா தூதர் சமந்த ஜயசூரிய, தஞ்சம் கோருவோர் நிலை தொடர்பாக யுஎன்எச்சிஆர் மீது மோசடியாக பழிபோட முயன்றதோடு தனது நாடு அகதிகளுக்கு சிறந்த உதவிகளை  செய்கின்றது என்று வலியுறுத்தினார். அதிகரித்த வருகை “இலங்கையில் கடுமையான சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு, அதேபோல் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளும்" ஏற்பட்டுள்ளது என்றும் கூட அவர் கூறிக்கொண்டார். அவர் இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

ஜயசூரிய மற்றும் குடியேற்ற அதிகாரிகள், பாகிஸ்தான் தஞ்சம் கோருவோரோ இலங்கைக்கு மலேரியாவைக் கொண்டு வந்ததாக கேலிக்கூத்தாகக் கூறினர். மலேரியாவின் மறு அதிகரிப்பானது அகதிகள் இலங்கை வருவதற்கு எவ்வளவோ காலத்துக்கு முன்னர் நடந்ததது.

"பாதுகாப்பு" மற்றும் "சட்டம், ஒழுங்கு" பற்றிய ஜயசூரியவின் கூற்றுக்கள், ஜாதிக ஹெல உறுமய, பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற சிங்கள மற்றும் பெளத்த தீவிரவாத குழுக்கள், தஞ்சம் கோருவோர் மீது தெரிவித்த இனவாத கண்டனங்களை எதிரொலிக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், வேட்டையாடப்பட்ட மற்றும் இனவாத குண்டர்களின் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தஞ்சம் கோருவோருக்கு, முறையான வீடமைப்பு, சுகாதார வசதிகள் மற்றும் நிலையான வருமானத்தையோ வழங்க மறுத்துவிட்டது.

பெரும்பாலும் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இருந்து வந்த சுமார் 1,800 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் இலங்கையில் உள்ளனர். யுஎன்எச்சிஆர் அறிக்கைப்படி 11 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் உட்பட 108 பாகிஸ்தானியர்கள், வலுக்கட்டாயமாக ஆகஸ்ட் 1 மற்றும் 14ம் திகதிகளுக்கு இடையே நாடு கடத்தப்பட்டனர். சமீபத்திய அறிக்கையின்படி 40 பேர் செப்டம்பரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தானை விட்டு வெளியேறியவர்களில் அநேகர், முஸ்லீம் அதிதீவிரவாதிகளின் வன்முறைத் தாக்குதல்களால் அல்லது அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவர்கள், அஹ்மதியா பிரிவின் உறுப்பினர்கள் அல்லது ஷியா முஸ்லீம்கள் ஆவர். அவர்கள் மீண்டும் பாக்கிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் சிறைத் தண்டனை, சித்திரவதை அல்லது மரண தண்டனையை கூட எதிர்கொள்வது சாத்தியமாகலாம்.

பாக்கிஸ்தான் கிறிஸ்துவர் காங்கிரஸ் (பிசிசி) சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், இலங்கை, மலேஷியா மற்றும் தாய்லாந்தில் புகலிடம் கோருவோருக்கு எதிராக ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் "சதி செய்து" வருவதாக கண்டித்தது. பிசிசியின் படி, மலேஷியாவில் 9,000 பாகிஸ்தான் அகதிகளும் இலங்கை மற்றும் தாய்லாந்தில் முறையே சுமார் 2,000 மற்றும் 3,000 பேரும் உள்ளனர்.

