சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Balkan states back US war in the Middle East

பால்கன் அரசுகள் மத்திய கிழக்கு அமெரிக்க யுத்தத்தை ஆதரிக்கின்றன

By Stefan Steinberg
11 October 2014

Use this version to printSend feedback

செப்டம்பர் மாதத்தில், பல பால்கன் அரசுகள் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்கு அவற்றின் ஆதரவை அறிவித்தன. குரோஷியா, பல்கேரியா மற்றும் ரோமானியா போன்ற, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டிலும் இடம்பெற்றிருக்கும் பால்கன் அரசுகள் அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தன. ஈராக் மற்றும் சிரியாவில் மேற்கத்திய இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில்-அல்லாத மற்றும் நேட்டோவில்-அல்லாத அரசுகளில் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, கொசோவோ, மசடோனியா, மொன்டெனேக்ரோ மற்றும் சேர்பியா ஆகியவை உள்ளடங்கும்.

இந்த அரசுகளில் பலவற்றைப் பொறுத்த வரையில், இராணுவ நடவடிக்கைக்கு அவற்றின் நடைமுறை கடமைப்பாடு மிகக் குறைந்தளவே இருக்கும். இருப்பினும் இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் அவற்றின் முடிவு மிக முக்கியமானதாகும், குறைந்தபட்சம் என்று கூட அல்ல, ஏனென்றால் முற்றிலும் சர்வதேச சட்டத்தை மீறி ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்ற அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு அது நம்பிக்கையூட்டுகிறது.

அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் சேர்ந்த முதல் பால்கன் அரசுகளில் ஒன்று குரோஷியாவாகும், அது 1995 நேட்டோ யுத்தத்திற்குப் பின்னர் யூகோஸ்லேவியாவிலிருந்து பிரிந்ததில் இருந்து, வாஷிங்டனுடன் மிக நெருக்கமான இணைப்புகளைக் கொண்டுள்ளது. "ISக்கு எதிரான பால்கன் கூட்டணி" என்றழைக்கப்படுவதில் அந்நாடு சேர்ந்தது என்பதை, உள்ளூர் ஊடகம் குரோஷிய அரசாங்கத்திடமிருந்து அல்ல, அமெரிக்க வெளியுறவுத் துறையிடமிருந்து அறிந்தது என்பதே அமெரிக்கா மற்றும் குரோஷியாவிற்கு இடையிலான உறவைக் குறித்துக் காட்டுவதாக உள்ளது.

குரோஷியா மத்திய கிழக்கின் சமீபத்திய அபிவிருத்திகளில் குறிப்பிட்டளவுக்கு மோசடி பாத்திரம் வகித்துள்ளது. சிஐஏ மேற்பார்வையிட்ட ஒரு நடவடிக்கையில், குரோஷியா பெரும் ஆயுதங்களை வினியோகித்தது, அவை அப்பிராந்தியத்தின் சண்டையில் முஸ்லீம் ஜிஹாதிஸ்டுகளின் கைகளில் போய் சேர்ந்தன. அப்பிராந்தியத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத தடை விதித்திருந்ததால், குரோஷியா தந்திரமாக 2013இல் ஜோர்டான் வழியாக சிரியாவிற்குள் திட்டமிட்டு ஆயுதங்களைக் கடத்தி வந்தது. ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைத் தூக்கியெறியும் அமெரிக்க நடவடிக்கையின் பாகமாக, அந்த ஆயுதங்கள் ISIS மற்றும் அஹ்ரார் அல்-ஷாம் உட்பட சிரிய இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

ISISக்கு எதிரான போராட்டத்தை இப்போது அசாத்திற்கு எதிரான அதன் நடவடிக்கையைப் புதுப்பிப்பதற்கான ஒரு வழிவகையாக பயன்படுத்திவரும் அமெரிக்க கொள்கையின் முழு-திருப்பத்தைத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில், குரோஷியா தற்போது அதன் முன்னாள் வாடிக்கையாளர்களை கைவிட்டுவிட்டு, “ISக்கு எதிரான பால்கன் கூட்டணியில்" இணைய உறுதிபூண்டுள்ளது. குரோஷியாவும் அல்பானியாவும் ஆயுதங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை ஈராக்கிய இராணுவத்திற்கும் மற்றும் ISISக்கு எதிராக சண்டையிட்டு வரும் ஈராக்கிய குர்திஷ் போராளிகளுக்கும் அனுப்பி வருவதாக பென்டகன், இந்த ஆகஸ்டில் தான், ஒப்புக் கொண்டிருந்தது.

ISISஐ அரக்கத்தனமாக சித்தரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பயன்படுத்தும் அதேபோன்ற மொழியைப் பயன்படுத்தி, குரோஷிய பாதுகாப்புத்துறை மந்திரி அண்டெ கோட்ரோமானோவிக் அவரது அரசாங்கத்தின் முடிவை தெரிவித்தார்: “இப்போது வரையில் நமது கடப்பாடுகள் என்னவென்பது யாருக்கும் தெரியாது... ஆனால் இந்த கொடூர அரக்கனுக்கு எதிராக உலகை ஐக்கியப்படுத்த இதுவொரு சந்தர்ப்பமாகும்," என்றார்.

