சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian contract workers continue strike at state-owned energy company

இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் அரசுக்கு சொந்தமான எரிசக்தி கம்பெனியில் வேலைநிறுத்தத்தை தொடர்கிறார்கள்

By Arun Kumar and Kranti Kumara 
3 October 2014

Use this version to printSend feedback

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் 11,000 ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். (பார்க்கவும்: இந்தியா: NLC ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்) அவர்கள் வேலைக்கு திரும்புமாறு ஆணையிடும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டளையை சவால் செய்துள்ளனர், அதன்படி செப்டம்பர் 3ம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மூன்று நாட்களுக்குப் பின்னர் சட்டவிரோதமென்று அறிவிக்கப்பட்டது.

நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை, அதில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கம்பெனியின் மூன்று திறந்த பழுப்பு நிலக்கரி (மிருதுவான நிலக்கரி) சுரங்கங்கள் மற்றும் மூன்று மின்சார ஆலைகளை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறைந்தபட்சம் நெய்வேலி தொழிலாளர் சக்தியில் பாதியாவார். அவர்கள் ஏதேச்சாதிகார மற்றும் குரூரமான வேலைநிலைமைகளுக்கு உட்படுத்தபடுவதுடன், பலர் நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மிக குறைந்தளவாக, பத்து சதவிதத்தை தான் பெற்றுக்கொள்கின்றனர். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கையை என்எல்சி நிர்வாகம் புறக்கணித்துள்ளது.

இந்திய ஆளும் மேல்தட்டானது அனைத்து தொழிலாளர்களின் சம்பளங்களையும் நிலைமைகளையும் கீழ் தள்ளுவதற்கான பிரதான ஆயுதங்களில் ஒன்றாக ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்துகிறது. ஒரு சமயத்தில் அரிதானதாக கருதப்பட்ட அந்த ஒரு நடைமுறை இப்பொழுது மிகவும் பெரிய மற்றும் உயர்ந்த இலாபம் ஈட்டும் அரசாங்க நிறுவனங்களில் கூட பொதுவான விஷயமாக மாறியுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களாக மாதத்திற்கு சாதரணமாக ரூ.8300 (136 அமெரிக்க டாலர்),  பெற்றுக்கொள்ளும் வேலைநிறுத்தக்காரர்கள் குறைந்தபட்சமாக ஒரு கடைநிலை நிரந்தர தொழிலாளிக்கு வழங்கப்படும் ரூ. 25000 (415 அமெரிக்க டாலர்), சம்பள உயர்வு வேண்டுமென்று கோருகின்றனர்.

என்எல்சியில் 16 வருடங்களாக பணியாற்றி வரும் ஜோதி, உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது, “நான் மின்சாரம் உற்பத்தி செய்யும் மற்றும் சுரங்க கம்பெனியில் வேலை செய்து வருகின்ற பொழுதிலும் கூட, எனது குடும்பம் பல வருடங்களாக மின்சாரம் இன்றி இருட்டில் வாழ்ந்து வருகிறது.

யதார்த்தம் என்னவென்றால், மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 2000 என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இருட்டில்தான் வாழ்கின்றனர். எங்களுக்கு சுத்தமான குடிநீர் கூட கிடையாது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்எல்சியில் எனக்கு வழங்கப்படும் வறுமைக்கோட்டு சம்பளத்தில் எனது பிள்ளைகளை படிக்க வைப்பது மற்றும் அவர்களுக்கு உணவளிப்பது என்பது சாதாரணமாக முடியாத காரியமாகும். என்எல்சியில் கடைநிலை நிரந்தர ஊழியருக்கு வழங்கப்படும் சம்பளம் எங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை இப்போது என்எல்சியிடம் வைத்துள்ளோம்’’.

நிர்வாகம் அதனை மறுக்க முயற்சித்த போதிலும் வேலைநிறுத்தம், நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒரு அறிக்கையின்படி மின்சார உற்பத்தி 320 மெகா வாட்ஸ் வீழ்ச்சி கண்டுள்ளது. 2500 மெகா வாட்ஸ் திறனுள்ள மூன்று மின்சார ஆலைகளும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை விநியோகம் செய்கின்றன.

என்எல்சி ஒரு உயர்ந்த இலாபம் ஈட்டும் பொதுத்துறை அலகாக இருப்பதுடன் ஒரு ‘’நவரத்தின’’ கம்பெனியாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது அல்லது பொதுத்துறை அமைப்பின் ஒன்பது ‘’இரத்தினங்களில்’’ ஒன்றாகும். தமிழ்நாட்டிலுள்ள பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுடன் கூடுதலாக வட மாநிலமான ராஜஸ்தானிலுள்ள பர்சிங்சரில் மற்றுமொரு சுரங்கத்தையும் இந்த கம்பெனி நடத்துகிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த கம்பெனியில் பல பத்தாண்டுகளாக பெரும் எண்ணிக்கையில் பணிபுரிந்த போதிலும் கூட என்எல்சி நிர்வாகம் அவர்களை மறுதரப்படுத்த மறுத்துள்ளது. இந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும்படி ஏப்ரல் 2013ல் இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை என்எல்சி நிர்வாகம் மீறியுள்ளது. எந்த இறுதிக்கெடுவையும் உள்ளடக்காத உச்ச நீதிமன்ற தீர்ப்பானது ஒரு உயிரற்ற கடிதமாகவே இருந்து வருகிறது.

