சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political issues in the Ebola crisis

இபோலா நெருக்கடியில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Patrick Martin
13 October 2014

Use this version to printSend feedback

இபோலாவினால் பாதிக்கப்பட்ட தோமஸ் எரிக் டன்கன் இறப்பதற்கு முன் அவருக்கு சிகிச்சை அளித்தவர்களில் ஒருவரான, டெக்சாஸின் டல்லாஸ் மருத்துவத்துறை தொழிலாளருக்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டது என்ற அறிவிப்பு, ஒரு முக்கியமான மற்றும் துயரகரமான சம்பவமாகும். நோய் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அமெரிக்க மையங்களுக்கான இயக்குனர் டாக்டர் தோமஸ் ஃப்ரீடன் ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சியில், “இந்த நோய் தொற்றிக் கொண்டது மிகவும் கவலை அளிக்கிறது," என்று கூறி ஒப்புக் கொண்டார்.

அங்கே "சிகிச்சை வழிமுறை மீறப்பட்டிருக்க" வேண்டுமென வாதிட்டு, இபோலா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் தற்போதைய வழிமுறைகள் அந்நோய் பரவாமல் தடுப்பதில் துல்லியமானவையே என்று ஃபிரீடன் வாதிட்டார். இருப்பினும் அந்த மருத்துவத்துறை தொழிலாளரை அது எவ்வாறு தொற்றியது என்பதற்கு அங்கே எந்த உண்மையான விளக்கமும் இல்லை. அந்த பெண்மணி டன்கனுடன் இருந்த 48 பிரதான தொடர்புகளில் ஒருவராக இருக்கவில்லை, அத்தகைய நபர்கள் மீது நோய் தொற்றுவது சாத்தியமாகும் என்பதால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால் இப்பெண்மணி மிகவும் வெளிப்பாத்திரம் வகித்து வேலை செய்தவராவார். அவருக்கு காய்சல் ஏற்பட்டு, அவரே அதை தெரிவித்த போது தான் அவருக்கு அந்நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.

லைபீரியா, சியாரா லியோன் மற்றும் கினியாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மருத்துவர்கள் மற்றும் தாதிகள் உட்பட, அங்கே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இவர்களுக்கெல்லாம் அந்த சிகிச்சை வழிமுறைகள் நன்றாகவே தெரியும். ஒரு NBC செய்தி புகைப்படக்காரரை அந்நோய் தாக்கிய போது, அந்த வலையமைப்பின் தலைமை மருத்துவ செய்திதொடர்பாளர் டாக்டர் நான்சி சின்டர்மன் தலைமையிலான, ஒட்டுமொத்த செய்திக்குழுவையும் தனிமைப்படுத்த அது காரணமானது. மருத்துவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் உத்தரவாதங்கள் அளிக்கின்ற போதினும், அந்நோய் எவ்வாறு பரவுகிறது என்பதைக் குறித்து பெரிதும் அறியப்படவில்லை என்பதையே இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நிச்சயமாக, மேற்கு ஆபிரிக்காவில் இபோலா வெடித்தமை அப்பிராந்திய மக்களுக்கு பேரழிவுகரமானது தான். 8,000க்கும் மேற்பட்ட மக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர், அந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவற்கு அங்கே எந்த அறிகுறியும் தெரியவில்லை. மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சேவை தொழிலாளர்களின் துணிகர முயற்சிகள், உலகின் மிக வறிய நாடுகளாக உள்ள இந்நாடுகளின் மருத்துவத்துறை பொறிந்து போயுள்ளதால் வீணடிக்கப்படுகின்றன. மேற்கு ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்ட மக்களில் வெறும் 20 சதவீதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை மையங்களை அணுகும் வசதி இருக்கிறது.