சேர்பியாவும் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையை ஆதரிக்க அது தயாராக இருப்பதை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், சேர்பிய பிரதம மந்திரி அலெக்சாண்டர் உசிக் இவ்வாறு எழுதி இருந்தார்: “சேர்பிய அரசாங்கம் ISISக்கு எதிரான சண்டையை ஆதரிப்பதுடன், அதன் மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரவளங்களுக்கு ஒத்திசைந்த விதத்தில் இந்த சண்டையில் உதவவும் விருப்பமாக உள்ளது."

1999 நேட்டோ குண்டுவீச்சு நடவடிக்கையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்பதை மனதில் கொண்டு பார்த்தால், IS-விரோத கூட்டணிக்கு சேர்பியாவின் ஆதரவு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முக்கிய விட்டுகொடுப்பாகும். சமீபத்திய மாதங்களில், சேர்பியா ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை நடைமுறைப்படுத்த தவறியதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கடும் அழுத்தத்தின் கீழ் இருந்துள்ளது. சேர்பியா ரஷ்யாவுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளதுடன், முன்மொழியப்பட்ட South Stream குழாய்பாதையில் ஒரு முக்கிய இணைப்பாகவும் உள்ளது, அத்திட்டம் ரஷ்ய எரிவாயுவை உக்ரேனுக்குள் நுழைக்காமல் ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லக்கூடியதாகும்.

இம்மாத மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், நாஜி ஜேர்மன் ஆக்கிரமிப்பிலிருந்து பெல்கிராட் விடுதலை அடைந்த 70ஆம் நினைவாண்டைக் குறிக்கும் சேர்பிய கொண்டாட்டங்களின் பாகமாக பெல்கிராட்டுக்கு பயணிக்க உள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு உசிக்கின் ஆதரவு, மாஸ்கோவுடன் தொடர்புகளைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் அதேவேளையில் மேற்குடன் உறவுகளைத் தக்க வைக்க பெல்கிராட் அரசாங்கத்தின் சமநிலைப்படுத்தும் நடவடிக்கையின் பாகமாக இருக்கிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ், பால்கன் அரசுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஆக்ரோஷமான முன்னிலை போக்கிற்குள் அதிகளவில் திரும்பி வருகின்றன.

“ISக்கு எதிரான கூட்டணியில்" இணைய சேர்பியா மற்றும் ஏனைய பால்கன் நாடுகளது முடிவில் இருக்கும் மற்றொரு காரணி, மேற்கின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" சமீபத்திய பதிப்பிற்கு இவை அளிக்கும் ஆதரவு இஸ்லாமிய-விரோத உணர்வுகளைத் தூண்டிவிடவும் மற்றும் ஒடுக்குமுறை சட்டங்களை அறிமுகப்படுத்தவும் இந்த அரசாங்களை அனுமதிக்கிறது என்பதாகும். அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மற்றும் "கழுத்தறுக்கும் அச்சுறுத்தலின்" வளர்ச்சியைக் குறித்து அவற்றின் சொந்த எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன, அவ்விதத்தில் பால்கன் நாடுகளின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு நியாயப்பாடை வழங்குகின்றன.

அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த உசிக்கினது அறிவிப்பு, உடனடியாக சேர்பிய வெளியுறவுத்துறை மந்திரி இவிகா டாசிக்கால் எதிரொலிக்கப்பட்டது. அவர் "பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையின் உலகளாவிய கூட்டணியை" சேர்பியா ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த கூட்டணி பால்கன் பிராந்தியத்திற்கு முக்கியமானதாகும் "ஏனென்றால் அங்கே நமது பிராந்தியத்திலிருந்து சென்ற பல ஜிஹாதிஸ்டுகள் இருக்கிறார்கள்" என்று டாசிக் பெல்கிராட்டை மையமாக கொண்ட நாளிதழ் Blicக்குத் தெரிவித்தார்.

டாசிக் அவரது கருத்துக்களை சிஐஏ மற்றும் மேற்கத்திய அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அமைத்திருந்தார், நூற்றுக் கணக்கான அத்தகைய ஜிஹாதிஸ்ட் படைகள் பால்கனிலிருந்து சிரியாவுக்கு வருவதாக அவை குறிப்பிட்டிருந்தன. பொஸ்னியா, கொசோவோ மற்றும் அல்பானியா போன்ற பல நாடுகளில் கணிசமான அளவுக்கு முஸ்லீம் சமூகங்கள் உள்ளன. சான்றாக, அல்பானியாவில் மக்கள்தொகையில் சுமார் 60 சதவீதம் சுன்னி முஸ்லீம்கள். பொஸ்னியாவில் 40 சதவீதம் முஸ்லீம்கள் ஆவர்.

