சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Nine-hour strike by train drivers

ஜேர்மனி: இரயில் சாரதிகளின் ஒன்பது மணிநேர வேலைநிறுத்தம்

By our reporters
11 October 2014

Use this version to printSend feedback

செவ்வாய்கிழமை மாலையில், இரயில் சாரதிகள் சங்கம் GDL, Deutsche Bahn AG-யில் தன் உறுப்பினர்களை இரவு 9 மணியிலிருந்து ஒரு ஒன்பது மணிநேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, GDL உறுப்பினர்களில் 91 சதவிகிதம் பேர் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்திருந்தனர். புதன்கிழமை காலை 6 மணிவரை நீடித்த தேசிய அளவிலான அந்த வேலைநிறுத்தம் ஜேர்மனி முழுவதும் நீண்டதூர மற்றும் பிராந்திய இரயில்கள், சரக்கு இரயில்கள் மற்றும் இரயில்களை ஒரு நிறுத்தத்திற்கு கொண்டுவந்தது

ஒரு 5 சதவிகித ஊதிய உயர்வு மற்றும் தற்போது இருக்கும் வாரத்திற்கு 39 மணிநேர வேலைநேரத்திலிருந்து ஒரு இரண்டு மணிநேர வேலை நேர குறைப்பை கோருகிறார்கள். நடத்துநர்கள் மற்றும் இரயிலில் பணிபுரியும் சமையல் பணியாளர்களிடையே இருக்கும் அதன் உறுப்பினர்களையும் GDL வேலைநிறுத்தத்திற்கு அழைத்தது. கடந்த காலங்களில், நடமாடும் பணியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களின் ஒரு பெரும்பகுதி GDL உடன் இணைந்தது, ஏனென்றால் ஜேர்மானிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை (DGB) சேர்ந்த EVG இரயில் சங்கம், அதிக வெளிப்படையான முறையில் முதலாளிகளின் சட்டைப்பைகளில் உட்காருகிறது அத்துடன் வெட்டுகள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற வெறியாட்டத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.


பிராங்பேர்ட் மத்திய நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் இரயில் சாரதிகள்

செவ்வாய்கிழமை மாலையில், பிராங்பேர்ட் மத்திய நிலையத்தின் முன்னால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரயில் சாரதிகளின் ஒரு குழுவிடம் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் பேசினார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இரயில்வேயில் ஏற்பட்ட மாற்றங்கள் வணிகத்தின் தேவைகளுக்கு ஊழியர்கள் முழுமையாக அடிபணிய எப்படி கொண்டு சென்றது என்று அவர்கள் விளக்கமாக கூறினார்கள்.

எங்களுடைய வேலை நேரங்கள் மிகவும் பரபரப்பானவை, என்று ஒரு பயணிகள் இரயில் சாரதி கூறினார். ஒரு நாளில் எங்களின் வேலை எத்தனை முறை ஆரம்பிக்கிறது மற்றும் முடிகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த நேரத்தில் நாங்கள் எப்படி தேவைப்படுகிறோம் என்பதை பொறுத்து ஒர் ஆயிரம் மாற்றங்கள் இருக்கின்றன.

வேலை முறைப் பட்டியலில் எப்படி ஊழியரின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று அவர் விளக்கினார். ஒரு இரயிலை அதன் பாதையின் தொடக்கத்தில் உடனடியாக கொண்டு செல்லுவதற்கு ஏதுவாக சாரதிகள் அடிக்கடி பிரேக்கை உபயோகப்படுத்த வேண்டும். "எங்கள் ஏராளமான ஓய்வு நேரம் முற்றிலும் வேலை செயல்முறைக்குள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது," என்று அவர் கூறினார். "அது எங்களுக்கு ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பும் கொடுப்பதில்லை."