நிர்வாகத்திற்கும் சங்கங்களுக்கும் இடையிலான பயனற்ற பேச்சுவார்த்தைகளில் மாநில மற்றும் இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் பங்கெடுத்தார்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் சங்கங்கள் 11 அமைப்புகளாக பிரிந்துள்ளன, இதில் ஜீவா சங்கமும், பத்து தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டணியான கூட்டு நடவடிக்கை குழுவும் உள்ளடங்கும்.

சங்கங்கள் தமது சொந்த அமைப்புகளுக்கு உள்ளேயே ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு இடையில் கடுமையான பிளவை பராமரித்து வருகின்றனர், இதன் மூலமாக ஒப்பந்த தொழிலாளர்களின் தரம் குறைந்த நிலையை இறுக்கமாக பலப்படுத்தியுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது ஒரு மாதமாக நீடித்த பொழுதும் அவர்கள் நிரந்தர தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களுடன் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அணிதிரட்ட மறுத்துள்ளனர்அப்படியான ஒரு நடவடிக்கை சீக்கிரமாகவே என்எல்சியின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு வழிவகுக்கும்.

பெருமளவிலான ஒப்பந்த தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் ஜீவா யூனியன் மற்றும் முதலீட்டை கவருவதற்காக இந்திய தொழிலாளர்களை மலிவு கூலிகளாக வழங்கும் அரசாங்க கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் ஸ்ராலினிச சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் சிபிஐ(எம்) (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்) உடன் இணைந்துள்ள கூட்டு நடவடிக்கைக்குழு இரண்டும் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு தொழிற்சங்களுக்கும் காட்டிக்கொடுத்த ஒரு பதிவு இருக்கிறது.

மே-ஜூன் 2012ல், தமது 44 வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டதால் கோபம் அடைந்த தொழிலாளர்களினால் ஜீவா சங்க நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள். (பார்க்கவும்; இந்தியா: சங்கத்தின் துரோகத்தை NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்)

ஒரு மாதத்திற்கு முன்னர் சங்கங்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததற்கான ஒரே காரணம் தொழிலாளர்களின் கோபம் மற்றும் போர்குணத்தையும் அவர்களினால் அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாது என்பதாகும்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்பதற்காகவே நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுடன் சேர்த்து கூடுதலாக, தமது சொந்த துரோக பாத்திரத்தை மூடி மறைக்கும் நோக்கத்துடன் பல கூட்டங்களுக்கும் சங்கங்கள் அழைப்புவிடுத்தனர்

மாவட்ட ஆட்சியர் (ஒரு மாநில மாவட்டத்தின் பிரதான நிர்வாக மற்றும் வருமானத்துறை அதிகாரி) அலுவலகத்தின் எதிரில் நடந்த ஒரு கூட்டத்தின்பொழுது உலக சோசலிச வலைத் தளம் பல தொழிலாளர்களுடன் பேசியது. ஒரு தொழிலாளி கூறினார் ‘‘இந்த வேலைநிறுத்தம் நமக்கு வெற்றியைத்தராது ஏனென்றால் ஜீவா சங்கம் 2015 வரைக்கும் சம்பள உயர்வு பிரச்சனையை எழுப்பாது என்று ஒரு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளது. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தப் போவதில்லை என்றும் மற்றும் சம்பளங்களை அதிகரிக்கப்போவதில்லை என்றும் நிர்வாகம் அறிவித்தது. எந்தவொரு முக்கியமான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக நாம் வேலைகளுக்கு திரும்பி செல்லவேண்டும் என்று தொழிலாளர்களிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

‘’ஒரு நீண்ட கடினமான போராட்டத்தை நடத்திய பொழுதிலும் வெற்றிக்கான எந்த அறிகுறியையும் அவர்கள் பார்க்கவில்லை என்பதினால் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் சோர்வடைந்துள்ளனர். ஒரு ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே இப்படியான சில தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவார்களாயின் அப்பொழுது சங்கங்கள் உடனடியாக தோல்விக்கும் மற்றும் துரோகத்திற்கும் தொழிலாளர்கள் மேலேயே குற்றம் சாட்டுவார்கள். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுவரும் வளர்ச்சி குறித்து விளக்குவதற்கு சங்கங்கள் ஒரு போதும் பொதுச்சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்பவோ அல்லது அப்பவோ அவர்கள் ஏற்பாடு செய்யும் இந்த அல்லது அந்த கிளர்ச்சிகள் தொடர்பாக வேலை நிறுத்த தொழிலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று கூட அவர்கள் அக்கறை காட்டியதில்லை. அவை பற்றி நாம் தொலைக்காட்சி மூலமாகத்தான் தெரிந்துகொள்கிறோம்.’’