இந்த பேரிடரின் பரிமாணங்களை ஏறக்குறைய மிகைப்படுத்த சாத்தியமில்லை. இந்த ஆண்டு வரையில், இபோலா தொலைதூர கிராமப்புற பகுதிகளின் ஒரு நோயாக இருந்தது, முந்தைய 40 ஆண்டுகளில் 20 முறை இதுபோன்று உண்டான போது வெறும் 1,500 பேர் மட்டுமே இறந்து போயினர். இப்போதோ அந்நோய் ஒரு மில்லியன் மக்கள் வாழும் நகரமான, லைபீரியாவின் தலைநகர் மான்ரோவியா போன்ற நகர்புற மையங்களை எட்டியுள்ளது. மேலும் அப்பிராந்தியத்திலிருந்து பயணம் செய்துள்ள அந்த நுண்கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரையில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரேசிலில் நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறிப்பாக அது நைஜீரியா அல்லது பில்லியன் கணக்கில் வறுமையில் இருப்பவர்களைக் கொண்ட தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா போன்ற மிகவும் மக்கள்தொகை மிகுந்த நாடுகளுக்குப் பரவினால், இபோலா ஒரு உலகளாவிய தொற்றுநோயாக மாறுமோ என்ற ஆழ்ந்த அச்சங்கள் நிலவுகின்றன.

மேற்கு ஆபிரிக்காவின் அந்த அளப்பரிய துயரத்திற்கு காட்டப்படும் பலவீனமான உலகளாவிய விடையிறுப்பு ஓர் தீவிர எச்சரிக்கையாக உள்ளது. இபோலா நெருக்கடி, ஒரு கூர்மையான மற்றும் மரணகதியிலான அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு, ஓர் உலக அமைப்புமுறையாக, முதலாளித்துவ தகைமைக்கு ஒரு சோதனையாக நிரூபணமாகி உள்ளது. இந்த இலாப நோக்கு அமைப்புமுறை தோல்வி அடைந்துவிட்டது. உற்பத்தி அடித்தளத்தை தனியார் இலாபத்திற்காக ஒழுங்கமைத்துள்ளதும், மற்றும் எதிர்விரோத தேசிய-அரசுகளாக பிளவுபட்டுள்ளதுமான ஒரு சமூகம், ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய ஏகாதிபத்திய சக்திகள் எஞ்சியிருப்பதன் மீது மேலாதிக்கம் செலுத்துவதுடன் சேர்ந்து, இந்த நெருக்கடிக்குத் தேவையான திட்டமிட்ட, உத்வேகபூர்வமான மற்றும் மனிதநேய விடையிறுப்பைக் காட்ட இலாயக்கற்று உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் முன்னாள் காலனித்துவ நாடுகளில் இபோலா வெடிப்பு நிகழ்வதொன்றும் தற்செயலான விபத்தல்ல. கினியா ஒரு பிரெஞ்சு காலனி, சியாரா லியோன் ஒரு பிரிட்டிஷ் காலனி, லைபீரியாவோ அமெரிக்க அடிமைகளுக்கு விடுதலை அளிக்கப்பட்டு அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே நடைமுறையில் அதுவொரு அமெரிக்க காலனி நாடாக இருக்கிறது. அவற்றின் பெயரளவிற்கான சுதந்திரத்திற்கு இடையே, அந்த ஒவ்வொரு நாடும் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள மிகப் பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்றன, அவை கனிம வளங்கள் மற்றும் ஏனைய இயற்கை வளங்களிலிருந்து பரந்த இலாபங்களை உருவுகின்றன. கினியா உலகின் மிகப்பெரிய பாக்சைட் ஏற்றுமதியாளராகும், சியாரா லியோன் வைர ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கிறது, லைபீரியா நீண்டகாலமாக பயர்ஸ்டோன் ரப்பர் (இப்போது இது ப்ரிட்ஜ்ஸ்டோன்) பிராந்தியமாக இருந்து வருகிறது.