ஒரு S-Bahn (நகர்ப்புற போக்குவரத்து வேவை) சாரதி உறுதி செய்தார், முன்பு எங்களுடைய ஓய்வு நேரம் அதிகமாக சேர்ந்தது. எங்களுடைய ஓய்வு நேரத்தை எங்களின் அடுத்த வேலையை பெறுவதற்கு உபயோகப்படுத்தி விட கூடாது என்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டது. 2013-ல் S-Bahn கால அட்டவணை மாற்றப்பட்ட பின்னர், நடைமுறையில் பரிசீலனை இல்லை என்பது எங்களுக்கு காண்பிக்கப்பட்டது. உதாரணத்திற்கு, அவர் பிராங்பேர்டிற்கு வெளியே வசிக்கிறார் அத்துடன் ஒரு ஷிப்டை சரியான நேரத்திற்கு ஆரம்பிப்பதற்கு ஒரு இரயிலை பிடிக்க இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வீட்டை விட்டு புறப்பட வேண்டியிருந்தது. எனக்கு, வாரத்தில் ஆறு மணிநேரம் வரை எனது ஓய்வு நேரம் இதில் செலவழிக்க வேண்டியிருந்தது, என்று அவர் கூறினார்.

ஒரு வருடத்தில் வெறும் 12 வார இறுதி நாட்களை எப்படி பெற்றார்கள் என்பதையும் சாரதிகள் கூறினார்கள். மற்ற எல்லா வார இறுதி நாட்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள் அல்லது தயார்நிலையில் இருந்தார்கள்

Ingo Klett (போட்டோவில் இடது பக்கமிருந்து) ஒரு சாரதி மற்றும் பிராங்பேர்ட்டில் துணை பணிக்குழு தலைவராக இருக்கிறார். வருவாயை பொறுத்தவரை ஐரோப்பாவில் ஜேர்மானிய இரயில் சாரதிகள் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இரயில் சாரதி பெரும்பாலும் ஒரு மாதத்திற்கு 3,187 யூரோக்கள் மொத்த வருவாய் ஈட்ட முடியும். ஆரம்ப ஆண்டுகளில் ஒரு இரயில் ஓட்டுநரின் ஆரம்ப ஊதியம் ஏறத்தாழ மொத்தம் 2,000 யூரோக்களாக இருந்து கொண்டிருக்கிறது.

இரயில் சாரதிகள் கூடுதல் நேர வேலையாக ஏறத்தாழ 3 மில்லியன் மணிநேரங்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று க்லெட் குறிப்பிட்டார். உண்மையில் ஜேர்மானிய இரயில்வே 2,237 (புதிய) ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்" என்று கூறினார்.

சில வயதான சாரதிகள் ஆரம்பத்தில் கிழக்கு பகுதியிலிருந்து வந்தவர்கள், அங்கு அவர்கள் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் இரயில்வேயில் (Staatsbahn der DDR) வேலைப் பார்த்தவர்கள். அவர்களில் ஒருவர், Bundesbahn [மேற்கு ஜேர்மன் இரயில்வே] உடன் Staatsbahn இணைப்பிற்குப் பின் விரைவிலேயே 1993-ல் IPO-விற்கான தயாரிப்புகள் தொடங்கின. இலாப அளவுகோல் படி மொத்த நடவடிக்கையும் மறுகட்டுமானம் செய்யப்பட்டது.

அவர்களுக்கு எதிரான தூண்டுதலுக்கு பொது ஊடகங்களின் மீது சாரதிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். எங்களுக்கு எதிராக விஷயங்கள்  உண்மையில் தூண்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன, என்று ஒரு சாரதி கூறினார். அனைத்து பொய்களையும் தெளிவுபடுத்த அரிதாக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஒரு செய்தியாளர் ஒரு பேட்டியை முறையாக பதிவு செய்கிறார் என்றபோதிலும், அது வழக்கமாக பயன்படுத்தப்படுவதில்லை அல்லது அது திரிக்கப்படுகிறது.

Spiegel Online பத்திரிக்கையில் வெளிவந்த "ஜேர்மானியின் முட்டாள்தனமான சங்கம்" என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையை அவர்களை மோசமான விமர்சனமாக நினைத்தார்கள். திங்கட்கிழமை, GDL தன் போராட்டத்தை எஞ்சியிருக்கும் இரயில்வே பணியாளர்களின் கேட்டிற்கு எடுத்துச் செல்கிறது என்று அந்த இணைய பத்திரிக்கை GDL-யை குற்றம் சாட்டியது. [GDL ன் தலைவர் க்ளாஸ்] வெஸ்செல்ஸ்கீ "தன்னுடைய கௌரவத்தை அதிகரிக்க ஒரு புனிதப் போருக்கு" அழைப்பதாக அந்த பத்திரிகை எழுதியது.