இத்தகைய நாடுகள் அனைத்திலும், ஒரு சில நூறு முஸ்லீம் குடிமக்கள் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்திருப்பதை ஊடக செய்திகள் விகிதாச்சார அடிப்படையில் பெரிதாக்கி உள்ளன என்பதுடன், அவை முஸ்லீம் சமூகங்களுக்கு எதிராக அச்சுறுத்தும் ஒரு சூழலை உருவாக்க அந்தந்த அரசாங்கங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பீதியூட்டும் சூழல், அதிகரித்துவரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவற்றின் பாதுகாப்பு எந்திரங்களைக் கட்டியெழுப்ப, சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தைக் கொண்ட அந்த நாடுகளின் அரசாங்கங்களை அனுமதிக்கிறது.

சேர்பியா அதன் குற்றவியல் சட்டத்தை சீரமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளதுடன், மற்றொரு நாட்டின் யுத்தத்தில் பங்கெடுத்தால் அல்லது வேறு நாடுகளின் ஆயுதமேந்திய குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் 10 ஆண்டுகால சிறைதண்டனையையும் விதித்துள்ளது. இதேமாதிரியான சட்டங்கள் பொஸ்னியா-ஹெர்சகோவினா மற்றும் மசடோனியாவிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. அல்பானியா, கொசோவோ மற்றும் மொண்டெனேக்ரோவிலும் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

340 வரையிலான பொஸ்னியர்கள் IS அல்லது ஏனைய தீவிர குழுக்களில் சேர பயணித்துள்ளதாக பொஸ்னிய பாதுகாப்பு சேவையிலிருந்து செய்திகள் வந்ததும், பொலிஸ் செப்டம்பர் தொடக்கத்தில் 16 நபர்களைக் கைது செய்தது, அவர்கள் மத்திய கிழக்கிலிருந்து சட்டவிரோதமாக வந்திருந்ததாக கூறப்பட்டது.

செப்டம்பர் 30 அன்று, மொண்டெனேக்ரோவின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு 300 வரையிலான உள்ளூர் இஸ்லாமியவாதிகளை நிரந்தரமாக கண்காணிக்க உள்ளூர் உளவுப்பிரிவு சேவைக்கு உத்தரவிட்டது. வெளிநாட்டில் உள்ள ஓர் ஆயுதமேந்திய குழுவில் இணையும் எவரொருவரையும் தண்டிக்கும் ஒரு வரைவு சட்டம் மொண்டெனேக்ரோ நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் முக்கியமாக கொசோவோவில் அழுத்தந்திருத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், பொலிஸ் டஜன் கணக்கானவர்களைக் கைது செய்து, சட்டவிரோத இஸ்லாமியவாதிகள் என்று கருதப்படுபவர்களுக்கு எதிராக பரந்தளவில் பகிரங்கமான வேட்டைகளை நடத்தியது. இரண்டாம் சுற்று வேட்டையில், பயங்கரவாதம், அரசியலமைப்பு ஒழுங்குமுறைக்கு அச்சுறுத்தல் மற்றும் மதவெறுப்பைத் தூண்டுதல் போன்ற சந்தேகத்தினது பேரில், பொலிஸ் சந்தேகத்திற்குரியவர்களாக கருதப்பட்ட 15 இஸ்லாமியவாதிகளை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் இஸ்லாமிய கட்சி லிஸ்பாவின் தலைவரும் மற்றும் கொசோவோவின் மசூதியிலிருந்த 12 இமாம்களும் உள்ளடங்குவர்.

அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாகவே கொசோவோ பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை வரவேற்றது. அந்த சம்பவத்தில், கொசோவோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், போதிய ஆதாரமின்மையால் கைது செய்யப்பட்ட 15 பேரில் 11 நபர்களை விடுவிக்க இம்மாதம் உத்தரவிட்டது.

இந்த வார தொடக்கத்தில், ஐரோப்பிய கமிஷன் வெளியிட்ட ஒரு செய்தியில் அது மேற்கத்திய பால்கன் நாடுகள் மீது பல விமர்சனங்களை வைத்ததுடன், அடுத்த சில காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அவை உறுப்பினராவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. IMF மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆணையிடப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அந்த அரசாங்கங்கள் தயங்குகின்றன என்பதும் அந்த கமிஷனால் எழுப்பப்பட்ட விமர்சனங்களில் உள்ளடங்கும். முஸ்லீம் சமூகங்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை அரசு நடவடிக்கைகள் குறித்து எந்த குறிப்பும் அதில் இல்லை.

இது ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியமே அந்த கண்டந்தழுவிய அடிப்படையில் அதேபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் நிகழ்வுபோக்கில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தற்போது, "சுதந்திர நகர்வு உரிமையை அனுபவித்துவரும் நபர்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை முழுவதுமாக உறுதிப்படுத்த, அவர்களைப் புற எல்லைகளிலேயே வைத்து முறையாக பரிசோதிக்க" அனுமதிக்கும் சென்கென் எல்லை கட்டுப்பாடுகளில் திருத்தம் கொண்டு வரும் நீண்டகால பரிந்துரைகளை விவாதித்து வருகிறது.

இணைய உளவுவேலைகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் ஐரோப்பா-தழுவிய விமான பயணிகளின் தகவல் களஞ்சியத்திற்கான பரிந்துரைகளைப் புதுப்பிப்பது உட்பட, ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிகளும் பரந்த பாதுகாப்பு முறைமைகளை விவாதித்து வருகிறார்கள்.