இந்த நாடுகளால் அவற்றின் மக்களுக்கு மிக அடிப்படையான மருத்துவ சேவைகளைக் கூட வழங்க முடியவில்லை, அது அவற்றிடம் வளங்கள் இல்லையென்பதால் அல்ல, மாறாக அவை வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஏனைய நிதியியல் மற்றும் பண்டங்களின் சந்தைகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதார அமைப்புமுறையால் சுரண்டப்படுகின்றன மற்றும் ஒடுக்கப்படுகின்றன என்பதால் ஆகும். இந்த பொருளாதார அமைப்புமுறை எந்தளவுக்கு சமநிலையின்றி இருக்கிறதென்றால் இப்பூமியில் வாழும் 85 மிகப்பெரிய பணக்காரர்கள் மிகவறிய மூன்று பில்லியன் மக்களை விட, அதாவது மனிதகுலத்தில் சுமார் அரை பங்கினரின் செல்வத்திற்கும் மேலானதைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார அபிவிருத்தி, குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளில், ஒன்றோடொன்று இணைந்த மற்றும் பூகோளந்தழுவிய உலகை உருவாக்கி உள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் மேற்கு ஆபிரிக்காவுக்கும் உலகின் ஏனைய பாகங்களுக்கும் இடையே ஒவ்வொரு நாளும் பயணம் மேற்கொள்கிறார்கள். போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு புரட்சி என்பது மேற்கு ஆபிரிக்காவில் இன்று என்ன நடந்து வருகிறதோ அது நாளையே டல்லாஸ், போஸ்டன், மாட்ரிட் மற்றும் ரியோ டி ஜெனிரோவைப் பாதிக்க முடியும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அதாவது இபோலா ஒரு பிராந்தியத்தின் சம்பவம் அல்ல, மாறாக ஒரு உலக சம்பவமாகும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

ஆனால் இபோலா நெருக்கடிக்கு விடையிறுப்போ, அது உலக மக்களைப் பாதிக்கும் நுண்கிருமியின் அபாயம் என்றில்லாமல், மாறாக அது ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் நலன்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற அடிப்படையில், போட்டியிடும் தேசிய நலன்களால் உந்தப்பட்ட தேசிய அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் தான் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் லைபீரியா, சியோரா லியோன் மற்றும் கினியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்க அங்கே அழைப்பு விடுக்கப்படுகின்றன. அதுபோன்ற நடவடிக்கைகள் அந்நாடுகளில் பொருளாதார பொறிவை ஏற்படுத்தி, அந்த தொற்றுநோயை மோசமாக இன்னும் பரப்புமென்றும், அது ஒருவேளை பரவுவதைக் குறைப்பதற்கு மாறாக இன்னும் உலகளாவிய அளவில் பரவுமென்றும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்ற போதினும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

மருத்துவ சிகிச்சை மையங்களைக் கட்டமைப்பதற்காக என்ற சாக்கில், லைபீரியாவுக்கு 4,000 அமெரிக்க துருப்புகளை அனுப்ப ஒபாமா நிர்வாகம் முடிவெடுத்திருப்பது அதேயளவுக்குப் பிற்போக்குத்தனமாக உள்ளது. அதுபோன்றவொரு திட்டத்திற்கு கனரக ஆயுதமேந்திய சிப்பாய்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அவர்கள் கட்டுமான பணியாளர்களோ அல்லது மருத்துவ சேவை வழங்குபவர்களோ இல்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததற்கு இடையிலும், மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் இதழாளர்களுக்கு அந்த நோய் தொற்றி இருக்கிறதென்றால், பின் நிச்சயமாக சிப்பாய்களும் அந்நோய்க்கு பலியாகக்கூடும், அல்லது அவர்களோடு உள்நாட்டுக்கு அந்த வைரஸ் கொண்டு வரப்படும். வாஷிங்டனின் நிஜமான நிகழ்ச்சிநிரல், அதன் ஆபிரிக்க படைப்பிரிவுக்கு ஒரு அடித்தளத்தைப் பாதுகாப்பதாகும், இதுவரையில் உள்நாட்டு எதிர்ப்பால் அக்கண்டம் விட்டுவைக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்விதத்தில் அதன் போட்டியாளர்களுக்கு, குறிப்பாக சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முன்னெடுக்கப்படுகிறது.