ஒரு இரயில் சாரதி கூறியதாவது அவர்கள், ஒரு புனிதப் போர் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அது ISIS உடன் எங்களை ஒப்பிடுவதாகும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பெரும்பாலான வாசகர்களின் கடிதங்கள் உணர்ச்சி துடிதுடிப்புடன் இரயில் சாரதிகளை பாதுகாத்தன என்று மற்றவர் குறிப்பிட்டனர். 54 சதவிகித பங்கேற்பாளர்கள் இரயில் சாரதிகளின்பால் அனுதாபிகளாக இருக்கின்றனர் என்று ARD தொலைக்காட்சிக்கான ஒரு புதிய கருத்துகணிப்பு காண்பிக்கிறது.

தங்களுடைய போராட்டம் வெறும் ஒரு ஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தில் குறைப்பை விட அதிகம் என்பதை சாரதிகள் அறிந்திருக்கிறார்கள். "குறிப்பாக கடந்த வருடத்தில், நிர்வாகத்தின் தொனி பெரிதும் மாறிவிட்டது. இது வேலை முறைப் பட்டியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அதை யாரும் எங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில்லை. [ஜேர்மன் இரயில்வேயின் தலைமை நிர்வாகி உல்ரிச்] வெபர் எங்கள் கோரிக்கைகளுக்கு எவ்வளவு பிடிவாதமாக விடையிறுத்திருக்கிறார் என்பதையும் இது காட்டுகிறது என்று ஒரு இரயில் சாரதி கூறினார். இன்னொருவர், இது ஒரு கடுமையான மற்றும் நீண்ட போராட்டமாக இருக்கும் என்பதாக தெரிகிறது.

சிறிய தொழில் சார்ந்த GDL சங்கத்தை வெளியேற்றுவதற்கு ஏதுவாக "ஒன்றிணைந்த பேரம்" என்றழைக்கப்படுவதை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் ஜேர்மன் இரயில்வே மற்றும் EVG-யுடன் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு சாரதி, அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் ஒன்றிணைந்த பேரத்தை சட்டம் மூலமாக அவர்கள் அறிமுகம் செய்ய நினைத்தால், அது வேலை நிறுத்தத்திற்கான உரிமையின் மீது ஒரு அடிப்படை தாக்குதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஒரு S-Bahn சாரதி கூறினார்.

ஜேர்மன் இரயில்வே வெளிப்படையாக முழுமையான மோதலை தூண்டி விட்டிருக்கிறது. குழு அசையாது; அது முழுமையாக பிடிவாதமுள்ளது. GDL-லிருந்து விடுவிக்கவும், என்ன விலை கொடுத்தாகிலும் எங்களை வீழ்த்தவும் இரயில்வே நிர்வாகம் விரும்புகிறது என்று நான் பயப்படுகிறேன். ஒரு இளம் சாரதி கூறினார். எங்களுக்கு இனி ஜனநாயகம் இல்லை, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை யார் எங்களை வஞ்சிக்கப் போகிறார்கள் என்று தான் நாங்கள் முடிவு செய்யப்படும் வாய்ப்பை பெறுவோம் என்பது அவரது முடிவு.

மத்திய தொழில் அமைச்சர் Nahles இனால் (சமூக ஜனநாயகக் கட்சி) அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிணைந்த பேரத்தின் மீதான சட்டம் மொத்த கம்பெனியிலும் இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதையே குறிக்கும். இதுபோன்ற ஏகாதிபத்திய சக்தி கொண்ட DGB உடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள், இரயில் டிரைவர்கள் (GDL), காக்பிட் (விமானிகள்), UFO (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்), Marburger Bund, (டாக்டர்கள்) மற்றும் GDF (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்) போன்ற சிறிய சங்கங்களை பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேற்றக்கூடும். DGB மற்றும் அதன் உறுப்பினர் சங்கங்கள் பெரு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்கின்றன என்பது தான் கண்கூடான உண்மை, வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையை அழிக்கும் நடைமுறையை இது குறிக்கக்கூடும்.

இருப்பினும், GDL-ன் மூலோபாயம் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாததாக இருக்கிறது. புதன்கிழமை காலையில், வேலை நிறுத்தம் முடிவடைந்தவுடன், இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு ஒன்றில் 91 சதவிகிதம் பேர் அவருடைய உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட போதிலும் சங்கம் ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைக்காது என்று GDL தலைவர் வெஸ்செல்ஸ்கீ உறுதியளித்தார்.