செப்டம்பர் 30, ஒரு பாகிஸ்தானிய போலீஸ்காரர் "இஸ்லாமை அவமதித்த" மத நிந்தனை குற்றச்சாட்டில் ராவல்பிண்டி சிறையில் இருந்த இரண்டு ஆண்களை சுட்டார். கிரிஸ்துவர் ஆயர் ஜாபர் பாஹ்ட்டி கொல்லப்பட்டதோடு 70 வயதான பிரிட்டிஷ் பிரஜை, முஹம்மது அஸ்கர் காயமடைந்தார். அஸ்கரின் வழக்கறிஞர்களின் படி, அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் வாழ்க்கை என்ற பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு, தெய்வ நிந்தனை குற்றம் சாட்டப்பட்டுள்ள சுமார் 50 பேர், கடந்த சில ஆண்டுகளாக சட்டத்துக்கு புறம்பான கொலைகளுக்கு ஆளாகியுள்ளனர் -இவற்றில் ஏழு சம்பவங்கள் சிறைகளுக்கு உள்ளே நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், அல்லது வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பிரிட்டிஷ் பிரித்து, பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக நிறுவப்பட்ட போதே இந்த பிற்போக்கு மத நிந்தனை சட்டம் 1947ல் உருவாக்கப்பட்டது. 1974ல், பாக்கிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ, அஹமதியா ஒரு முஸ்லீம் அல்லாத பிரிவு என்று அறிவித்து ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை திணித்தார்.

கொழும்பு ஸ்தாபனத்தின் அரசியல் முறைகள், பாகிஸ்தான் ஆளும் உயரடுக்கின் ஜனநாயக விரோத கொள்கைகள் மற்றும் இனவாத ஆத்திரமூட்டல்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானதாகும். இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இனவாதம் மற்றும் மத மேலாதிக்கவாதத்தையும் பயன்படுத்துவதோடு பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தின் போது பாக்கிஸ்தானுடனான தனது உறவுகளை பலப்படுத்திக் கொண்டது.

கொழும்பு, இலங்கையில் நடக்கும் அடக்குமுறையில் இருந்து தப்பி செல்லும் தமிழர்களை தடுக்க சாத்தியமான எல்லாவற்றையும் செய்கின்றது. அது தஞ்சம் கோருவோரை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிவிட ஆஸ்திரேலியாவில் அப்போட் அரசாங்கத்துடனும் மற்றும் அதன் முன்னோடியுமான தொழிற் கட்சியுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து மட்டும், 160 க்கும் அதிகமான இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள் கைதுசெய்து கொழும்பிடம் ஒப்படைத்துள்ளனர். (பார்க்க: "இலங்கை அமைச்சர் ஆஸ்திரேலியா தமிழ் அகதிகளை ஒப்படைத்ததை உறுதிப்படுத்துகிறார்").

சர்வதேச அகதிகள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மற்றும் உடன்படிக்கைகளை தொடர்ந்தும் தாம் மீறி வருவதை மூடி மறைக்கும் பொருட்டு, திரும்பிச் சென்றவர்கள் இலங்கையில் "பாதுகாப்பான" முறையில் உள்ளனர் என்று கொழும்பும் கன்பராவும் தொடர்ந்தும் போலியாக கூறிக்கொள்கின்றன.

கடந்த வாரம், ஆஸ்திரேலிய SBS தொலைக்காட்சி நிகழ்ச்சியான “டேட்லைனில் தமிழ் தஞ்சம் கோருவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்று தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பானு என்பவர், பாதுகாப்பு படைகள் தன்னை இரகசியமாக இரண்டு மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் அதன் போது அவர் சுத்தியலால் தாக்கப்பட்டதாகவும் அவரது விரல் நகங்கள் கிழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் இராணுவ அதிகாரிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தகவல் சுதந்திர சட்டங்களின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டிய “டேட்லைன்”, ஆஸ்திரேலிய அரசாங்கம் சித்திரவதை குற்றச்சாட்டுக்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தது என்று தெரிவித்தது.

ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் அட்மிரல் திஸர சமரசிங்கவும் ஒரேயடியாக இந்த நிகழ்ச்சியை மறுத்தாலும், ஆஸ்திரேலிய அதிகாரிகளால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இந்த புகலிடம் கோருவோர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் சமீபத்திய வெளிப்பாடுகள் இவையாகும்.