இபோலா போன்றவொரு நோய் கிராமப்புற ஆபிரிக்காவிலிருந்து உலகுக்கு பரவக்கூடிய சாத்தியமான அபாயங்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே தொற்றுநோய் நிபுணர்களாலும் மற்றும் ஏனைய விஞ்ஞானிகளாலும் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. அது சிறப்பு ஆய்வுகளின் மற்றும் நன்கு-விற்பனையாகும் புத்தகங்களின் விடயமாகவும் இருந்துள்ளது. அந்த பிரச்சினை திரைப்படங்களான ஆண்ட்ரோமெடா ஸ்ட்ரைன் (Andromeda Strain) படத்திலிருந்து அவுட்பிரேக் (Outbreak) மற்றும் 28 நாட்கள் (28 Days) படங்கள் வரையில் வெகுஜன கலாச்சாரத்திற்குள்ளும் கூட ஊடுருவி இருந்தது. ஆனால் இந்த இலாபகர அமைப்புமுறையோ, முற்றிலும் அனுமானிக்கப்பட்ட ஒரு நெருக்கடியைத் தடுத்துநிறுத்தும் ஒரு தீவிர முயற்சியை செய்ய இலாயக்கற்று போயுள்ளது.

1970களின் மத்தியில் இபோலா கண்டறியப்பட்ட போதே அந்த நுண்கிருமியைக் குறித்த ஓர் உள்ளார்ந்த ஆய்வு, அது எவ்வாறு பரவுகிறது என்பதற்கான பகுப்பாய்வு, எதிர்ஊக்கிகள் மற்றும் மருந்துகளின் கண்டுபிடிப்பு ஆகியவற்றைத் தொடங்குவதற்குரிய சந்தர்ப்பமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை, பரந்த நடவடிக்கையாக, ஓர் அறிக்கை கடந்த மாதம் குறிப்பிட்டதைப் போல, மருத்துவ ஆராய்ச்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் மிகப்பெரிய மருந்துத்துறை நிறுவனங்கள் கிராமப்புற ஆபிரிக்காவின் வறிய கிராமத்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறிய இலாபத்தையே கண்டன. (பார்க்கவும்: “Profit motive big hurdle for Ebola drugs”).

சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மீது என்ன சிறிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதோ அதற்கு அமெரிக்க பென்டகனே நிதியுதவி வழங்கி இருந்தது, அதுவும் நம்பவியலாத காரணங்களுக்காக: அதில் சிறந்த காரணம், மத்திய ஆபிரிக்க காடுகளில் ஏகாதிபத்திய தாக்குதல் படையாக காடுகளில் நிறுத்தப்படும் அமெரிக்க சிப்பாய்களைப் பாதுகாப்பதற்காக; மோசமான காரணம், அந்த நுண்கிருமியைச் சாத்தியமான எதிரிகளுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக.

இந்த இபோலா நெருக்கடிக்கு ஒரு அக்கறையுள்ள விடையிறுப்பு என்ன மாதிரியாக இருந்திருக்கும்? அது ஒரு பரந்த, சர்வதேசரீதியில் ஒருங்கிணைந்த விடையிறுப்பைக் கொண்டிருந்திருக்கும், அத்தகைய விடையிறுப்பு உடனடி அச்சுறுத்தலின் கீழ் இருப்பவர்களை முடிந்தளவுக்கு பாதுகாக்கவும் மற்றும் உலகளாவிய அளவில் வெடிக்கும் அபிவிருத்தியைத் தடுக்கவும் இரண்டிற்கும் அவசியமான அளவுக்கு பரந்த ஆதார வளங்களுக்கு அழைப்புவிடுத்திருக்கும்.

அதாவது ஒட்டுமொத்த மனிதகுலத்தை மரணகதியில் அச்சுறுத்தும் ஓர் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா மற்றும் உலகின் எஞ்சிய பகுதியிலிருந்தும் மருத்துவர்கள், தாதிமார்கள், பொது சுகாதார தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை ஒன்றுதிரட்டுவதை அது அர்த்தப்படுத்தி இருந்திருக்கும். மேலும் இந்த விடையிறுப்பு தேசிய இராணுவ ஸ்தாபகங்களின், குறிப்பாக பெண்டகனின் கரங்களில் இருந்தும், மிகவும் ஊழல்பீடித்த மற்றும் கொள்ளையடித்து நகர்ந்து கொண்டிருக்கும் பெரு வணிகங்களில் ஒன்றாக உள்ள மிகப் பெரிய மருந்துத்துறை நிறுவனங்களின் பிடியிலிருந்தும், கட்டுப்பாட்டை எடுப்பது என்பதும் அதன் அர்த்தமாகும்.